மனம் பொய்த்த பொழுதுகள் - அத்தியாயம் 1 - மறக்க முடியுமா? - முன்னோட்டம்

Advertisement

A

arasilamparithi

Guest
அனைவருக்கும் வணக்கம்.

என் “மனம் பொய்த்த பொழுதுகள்” புதினத்தினை உங்கள் முன்பு இங்கு வைப்பதில் மகிழ்ச்சி. ஆதரவு தருவீர்கள் என்ற நம்பிக்கையுடன், நேரடியாக முதல் அத்தியாயத்தின் முன்னோட்டத்தை முன் வைக்கிறேன். நன்றி.

மறக்க முடியுமா?


ஏன்? ஏன்?? ஏன்??? விடை கிடைக்காத வரையில், வாழ்நாள் முழுவதற்கும் இந்த கேள்வி மனதில் ஒலித்துக் கொண்டுதானிருக்கும் என்று தோன்றியது. மெல்லத் தோன்றிய எண்ணம் தான், கடந்த சில நாட்களில் மனம் முழுவதும் வியாபித்துக் கொண்டு விட்டது.

“உன்னுடைய திருவிளையாடல்கள், அதிலும் பழையவையே ஆயிரம் இருக்கிறது. அப்போதில் இருந்து இப்போது வரையிலானது எல்லாம் இங்கு நான் மட்டுமில்லை, எல்லோருக்குமே தெரியும். அதிலும் இப்போது நீ செய்திருப்பது, நீ மட்டும் நேரில் இருந்திருந்தால்..”

தூரத்தில் தெரிந்த உருவங்கள் கடந்து போகும் வரை மூச்சடக்கி, அரவமற்று சுற்றுச் சுவர் ஓரமாய் வளர்ந்திருந்த புதர் போன்ற செடியின் புறம் மறைந்து நின்று, அதன் பிறகு சுவரேறி குதித்து..

அதிலும் அன்றைய நிலையில், அத்தனை அப்பட்டமான தோல்வி அது. முழுமையாக பலனற்றுப் போய்விட்ட முயற்சி. இதனைத் தன்னால் என்றேனும் மறக்க முடியுமா? வாழ்வின் மறக்க முடியா நிகழ்வுகளின் எண்ணிக்கையில் இன்னுமொன்று கூடியிருக்கிறது.

இத்தனை வருடங்களில், தந்தையின் குணத்தையும் உணர முடிந்திருந்ததால், இதழ்கள் அத்தனை களேபரத்திலும் மெல்லிய ஏளனப் புன்னகையுடன் தன்னைத் தானே பிதுக்கிக் கொண்டது.

பெயர் மட்டும்தான் இப்படி. அவனிடம் குணம் இருக்கிறதோ இல்லையோ, சுற்றிலும் இருப்பவர்களிடத்தில் ஒருவரிடத்திலும் குணத்தைத்தான் காணோம். தங்கள் குணத்தை எங்கோ ஒளித்து வைத்துவிட்டு, அதைத் தேடித்தான் இப்படிப் பெயர் வைத்தார்களோ. எப்படி எதற்காக வைத்திருந்தாலும் தான் என்ன.

ஆனால், அவனும் கூட ஒரு கட்டத்தில் குணா ஊரில் இருந்தபோது, மற்ற எல்லோரும் தொலைபேசி செய்து பேசிய போது, பேசத்தான் செய்தான். எல்லாம் சரியாகி விட்டது என்று நினைத்த போது, அந்த தொலைபேசி அழைப்பைக் கொண்டே பிரச்சனைக்குப் பிள்ளையார் சுழி போட்டு விட்டான்.

‘பிச்சைக்காரர்களுக்குத் தேர்ந்தெடுக்கும் உரிமையில்லை’
 

banumathi jayaraman

Well-Known Member
:D :p :D
உங்களுடைய "மனம் பொய்த்த
பொழுதுகள்"-ங்கிற, அழகான
அருமையான, புதிய, லவ்லி
நாவலுக்கு என்னுடைய
மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்,
அரசிளம்பரிதி சகோ
 
Last edited:

Sainandhu

Well-Known Member
வாழ்ந்துக்கள். பரிதி....:)
உங்களைப் பற்றிய சிறு குறிப்பு கொடுக்கலாமே....?
ஆண் எழுத்தாளரா.....?
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top