மயக்கும் மான்விழியாள் 10

Advertisement

Ambal

Well-Known Member
சென்ற பதிவிற்கு விருப்பங்கள் தெரிவித்த அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள் தோழிகளே...இதோ அடுத்த பதிவு..

மயக்கும் மான்விழியாள் 10

மதுமிதாவிற்கு வெகு நாட்களுக்கு பிறகு அந்த காலை பொழுது ரம்மியமாக இருந்தது.காலைகடன்களை முடித்தவள் தன் அன்னைக் கொடுத்த காபியை ரசித்து குடித்தாள். அதே சந்தோஷ மனநிலையுடன் தான் வேலைக்கும் வந்தாள் ஆனால் தன் வேலைகளை தொடங்கி சிலமணிநேரத்தில் அவளை தீபக் அழைக்கும் வரை அந்த சந்தோஷம் நீடித்தது.தீபக் அந்த சூப்பர் மார்க்கெட்டின் சேல்ஸ் மேனேஜர்.அவனது பார்வை மதுமிதாவின் மேல் விழுந்தலிருந்து மதுவிற்கு தலைவலியாகி போனது. தீபக் தன் காதலை வெளிப்படுத்த மதுவோ தனக்கு விருப்பமில்லை என்று கூறிவிட்டாள். மது தனக்கு விருப்பமில்லை என்று கூறிய பின்பும் தீபக் மதுவை விடாமல் தொந்திரவு செய்ய தொடங்கவும் மதுவிற்கு வேலை செய்யும் இடமும் நரகமாக மாறத் தொடங்கியது.

இப்போது காலையிலேயே தீபக்கிடம் இருந்து அழைப்பு வரவும் மதுவிற்கு காலையில் இருந்த இதமான மனநிலை மாறியது.

ஒருவித இறுக்கத்துடன் அவனது கேபின் முன் நின்று,
"மே ஐ கம்மின் சார்..."என்றாள்.

"யெஸ் கம்மின்..."என்று அழைத்தான் தீபக்.மதுமிதா உள்ளே வந்தவுடன் அவளையே தன் பார்வைகளால் விழுங்க மதுவிற்கு கையில் ஏதாவது கிடைத்தால் அவனது மண்டையை உடைத்துவிடலாம் என்று இருந்தது.

"என்ன மது நீ என்கிட்ட இன்னும் இந்த பார்மாலிட்டுடிஸ்லாம் பார்த்துக்கிட்டு..."என்று மதுவிடம் வழிய

"நீங்க இங்க மேனேஜர் நான் இங்க ஸ்டாப்..."என்று மது முடிக்கும் முன் தீபக்,

"அது மத்தவங்களுக்கு நம்ம இரண்டு பேரோட உறவு...."என்று தீபக் மதுவை காதல் பார்வை பார்க்க இதற்கு மேல் இவனிடம் பொறுமையாக போவது நல்லதிற்கில்லை என்று உணர்ந்து,

"சார்..கொஞ்சம் மரியாதையா பேசுங்க...இது வேலை செய்யுற இடம் அதனால தான் இவ்வளவு பொறுமையா எடுத்து சொல்லுறேன் இல்ல..."என்று விரல் நீட்டி எச்சரிக்கை செய்ய தீபக்கிற்கு கோபம் தலைக்கேறியது,

"ஏய் என்ன என்னயவே மிரட்டுரியா...நான் நினைச்சா உன்னை வேலையவிட்டு தூக்க முடியும்..."என்று மிரட்டலில் இறங்க மதுவோ அவனை ஒரு புழுவைப் பார்ப்பது போல பார்த்தவள்,

"முடிஞ்சா செய்..அதவிட்டுட்டு என்னை மிரட்டுற வேலையெல்லாம் வச்சுக்காத..."இவளும் சூடாக கேட்டுவிட்டு கேபினில் இருந்து வெளி வந்துவிட்டாள்.தீபக்கோ உனக்கு இருக்குடி சிக்காமலா போயிடுவ பார்த்துக்குறேன் என்று மனதில் வன்மத்துடன் நினைத்தான்.

தன் இருக்கைக்கு வந்து அமர்ந்த மதுமிதாவிற்கு ஆத்திரம் பெண்ணென்றால் அவளை எப்படி வேண்டும் என்றாலும் மிரட்டி தன் காரியம் சாதிக்க நினைக்கும் இவர்கள் போன்ற ஆண்களை என்ன செய்தால் தகும் என்று மனதில் அவனை கண்டபடி வசைப்பாடினாள்.

ஒருவாறு தன்னை மீட்டவள் தன் வேலைகளை தொடங்க அதன் பின் தீபக் என்பவனை மறந்தே போனாள் என்று தான் கூற வேண்டும்.மாலை தன் வேலைகளை முடித்து கிளம்பு போது வீட்டிற்கு தேவையான் சில பொருட்களை எடுத்துக்கொண்டிருக்க அப்போது அவளின் அருகில் ஏதோ பொருளை தேடுவது போல வந்த தீபக்,

"உனக்கு நாளைக்கு வரைக்கும் தான் டையம் நல்ல முடிவா சொல்லு..."என்று மிரட்டிவிட்டு சென்றான்.

தனக்கு தேவையான பொருட்களை வாங்கிக் கொண்டு வெளியில் வந்த மதுமிதாவிற்கு தீபக்கின் வார்த்தைகள் சற்று பயத்தை அளித்தது.என்னதான் அவள் தன்னை தைரியமாக காட்டிக் கொண்டாளும் உள்ளுக்குள் அவளது மனது தீபக் இதை விடப்போவதுதில்லை சற்று கவனமாக இரு என்று எச்சரிக்கை செய்தது.அதே யோசனைகளுடன் தன் வண்டியை எடுத்துக்கொண்டு வந்தவள் தன் எதிரில் ஒரு நாய் ஓடிவரவும் எங்கே அதை இடித்து விடுவோமோ என்ற பயத்தில் இவள் வண்டியை திருப்ப வண்டி இவளது கட்டுப்பாட்டை இழந்து சரிந்தது.மதுவும் தன்னை சுதாரிக்கும் முன் அவளும் தடுமாறி கீழே சரிந்தாள்.மது கீழே விழுந்ததில் அவளது தலை எதிரில் இருந்த கல்லில் மோதியது அதில் வலி தாங்காமல் இவள் கத்த அதற்குள் இவள் விழுந்ததைக் கண்டு அங்கே கூட்டம் கூடியது தன்னை சமன்படுத்தி மது எழமுற்பட அவளாள் முடியவில்லை கொஞ்சம் கொஞ்சமாக சுயநினைவு இழக்க

"விழி..."என்ற அழைப்பு அந்த அரைமயக்க நிலையிலும் மதுவின் உயிர் வரை தீண்டிச் சென்றது.பாரமாக கணக்கும் தலையை தூக்கி அந்த குரல் வந்த திசையை நோக்க தன் முன்னே ஓடிவரும் உருவம் அவன் தானா என்று கண்களை திறந்து பார்க்க அதற்குள் அவளை தன் தோளில் தாங்கியிருந்தான் அவளவன் அந்த மயக்க நிலையிலும் அவன் தான் என்று உணர்ந்த நேரம் முழுமையாக மயங்கியிருந்தாள் மதுமிதா.

ஒரு தனியார் மருத்துவமனையில் இருந்தனர் கௌதமும்,சிவரூபனும். ரூபனுக்கு மதுவை என்றாவது ஒருநாள் பார்ப்போம் என்று தெரியும்.ஆனால் இவ்வளவு விரைவில் அதுவும் இவ்வாறு காண்பான் என்று நினைக்கவில்லை. சற்று நேரத்திற்கு முன்பு நடந்ததை நினைத்தான்,

கௌதம் கைபேசியுடன் சற்று தள்ளி செல்லவும் அந்த இடத்தை நோட்டம் விட்ட சிவரூபன் கண்களில் விழுந்தது அந்த உருவம்.அது அவள் தானா என்ற சந்தேகம் தான் ஏன்னென்றால் அவள் அதிகம் சேலை அணிந்து அவன் பார்த்ததில்லை.அதுவும் எனக்கு வண்டி ஓட்ட சுடிதார் தான் சிவா பெஸ்ட் என்று எப்போதும் அவள் தான் கூறுவாள் அதனாலேயே சேலை அணிந்திருந்த பெண் மதுமிதா தானா என்ற சந்தேகம் ரூபனுக்கு.தன் கண்களை சற்று கூர்மையாக்கி அவளை கவனிக்க அவள் தான் என்று ஊர்ஜீகமானது.

சுடிதாரில் சிறு பெண்போல் தெரிந்தவள் இப்போது புடவையில் அவன் கண்களை கவர்ந்தாள் என்று தான் சொல்ல வேண்டும்.அவளை பார்க்காதே என்று புத்திக் கூறினாலும் மனம் அதை கேட்க மறுத்தது.ஒருமுறை இவளை பார்த்துதான் தன் வாழ்வில் பல கஷ்டங்களை பட்டுவிட்டேன் மீண்டும் இவளை பார்க்கக்கூடாது என்று தன் மனதிற்கு அவனே கடிவாளம் இட்டுக்கொண்டிருக்கும் போது தான் கௌதம் அவனை அழைத்தது ரூபன் அவனுக்கு பதில் கூறும் முன் தங்கள் காரின் பின்னால் ஏதோ சத்தம் கேட்கவும் தான் இவர்கள் இருவரும் அங்கே சென்றனர்.

கூட்டத்தை முதலில் விலக்கிக்கொண்டு சென்ற ரூபன் அங்கே தலையில் அடிப்பட்டு கிடந்த மதுவைக் கண்டு ஒரு நிமிடம் அதிர்ந்துவிட்டான்.அவனது மூளை வேலைசெய்ய மறுத்தது.அதற்குள் பக்கத்தில் உள்ளவர்கள் சத்தம் போட்டு அவளுக்கு உதவ முற்பட சற்று முன் மனதிடம் கூறிய அனைத்து உறிதிமொழிகளையும் தகர்த்து

"விழி..."என்று கத்திக் கொண்டே அவளிடம் ஓடினான்.அவளோ சுயநினைவை கொஞ்சம் கொஞ்சமாக இழக்க அதற்குள்,

"கௌதம் காரை எடுத்துட்டு வா...சீக்கிரம் போ..."என்று தங்கள் அருகில் ஓடி வந்த கௌதமிடம் கூற அவனும் ஓடி தன் காரை எடுத்துக் கொண்டு வந்தான் பின் சீட்டில் அவளைக் கிடத்தி அவளது தலையை தன் மடி மேல் வைத்து தன் கைகுட்டையால் அவளது நெற்றி,முகத்தில் வழிந்த ரத்தத்தை துடைத்த ரூபனின் உதடுகள்,

"விழி...கண்ணைத்திறடி...ஏய்..."என்று அவளது கன்னங்களை தட்டி எழுப்ப முனைந்துக்கொண்டிருக்க அதற்குள் கௌதம் அருகில் உள்ள ஒரு மருத்துவமனைக்கு அழைத்து வந்திருந்தான்.

மதுவிற்கு அவசரசிகிச்சை பிரிவில் சிகிச்சை நடந்து கொண்டிருந்தது.ரூபனோ தன் சட்டை,கை என்று உடலில் பதிருந்த அவளது ரத்தக்கரையை வெறித்தப்படி அமர்ந்திருந்தான்.அவனது மனமோ இந்த நிலையிலாடி உன்னை பார்க்கனும் எவ்வளவு ரத்தம் ராட்சசி எத்தனை தடவை சொல்லிருக்கேன் வேகமா போகாதேனு ராட்சசி ராட்சசி...என்று மதுவை தன் மனதில் வசைப்பாடியபடி அமர்ந்திருக்க,கௌதமோ மதுவின் வீட்டினருக்கு எவ்வாறு தகவல் தருவது என்ற யோசனையில் இருந்தான்.அவனுக்கு மதுவின் விட்டினர் பற்றி அவ்வளவாக தெரியாது.

மதுவிற்கு சிகிச்சை முடிந்து வெளியில் மருத்துவர் வர அவரைக் கண்டவுடன் வேகமாக எழுந்த ரூபன்,

"டாக்டர்...அவ...அவளுக்கு ஒண்ணுமில்லையே...நல்லா இருக்காள்ல..."என்று பதட்டமாக வினவ,

"தலையில் கொஞ்சம் ஆழமான காயம் தான் மத்தபடி பயப்பட ஒண்ணுமில்ல...இன்னும் கொஞ்ச நேரத்துல கண்முழிச்சிடுவாங்க..."என்றுவிட்டு நகர அப்போது தான் ரூபனுக்கு மூச்சே சீரானது.மதுவைக் காண உள்ளே சென்றான் அங்கே வாடிய கொடி போல படுத்திருந்தவளைக் காண காண ரூபனின் கண்கள் தன் போல் கலங்க மெதுவாக அவளது பக்கத்தில் அமர்ந்து அவளது கைகளை எடுத்து தன் கைகளுக்குள் வைத்துக்கொண்டான் இனி எப்போதும் விடப்போவதில்லை என்பது போல.இதையெல்லாம் வெளியில் இருந்து பார்த்துக்கொண்டிருந்த கௌதமிற்கு தான் திக் என்று இருந்தது.நேற்று மது பேரை சொன்னதற்கே இவரோட அம்மா அவ்வளவு கோவபட்டாங்க இதுல இவர் இப்படி கை புடிச்சி இருக்கிறதெல்லாம் பார்த்த என்னை கொன்னாலும் கொன்னுடுவாங்க தெய்வமே என்ன காப்பாத்து என்று கடவுளை வேண்டிக்கொண்டிருந்தான்.
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
காயத்ரி டியர்

அந்த தீபக் நாயை வெட்டிப் போடணும்
கௌதமுக்கு சரியான கவலைதான்
ரூபனே உன்னை மாட்டி விட்டுடுவான் கௌதம்
ஹா ஹா ஹா
 
Last edited:

Ambal

Well-Known Member
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
காயத்ரி டியர்

அந்த தீபக் நாயை வெட்டிப் போடணும்
கௌதமுக்கு சரியான கவலைதான்
ரூபனே உன்னை மாட்டி விட்டுடுவான் கௌதம்
ஹா ஹா ஹா
நன்றி தோழி....கௌதம் பாவம் தான்;);)
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top