மனம் தீண்டும் மான் விழியாள் -26

#1
received_2825426224375726.jpeg

அத்தியாயம்-26

ஆண்கள் இருவரும் விழிப்பதை பார்த்தவள் “என்னாச்சு ஏன் ரெண்டு பேரும் இப்படி விழிக்கறீங்க நான் கேட்ட டெஸ்ட் ரிசல்ட் இருக்கா, இல்லையா பதில் சொல்லாம இப்படி பாத்தீங்கன்னா என்ன அர்த்தம்” என்று எரிச்சலுடன் கேட்டாள்.

சாகுல், “மேடம் நாங்க இப்படி யோசிக்கவே இல்லை அதனால அந்த டெஸ்ட் எடுக்கல”.

தேவி, “வாட் எடுக்கலையா,”என்று மேலும் நாலு நல்ல வார்த்தைகளால் வருத்தெடுத்தவள் “இது எவளோ பெரிய விஷயம் இதை எப்படி மிஸ் பண்ணுனீங்க, ச்ச…..உங்ககிட்ட இருந்து உருப்படியான ஒரு தகவலும் கிடைக்கல, நீங்கல்லாம் என்ன கேசை விசாரிச்சீங்களோ போங்க சார், போங்க யாராவது ஏமாந்தவன் கிடைச்சா அவனை அர்ரெஸ்ட் பண்ணி உள்ள வச்சி பேர் வாங்க பாருங்க ஆனா உண்மையான அக்கியூஸ்ட்ட கோட்டைவிட்டுடுங்க கிளம்புங்க சார்”என்று எரிச்சல் மிகுதியில் கத்தியவள் அப்படியே அங்கிருந்த சேரில் தலையில் கை வைத்து அமர்ந்துவிட்டாள்.

சாகுல் விட்டால் போதும் என்று ஓடிவிட சஜித்தோ அவன் அமர்ந்திருந்த டேபிளில் அவன் கையோடு கொண்டு வந்த பைலை புரட்டி கொண்டிருந்தான்.சற்று நேரம் அப்படியே அமர்ந்து தன் கோபத்தை கட்டுக்குள் கொண்டு வந்த தேவி தன் போனை எடுத்து இறந்த பெண்ணின் உடைகள் எங்கு இருக்கிறது என்று விசாரித்து அதை டெஸ்ட் செய்ய அனுப்புமாறு தனக்கு கீழ் வேலை செய்பவரிடம் சொன்னவள், இனி அடுத்து என்ன செய்யலாம் என்ற யோசனையோடு திரும்பியவளின் கண்ணில் பட்டான் பைலை பார்த்து கொண்டிருந்த சஜித்.

தேவி, “இவர் இன்னும் கிளம்பலையா, அது என்ன பைல்”என்று யோசித்தவள் “இவர்கிட்ட நான் கேட்ட டெஸ்ட், ஏன் உங்க டிபார்ட்மென்ட்ல எடுக்கலன்னு கேக்கலாமா”என்றுவாறு அவன் அருகில் சென்றாள்.


தேவி அப்படி என்ன டெஸ்ட் பற்றி கேட்க விரும்புகிறாள் என்பதுதானே அனைவருகுள்ளும் இருக்கும் கேள்வி, அது என்ன டெஸ்ட் என்றால், இறந்த பதினேழு வயது குழந்தை பெண்ணை மூன்று முறை கற்பழித்த கயவனின் ஸ்பெர்ம் அந்த பெண்ணின் உடையில் சிதறி இருக்க வாய்ப்பு உண்டு என்பதால் அந்த உடையில் இருக்கும் ஸ்பெர்மின் டிஎன்ஏவைதான் டெஸ்ட் செய்தீர்களா என்பதுதான் அது.

காவல் துறையை சேர்ந்தவர்கள் இதைபற்றி யோசிக்காததால் பெண்ணின் உடையை டெஸ்ட் செய்யவில்லை. ஆனால் இப்போது ருத்ரா அதை செய்ய சொல்லிவிட்டாள்.

தேவி தன் அருகில் வருவதை ஓர கண்ணால் அவளை நோட்டம் விட்டு கொண்டிருந்த சஜித் கவனித்திருக்க, அவள் தன்னை நெருங்கி வரும் நேரத்திற்கு காத்திருந்தவன் அவள் அருகில் வந்தவுடன் வேண்டுமென்றே அவன் தன் கால்களை நீட்டி அவள் காலை தட்டி விட, அவளோ தடுமாறி அவன் மடியில் விழுந்தாள்.

மடியில் அமர்ந்தவளை கண்டு விழி விரித்தவன் “என்ன மேடம் இது. பைல் பார்த்துட்டு இருக்க ஆபிசர்க்கிட்ட இப்படிதான் பிஹேவ் பண்ணுவீங்களா, அன்னைக்கு அப்படிதான் நல்லா தெரிஞ்ச மாதிரி சண்டை போட்டீங்க இன்னைக்கு என்னடானா என் பொண்டாட்டி மாதிரி மடில உட்கார்ந்துட்டீங்க எந்திறீங்க மேடம். இதையெல்லாம் பார்த்தா இந்த உலகம் என்னை தப்பா நினைக்காதா,பெருமாளே ஈ லோகத்தில் சுந்தரமான காவலதிகாரிக்குகூட பாதுகாப்பு இல்லாம போய்டுச்சே….. “என்று பேசினாலும் கை என்னவோ தன்னவளின் வெற்றிடையில் கோலம் போட துவங்கியிருந்தது.

தேவியோ முதலில் திகைத்தவள் பின் அவன் பேச்சில் கோவம் வர,முகம் சிவக்க அவன் கையை தட்டி விட்டு எழ நினைக்க,அதை செய்ய விடாமல் அவனது மற்றொரு கை அவளை இறுக்கியது. அதில் மேலும் கடுப்பானவள் “பேசுறது என்னவோ பச்ச புள்ள மாதிரி பேசறது ஆனா பண்றது பச்ச பச்சயா பண்றது”என்று பல்லை கடித்தவள் அவனிடம் பேச துவங்கினாள்.

தேவி, “என்ன பண்ற ஜித்து, கையை எ……”என்று நெளிந்து கொண்டே சொல்லி கொண்டிருந்தவளின் பேச்சு அவன் இடையை இறுக்கி பிடித்ததில் தடை பட,செய்வதறியாது விழித்தவளின் பார்வை அங்கிருந்த சிசிடிவி காமிராவில் பதிந்து மீண்டது. அவனோ நமுட்டு சிரிப்புடன் தன் பாக்கெட்டில் இருந்த கேமிரா ஜாமரை தடவி பார்த்தவன், பின் வேண்டுமென்றே குனிந்து அவள் பெண்மையின் மென்மையில் முகத்தை பட்டும் படாமல் உரசி “மேடம் தயவு செஞ்சு எந்திரிங்க நான் எவளோ முக்கியமான விஷயம் இந்த பைல்ல படிக்கறேன் தெரியுமா”என்க,

தேவியோ “நான் என்ன எந்திரிக்க மாட்டேன்னா சொன்னேன். நீ விட்டாதானேடா எந்திரிக்க முடியும். உடும்பாட்டம் பிடிச்சுக்கிட்டு என்னை சொல்றான். இவனை சொல்லி தப்பில்ல இவனை பத்தி தெரிஞ்சும், அந்த சாகுல் போகும்போதே வெளிய ஓடாமா நின்னேன் பாரு என்ன சொல்லணும்”என்று தன்னையே நொந்து கொண்டவள் “அப்படி என்ன முக்கியமான விஷயத்தை படிக்கிறான்” என்று அந்த பைலை எட்டி பார்த்தவளின் முகம் விளக்கெண்ணெய் குடித்தது போல் ஆனது.

தேவியின் முக மாற்றத்தை கண்டு வந்த சிரிப்பை அடக்கியவன் வேகமாக அந்த பைலை மூடிவிட்டு “என்ன மேடம் இது அநாகரிகம் எங்க பைலை நீங்க எதுக்கு பாக்குறீங்க வெரி பேட் மேனர்ஸ் மேடம் இது” என்று தின பத்திரிக்கையில் வரும் சுடோகு போட்டிக்கான கட்டம் இருக்கும் பக்கத்தின் கலெக்ஷன்ஷை மூடினான்.

தேவி, “டேய் பிராடு இதுதான் முக்கியமான பைல்லா”என்று கேட்க அவனோ “ஆமாம் மேடம் ரொம்ப கான்பிடன்ஷியல், நீங்க பார்த்த விஷயத்தை உங்க ஹயர் ஆபிசர்ட்ட கூட சொல்லிடாதீங்க”என்று முகத்தை சீரியஸாக வைத்து கொண்டு சொன்னாலும் கை என்னவோ அவள் இடையின் அளவை அறிவதில் மும்முரமாகதான் இருந்தது.

தேவி பல்லை கடித்தவாறே “ஒழுங்கா கையை எடுடா இங்க கேமரா வேற இருக்கு யாராவது பார்த்தா என்னைபத்தி என்ன நினைப்பாங்க”

சஜித், “ஹலோ என்ன மேடம், நீங்க என் மடில உட்கார்ந்துட்டு என்னைய போய் பிராடுன்னு சொல்றீங்க, கட்டுன பொண்டாட்டி மாதிரி வாடா போடான்னு சொல்றீங்க இட்ஸ் நாட் பேர் மேடம்.ஒரு அப்பாவி ஜீவன்க்கு இங்க மரியாதை இல்லாம போச்சு, இந்த ஆபிஸ்ல ஒரு சுடோகு கூட பில் பண்ண முடியல, நான் கோவமா போறேன்” என்றவன் எழும் முன் அவள் இடையில் அழுத்தமாக கிள்ளிவிட்டு எழ, “அய்யோ அம்மா….. “ என்ற அலறலோடு துள்ளி குதித்தவள், அவனை முறைக்க அவனோ “அப்படி பாக்கதீங்க மேடம் நேக்கு வெட்கம் வெட்கமா…. வருது”என்றுவிட்டு காலரை இழுத்து முகத்தை மூடியவாறு ஓட தேவியோ “என்னடா அங்க இருக்க வரைக்கும் ஸ்ட்ரிட் ஆபிசரா இருந்தவன் இப்போ இப்படி ஆகிட்ட”என்ற ரேஞ்சில் விழித்து கொண்டிருந்தாள்.

சஜித் அவளிடம் விளையாட்டுவாக்காக பேசினாலும் அடுத்து அவன் சென்ற இடம் தேவி அந்த பெண்ணின் உடையை டெஸ்ட் செய்ய சொன்ன ஆய்வகத்திற்குதான். அங்கு தனக்கு தெரிந்த நபரை பிடித்து ஒரு சில தகவல்களை திரட்டியவனின் முகம் கோபத்தில் இறுகியது. சஜித்,“உன்னோட ஆட்டம் முடிவுக்கு வந்துடுச்சுடா பிளடி. நீ இந்த சஜித்தோட வட்டத்துக்குள்ள வந்துட்ட இனி அந்த கடவுளே நினைச்சாலும் என்கிட்ட இருந்து உன்னை காப்பாத்த முடியாது”என்றவன் வீட்டில் இருக்கும் தகவலை சரிபார்க்க எண்ணி,வண்டியை வீட்டை நோக்கி செலுத்தினான்

சஜித் வீட்டிற்கு சென்ற போது நந்தினி வீட்டில் இருந்தாள். வேலைக்கு சென்றவள் சீக்கிரம் வீட்டிற்கு வந்த காரணம் தெரியாமல் அவளிடமே அவன் கேட்க, அண்ணனின் கேள்வியில் தடுமாறியவள் பின் பார்வையை வேறு பக்கம் பதித்து, “அ…அ…. அது அண்ணா தலை வலி அண்ணா, அதான் ரெஸ்ட் எடுக்கலாம்னு வந்தேன்”என்று சொல்ல, சஜித்தும் கேசைபற்றிய யோசனையில் இருந்ததால் அவள் தடுமாற்றத்தை கண்டு கொள்ளாமல் “மாத்திரை போட்டியாடா எதை பத்தியும் யோசிக்காம தூங்குடா,ஓவர் டென்ஷன்கூட தலை வலிக்கு காரணம் ஆகும்”என்றவன் தான் வந்த வேலையை பார்க்க சென்றுவிட்டான்.

நந்தினியும் ஒருவழியாக அண்ணன் தன் தடுமாற்றத்தை கவனிக்கவில்லை என்ற நிம்மதி பெரு மூச்சோடும், இன்று நடந்த சம்பவத்தை எப்படி அண்ணனிடம் சொல்வது என்ற பயம் நிறைந்த குழப்பத்துடனும் தன் அறைக்குள் அடைந்து கொண்டாள்.

நாட்கள் அதன் போக்கில் செல்ல தேவி எதிர்பார்த்தது போலவே அந்த பெண்ணை கற்பழித்தவனின் ஸ்பெர்ம் அவள் உடையில் இருப்பதாக ஆய்வாகத்தில் இருந்து தகவல் வந்தது.அதில் இருக்கும் டிஎன்ஏ வை எடுக்க சொன்னவள் தாங்கள் சந்தேகபட கூடிய அனைவரின் ஸ்பெர்ம்மையும் எடுத்து உடையில் இருந்த டிஎன்ஏவோடு ஒத்து போகிறதா என்று செக் பண்ண சொன்னாள். ஐநூறு பேருக்கும் மேல் இருப்பவர்களை டெஸ்ட் செய்தும் யாருடைய டிஎன்ஏவோடும் ஒத்து போகாமல் இருக்க அந்த ரேப்பிஸ்டை கண்டுபிடிப்பது பெரும் சவாலான விஷயமாகவே அவளுக்கு இருந்தது.

சஜித்தோ அந்த டிஎன்ஏ சாம்பிளை தனக்கு ஒரு காப்பி வாங்கியவன், அந்த பெண் இருக்கும் ஏரியாவில் இரவு நேரங்களில் வேறு யாருடைய நடமாட்டம் இருக்கிறது என்பதை கண்காணிக்க ஆரம்பித்தான். இடையில் ஒரு முறை தேவியை சந்தித்து அவனை கண்டுபிடிக்கும் வேலையைவிட்டுவிட்டு வேறு வேலை பார்க்க சொன்னான் “ஏன்” என்று கேட்டவளிடம் அவனுக்கான தண்டனை சட்டபடி இல்லை,என் எண்ணப்படி கொடுக்க போகிறேன்” என்றவனை முறைத்தவள், “நான் இருக்க வரைக்கும் அவன்கிட்ட உங்கள நெருங்க விடமாட்டேன்” என்று சூளுரைத்தவள் மறுநாளே கமிஷனரை சென்று சந்தித்தாள். அவரிடம் சில விஷயங்கள் பேசியவள் அடுத்து சஜித்திடம் பேச நினைத்தாள்.

தேவி, “இவனிடம் தனியாக சென்றால் பேச முடியாது, பேசவும் விடமாட்டான். பொது இடத்துல கும்பல்லா இருக்கமாறி இடத்துல மீட்பண்ணலாம் அப்போதான் பேச முடியும்” என்று தனக்குள் பேசி கொண்டவள் அவன் போனிற்கு அழைத்து சொல்ல, அவனும் உடனே கிளம்பி வந்துவிட்டான்.

அந்த காபி டேவில் அனைவரும் அவரவர் துணைகளுடன் அமர்ந்திருக்க, தேவியோ சஜித்திடம் கேள்வி கேட்டு கேட்டு கடுப்பாகி அமர்ந்திருந்தாள்.சஜித் சற்று நேரம் அமைதியாக இருந்தவன் பின் தன் விளையாட்டு தனத்தை கைவிட்டு இறுகிய முகத்துடன் “இது கேட்கதான் வர சொன்னீங்களா மேடம் அப்போ நான் கிளம்பலாமா”என்றான்.

தேவி, “ஜித்து நான் கேட்ட கேள்விக்கு நீங்க பதில் சொல்லவே இல்லை”.

சஜித், “என்ன கேள்வி”.

தேவி, “வீணா என் பொறுமைய சோதிக்காதீங்க ஜித்து, இந்த கேஸ்தான் எங்ககிட்ட வந்துருச்சுல்ல இனி நான் பார்த்துக்கறேன். அவனுக்கு கண்டிப்பா உங்க மனசு அமைதி அடையற அளவுக்கு தண்டனை வாங்கி தருவேன்.நீங்க உங்க எண்ணத்தை மாத்திக்கோங்க, அவன் எனக்கு உயிரோட வேணும்”என்றாள்.

சஜித், “முடிஞ்சா பிடிச்சுக்கோங்க மேடம், அவன் யாருக்கு முதல்ல கிடைக்கறான்னோ அது அவனோட லக். அவனை என் கையாள கொன்னாதான் என் மனசு சந்தோஷப்படும். சின்ன பொண்ணு மேடம் அது.பதினெட்டு வயசுக்கூட ஆகல அவளை போய்……” என்று கெட்ட வார்த்தையால் அந்த ரேப்பிஸ்ட்டை திட்டியவன் “முடிஞ்சா அவனை என்கிட்டே இருந்து காப்பாத்திக்கோங்க மேடம், அப்போ நான் உத்தரவு வாங்கிக்கறேன்” என்று போலி பணிவு காண்பித்தவன், திரும்பி நடக்கும்போது தன் காலரை கெத்தாக தூக்கி விட்டு, ஷர்ட்டில் மாட்டியிருந்த கூலர்சை எடுத்து ஸ்டைலாக கண்களில் மாட்டியவன் திமிராக நடக்க,தேவியோ தன்னவன் எடுத்த முடிவை தடுக்க தன்னாலான அனைத்து செயல்களையும் செய்தாள்.

தேவியை சந்தித்துவிட்டு வந்த சஜித்தை கமிஷனர் அழைக்க, “இவர் எதுக்கு இப்போ நம்மை கூப்பிடறாரு” என்று யோசித்தவாறு அவர் முன் போய் அவன் நிற்க, அவரோ அரசியல் பிரமுகர் ஒருவருக்கு பாதுகாப்பு தேவை என்றும் அதற்கு அவனைதான் நியமித்திருப்பதாகவும் சொல்ல, தேவியை எண்ணி பல்லை கடித்தவன் அவரிடம் வேறு எதுவும் பேசாமல் தன் சம்மதத்தை மட்டும் தெரிவித்துவிட்டு கிளம்பிவிட்டான்.

அதோ இதோ என்று நாட்கள் கற்பூரமாய் கரைந்தனவே ஒழிய அக்கியூஸ்ட்டை தேவியால் கண்டுபிடிக்கவே முடியவில்லை, இருந்தாலும் மனம் தளராமல் இரவு பகல் பார்க்காமல் அவனை தேடி கொண்டிருந்தாள் என்றால், சஜித்தோ அடுத்த ஒரு வாரத்தில் அவனை கண்டுபிடித்து தன் கஸ்டடியில் வைத்தான்.

இப்படி இருந்த ஒரு நாளில்தான் அரசியல் பிரமுகர்களுக்குள் பிரச்சனை என தொண்டர்கள் தங்களுக்குள் சண்டையிட்டு கொள்ள அது பெரிய கலவரமாக மாறியது. கலவரத்தை தடுக்க வந்த போலீசையும் அவர்கள் தாக்க சஜித் நேரடியாக வந்து கலவரத்தை அடக்க வேண்டியானது.

ரவி எவ்வளவோ தடுத்தும் கேட்காமல் கோவிலுக்கு சென்றே ஆவேன் என்று பிடிவாதம் பிடித்த தேவி கிளம்பி வெளியே வர,இரண்டு வாண்டுகளும் தாயின் இரு புறமும் வந்து நின்று “நாங்க நாங்க……” என்று குதிக்க, ரவி தேவியை முறைக்க,தேவி பாவமாக சகுந்தலாவை பார்த்தாள்.

“ஏன்” என்றால் அவருக்குதான் தெரியும் தேவி இன்று கோவிலுக்கு செல்வதற்கான காரணம். ஆம், இன்று சஜித்தின் பிறந்தநாள் ஒவ்வொரு வருடமும் எங்கிருந்தாலும் அங்கிருக்கும் கோவிலுக்கு சென்று அவன் பெயருக்கு அர்ச்சனை செய்துவிடுவது அவள் வழக்கம் இன்றும் அப்படி கிளம்பியவளை செல்ல விடாமல் குழந்தைகள் தடுக்க தேவியின் தவிப்பை புரிந்து கொண்ட சகுந்தலா “ரவி விடுடா வருஷா வருஷம் அவ போறதுதானே, போயிட்டு வரட்டும் குழந்தைகளை நான் சமாளிச்சுக்கறேன்.. “ என்று இருமலோடு சொன்னார்.
ரவி அவரை முறைத்தவன் “என்னமா நீங்க உங்களுக்குதான் உடம்பு சரியில்லையே, ரெண்டு நாளா காய்ச்சல்ல படுத்திருந்துட்டு இன்னைக்குதான் எழுந்தீங்க, அதுக்குள்ள இன்னைக்கு ஏன் தலைக்கு குளிச்சீங்க ரெண்டு பேரும் நான் சொல்றதையே கேக்க மாட்டிக்கிறீங்க,சரி இருங்க எல்லாரும் போலாம் நான் கிளம்பி வறேன்”என்று குளிக்க தன் அறைக்குள் புகுந்து கொண்டான்.

ஒருவழியாக அனைவரும் கிளம்பி கோவிலுக்கு சென்று பூஜை முடித்து அமர்ந்திருந்த சமயம் அங்கு வந்த கலவர கும்பல் கோவிலை மூட சொல்லி பிரச்சனை செய்தனர். அதில் கோபம் கொண்ட தேவி ருத்ர தேவி ஆக, ரவியோ “தேவி நாம கிளம்பலாம்” என்று கிளம்ப சொல்ல, அவளோ “இரு ரவி இவங்களுக்கு எல்லாம் வேற வேலையே இருக்கறது இல்லை, எப்போ பாரு அப்பாவி மக்களை பாதிக்கற மாதிரியான வேலை செய்யறதையே வேலையா வச்சிருக்காங்க. இவங்களை….” என்று பல்லை கடித்தவள் “கொஞ்சம் கவனிச்சுட்டு வறேன் நீ குழந்தைகளை பார்த்துக்கோ” என்றவள் தான் கலவரகாரர்களை சம்காரம் செய்ய சென்றாள். தான் கட்டியிருந்த புடவை முத்தனையை தூக்கி இடுப்பில் சொருகியவள் அங்கு முதல் ஆளாக நின்று வாம்பிலுத்து கொண்டிருந்தவனின் வாயில் குத்தியவள் அவன் பக்கத்தில் நின்றவனின் வயிற்றில் ஒரு குத்துவிட இருவரும் ரத்தம் கக்கி கொண்டே சுருண்டு விழுந்தனர்.

இருவர் விழுவதை பார்த்த மற்ற அல்லக்கைகள் அவளை தாக்க வர அவளோ அசால்ட்டாக அவர்களை சுழண்டு சுழண்டு அடித்தாள், கலவரம் செய்ய வென்றே வருபவர்களின் எண்ணிக்கை அதிகமாக ரவி தான் வைத்திருக்கும் துப்பாக்கியை எடுத்து ஒவ்வொருவனின் காலை பார்த்து சுட ஆரம்பிக்க,கும்பல் தெரித்து ஓட துவங்கியது.

அங்கு ஒரு பக்கம் கலவரகாரர்களை சமாளித்து கொண்டிருந்த சஜித் துப்பாக்கி சத்தம் கேட்டு “யாருக்கு என்ன ஆனதோ…..” என்று பதறி கோவிலை நோக்கி ஓடி வந்தவனின் பார்வை எங்கு பிரச்சனை நடக்கிறது என்பதை அறிய நாலா புறமும் சுற்றி வந்தது.

சஜித்தின் கழுகு விழிகள் முதலில் தேவியை கண்டு ஆச்சர்யத்தையும் அடுத்து ரசனையை வெளிப்படுத்தி பின் அங்கு நின்றிருந்த ரவியையும் அவன் கையில் இருந்த துப்பாக்கியையும் கண்டு “இவன்தானா….” ஆசுவாசம் அடைந்தவனின் பார்வை அடுத்து அங்கு நின்றிருந்த உருவத்தை கண்டு அதிர்ந்து,மூச்செடுக்கவும் மறந்து சிலையாகி போனான்.

சஜித் யாரை பார்த்திருப்பான் என்பதை அடுத்த எபியில் பார்க்கலாம்.
 
#10
நல்லா இருக்கு
அவன் பார்த்தது சகுந்தலாம்மாவா
நன்றிம்மா :love::love::love:அம்மாவை குழந்தைகளை பார்த்தானானு அடுத்த எபில தெரிஞ்சுடும்மா:love::love::love:
 
Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Advertisement

New Episodes

Advertisement