மனம் தீண்டும் மான் விழியாள்-23

#1
received_2825426224375726.jpeg

அத்தியாயம்-23

யாருக்காகவும் இயற்கை காத்திருக்காது என்பதற்கு ஏற்ப நாட்கள் மாதங்களாக மாதங்கள் வருடங்கள் ஆக இதோ அதோ என்று மூன்று வருடங்கள் ஓடிவிட்டது.

இடைப்பட்ட நாட்களில் பெரும் மாற்றம் ஏற்பட்டிருந்தது சஜித்தின் வாழ்க்கையில். தேவி கொடுத்து சென்ற அனைத்து ஆதரங்களையும் கொண்டு சஜித் நாகப்பனை கைது செய்ய முயற்சிக்க நோயாளியை சிறையில் வைக்க கூடாது என்று அவரது வக்கீல் வாதாட வேறு வழி இல்லாமல் அவரை மருத்துவ உதவிக்காக அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

சஜித் அவரை மன்னிக்கும் மன நிலை அற்றவனாக இருந்தான். அவனிற்கு இருக்கும் கோபத்திற்கு விட்டால் நாகுவின் உடல்நிலையை எல்லாம் கணக்கில் கொள்ளாமல் அவரை சிறையில் தள்ளி அவர்கள் முறையில் கொஞ்சம் ஆசைத்தீர நலம் விசாரித்திருப்பான் ஆனால் அதற்கு வழி இல்லாமல் போக, “உனக்கு வேறு விதமான தண்டனையை கொடுக்கிறேன் பார்”என்பது போல் நாகுவை பார்க்க செல்லாமல் யாரும் அற்ற தனிமரமாக அந்த மருத்துவமனையில் இருக்குமாறு விட்டுவிட்டான்.

இப்போதைக்கு தனிமை மட்டுமே அவருக்கு அளிக்கபடும் சிறந்த தண்டனை என்பதை உணர்ந்து அதை செய்தான். பின் இந்த ஊரே வேண்டாம் என்று வேறு ஊருக்கு டிரான்ஸ்பர் வாங்கி கொண்டு சென்றுவிட முடிவெடுத்து கொண்டான்.

முடிவெடுத்தபின் தாமதமாக்குபவனா சஜித் அடுத்தடுத்து புயல் போல் செயல்பட்டான். அவர்கள் கல்லூரியையே ஒரு பொது தொண்டு நிறுவனத்திடம் கொடுத்தவன் அவர்களின் மேற் பார்வையில் கல்லூரியை நடத்த சொல்லிவிட்டான். அவர்கள் இருந்த வீட்டை போதை பொருளால் அடிமையானவர்களுக்கு மறு வாழ்வு அமைத்து கொடுக்கும் மையமாக மாற்றி கொள்ள சொல்லிவிட்டான். தோட்டம் மற்ற சொத்துக்கள் என தாத்தா, தந்தை என அவர்களின் குடும்பத்தில் இருந்தவர்கள் தவறான முறையில் சம்பாதித்த அனைத்தையும் ஏழை மக்களுக்கும், மறு வாழ்வு மையத்திற்குமே நந்தினியின் சம்மதத்துடன் கொடுத்துவிட்டு,புது வாழ்க்கையை ஆரம்பிக்க தான் பணியில் மாற்றல் வாங்கிய மகாராஷ்டிரத்திற்கு சென்றுவிட்டான்.

பேரன்,பேத்தி என்ற இரு உறவு இருந்தும் யாரும் பார்க்க வராமல் தன் கடைசி காலத்தை தனிமையின் கொடுமையில் வாழ்ந்து கொண்டிருக்கிறார் நாகு. அத்தோடு அவரை சந்திக்க என்று மருத்துவமனைக்கு வந்த ஒரே நபர் அவரது வக்கீல் மட்டும்தான், அவரும் பீஸ் வாங்க வந்திருக்க அவருக்கு எதுவும் கொடுக்கமுடியாமல் திணறி போனார் நாகு.

வக்கிலோ தான் வந்த வேலை முக்கியம் என்று நாகு கையில் எப்போதும் அவர் அணிந்திருக்கும் வைரம் பதித்த மோதிரத்தை கழற்றி கொண்டவர் “பீஸ்க்கு இதை கழட்டிக்கறேன் பெரியவரே.உங்க பேரன் நீங்க யாருனே தெரியாதுனு சொல்லிட்டான் அதனாலதான் என்னோட வேலைக்கான கூலி எனக்கு வேணும்ல” என்று திமிராக பேசியவன் திரும்பி பார்க்காமல் சென்றுவிட்டார்.

நாகு என்ற பல் பிடுங்கப்பட்ட பாம்போ தன் கடந்த காலத்தை நினைத்து அப்போதும் கவலை கொள்ளாமல் திமிராக நடந்து செல்லும் வக்கீலை பார்த்து“டேய் வக்கீலு என் முன்னாடி நிமிந்து கூட நிற்கமாட்ட இப்போ திமிரா பேசிட்டு போறியா,நான் மட்டும் நல்லா ஆனேன் உங்க ஒருத்தரையும் சும்மா விட மாட்டேன்டா” என்று அந்த நிலையிலும் தன் விஷத்தை ஏற்றி கொண்டுதான் இருந்தது. சில ஜென்மங்கள் என்னதான் அடிப்பட்டாலும், மிதிப்பட்டாலும் அவர்கள் குணத்தை மாற்றி கொள்ள மாட்டார்கள் அது போலதான் நாகுவும் இனி அவர் வாழ்க்கை அரசு மருத்துவமனையில் யாரும் அற்ற அனாதை போல் தொடரும்.


சஜூத், நந்தினி இருவர் மட்டுமே குடும்பம் இதற்கு மேல் எதுவும் இல்லை என்று அங்கிருக்கும் போலீஸ் குவார்ட்டசில் தங்கள் வாழ்க்கையை துவங்கினர்.இருவர் மட்டுமே குடும்பம் ஆக முடியுமா சஜித் தன் குடும்பத்தை எப்போது கண்டுபிடிக்க போகிறானோ அது இனி விதியின் கையில்.

நந்தினி தன் எம்பிஏ படிப்பை முடித்துவிட்டு ஒரு தனியார் கம்பெனியில் ஹச்ஆராக பணியில் சேர்ந்து கொண்டாள். புது இடம், புது மனிதர்கள், புது சூழல் என அனைத்தையும் எளிமையாகவும் தங்களுக்கு பிடித்தாற் போலவும் மாற்றி கொண்ட அண்ணன் தங்கை இருவருக்கும் மனதில் இருக்கும் காதலின் வலியை சரி செய்யும் வழிதான் தெரியவில்லை.

நந்தினி என்னதான் வீரப்பாக ரவியிடம் “எனக்கு நீ வேண்டாம்” என்று சொல்லிவிட்டாலும் அவன் மீது அவள் கொண்ட காதல் ஆலமர விருச்சமாக அவளுள் படர்ந்திருக்க அவனை மறக்கவும் முடியாமல் “தேவி சொன்னாள் என்ற ஒரே காரணத்துக்காக தன்னை காய படுத்தும் என்று தெரிந்தும் ஏன் அப்படி செய்தான்” என்று கோபபடவும் முடியாமல் தள்ளாடி கொண்டிருந்தாள்.

ஆம்,தள்ளாடி கொண்டுதான் இருந்தாள். அவன் மீது கொண்ட கோபம் நாட்கள் கடக்க கடக்க குறைந்து போக இவளாகதான் கோபத்தை இழுத்து பிடித்து வைத்துகொண்டிருக்கிறாள். ஆனால் அதற்கும் ஆயுள் எவ்வளவு நாட்கள் என்றுதான் தெரியவில்லை. காலம் எப்படிப்பட்ட காயங்களையும் ஆற்றும் என்பது நந்தினி விஷயத்தில் உண்மையாகி போனது.ஆனால் சஜித்தோ முன் இருந்ததை விட அதிகம் தன்னுள் இறுகி போனான்.

தேவியிடம், கணவன் மனைவியாக வாழலாம்,நீ என் மனைவி, என்னோடுதான் இருந்தாக வேண்டும்,என்னை பிரிய நினைக்காதே”என்று சொன்னவனுக்கு அப்போது புரியவில்லை அவளை தான் காதலிப்பதால்தான் அவள் பிரிவை விரும்பவில்லை என்று,ஆனால் இப்போது அவளின் பிரிவு அவனுள் இருந்த அவள் காதலை உணர செய்தது.

முதலில் தன்னைவிட்டு அவள் எப்படி செல்லலாம் என்ற கோபத்தில் இருந்தவன் பின் நாட்கள் செல்ல செல்ல அவள் மீதான கோபம் விலகி, எங்கு சென்றிருப்பாள் என்று தேட துவங்கினான்.காதல் என்ற மூன்று எழுத்து செய்வினை அவனையும் அவன் கோபத்தையும் சில்லு சில்லாக சிதைத்திருந்தது.ஆனால் அவள் எங்கு சென்றாள் என்ற தகவல் மட்டும் அவனுக்கு கிடைக்கவே இல்லை. இருந்தாலும் தன் முயற்சியை விடாமல் மனைவியை தேடி கொண்டே இருக்கிறான்.

அதோ இதோ என்று நாட்கள்தான் சென்றதே ஒழிய அவனவளை அவனால் கண்டுபிடிக்கத்தான் முடியவில்லை. இந்த மூன்று வருடங்களில் அவளை அவன் தேடாத இடம் இல்லை எந்த வழியில் சென்றாலும் அவன் தன்னை கண்டுபிடிக்க கூடாது என்ற முடிவில் இருந்த தேவி அனைத்து வழிகளையும் அடைத்து வைத்திருந்தாள். தேடி தேடி சலித்தவனுக்கு ஒரு அளவிற்கு மேல் அவள் மீது செல்ல கோபம் எழ “அடியே மான் குட்டி நீ என் கண்ணுல சிக்கு அன்னைக்கு இருக்கு உனக்கு”என்று கருவி கொண்டவனின் மனதில் அவள் தன் குடும்பத்தில் இருப்பவர்களால் எவ்வளவு துன்பத்தை அனுபவித்திருக்கிறாள் என்று நினைத்து துடித்தும் போனது.

அப்போது சஜித்தின் கண் முன் ஐந்து வயது பெண் குழந்தை தாய் தந்தை இல்லாமல் ஆதரவற்று கண்ணீருடன் நிற்பது போல் தோன்ற இரும்பு மனிதன் அவனுள்ளும் கண்ணீர் துளிர்த்தது. உடனே தன் தலை கோதி மூச்சை நன்கு இழுத்துவிட்டு தன்னை சமாளித்து கொண்டவன் “போதும் மான் குட்டி நீ பட்ட துன்பம் போதும், இனி உன்னை என் கைல வச்சு தாங்குவேன் அதுக்கு நீ என் கண்ணுல படனும் ப்ளீஸ் சீக்கிரம் என்கிட்ட வந்துடுடி ரொம்ப கஷ்டமா இருக்கு, உன்னை பார்க்க, உன் அருகாமையை ரசிக்க மனசு ரொம்ப ஏங்குதுடி, உனக்கு ஏன்டி இந்த பிடிவாதம், நான் முதல்லயே சொன்னேன்தானே என்னைவிட்டு பிரிய நினைக்காதன்னு அப்புறம் ஏன் டி என்னை தண்டிக்கற, கண்டிப்பா நீ என்னை பிடிக்காம விலகி போயிருக்கமாட்ட உன் கண்ணுல எனக்கான காதலை நான் பார்த்திருக்கிறேன். வேலை முடிச்சு நான் வந்தவுடனே என்னை பார்த்து அழகா சிரிப்பியே அப்போ, நான் தலை வலின்னு சொன்னா இஞ்சி டீ போட்டு குடுத்து தைலம் தேச்சு தலை கோதுவியே அப்போ,நான் வர எவ்வளவு நேரம் ஆனாலும் எனக்காக காத்திருப்பியே அப்போ இப்படி எல்லா நேரமும் என்னகாக பார்த்து பார்த்து காதலோட செஞ்ச நீ இப்போ பிரிஞ்சு போய் இருக்கனா அதுக்கு ஒரே காரணம் மட்டும்தான் இருக்கணும் அது நான் அந்த குடும்பத்து பையன்ங்கறது மட்டும்தான். ஆனா அதுக்கு இப்போ நான் ஒன்னும் பண்ண முடியாது குட்டிமா சீக்கிரம் என்கிட்ட வந்துடுடா ப்ளீஸ். என் வீட்ல இருக்கவங்க பண்ணுனதுக்கு என்னை வெறுத்துடாதடடா”என்று தனக்குள் பேசி கொண்டவனின் மனம் மனைவியை நினைத்து அலைப்புற்றது.

மனைவியோடு அவன் எண்ணங்கள் நிற்காமல் மேலும் மேலும் தொடர் சங்கிலியாக வர,அவள் அவனைவிட்டு பிரிந்து சென்ற அன்று நடந்ததும் நினைவு வந்தது. உடனே அவன் முகம் இயலாமை, ஏமாற்றம், காதல் வலி என அனைத்து உணர்வுகளையும் தத்தெடுத்தது. “எங்கிருந்தோ வந்த ஒரு வருடத்தில் அவர்கள் குடும்பம் செய்த அனைத்து தவறுகளையும் கண்டுபிடித்து ஆதரங்களையும் திரட்டி அவள் வைத்திருக்க, அந்த வீட்டில் பிறந்த தனக்கு எதுவுமே தெரியாமல் இருந்திருக்கிறதே என்று வருந்தியவன், மேலும் தான் கண் இருந்தும் குருடனாக இவ்வளவு நாட்கள் இருந்ததை நினைத்து வெட்கி போனான்.

கூடவே தன் குடும்பத்தவர்கள் எவ்வளவு கொடுமைகாரர்களாகவும், சுயநலகாரர்களாகவும் இருந்திருக்கிறார்கள் என்று நினைத்து மனம் கசந்து போனான்.

ஆபிஸில் அமர்ந்து கடந்த காலத்தை யோசித்து கொண்டிருந்தவனிடம் அனுமதி கேட்டு உள்ளே வந்தான் அவனது புது அசிஸ்டன்ட் சாகுல். சஜித் அவனை யோசனையாக பார்க்க அவன் டேபிள் மேல் இருந்த ஒரு பைலை கை காட்டியவன் “இந்த கேஸ் பைலை படிச்சு பாத்திட்டீங்களா சார்”என்று கேட்க, அவனோ மறுப்பாக தலையசைத்து “இல்லை” என்றவன், “என்னாச்சு என்ன கேஸ் இது” என்று தன் கவனத்தை வேலையின் புறம் திருப்பி கம்பீரமான குரலில் கேட்க சாகுலும் அந்த கேஸ்பற்றிய தகவலை சொல்ல துவங்கினான்.


சாகுல், “சார் இது ரொம்ப நாளா நமக்கு குடைச்சல் குடுத்த கேஸ் சார் நீங்ககூட கேள்விபட்டிருப்பீங்க அப்பாவே சொந்த பொண்ண ரேப்பண்ணி அவர் ஆட்டோ ஸ்டார்ட் பண்ண வச்சிருக்க கயிற்றால் அந்த பொண்ணு கழுத்தை நெரிச்சு கொன்னுருக்காருனு, ஆனா அவர்கிட்ட விசாரிச்சா நான் ஏன் சார் என்னோட ஒரே பொண்ண கொல்ல போறேன் காசு இல்லைனா யாரு மேல வேணாலும் பலி போடுவீங்களான்னு ஒரே அழுகை,ஆனாலும் அங்க கிடைச்ச ஆதாரம் அவருக்கு எதிராதான் கிடைச்சுது அதனால அவரை புடிச்சு உள்ள வச்சுட்டோம்”என்று சொல்ல,

சஜித்தோ யோசனையான முகத்துடன் “அங்க வேற எதாவது ஆதாரம் இருந்துச்சா, அவங்க அம்மாட்ட விசாரிச்சீங்களா அவங்க என்ன சொல்றாங்க”

சாகுல், “அவங்க என்ன சார் சொல்லுவாங்க என் புருஷன் எந்த தப்பும் பண்ணல விட்டுருங்க சார். அவர் எப்பவும் போல வேலை முடிச்சுட்டு வந்தப்பறம் நான்தான் சாப்பாடு போட்டேன். சாப்பிட்டு பொண்ணை அவ ரூம்ல போய் பார்த்துட்டு சுகர் இருக்கறதுனால மாத்திரை போட்டு படுத்துட்டாரு. நான்தான் அப்புறம் என் பொண்ணுட்ட போய் படுமா லேட் ஆகிடுச்சுனு சொன்னேன். உடனே அவ அம்மா நான் டுவல்த் படிக்குறேன் நியாபகம் இருக்கா, இல்லையா,இன்னும் ஒரு மாசத்துல எக்ஸாம் வந்துடும் படிக்க நிறைய இருக்கு.நீங்க போங்க நான் படிச்சுட்டு தூங்கறேன்னு சொன்னா அதனால பிளாக்ஸ்ல டீ வச்சு குடுத்துட்டு எங்க ரூம்ல போய் படுத்துட்டேன். காலைல எழுந்து அவ ரூம்க்கு போய் பார்த்தா என் பொ…. பொண்…பொண்ணு பொணமா கிடந்தா சார்.இதுதான் சார் நடந்தது. உண்மையா கொலை பண்ணுனவன கண்டுபிடிங்கனு ஒரே அழுகை சார். ஆனா அந்த ரூம்ல அவங்க அப்பா ஆட்டோ ஸ்டார்ட் பண்ண யூஸ்பண்ற கயிறு மட்டும்தான் இருந்தது வேற எந்த ஆதாரமும் இல்லை. முன்னாடி இருந்த ஏசிபி சார்க்கு இந்த கேஸ் பெரிய தலைவலியா இருந்துச்சு அப்புறம் அவங்களே சிபிஐக்கு கேஸை மாத்த சொல்லி கோர்ட்ல அப்பீல் பண்ணுனாங்க. நீங்க வர்றதுக்கு முன்னாடியே கேஸ் அவங்களுக்கு போய்டுச்சு அதான் இந்த கேஸ் சம்பந்தமா உங்ககிட்ட எதாவது கேட்டா தெரியனும்ல சார் அதான் படிசீங்களான்னு கேட்டேன்” என்க கேட்டு கொண்டிருந்த சஜித்தின் முகம் கோபத்தில் சிவந்தது.

சஜித், “என்ன சாகுல் இது டுவல்த் படிக்கற சின்ன பொண்ணு ச்ச….. வேற எந்த டீடெயிலும் கிடைக்கலையா ஒரு கேஸ் நம்மகிட்ட இருந்து சிபிஐக்கு போனா என்ன அர்த்தம் தெரியுமா, நாம எதுக்கும் உதவாதவங்கன்னு அர்த்தம் கஷ்டப்பட்டு நாம அலைஞ்சு திரிஞ்சு டீடெயில் கலெக்ட் பண்ணுவோம் இவங்க ஈஸியா வந்து கேஸை சால்வ் பண்ணுவாங்கலாமா, நம்மகிட்ட எவ்ளோ டேலண்ட்டானவங்க இருக்காங்க அவங்களை வச்சு சால்வ்பண்ண கூடாதா, ச்ச….”என்று ஹிந்தியில் பொறிந்து தள்ள, சாகுலோ கரும்பு மிஷினில் மாட்டிய எலியாக முழி பிதுங்கி போனான்.

சஜித் தமிழில் நல்ல நல்ல வார்த்தையாக தேடி பிடித்து சாகுலை திட்டியவன்,அவன் புரியாமல் விழிக்கவும் இவன் வேற பெக்க பெக்கன்னு பார்த்துட்டு நிப்பான்” என்றுவிட்டு, “சரி யாருகிட்ட இந்த கேஸ் போகுது”என்று கேட்க அவன் புரியாமல் விழிகவும் அவனிடம் தமிழில் பேசிய தன் மட தனத்தை நொந்து கொண்டு ஹிந்தியில் கேட்க, அவனோ முகம் பிரகாசமாக “ருத்ராட்டா போகுது சார்.அவங்க ரொம்ப டேலண்ட், இது வரை பல எவிடென்ஸ் இல்லாத கேஸை கூட ஈஸியா முடிச்சிருக்காங்க”என்று சொல்ல, சஜிதோ எரிச்சலில் முகம் சுழித்து, “அவன் வந்து அப்படி என்ன கிழிக்கற்றான்னு நானும் பாக்கறேன்”என்று கருவி கொண்டவன், சாகுலிடம் “அந்த பைலை வச்சிட்டு ஒரு பத்து நிமிஷம் கடந்து வந்து எடுத்துட்டு போங்க” என்று சொல்ல, அவனும் பைலை வைத்துவிட்டு ஒரு சலியூட் அடித்து சென்றுவிட்டான்.

அவன் சென்றவுடன் அந்த பைலை எடுத்து படிக்க ஆரம்பித்தவனிற்கும் குழப்பம் மேலிட்டது. “என்ன இது ஒரு ஆதாரமும் இல்லாம எப்படி இதை சால்வ் பண்றது”என்று புருவம் முடிச்சிட யோசித்தவனுக்கு ஒன்று மட்டும் தெளிவாகியது அது அந்த குழந்தையின் தந்தையே அவளை கொலை செய்ததாக சொன்னது பொய், அவர் நிரபராதி இடையில் ஏதோ சதி வேலை நடந்திருக்கிறது என்பதுதான் அது.

பின் சற்று நேரம் யோசித்தவனுக்கு என்ன தோணியதோ “சரி யார் அவன் ருத்ரா அவன் வரட்டும் எப்படி இந்த கேஸை முடிக்கறான்னு பார்க்கலாம்”என்று நினைத்து கொண்டு, பைலை பார்த்தவனின் கண்கள் கோபத்தில் சிவக்க அந்த பிளடி மட்டும் சிக்கட்டும் அப்புறம் இருக்கு அவனுக்கு.என்னைக்கு போலீஸ்ட்ட அவன் மாட்டாறானோ அன்னைக்குதான் அவனுக்கு கடைசி நாளா இருக்க போகுது அவனை சட்டப்படி எல்லாம் தண்டிக்க கூடாது என் கையாலையே துடிக்க துடிக்க கொல்லனும் ஸ்கூல் போற குழந்தையை போய்….. ச்ச” என்றவனின் கோபத்திற்கு அங்கிருந்த பைல் வைக்ககூடிய பழைய கபோர்ட் பலியானது.

கபோர்ட் உடையும் சத்தம் கேட்டு என்னவோ ஏதோ என்று உள்ளே ஓடி வந்து பார்த்த சாகுல் சஜித்தை கண்டு அரண்டு போனான்.

கோபத்தில் கண்கள் சிவக்க, கழுத்து நரம்புகள் புடைக்க நின்றிருந்தவனின் நினைவில் சற்று நேரம் முன் படித்த பைல் நினைவு வந்தது,ஆம் அந்த குழந்தை உயிருடன் இருக்கும்போது ஒரு முறையும் இறந்த பிறகு இரண்டு முறையும் கற்பழிக்கப்பட்டிருக்கிறாள் என்பதுதான் அது.

ஒருவழியாக தன்னை சமாளித்து கொண்டு திரும்பியவன் கண்டது தன்னையும் உடைந்த கபோர்டையும் மாற்றி மாற்றி பார்த்து கொண்டிருந்த சாகுலைதான், அதை கண்டு மேலும் கோபமாக “வாட்”என்று அடிகுரலில் கேட்க, அவனோ ஒன்றும் இல்லை என்று தலையாட்டியவன் வேகமாக அந்த அறையைவிட்டு ஓடிவிட்டான்.

அவன் சென்றதும் தன் புருவத்தை தேய்த்தவாறு சேரில் வந்து அமர்ந்த சஜித், “யார் அந்த ருத்ரானு பார்க்கணும் அவன் அவனோட வழில அந்த பிராட கண்டுபிடிக்கட்டும் நான் என் வழில கண்டுபிடிச்சு அவனை படையல் போடறேன்”என்று தனக்குள்முடிவெடுத்து கொண்டிருந்தவனின் டேபிள் மேல் இருந்த போன் மணி அடித்து கலைக்க, அதை எடுத்து பேசியவனிடம் அந்த பக்கம் என்ன சொல்லப்பட்டதோ, உடனே “சரி” என்றவன் வெளியில் செல்ல கிளம்பினான்.

கமிஷனர் ஆபிஸ், சஜித் கமிஷனரோடு அமர்ந்து அந்த கேஸ்பற்றி பேசி கொண்டிருக்க “மே ஐ கம் இன்”என்ற குரலில் உடல் விரைத்து நேராக நிமிர்ந்து அமர்ந்தவன் முகத்தில் திகைப்பே விரவி இருந்தது. இருந்தாலும் அந்த நபர் அவன் அருகில் வருவதற்குள் தன்னை சமாளித்து கொண்டவன் முகத்தை இறுக்கமாக வைத்து கொண்டான்.

அறையின் உள்ளே வந்த ருத்ரா சஜித் அருகில் இருந்த சேரில் அமர்ந்து பக்கத்தில் யார் இருக்கிறார் என்பதை கூட கவனிக்காமல் கமிஷனரிடம் பேச துவங்க, சஜித் முகம் மாறாமல் அதே இறுக்கத்துடன் அமர்ந்திருந்தான்.

ருத்ராவிடம் கொடுத்த கேஸ் பற்றிய அனைத்து தகவலையும் சொன்ன கமிஷனரும் “வேற எதாவது தகவல் உங்களுக்கு வேணும்னா இவரை கேளுங்க உங்களுக்கு ஹெல்ப் பண்ணுவாரு மீட் மிஸ்டர் சஜித் சஞ்சீவ் ஏசிபி”என்று சொன்ன பின்தான் தன் அருகில் இருக்கும் நபரை திரும்பி பார்த்த ருத்ர தேவி அதிர்ந்து போனாள்.

யாரைவிட்டு விலக வேண்டும் என்று ஓடி ஓடி மறைந்தாளோ, யாருக்கு தான் இருக்கும் இடம் தெரியக்கூடாது என்று தன்னைப்பற்றி யாருக்கும் சொல்ல கூடாது என்று தடைவிதித்தாளோ அவன் கண் முன்னாடியே தன்னை இழுத்து வந்த விதியை நொந்து கொண்டவள் அவனிடம் எப்படி பேச்சை துவங்குவது என்று தடுமாற, அவனோ அவளை புதிதாக பார்ப்பது போல் பார்த்து “ஹாய் மேடம் இந்த கேஸ்ஸ வெற்றிகரமா முடிக்க என்னோட வாழ்த்துக்கள் மேடம்”என்று இருக்கையில் இருந்து எழுந்து நின்று கை நீட்ட, அவளோ அவனை கண்டு அதிர்ச்சியில் எழுந்து நின்றவள் அப்படியே பார்த்திருந்தாள்.

அவள் நிலையை கண்டு தனக்குள் சிரித்து கொண்ட சஜித் அவள் முகம் முன் சொடக்கிட அந்த சத்தத்தில் தன்னிலை அடைந்தவள் அவனை ஒரு நிமிடம் ஒரே ஒரு நிமிடம் மருண்ட பார்வை பார்த்து வைக்க சஜிதோ மனதில் “தோ ஆரம்பிச்சிட்டாள்ள இப்படி பார்த்து பார்த்தே என்னை கவுத்துட்டு இப்பவும் அப்படியே முழிக்கற பாரு அந்த கண்ணை அப்படியே…, ஹையையோ கமிஷனர் முன்னாடி தப்பு தப்பா தோணுதே, இவ்ளோ நாள் என்ன தேடவிட்டதுக்கு இவளை ஏதாவது பண்ணணுமே என்ன பண்ணலாம். ஹான்…..இவ யாருனு தெரியாத மாதிரி காட்டிப்போமா” என்று தீவிரமாக அவன் யோசிக்க அதற்குள் தன்னை ஓரளவு தேற்றி கொண்ட தேவி “அதான் டைவர்ஸ்க்கு சைன் பண்ணி குடுத்துட்டமே இனி அவருக்கும் நமக்கும் இடையில் என்ன இருக்க போகுது தெரியாத மாதிரியே பேசி வைப்போம்”என்று, அவனிடம் தன் கரங்களையும் நீட்டி “ஹாய் சார் தேங்க் யூ”என்க அவனுக்கு காதில் புகை வர ஆரம்பித்தது.

சஜித், “அதானே பார்த்தேன் அப்படியே வாய திறந்து பேசிட்டாலும். நாம தெரியாத மாதிரி இருந்தோம் இவளும் அப்படியே மெயின்டெயின்பண்ணி டாடா காட்டிட்டு போய்டுவா, இவளை வேற விதமாதான் டீல் பண்ணனும்” என்று அவளை எப்படி டீல் செய்வது என்று யோசித்து கொண்டிருந்தவனுக்கு திடீரென்று அந்த சந்தேகம் எழுந்தது “ஆமா இவ பல்லிக்கே பயப்படுவாளே யாரு இவளை போய் சிபிஐல சேர்த்தது” என்று.

உடனே அவன் தலையில் தட்டிய மனசாட்சியோ அந்த பல்லிக்கு பயந்தவள்தான் அசால்ட்டா சந்தேகமே வராம ஊருக்கு வந்து எல்லா வேலையும் பார்திருக்கா தம்பி மறந்திறாத”என்க அவனும் “ஆமாம் ஆமாம் சரியான தில்லாலங்கடிதான் இவ ஆனாலும் என்னைவிட்டுட்டு போனதுக்கு இவளுக்கு இருக்கு” என்றவன், குறும்பு புன்னகையை அவளை நோக்கி வீசியவாறு கமிஷனர் அறியாது கண்ணடித்து “உங்களுக்கு எது…. ஊ…. ஊ… வேணும்னாலும் என்னை கேட்கலாம் மேடம்”என்று இரு பொருள் பட சொல்ல, அவனின் வில்லங்க சிரிப்பை பார்த்து மனதில் அரண்டாலும் வெளியில் எதையும் காட்டி கொள்ளாமல் கெத்தாக நின்றிருந்த தேவி அவன் வார்த்தைகளில் இருந்த இரு பொருளை புரிந்து அவனை முறைக்க, அவனோ கருப்பு ஷர்ட் புளு ஜீன் அணிந்து தன் முன் நிற்கும் தன்னவளைதான் கண்களால் களவாடி கொண்டு இருந்தான்.

தேவி அவன் பார்வை உணர்ந்து அவனை முணு முணுவென திட்டி கொண்டே உடலை குறுக்கி கொண்டவள் கமிஷனர் பக்கம் திரும்பி கொள்ள,அவரோ அவரின் சூழல் நாற்காலியை பின் பக்கம் திருப்பி தாழ்ந்த குரலில் பேசி கொண்டிருந்தார். அவரது பேசும் தோரணையே சொன்னது அவரது மனைவிதான் போனில் இருக்கிறார் என்று.

அவர் போனில் இருப்பதை கவனித்த சஜித் நொடி நேரத்தில் தேவியின் கையை பிடித்து தன்னை நோக்கி இழுத்து அவளது மென் இதழை தன் முரட்டு இதழ் கொண்டு சிறை செய்தவனின் கரம் தன்னை பிரிந்து சென்றதால் உண்டான கோபத்தை காட்டும் விதமாக அவளது ஷர்ட்டை தூக்கி வெற்றிடையில் அழுத்தமாக கிள்ளி வைத்தது.

திடீரென ஏற்பட்ட நிகழ்விலும், அவனது கிள்ளில் ஏற்பட்ட வழியிலும் முகம் சுழித்தவளின் இடையை மீண்டும் ஒரு முறை இறுக்கி பின் விடுவித்தவன், ஏதும் அறியாதவன் போல் மீண்டும் சேரில் அமர்ந்து தன் போனை நோண்ட ஆரம்பித்தான்.

தேவியோ அப்படியே திகைப்புடன் நின்றிருந்தாள். போன் பேசி முடித்த கமிஷனர் தேவி அப்படியே நிற்பதை பார்த்து குழம்பி “ ருத்ரா ஆர் யூ ஓகே என்ன ஆச்சு ஏன் இப்படி பேய் அடிச்ச மாதிரி இருக்கீங்க. உங்களால இந்த கேஸ்ஸ ஹேன்டில்பண்ண முடியும்ல இல்லை வேற யாருகிட்டயாவது……” என்று இழுக்க, அவரது பேச்சில் தன்னிலை அடைந்த தேவி இடையில் ஏற்பட்ட வலியை கண்கள் இறுக மூடி திறந்து கட்டுப்படுத்தியவள் தன் வேலைக்கான அழுத்தமான குரலில் “நோ….. நோ…. சார் கொஞ்சம் யோசனையில் இருந்தேன் அவளோதான். நான் பார்த்துக்கறேன்” என்றவள் பின் “ஓகே சார் நான் கிளம்பறேன்”என்று சஜித்தை கண்களால் எரித்துவிட்டு கிளம்பிவிட்டாள்.

சஜித் அவள் செல்வதை நமுட்டு சிரிப்புடன் பார்த்திருந்தவன் “நானும் கிளம்பறேன் சார்”என்க, அவரோ “இருங்க சஜூத் உங்ககிட்ட கொஞ்சம் பேசணும்” என்றுவிட்டு சில முக்கியமான கேஸ்பற்றி பேசி கொண்டிருந்தனர்.

நேரம் போவது தெரியாமல் பேசி கொண்டிருந்துவிட்டு கிளம்பிய சஜித்தின் மன நிலை உற்சாகமாக இருந்தது.அது வெகு நாட்களுக்கு பிறகு கிடைத்த தன்னவளின் அருகாமையிலேயே என்பதை புரிந்து கொண்டவனின் இதழில் மந்தகாச புன்னகை இருந்தது.அதே நிலையில் தன் வண்டியை நோக்கி சென்றவனை வறுத்து எடுக்கும் நோக்கோடு முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடிக்க நின்றிருந்தாள் தேவி.

தேவியின் கோபத்தை சஜித் எப்படி சமாளிக்க போகிறான், இல்லை சஜித்தின் இந்த காதல் மன்னன் அவதாரத்தை தேவி எப்படி சமாளிக்க போகிறாள் என்பதை அடுத்தடுத்த எபியில் பார்க்கலாம்.
 
Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Advertisement

New Episodes

Advertisement