மனம் மாறு(ம்+ஓ)!

Divyahari

Writers Team
Tamil Novel Writer
டீசர்:2

சத்யா....இன்னைக்கு என்ன கலர் ஷர்ட் போடட்டும்.முக்கியமான மீட்டிங் இருக்கு ஆபிஸ்ல.ஏய் சத்யா இன்னு என்ன பண்ணிட்டு இருக்க.

என்னது என்ன பேர் சொல்லி கூப்ட திரும்ப சொல்லு.

அது வந்து சந்தியான்னு தான கூப்ட.

கிழிச்ச.நீ கூப்டது சத்யாவ..சந்தியாவ இல்ல.அதுவும் ரெண்டு டைம் அவ பேர் சொல்லி கூப்ட நீ.

கால காத்தாலயே ஆரம்பிக்காத உன்னோட பஜனைய.தெரியாம கூப்டுட்ட.ஆள விடு சாமி.எனக்கு மீட்டிங்க்கு டைம் ஆச்சு.

கட்டுன பொண்டாட்டி பேரவிட எவளோ ஒருத்தி பேர்தான உன்னோட வாய்ல இருந்து வருது.

சத்யாவ எவளோ ஒருத்தினு சொன்ன..நடக்கறதே வேற பாத்துக்கோ.

என்ன பண்ணுவ என்ன.என்ன பண்ண முடியும் உன்னால.உன்னோட குடுமி என் கையில.அவ போறதுக்கு முன்னாடி ,உன்னோட சத்யாக்கு சத்யம் பண்ணி கொடுத்துறுக்க. எங்கூட சந்தோஷமா குடும்பம் நடத்தறனு.மறந்துட்டிங்களா மிஸ்டர் கௌதம்.

இத சொல்லியே என்ன ஃபிளாக்மெயில் பண்ற.நானும் உங்கூட சண்ட போடாம இருக்க தா ட்ரை பண்ற.ஆனா நீதா அவள பத்தி பேசி எங்கூட சண்டைக்கு வர.

ஆமா அந்த மாயக்காரி என்ன மாயாஜாலம் செஞ்சாலோ..எப்ப பார்த்தாலும் அவள பத்தியே பேசிகிட்டு.

இன்னொருமுறை அவள பத்தி தரக்குறைவா பேசுன...

நா அப்டித்தா பேசுவ…என்ன பண்ணுவ.

கொன்னுடுவ….சத்யாவ பத்தி தப்பா பேசுன…நிஜமா கொன்னுட்டு போய்கிட்டே இருப்ப..இப்ப சொல்ற கேட்டுக்கோ.அவ என்ன விட்டு பிரிஞ்சு போனதுக்கு சரியான காரணம் தேடி அலைஞ்சுட்டு இருக்க.நீதா அதுக்கு காரணம்னு ஒரு டவுட் இருக்கு.நீதான்னு கன்பார்ம் ஆச்சு.அன்னைக்கு தான் நீ உயிரோட இருக்கற கடைசி நாள்...புரிஞ்சுதா என்று கர்ஜித்து விட்டு சென்றான் கௌதம் குமார்...

எங்கே தனது குட்டு வெளிப்பட்டு விடுமோ கணவனிடம், என்ற பயத்தில் உறைந்து நின்றாள் சந்தியா…
 
banumathi jayaraman

Well-Known Member
ஓ அப்போ சந்தியா ஏதோ திரிசமன் செஞ்சு கௌதம் குமாரை சத்யாவிடமிருந்து பிரிச்சுட்டாளா?
அப்புறம் ஏன் இறந்தாள்?
உடம்பு சரியில்லையா?
இல்லை சூசைட் பண்ணிக்கிட்டாளா?

சீக்கிரமா வந்து அப்டேட்ஸ் கொடுங்க, திவ்யா டியர்
 
Last edited:

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Advertisement

New Episodes

Advertisement