மயக்கும் மான்விழியாள் 11

Advertisement

Ambal

Well-Known Member
சென்ற பதிவிற்கு விருப்பங்கள் தெரிவித்த அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள் தோழிகளே...இதோ அடுத்த பதிவு..

மயக்கும் மான்விழியாள் 11

சீறிப்பாய்ந்து அந்த வீட்டின் முன் நின்றது சிவரூபனின் கார்.காரிலிருந்து இறங்கிய ரூபன் காரின் கதவை அறைந்து சாத்தி தன் கோபத்தை வெளிப்படிதினான்.கார் வந்து நின்ற வேகத்தைக் கண்டு வீட்டில் உள்ளவர்கள் வெளியில் வர ரூபனோ அவர்கள் யாரையும் காணும் மனநிலையில் இல்லை வேக நடையிட்டு தன் அறைக்குள் புகுந்துக் கொண்டான்.சட்டை முழுவதும் ரத்தக் கரையுடன் வந்த ரூபனைக் கண்டு வீட்டில் உள்ளவர்கள் நடுங்கியபடி அவனிடம் வர அவனோ யாரையும் பார்க்காமல் வேகமாக தன் அறையில் நுழைய மற்றவர்கள் பயந்து தான் போனார்கள்.பெரியவர்கள் இருவரும் பயந்தபடி தன் நெஞ்சில் கை வைத்துக் கொண்டு அமர்ந்தே விட தேவகியோ மகனுக்கு என்னவாச்சோ என்று அவனின் பின்னால் சென்றார்.அவனது அறையின் முன்,

"ரூபா...கதவை திற...யாருக்கு என்ன ஆச்சு எப்படி உன் சட்டையெல்லாம் ரத்தக்கரை..."என்று கதவைத் தட்டிக் கொண்டே பதட்டமாக கேட்க.ரூபனுக்கு அப்போது தான் செய்த மடத்தனம் புரிந்தது தன் கோலத்தைக் கண்டு வீட்டில் உள்ளவர்கள் எப்படி பயந்து போனார்களோ என்று தன்னை தானே கடிந்துக் கொண்டவன்.வாயிலில் பதட்டத்துடன் கேட்ட தன் அன்னையின் குரலில் மனது மேலும் கலங்க தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்டு,

"அம்மா...எனக்கு ஒண்ணுமில்ல...நான் நல்லா தான் இருக்கேன்...இதோ வரேன்..."என்று பாத்ரூமினுள் நுழைந்து வேகமாக தன் சுத்தப்படுத்திக் கொண்டு வெளியில் வந்தான்.கதவை திறந்துக் கொண்டு வெளியில் வர கண்களில் பயத்துடன் நின்ற அன்னையைக் கண்டவனுக்கு மனதில் வலி பிறந்தது தன் இரு கைகளாலும் தன் அன்னை முகத்தை ஏந்தியவன்,

"ம்மா...எனக்கு ஒண்ணுமில்ல...நான் நல்லா தான் இருக்கேன்..."என்று கூறியவன் தேவகி கண்கள் கலங்கி தேம்பவும் அவரை ஆதரவாக அணைத்துக் கொண்டு ஹாலிற்கு வர அங்கே மோகனாவின் நெஞ்சை நீவியபடி அவருக்கு குடிக்க தண்ணீர் கொடுத்துக்கொண்டிருந்தார் செந்தில்நாதன்.தாங்கள் மட்டுமே உறவு என்று வாழும் முதியவர்கள் தன்னுடைய இந்த செயல் அவர்களை எந்தளவிற்கு காயப்படுத்தியிருக்கும் என்று நினைத்த ரூபனுக்கு மனதின் பாரம் கூடவே ஒரு கையால் தன் அன்னையை அணைத்தபடி வேகமாக தன் தாத்தா,பாட்டியின் அருகில் வந்தவன் பதட்டத்துடன் அமர்ந்திருந்த மோகனாவின் கீழே அமர்ந்து அவரது மடியில் தலை வைத்து,

"சாரி மோனூ...ஏதோ கோபம்...அதான் அப்படி பண்ணிட்டேன்..."என்று கண்கள் கலங்க கூற செந்தில்நாதனோ,

"என்ன ஆச்சு ரூபா..."என்றார் இன்னும் குறையாத பதட்டத்துடன்.பாட்டியின் மடியில் இருந்து தலையை எடுத்தவன் பதட்டதோடு இருக்கும் அனைவரையும் பார்க்கமுடியாமல் சோர்வாக அமர அவனது செய்கையில் மேலும் பயந்த மோகனா,

"என்னடா பண்ணுது...எங்க அடிப்பட்டுச்சு...ஹாஸ்பிட்டல் போனியா இல்லையா...தேவகி போய் புள்ளைக்கு தண்ணிக் கொண்டா..."என்று அவனது தலை,கை என எங்காவது காயம்பட்டிருக்கிறதா என்று என்று ஆராய்ந்தபடி கேட்க அதற்குள் தண்ணீர் உடன் வந்த தேவகி ரூபனிடம் கொடுத்துவிட்டு அவனை காண,

"ம்மா...தாத்தா...பாட்டி...முதல்ல மூனுபேரும் உக்காருங்க...எனக்கு ஒண்ணுமில்ல...வழில ஒருத்தருக்கு ஆக்ஸிடன்ட்...அவர ஹாஸ்பிடல்ல சேர்த்துட்டு வரேன் அதான்...அவர நான் தூக்கி காருல உக்கார வச்சேன் அதான் என் சட்டையெல்லாம் கரை வேற ஒண்ணுமில்ல...நீங்க யாரும் பயப்படாதீங்க....நான் நல்லா தான் இருக்கேன்..."என்று ரூபன் நீண்ட விளக்கம் தற முதியவர்கள் இருவரும் சற்று தெளிந்தனர்.ஆனால் தேவகியோ மகனை தீர்க்கமாக பார்த்துக்கொண்டிருக்க அவரது பார்வைக்கான அர்த்தம் உணர்ந்தவன் தலை குனிய மகனின் அருகில் வந்த தேவகி,

"நீ தலை குனிய வேண்டாம் ரூபா....எனக்கு புரியுது ஏதோ உன் மனசுல ஓடுது அதான் அப்படி நடந்துகிட்ட...ஆனா நாங்க உன்னை அப்படி பார்த்ததும் பயந்து தான் போயிட்டோம்..."என்று தன் மகனின் தலைகோத இந்த நிலையிலும் தன்னை புரிந்துக் கொண்ட தன் அன்னையின் கைகளை எடுத்து தன் கண்களில் ஒற்றிக் கொண்டவன்,

"சாரி ம்மா...நான் ஏதோ கோபத்துல அப்படி பண்ணிட்டேன் இனி செய்யமாட்டேன்...சாரி.."என்று கூற

"கோபம் மனுஷனோட நிதானத்தை அழிச்சிடும் ரூபா...இதை நான் உனக்கு சொல்ல வேண்டியது இல்ல...மனுஷனுக்கு கோபம் வரது இயல்பு தான் நான் இல்லைனு சொல்லல அந்தமாதிரி சமயங்கள்ல உன்னை நீ அமைதிபடுத்த முயற்சி செய்யனும் அதைவிட்டு இப்படி நிதானமில்லாம இருக்கிறது உனக்கு நல்லதில்லை..."என்று கூற ரூபன் அமைதியாக இருந்தானே தவிர எதுவும் பேசவில்லை.

தன் அன்னைக் கூறுவது சரியே இன்று தன் நிதானத்தை இழந்ததால் தன்னை சார்ந்தவர்கள் எவ்வளவு பாதித்துவிட்டனர்.சில நிமிடங்களே ஆனாலும் அவர்கள் இன்னும் இயல்புக்கு திரும்பவில்லை என்பதை தன் கைகளை நடுக்கத்துடன் பற்றிக் கொண்டு கண்களில் நீர் வழிய பார்த்துக் கொண்டிருக்கும் பாட்டி,தன்னையே நடுக்கத்துடன் பார்துக் கொண்டிருக்கும் தாத்தா இவர்களைக் காணும் போது மேலும் குற்றவுணர்வு அதிகரிக்க,

"சாரி பாட்டி...சாரி தாத்தா..."என்றான் உள்ளே போன குரலில்.

"சரி விடுப்பா...அதையே யோசிக்காத...போப்பா போய் சாப்பிடு..."என்ற நாதன் தேவகியிடம் திரும்பி,

"ம்மா...தேவகி போமா போய் அவனுக்கு சாப்பாடு எடுத்து வை..."என்று கூற தேவகியியும்,

"ம்ம்...சரி மாமா...ரூபா வா சாப்பாடு தரேன்..."என்று விட்டு சமையலறை சென்றார்.ரூபன் ஏதோ யோசனையில் இருக்கவும் நாதன்,

"ரூபா...இப்ப எதையும் யோசிக்காத போ..."என்று கூற அவனும் எழுந்தான்.மோகனாவோ,

"ஏதோ நேரம் சரியில்லை அதான்....கடவுளே என் புள்ளைய புடிச்ச காத்து,கருப்பெல்லாம் காணாபோகனும்..."என்று ரூபனின் முன்னே பட்டைமிளகாய் கொண்டு சுற்றி போட,

"காத்து,கருப்பெல்லாம் இல்ல பாட்டி எல்லாம் உங்க பேத்தி அந்த ராட்சசி தான்...."என்று மனதிற்குள் ரூபன் சொல்லிக் கொண்டான்.அவன் கோபமாக கூறிக் கொண்டானா இல்லை செல்லமாக அவளை திட்டினான என்பது அவனுக்கே வெளிச்சம்.அதற்குள் தேவகி அவனுக்கு உணவு பரிமாற தன் நினைவுகளை ஒதுக்கி சாப்பிட்டவன் தன் அறைக்குள் புகுந்து கொண்டான்.
தன் அறைக்கு வந்தவனுக்கு மீண்டும் இன்று மருத்துவமனையில் நடந்த அனைத்தும் கண்முன்னே வர தொடங்கின,

மதுவின் கைகளை தன் கைகளுக்குள் வைத்து அவளது முகத்தையே பார்த்திருந்தவனுக்கு அவளது முகத்தில் தெரிந்த அதீத சோர்வும்,கண்களுக்கு கீழ் காணப்பட்ட கருவளையமும் என்னவாயிற்று இவளுக்கு ஏன் இப்படி இருக்கிறாள் என்ற யோசனையே.ஏனென்றால் மது எப்போதும் பார்க்க பளிச் என்று தான் இருப்பாள் முகத்தில் ஒட்ட வைத்தது போல இருக்கும் புன்னகை அவளுக்கு மேலும் அழகூட்டும்.ஆனால் இன்று அனைத்தும் மாறிப் போயிருந்தது அதற்கு தான் ஒரு காரணமாக இருக்கலாம் என்று ஒரு மனது கூறினாலும் அவள் என்னை நியாபகம் வைத்திருப்பாளா என்று ஒரு மனது கூறியது.அப்படியே நியாபகம் இருக்கதான் விட்டிருப்பார்களா இவளது வீட்டினர் என்று தனக்குள் இவன் பல கேள்விகள் கேட்டு அதற்கு பதிலும் இவனே அளித்துக் கொண்டிருந்த நேரம் மதுவிடம் லேசாக அசைவு தென்பட்டது.

தன் தலை பாரமாக கணக்க கண்களை மெல்ல திறப்பதும் முடுவதுமாக மது இருக்க,
"விழி..."என்ற அழைப்பு மீண்டும் அவள் காதுகளில் விழுந்தது தன் கண்களை திறந்து எதிரில் இருந்த உருவத்தை காண முயற்சி செய்ய தலையில் அடிப்பட்டதால் மங்கலாக தான் தெரிந்தது அந்த உருவம் இருந்தும் அந்த குரலே காட்டிக் கொடுத்தது தன் அருகில் இருப்பது தன்னவன் தான் என்று.சற்று நேரம் கழித்து கண்களை நன்கு திறந்து பார்க்க அங்கே அவளையே தவிப்புடன் பார்த்துக் கொண்டிருந்தான் சிவரூபன்.அவனைக் கண்டவள் சிவு அத்தான் என்று உதடுகள் அசைப்போட தன் கண்களால் அவனை நிரப்பிக்கொண்டாள்.

யாரை தன் வாழ்வில் இனி காணப்போவது இல்லை என்று நினைத்தாளோ அவன் இன்று தன் கண்ணின் முன்னால் இது கனவா என்று தன்னை கிள்ளி பார்க்க அவள் கண் விழித்ததிலிருந்து அவளையே பார்த்துக்கொண்டிருந்த ரூபனுக்கு அவளது செய்கை சிரிப்பை தர,

"இது நிஜம் தான் விழிமா..."என்று மீண்டும் கூறிக் கொண்டிருக்க அவர்களின் ஏகந்தத்தை கெடுப்பது போல வந்தான் கௌதம்.கண்ணாடி வழியே அவள் கண்விழிப்பதைப் பார்த்துவிட்டு டாக்டருக்கு தகவல் சொல்லிவிட்டு வந்தவன் வேகமாக அறைக்குள் நுழைய
முதலில் யாரோ என்று பயந்த மது அங்கு கௌதமைக் காணவும்,

"கௌதம்...ஏய் எப்படி இருக்க..."என்றாள்.

"நான் நல்லா இருக்கேன் மது நீ எப்படி இருக்க..."என்றவன் அவள் எழ முற்பட அவளுக்கு உதவ அருகே செல்ல,

"இப்ப எதுக்கு எந்திரிக்கிற படு..."என்று அழுத்தமாக கூறினான் ரூபன்.ரூபனுக்கு சற்று முன் அவள் தன்னை மறக்கவில்லை எனபதே மனதில் ஒரு சுகத்தை தர மேலும் அவளது அழைப்பு அவனை வானில் பறக்க செய்தது என்று தான் கூற வேண்டும்.ஆனால் அவனது நினைவு அனைத்தும் இப்போது காணாமல் போயிருந்தது.தங்கள் இருவருக்குள்ளும் கௌதம் வந்தது ரூபனுக்கு பிடிக்கவில்லை.

கௌதம் ரூபன் அவ்வாறு கூறவும் மதுவின் அருகில் செல்ல தயக்கம் அதுமட்டுமில்லாமல் ரூபனின் முகத்தில் தெரிந்த கடுமை அவனை மதுவிடம் நெருங்க விடவில்லை என்று தான் கூறவேண்டும்.மதுவோ இருவரையும் பார்த்துவிட்டு தானே எழுந்து அமர அவளது செய்கையில் மேலும் கடுப்பான ரூபன்,

"ஏய் நான் உன்னை படுக்க தான சொன்னேன்..."என்று கோபமாக அவள் முன்னே வர அதற்குள்,

"மிஸ்.மதுமிதா...ஹொவ் ஆர் யூ நொவ்..."என்றபடி வந்தார் மருத்துவர்.

"ஐ ம் பைன் டாக்டர்...தலை தான் கொஞ்சம் வலிக்குது..."என்று கூற
"ம்ம் காயம் கொஞ்சம் ஆழம் தான் அதனால வலி இருக்கும்...நான் டபிலெட்ஸ் தரேன் வலி குறைய..."என்றவர் அவளை பரிசோதித்துவிட்டு செல்ல மீண்டும் உள்ளே வந்தனர் கௌதமும்,ரூபனும்.ரூபனைக் கண்டவுடன் மதுவிற்கு அவனின் தாய் கூறிய வரிகள் மீண்டும் மனதில் கேட்க தொடங்கியது.சற்று முன் அவனைக் கண்டவுடன் இறக்கையில்லாமல் பறந்த மனதை இப்போது மீண்டும் தன் கட்டுக்குள் கொண்டு வந்தாள்.

கடைசியாக தேவகி கூறிய "என் பையனுக்கு நீ வேண்டாம்..."என்ற வார்த்தை மதுவின் மனதை சுக்குநூறாக உடைத்திருக்க அவனைக் கண்டவுடன் அவனை நோக்கி ஓடும் மனதை கட்டுப்படுத்த இவள் போராட அதை மேலும் சோதிக்கவென்று இருந்தது ரூபனின் செய்கைகள்.மது எப்போதும் போல் பேசியிருந்தாலாவது ரூபன் மதுவின் வாழ்வில் நுழைந்திருக்க மாட்டானோ என்னவோ.ஆனால் மது அவனை ஒதுக்க அதுவே அவனை அவள் பால் இழுத்துச் சென்றது தான் விதி செய்த சதியோ.
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
காயத்ரி டியர்

தேவகி பேசினது மட்டும் உணக்கையா ஞாபகம் இருக்கும் மதுமிதா பொண்ணுக்கு இவளோட அப்பன் பூமிநாதன் பேசினது செஞ்சதெல்லாம் மறந்து விட்டதோ?
விவரமான பொண்ணுதான்
 
Last edited:

Ambal

Well-Known Member
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
காயத்ரி டியர்

தேவகி பேசினது மட்டும் உணக்கையா ஞாபகம் இருக்கும் மதுமிதா பொண்ணுக்கு இவளோட அப்பன் பூமிநாதன் பேசினது செஞ்சதெல்லாம் மறந்து விட்டதோ?
விவரமான பொண்ணுதான்
நன்றி தோழி...
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top