மயக்கும் மான்விழியாள் 1

Advertisement

Ambal

Well-Known Member
வணக்கம் தோழிகளே...அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்....விந்தையடி நீ எனக்கு...கொஞ்சம் கேப் விழுந்ததால கொஞ்சம் இழுக்குது...அதுக்குள்ள மனசுல வேறு ஒரு கதை உதயமாக சரி அதை எழுதுவோம்னு வந்துட்டேன்...என்னை மயக்கிய மான்விழி உங்களையும் மயக்கும்னு நினைக்கிறேன்...படித்துவிட்டு தங்கள் கருத்தை பதிவிடவும் தோழிகளே...இதோ முதல் பதிவு....



மயக்கும் மான்விழியாள் 1



டெல்லி மாநகரில் செல்வம் மிக்கவர்கள் வாழும் பகுதியில் உள்ளது அந்த சிறிய அளவிளான பங்களா.பெயர் பூங்காவனம்.ஆமாம் வீடு சிறியது தான் ஆனால் வீட்டை சுற்றி பச்சபசேல் என்று பசுமையாக காட்சியளித்தது.வீட்டின் அமைப்பு பழமையில் புதுமை புகுந்து பார்பவர்களை கவரும் வண்ணம் இருந்தது.ஒவ்வொரு விஷயத்திலும் கலை நுணுக்கம் ஒரு கட்டிட பிரியனால் கட்டப்பட்ட மாளிகை.ஆம் வீடு கலை நுணுக்கும் கொண்டது என்றால் வீட்டில் உள்ளவர்களும் நுணுக்கமானவர்களே.

அந்த காலை பொழுது ரம்மியாக இருந்தது அந்த வீட்டில் குயில்களின் பாட்டில் இனிமையாக கேட்டுக்கொண்டிருக்க அந்த பாட்டின் ரம்மியத்தைக் குறைத்த படி வீட்டின் முன்பு புயலென வந்து நின்றது அந்த ஆடிக் கார்.காரில் இருந்து துள்ளல் உடன் இறங்கினான் சிவரூபன் ஆறடி உயரமும்,முறுக்கேறிய புஐங்களும்,கூர்மையான கண்கள் என்று ஆண்களுக்கே உரிய அழகு அவனிடத்தில் இருந்தது.வீட்டின் போர்டிக்கோ போன்ற அமைப்பில் சாய்வு நாற்காலியில் அமர்ந்து அன்றைய நாளிதழை புரட்டிக்கொண்டிருந்தார் செந்தில்நாதன்.

அவருக்கு பக்கத்தில் தன் மூக்கு கண்ணாடியை சரி செய்தபடி கணவர் வாசிக்கும் செய்திகளை கேட்டுக்கொண்டு இருந்தார் மோகனா செந்தில்நாதனின் மனைவி.திடீர் என்று கணவரின் குரல் கேட்காமல் போக என்னவென்று கேட்க தலைதூக்கிய மோகனா தன் கணவர் வெளியில் பார்பதை உணர்ந்து வெளியில் பார்க்க முகம் முழுக்க புன்னகையுடன் வந்து கொண்டிருந்தான் சிவரூபன்.பல வருடங்களுக்கு பிறகு பேரனின் மலர்ந்த முகத்தை கண்டவர் முகமும் மலர,

"ரூபா வாப்பா...என்ன இந்நேரத்தில வந்திருக்க..."என்றார் அருகில் வந்த பேரனிடம்.அவன் காலை ஒன்பது மணிக்கு செ்றால் இரவு தான் வருவான்.அதனாலேயே மோகனா இவ்வாறு கேட்டார்.

"ம்ம்...என் ஆசைப் பாட்டியை பார்க்கனும் தோணுச்சு அதான் வந்துட்டேன்...."என்றான் புன்னகையுடன்.

"இப்ப தான் உனக்கு பாட்டியை கண்ணுக்கு தெரியுதா போடா...நான் உன்கூட பேசமாட்டேன்..."என்று கோபித்துக்கொள்ள.பேரனோ,

"அய்யோ...என் செல்ல பாட்டிக்கு கோபம் கூட வருமா...சாரி...சாரி...மோனூ..."என்றான்.அவனது நெடுநாள் பிறகான மோனூ என்ற அழைப்பு சற்று வேலை செய்தது போலும்,

"போடா போக்கிரி பயலே..."என்றவர் தன் பேரனின் கன்னம் வழித்து,

"இப்படி நீ சிரிச்சு எத்தனை வருஷம் ஆச்சி ரூபா...நீ இப்படியே இருடா..."என்றார் நெகிழ்ச்சியாக.

மோகனா கூறியவுடன் சிவரூபனின் மலர்ந்த முகம் இறுகியது.மனக்கண் முன் சில காட்சிகள் வர அந்த காட்சிகளின் தாக்கம் அவனது கை முஷ்டிகள் இறுகிய நேரம்.

"மோகனா...எனக்கு காபி குடிக்கனும் போல இருக்கு போய் எடுத்துட்டு வா..."என்றார் செந்தில்நாதன்.

"இப்ப தான குடிச்சீங்க அதுக்குள்ள எதுக்கு திரும்பியும் கேட்கிரீங்க..."என்று மோகனா கேட்க செந்தில்நாதனிடம் இருந்து வெறும் முறைப்பு மட்டுமே பதிலாக வர,

"ம்க்கும்...இந்த முறைப்புக்கு ஒண்ணும் குறைச்சல் இல்ல...பேரன் கிட்ட தனியா பேசனும் அதுக்கு தடையா நான் இருக்கக் கூடாது அதுக்கு என்ன கிளப்ப தான் இந்த காபி..."என்று மனதில் நொடித்தவாரே மோகனா சென்றார்.பின்னே வெளியில் சொன்னால் அதற்கும் அல்லவா திட்டுவிழும்.மோகனா மனதில் உள்ளதை படபடவென்று பொரியும் ரகம் என்றால்,செந்தில்நாதனோ எதிலும் பொறுமை,நிதானம் என்று இருப்பவர்.பொதுவாக செந்தில்நாதனின் குரல் உயராது அப்படி உயர்ந்தால் அவர் கோபத்தில் உள்ளார் என்று அவரது மனையாள் மட்டும் அல்ல வீட்டில் உள்ள அனைவருக்கும் தெரியும்.அதனாலே வீட்டில் அவரது குரல் உயர்ந்தால் மற்றவர்கள் அமைதியாகி விடுவர்.


மனைவி சென்றவுடன் பேரனின் இறுகிய முஷ்டியை தன் கைகளால் தட்டி அவனை நிகழ்வுக்கு கொண்டுவந்தார்.தன் தாத்தாவின் தொடுகையில் சுயத்திற்கு வந்தவன்,

"ஆங்...தாத்தா சொல்லுங்க..."என்றான்.அவனது தலையை ஆதரவாக தடவிய செந்தில்நாதன்,

"ரூபா....வேண்டாம் பழசை நினைக்காத...சில சமயங்கள்ல அமைதியா இருந்தது தான் ஆகனும் அது தான் நமக்கு நல்லது...உனக்கு புரியும்னு நினைக்கேன்..."என்று கூறிக்கொண்டிருக்க அவனும் கேட்டுக்கொண்டு இருந்தானே தவிர பேசவில்லை.மனது ஒருநிலையில் இல்லை அவனுக்கு அன்றைய நாளின் தாக்கம் அவ்வாறு என்று உணர்ந்த நாதனும் அவனது மனதை மாற்றும் விதமாக,

"சரி விடுப்பா...நீ ஏதோ சொல்ல வந்த இல்லை...என்ன விஷயம்..."என்றார் அவனது மனதை மாற்றும் பொருட்டு அவரது கேள்வியில் இறுகியிருந்த ரூபனின் முகத்தில் மீண்டும் மலர்ச்சி பொங்க,

"ம்ம்...ரொம்ப சந்தோஷமான விஷயம் தான்...தாத்தா அம்மா எங்க..."என்றான்.நாதன் பதில் அளிக்கும் முன்,

"அவ எங்க இருக்க போறா...அந்த பொட்டிய தட்டிக்கிட்டு உக்கார்ந்திருக்கா போ..."என்று கூற,

"மோகனா...காபி கொடு..."என்று வாங்கிய நாதன்,

"உன் வேலை என்னவோ அத மட்டும் பாரு..."என்றார் கட்டுபடுத்தப்பட்ட கோபத்துடன் மருமகளுக்கு பரிந்து பேச மோகனாவின் முகம் சற்று சிறுத்த நேரம்,

"விடுங்க மாமா...அத்தைக்கு நான் செய்ற வேலை புரியல அதான் கோபமா பேசுறாங்க..."என்றபடி வந்தார் தேவகி மகனிடம் திரும்பி,

"என்ன ரூபா...நீ நினைச்ச கான்்ராக்ட் உனக்கு கிடைச்சிடுச்சு போல..."எனக் கேட்க சிவரூபனோ தன் அன்னையின் அருகில் வந்து அணைத்து விடுவித்தவன்,

"ஆமாம்மா...இது என்னோட நெடு நாள் கனவு...இப்ப நினைவாகிடுச்சு..."என்று உணர்ச்சி பெருக்கில் கூற தேவகியோ,

"இது உன்னோட உழைப்புக்கு கிடைச்ச பரிசு..."என்றார் மகனின் தோள்களில் தட்டிக்கொடுத்தபடி.

இந்த காட்சியைக் கண்ட நாதனுக்கு மனதில் பெருமையே தன் மருமகளை எண்ணி ஒரு தாயாய்,தகப்பனாய் இருந்து வழிநடத்தி தன் மகனை கொண்டு வந்துவிட்டளே என்று.மருமகளின் நிமிர்வும்,எதற்கும் தேங்காத மனோபாவமும் மிகவும் பிடித்த ஒன்று.தங்களின் தல்லாத வயதில் ஒரு மகளை போல பார்த்துக்கொள்ளும் மருமகளை யாரிடமும் விட்டுக்கொடுக்க மாட்டார்.

அதனாலேயே மனைவிக்கும் அவருக்கும் சிலநேரங்களில் முட்டிக்கொள்ளும் மோகனா சற்று பிற்போக்கு சிந்தனையுடையவர் தேவகி சில நேரங்களில் தவறு என்றால் நேரிடையாக கூறிவிடுவார் அது மோகனாவிற்கு பிடிக்காது,'அது என்ன வீட்டுல மூர்த்தவங்கனு ஒரு மரியாதை வேண்டாம்..."என்று குறைபடுவார்.ஆனால் தேவகியோ 'தப்புனு சுட்டிக்காட்டறதுல என்ன தப்பு இருக்கு அத்த...நான் சொல்றது சரிதானே மாமா...' என்று நாதனிடமே கேட்பார்.நாதனுக்கும் மருமகள் தங்களிடம் வழக்காடினாலும் தங்கள் மீது மிகுந்த மரியாதையுடன் தான் இருப்பார் என்று தெரியும் அதனாலே எதுவும் சொல்லமாட்டார்.

"தாத்தா,பாட்டி கால்ல விழுந்து ஆசிர்வாதம் வாங்கு...ரூபா.."என்றார் தேவகி.அவர் கூறியது போல செய்தவன்,

"பெரிய வேலை கிடைச்சிருக்கு மோனூ...உனக்கு என்ன வேணும் சொல்லு வாங்கி தரேன்..."என்று கூற மோகனாவோ,

"டேய் பேரா நீ ஏதோ சொந்தமா தொழில் வச்சிருக்கேனு உன் அம்மா சொன்னா...நீ என்ன இப்ப வேலைக்கு போறேனு சொல்லுர..."என்று தன் சந்தேகத்தைக் கூற ரூபனோ,

"மோனூ...நான் சொந்த தொழில் தான் செய்யுறேன்..."என்று அவன் அவனது தொழிலை பற்றிக் கூறப் போக,

"டேய் பேரா நீ சொ்னாலும் எனக்கு புரியாது விடு..."என்று விட்டு வேகமாக சென்றார் மோகனா.நாதனோ,

"சீரியல் ஆரம்பிச்சுடுமாம் அதான் இந்த ஓட்டம்..."என்று மனைவியை வாற ரூபனும்,தேவகியும் சிரித்துவிட்டனர். ஹாலில் தன் தந்தை சிவராமன் படத்தை வணங்கியவன் தாயிடம் வேலை இருப்பதாக சொல்லி செல்ல தன் கணவரின் புகைப்படத்தைக் கண்ட தேவகியின் நினைவுகள் சற்று பின்னோக்கி சென்றன,

செந்தில்நாதன்,மோகனாவிற்கு இரு பிள்ளைகள் பெரியவர் சிவராமன் அவரை விட இரண்டு வயது சிறியவர் சிவசுந்தரி.சிவராமனுக்கு கட்டிங்கள் மேல் ஒருவித காதல் என்றே கூறலாம் அதே துறையில் படித்தவருக்கு நல்ல வேலையும் கிடைத்தது ஒரு தனியார் கம்பெனியில்.சிவராமன் வேலையில் சேர்ந்த ஒரு வருடம் கழித்து சிவசுந்தரிக்கு தங்கள் சொந்ததில் பூமிநாதன் என்பவருடன் திருமணம் முடிந்தது.அதே சமயத்தில் சிவராமனுக்கு வேலையாக ஹைதிராபாத் சென்றவருக்கு தெலுங்கு பெண்ணான தேவகி மேல் காதல் வந்தது.தேவகியின் குடும்பம் ஹைதிராபாத்தில் சற்ற வளமான குடும்பத்தை சேர்ந்தவர்.சிவராமன்,தேவகி காதலுக்கு இருத்தருப்பிலும் எதிர்ப்பு வர காதல் பறவைகள் இருவரும் தங்கள் வீட்டை எதிர்த்து திருமணம் செய்தனர்.

சிவராமன் திருமணத்திற்கு பிறகு செந்தில்நாதன் அவர்களை வீட்டில் விட அனுமதி மறுக்க மோனாவோ அழுகையிலேயே கரைந்தார்.சிவராமனோ எவ்வளவு தன் பெற்றவர்கள் திட்டியும் செல்ல மறுத்து அதே வீட்டிலேயே தங்கினார்.தந்தை மகனிடம் பேச்சை குறைக்க மகனோ தந்தையை எதிலும் விட்டுக்கொடுக்கவில்லை அவர் பேசவில்லை என்றாலும் இவரே பேசினார்.தேவகியும் அவர்களிடம் எந்தவித வேறுபாடும் இன்றி பழகவே அவர்களும் கரைந்தனர்.அதாவது கரைப்பார் கரைத்தால் கல்லும் கரையும் என்பார்களே அதேபோல அந்த பெரியவர்களும் மகன்,மருமகளின் அன்பில் கரைந்தனர்.

சிவசுந்திரியின் புகுந்த வீடு சிவராமனின் திருமணத்திற்கு பிறகு தங்கள் பேச்சு வார்த்தைகளை குறைத்துக்கொண்டனர் அவர்களுக்கு இந்த திருமணம் அவ்வளவு உவப்பானதாக இல்லை அதனால் சுந்தரியின் வரவும் நாள் அடைவில் குறைந்தது.இதில் தேவகி திருமணம் முடிந்து இரு மாதங்களில் கரு தரிக்க சுந்தரிக்கு கரு தரிக்காமல் இருக்க அது வேறு பேச்சாக பேசப்பட அமைதியான சுபாவம் கொண்ட சுந்தரி மனதளவில் மிகவும் ஒடுங்கினார்.தன் தங்கையின் நிலையை கேள்விபட்ட சிவராமன் தங்கையைக் காண செல்லும் பொழுது விதி சிவராமன்,தேவகியின் வாழ்வில் விளையாட ஆரம்பித்தது.
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
:D :p :D
உங்களுடைய "மயக்கும்
மான்விழியாள்"-ங்கிற அழகான
அருமையான புதிய லவ்லி
நாவலுக்கு என்னுடைய
மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்,
காயத்ரி டியர்
 

banumathi jayaraman

Well-Known Member
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
காயத்ரி டியர்

ஆரம்பமே ரொம்ப நல்லாயிருக்கு
தங்கையைப் பார்க்கப் போன சிவராமனுக்கு என்ன ஆச்சு?
 
Last edited:

Ambal

Well-Known Member
:D :p :D
உங்களுடைய "மயக்கும்
மான்விழியாள்"-ங்கிற அழகான
அருமையான புதிய லவ்லி
நாவலுக்கு என்னுடைய
மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்,
காயத்ரி டியர்
நன்றி தோழி...
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top