மனம் தீண்டும் மான் விழியாள் -16

#1
received_2825426224375726.jpeg

அத்தியாயம் -16

சூரியன் தன் பணி முடித்து வீட்டிற்கு சென்றுவிட நிலா காதலி தன்னவனை தேடி வான் வெளியில் உலா வரும் இரவு நேரம் மனதில் கவலை சூழ தன்னை சுற்றி என்னதான் நடக்கிறது என்று புரியாமல் கண் சிமிட்டும் நட்சத்திரங்களை வெறித்து பார்த்து கொண்டிருந்தான் சஜித் சஞ்சீவ்.

வெகு நேரம் ஆகியும் சாப்பிட வராமல் இருப்பவனை அழைக்க வந்த தேவி அவன் நின்றிருக்கும் நிலையை பார்த்து தயங்கியவாறே அவன் அருகில் செல்ல அவனோ எந்த மாற்றமும் இல்லாமல் அப்படியே நின்றிருந்தான். “ம்கூம்…..” என்று கனைத்து அவன் கவனத்தை தன் புறம் திருப்ப முயன்றவளுக்கு தோல்வியேகிட்டியது.

தேவி,”ச…சஜித் சாப்பிடலையா…. “ என்று தயக்கத்துடன் இழுக்க, அவள் குரலில் சடாரென்று திரும்பியவன் அவள் கண்களை ஆழ்ந்து பார்க்க அவளோ அவன் பார்வையை எதிர் கொள்ள முடியாதவளாக பார்வையை வேறு புறம் திருப்பி கொண்டாள்.

தேவி பார்வையை திருப்பவுமே அவள் அருகில் வேகமாக சென்றவன் அவள் கன்னத்தை பிடித்து தன்னை பார்க்க வைத்தவாறே“என்னடி என்னை கோபபடுத்தணும்னே பேசிட்டு இருக்கியா” என்க,அவளோ அவன் கைகள் ஏற்படுத்திய வலியால் கண்கள் கலங்கினாலும் பல்லை கடித்து கொண்டு எதுவும் பேசாமல் இருந்தாள்.

அவளின் அமைதி அவன் கோபத்தை மேலும் அதிகமாக்க தன் கைகளின் அழுத்தத்தை கூட்டினான். அதில் அவள் அடக்கி வைத்த கண்ணீர் கரை கடந்து வெளியில் வந்தது.உடனே அவள் கன்னத்தில் இருந்து கரங்களை எடுத்தவன் திரும்பி நின்று விரல்களை முறுக்கி “ஷிட்…” என்று காற்றில் குற்றியவன் இன்னும் இங்கிருந்தாள் அவளை காய படுத்தி விடுவோமோ என்று பயந்து எதிலிருந்தோ தப்பிப்பது போல் அங்கிருந்து சென்றுவிட்டான்.

செல்லும் அவனையே வெறித்து பார்த்தவளின் மனதில் ஒரு மாதமாக நடந்த நிகழ்வுகள் அனைத்தும் படமாக ஓடியது.

“நோ” என்று கத்திய சஜித் டிரைவரை நகர சொல்லிவிட்டு வண்டியை தானே புயல் வேகத்தில் செலுத்த துவங்கினான். அடுத்து அவன் வாகனம் நின்ற இடம் அந்த ஊரின் பிரபலமான மருத்துவமனைதான். வேகமாக உள்ளே சென்றவன் ரிசப்சனில் தந்தையின் பெயர் சொல்லி கேட்க, ஐசியூவில் இருப்பதாக சொல்லவும் அங்கு விரைந்தான்.

ஆம், திருமணத்திற்கு சென்று வரும் வழியில் மாணிக்கத்திற்கு விபத்து ஏற்பட்டது.மருத்துவமனையில் அனுமதிக்கப்படிருப்பதாக சஜித்திற்கு தகவல் தெரிவிக்கப்பட, தந்தையின் உடல் நிலை எண்ணி கவலைகொண்டவன் அடுத்த பத்தாவது நிமிடம் மருத்துவமனையை அடைந்தான். அங்கு ஐசியூ வாசலிலேயே நாகப்பன், நந்தினி, தேவி என அனைவரும் இருந்தனர்.

சஜூத் வேகமாக நாகப்பனிடம் சென்றவன் “தாத்தா அப்…. அப்பாக்கு என்ன ஆச்சு ஒன்னும் இல்லையே. டாக்டர் என்ன சொல்றாங்க”என்று தடுமாறிய குரலில் கேட்க, அவரும் மகனைபற்றிய கவலையில் இருந்தவர் “எங்கப்பா சொல்றாங்க நர்ஷுங்கதான் வர்றாங்க போறாங்க எதுவும் சொல்ல மாட்டிக்கிறாங்க” என்று துக்கம் மிகுந்த குரலில் கூறினார். அதன் பின் அனைவரும் டாக்டர் வருகைக்காக காத்திருக்க ஆரம்பித்தனர்.

சஜித் வந்து முழுதாக மூன்று மணி நேரம் கடந்த பிறகே டாக்டர் வெளியே வந்தார்.அவரிடம் விரைந்த அனைவரையும் பாவமாக பார்த்த டாக்டர் “அவர் உயிருக்கு ஒன்னும் பிரச்சனை இல்லை”என்று சொல்ல அனைவருக்கும் அப்போதுதான் நிம்மதி ஆனது. மேலும் ஏதோ சொல்ல நினைத்தவர் “ரூம்க்கு வாங்க பேசலாம்” என்றுவிட்டு முன்னால் செல்ல தாத்தாவும் பேரனும் குழப்பமான முகத்துடன் ஒருவரை ஒருவர் பார்த்து கொண்டு அவரை பின் தொடர்ந்து சென்றனர்.

தனது அறைக்கு அழைத்து சென்ற மருத்துவர் அவர்களை அமர சொல்லிவிட்டு வெகுநேரம் யோசனையில் இருந்தார். அவரின் அமைதியில் என்ன பூகம்பம் இருக்கிறதோ என்று தாத்தாவும் பேரனும் பதட்டத்துடன் பார்த்துகொண்டிருக்க டாக்டரோ பெருமூச்சுடன் மாணிக்கத்தின் நிலையை சொல்ல துவங்கினார்.

டாக்டர்,”பாருங்க நாகப்பன் ஐயா மாணிக்கம் சார்க்கு நல்ல அடி பட்டிருக்கு ரத்தம் வேற அதிகம் வெளியாகிடுச்சு. அவர் உயிரை காப்பாத்துறதே எங்களுக்கு பெரிய சவாலான விஷயமா ஆகிடுச்சு. எப்படியோ போராடி அவர் உயிர காப்பாத்திட்டோம் ஆனா…”என்று இழுத்து எப்படி சொல்வது என்று அவர் திணற. அவரின் முகத்தை வைத்தே பெரிதாக ஏதோ வர போகிறது என்பதை புரிந்து கொண்ட சஜித் நிதானமான குரலில் “ஆனா…. சொல்லுங்க டாக்டர் ஆனா.., எதா இருந்தாலும் பரவால்லை சொல்லுங்க”என்று ஊக்கப்படுத்த, “சாரோட உயிர மட்டும்தான் எங்களால காப்பத்தா முடிஞ்சுது. உடல் முழுதும் செயல் இழந்து போடுச்சு கழுத்துக்கு கீழ இருக்க எந்த உறுப்பும் செயல் படாது. உணர்வுகள் இருக்கும் ஆனால் அசைக்க முடியாது.இனி அவர் வாழ்க்கை படுக்கைலதான்” என்று சொல்ல, நாகப்பனோ அழுத்தமாக அமர்ந்திருந்தார் என்றால் சஜித் முழுவதும் நொறுங்கி போனான்.

மேலும் அவரே “ஒரு பதினஞ்சு நாள் ஹாஸ்பிடல இருக்கட்டும் அப்புறம் ஒரு நர்ஸ் அரேன்ஜ் பண்ணிட்டு வீட்டுக்கு கூட்டி போறதுனாலும் போகலாம் இல்ல இங்கயே இருக்கறதுனாலும் இருக்கலாம் அது உங்க விருப்பம்தான்” என்றார்.

தந்தையின் நிலையை எண்ணி வருந்தி கொண்டிருந்த சஜித்தின் கண் முன் அவன் தந்தை ,மீட்டிங், அரசியல், கட்சி வேலை என்று ஓய்வு இல்லாமல் எப்போதும் பம்பரமாக சுற்றி வந்தது நினைவு வர கண்கள் கலங்கிதான் போனது.இனி அவர் எங்கும் செல்ல முடியாமல் ஒரே இடத்தில் படுத்த படுக்கையாக இருக்க வேண்டும் என்று நினைக்கும் போதே மனம் அவருக்காக துடித்தது.

திரும்பி அவன் தாத்தாவை பார்க்க அவரோ இறுகி போய் அமர்ந்திருப்பது தெரிந்தது. தான் இப்போது உடைந்து போனால் அவரை யார் சமாளிப்பது என்று எண்ணி கொண்டவன் தன் மனதின் கவலையை வெளியில் காட்டி கொள்ளாமல் நாகப்பனை அழைத்து கொண்டு தளர்ந்த நடையுடன் அறையில் இருந்து வெளியேறினான்.

அண்ணனை பார்த்தவுடன் அவனை அணைத்து அழுத நந்தினியிடம் தந்தையின் நிலையை சொன்னவன் இனி நாம் தைரியமாக இருக்க வேண்டும் என்று சொல்ல, அவளின் கதறல் அதிகமானது.

ஒருவாறு அவளை சமாளிப்பதற்குள் சஜித்திற்குதான் போதும் போதும் என்றானது. ஒரு வாரம் ஐசியூவில் இருந்த மாணிக்கம் அதன்பின் அறைக்கு மாற்றப்பட தேவிதான் மருத்துவமனைக்கும் வீட்டிற்கும் அலைந்து கொண்டிருந்தாள்.

மாணிக்கத்தை அறைக்கு மாற்றிய பிறகுகூட தேவிதான் அவரை நன்றாக பார்த்து கொண்டாள். அவளின் செய்கையை சஜித் அமைதியாக கவனித்து கொண்டிருந்தானே தவிர அவளிடம் பேச முற்படவில்லை. தேவியுமே அவனிடம் இருந்து விலகியே இருந்தாள்.
அதன்பின் நாட்கள் அனைவருக்கும் சோகமானதாகவே சென்றது. மாணிக்கம் ஓரளவு உடல் தேறிய பின் வீட்டிற்கே அழைத்து வந்துவிட்டனர் ஒரு ஆண் நார்சோடு.

நாகப்பன் மகனின் நிலையை கண்டு மிகவும் நொடித்துதான் போனார். மாணிக்கத்திற்கு கை கால்களை அசைக்க முடியவில்லை என்றாலும் உணர்வுகள் இருப்பதால் உடலில் தோன்றும் ரண வேதனையை தாங்க முடியாமல் அவர் கதற அவரை கண்டு மொத்த குடும்பமும் செய்வதரியாது துடித்தனர்.

மாணிக்கத்தை வீட்டிற்கு அழைத்து வந்த பிறகு சஜித் தேவியிடம் பேச முயற்சிக்க அவளோ அவனை தவிர்த்து கொண்டே இருந்தாள். முதலில் அவளின் விலகலை கவனிக்காதவன் பின் இரண்டு முறை பேச சென்ற போது அவள் கூறிய காரணத்தை கேட்டு சந்தேகம் வர அதன் பின் தான் உணர்ந்தான் அவள் தன்னை தவிர்கிறாள் என்று. அதில் கோபம் எழுந்தாலும் கட்டுப்படுத்தி கொண்டு அவளிடம் தான் பேச நினைத்த விஷயத்தை பேச முயற்சிகளை மேற்கொண்டான். அப்போது எல்லாம் ஒன்று நந்தினியுடன் இருப்பாள், அல்லது மாணிக்கத்தை கவனிக்கிறேன் என்று சென்று விடுவாள் இல்லையேல் தலை வலி வந்துவிடும்.

அவளின் செய்கைகளில் இருந்தே தன்னை தவிர்க்க காரணங்களை உருவாக்குகிறாள் என்பதை புரிந்து கொண்டவனுள் கோபம் கட்டுக்கடங்காமல் எழ அவள் தன்னிடம் தனியாக மாட்டும் சமயத்திற்காக காத்திருக்க துவங்கினான்.

அந்த சமயம் அவனே எதிர் பார்க்காதவாறு ஒரு நாள் அமைந்தது. மாணவர்கள் அனைவரும் எக்ஸாம் எழுதி சென்ற பிறகு வேலை விரைவில் முடிய வீட்டிற்கு வந்தவள் அவர்கள் அறையில் அப்படியே சோர்ந்து போய் அமர்ந்திருந்தாள். அப்போது அவள் எதிரில் வந்து நின்றான் சஜித் சஞ்சீவ். அவனை பார்த்து முதலில் திகைத்தவள் பின் அவன் கண்களை பார்க்கும் தைரியம் அற்றவளாக எழுந்து வெளியே செல்ல முனைய அவள் கரம் பற்றி தடுத்தவன் “நான் உன்கிட்ட பேசணும் தேவி” என்றான்.

தேவி, “இல்ல ஜி…. ச.. சஜித் மாமாக்கு டேப்லெட் குடுக்கணும்”என்றாள். அவள் பதிலில் போக இருந்த பொறுமையை இழுத்து பிடித்தவனின் உள்ளம் அவள் ஜித்து என்று அவள் சொல்ல வந்து பின் திருத்தி மற்றவர்களை போல் சஜித் என்று சொல்வதையும் குறித்து வைத்து கொண்டது.

சஜித்,“லுக் தேவி எனக்கு பொறுமை ரொம்ப கம்மி இந்த நேரத்தில் அப்பாக்கு குடுக்க கூடிய டேப்லெட் எதுவும் இல்லை, அது மட்டும் இல்லாம இப்போதான் அப்பாவை நான் பார்த்துட்டு வறேன் அவர் நல்லா தூங்கறாரு சோ உட்காரு” என்றவனின் குரலில் இன்று நீ பேசியே ஆக வேண்டும் என்ற பிடிவாதம் இருந்தது.

அதை உணர்ந்து கொண்ட தேவி மனதில் இருக்கும் சினம் துளிர்விட சுட்டெரிக்கும் விழிகளுடன் அவனை பார்த்து “என்ன பேசணும் மிஸ்டர் ஏசிபி. உங்கள ரொம்ப நல்லவருனு நினைச்சேன் பெண்ணை, பெண்மையை மதிக்க தெரிஞ்சவருனு நினைச்சேன் ஆனா நீங்க ச்ச….” என்று முகத்தை சுழித்தவள் “உங்களை பார்த்தாலே எனக்கு கோபம் கோபமா வருது சுயநினைவு இல்லாமல் மயக்கத்துல இருந்த பொண்ணுகிட்ட உங்களோட ஆசையை நிறைவேத்திக்கிட்டீங்க, நீங்க ஒரு சந்தர்ப்பவாதி” என்றவளின் கன்னம் திகு திகுவென எரியவும்தான் அவன் தன்னை அடித்துவிட்டான் என்பதை உணர்ந்து அதிர்ந்து அவனை பார்த்தாள்.

அவனோ அப்போதும் கோபம் அடங்காதவனாக அங்கிருந்த சுவற்றில் ஓங்கி குற்றி கொண்டே இருக்க அவன் கரங்களில் ரத்தம் வர ஆரம்பித்தது.

சஜித்தின் கரங்களில் ரத்தத்தை பார்த்த தேவி பதறியவளாக அவன் அருகில் சென்று “என்ன பண்றீங்க கைல ரத்தம் வருது பாருங்க” என்று சொல்ல, சிவந்த கண்களுடன் அவளை பார்த்தவன் “சந்தர்ப்பவாதி எப்படி போனா உனக்கு என்ன” என்று கேட்க அவளோ திகைத்து போனாள்.

பின் அவனை ஆழ்ந்து பார்த்தவள் “நான் டிரான்ஸ்பர்க்கு எழுதி குடுத்துருக்கேன் கவுன்சிலிங் வர சொல்லி லெட்டரும் வந்துருச்சு எப்படியும் டூ ஆர் த்ரி மந்த்ல இங்க இருந்து போய்டுவேன்” என்றவள் சென்று ஒரு வெள்ளை பேப்பரை எடுத்து வந்து அவன் முன் வைத்து “இந்த பேப்பர்ல நான் சைன் பண்ணிட்டேன் நீங்களும் பண்ணிட்டா மியூச்சுவலா பிரிஞ்சிடலாம், காரணம் கூட எனக்கு குழந்தை பிறக்காதுன்னு சொல்லி இருக்கேன் எதாவது ஒரு டாக்டர பிடிச்சு சர்டிபிகேட் வாங்கிடலாம் நான் சொன்ன மாதிரி செய்துட்டேன், நீங்களும் அப்படியே நடந்துப்பீங்கனு நினைக்கறேன். இனி நீங்க யாரோ நான் யா……ஹக்…. ஹக்..” என்று இரும துவங்கினாள்.

ஏனென்றால் அதற்கு மேல் அவள் பேசிவிடாதவாறு கழுத்தில் கரம் வைத்து தூக்கி இருந்தான் சஜித்.

சஜித்,”என்னடி பாவம் பொண்ணாச்சே பொறுமையா பேசலாம்னு பார்த்தா உன் இஷ்டத்துக்கு பேசிட்டு போற, லிசின் நீ என்னோட பொண்டாட்டி என்கூடதான் இருக்கணும், இருக்க வைப்பேன் விட்டுட்டு போறேன், பிரியறேன், பிரியாணி பண்றேன்னு எதாவது உளறுன காலை உடைச்சு எங்கயும் போக விடாதபடி செஞ்சுருவேன். என்னை மீறி எவன் உனக்கு டிரான்ஸ்பர் தரான்னு பாக்கறேன். அப்புறம் என்ன சொன்ன சைன் பண்ணனுமா” என்றவன் அவள் கொண்டுவந்த வக்கீல் நோட்டிசை கிழித்து அவள் முகத்திலேயே எறிந்து “நான் சைன் பண்ண முடியாது. அப்புறம் என்ன டாக்டர்ட்ட சைன் வாங்குவியா வேண்டாம்……. நான் வேற எதாவது சொல்லிட போறேன். வாழ்ந்தாதான் குழந்தை பிறக்குமா பிறக்காதான்னு தெரியும். முதல்ல வாழலாம் வா பொண்டாட்டி” என்றான் நக்கலான குரலில்.


அதில் கோபம் வர பெற்றவள் “சஜித் என்ன உளறுறீங்க பொண்டாட்டி அது இதுனு நாம ஏற்கனவே பேசி வச்சதுதானே ஒரு வருஷத்துக்கு அப்புறம் பிரிஞ்சரலாம்னு இப்போ ஏன் இப்படி கண்டபடி பேசுறீங்க”என்றாள்.

சஜித், “என்னது உளறலா…. நீ என் பொண்டாட்டின்னு சொல்றேன் அது உனக்கு உளறல் மாதிரி இருக்கா, என்ன பார்த்தா உனக்கு எப்படி தெரியுது.ஆமாடி அப்போ பிரிஞ்சரலாம்னு சொன்னேன் இப்போ கூடவே இருனு சொல்றேன் இரு. முதல்ல சொன்னது கேட்டல்ல இப்போ சொல்றதையும் கேட்டுதான் ஆகணும்”

தேவி, “முடியாது சஜித் உங்க இஷ்டத்துக்கு எல்லாம் என்னால ஆட முடியாது.நான் போறது கன்பார்ம் உங்களால என்ன பண்ண முடியுமோ பண்ணிக்கோங்க” என்றுவிட்டு செல்ல முனைய அவளை சொடக்கிட்டு அழைத்தவன் “உன்ன நான் இங்கயே இருக்கியானு பர்மிஷன் கேக்கல, இருந்துதான் ஆகணும்னு சொன்னேன்” என்றவன் மேலும் புருவத்தை தேய்த்தவாறு “என்ன அது புதுசா சஜித் ஒழுங்கா எப்பவும் போல ஜித்துனு கூப்பிடு. இதுனால எல்லாம் ஒன்னும் மாற போறது இல்ல.நீ எங்க போனாலும் என் கண்கணிப்புலதான் இருப்பங்கரதை மறந்துறாத, அன்னைக்கு நம்மக்குள்ள நடந்தது எல்லா கணவன் மனைவிக்குள்ளும் நடக்கக்கூடிய அழகான தாம்பத்தியம். அதை அசிங்கபடுத்தற மாதிரி எதுவும் பேசாத” என்றான்.

அவனை முறைத்த தேவி ஏதோ பேச வர “நான் இன்னும் பேசி முடிக்கல” என்றுவிட்டு தீவிரமான குரலில் “அன்னைக்கு நானும் சுயநினைவு இல்லாம போதையின் பிடியில்தான் இருந்தேன். அதனாலதான் நீ மயக்கத்தில் இருப்பது எனக்கு தெரியாமல் போய்டுச்சு.எது எப்படியோ நடந்ததை இனி மாத்த முடியாது.இனி உன் வாழ்க்கை தனி என் வாழ்க்கை தனினு இல்லை இது நம்ம வாழ்க்கை இது வரைக்கும் நமக்குள்ள எந்த பிரச்சனைகளும் வந்ததில்லை இந்த குடும்பத்தோடும் நீ செட் ஆகிட்ட அப்போ இந்த வாழ்க்கையை தொடரத்துல உனக்கு என்ன பிரச்சனை” என்று கேட்க அவளோ “இங்க பாருங்க சஜித் உங்க பக்கம் மட்டும் யோசிக்காதீங்க என்னப்பத்தி என்னோட மனசபத்தி யோசிங்க நான் உங்கள விரும்பல அப்படி இருக்கும்போது எப்படி நமக்குள்ள கல்யாண வாழ்க்கை ஒத்து போகும். இது எல்லாம் சரிப்பட்டு வராது நாம பிரிய…..” என்று மேலும் பேச வந்தவளின் பேச்சு அவனது முறைப்பில் நின்றது.

வேகமாக அவளை நெருங்கி சென்றவன் “காதலுக்கு அப்புறம்தான் கல்யாணம் பண்ணனும்னு இருந்தா இங்க பாதி பேருக்கு கல்யாணம் ஆகாது. கணவன் மனைவிங்கற உறவோட வாழலாம் அப்புறம்….” என்றவனை மறுத்து பேச வந்தவளை கை நீட்டி தடுத்தவன் “ பாரு தேவி எனக்கு ஏற்கனவே பொறுமை கம்மி அதை இழுத்து பிடிச்சுதான் பேசிட்டு இருக்கேன் இதுக்கு மேல எதாவது பேசுன நான் சும்மா இருக்கமாட்டேன்”.

தேவி, “சும்மா இருக்கமாட்டேனா என்ன அர்த்தம் அப்படி என்ன பண்ணிடுவீங்க. எனக்கு உங்கள பிடிக்கல உங்களோட எந்த சப்பகட்டு காரணத்தையும் ஏத்துக்க மாட்டேன் நாம பிரியறது உறுதி” என்று பேசி கொண்டே சென்றவளின் இதழை வன்மையாக சிறை செய்தான்.

சஜித்தின் செயலை எதிர்பார்க்காதவள் முதலில் திகைத்தாலும் பின் தன்னை சமாளித்து கொண்டு அவன் மார்பில் கை வைத்து தள்ள முனைய கட்டுடல் கொண்ட காளையவனை அசைக்க கூட முடியாமல் பெண்ணவள் துவண்டுதான் போனாள்.ஆணவனின் ஒரு கரம் அவள் பின்னந்தலையைபற்றி இருக்க மற்றொரு கரமோ அவளை அசையவிடாமல் ஆக்டோபசாக சுற்றி வளைத்திருந்தது.

நெடு நேரம் நீடித்த முத்த யுத்தத்தில் பெண்ணவள் துவண்டு மூச்சு காற்றுக்கு ஏங்கவும்தான் அவளை விளக்கி நிறுத்தியவன் “இதுவரை பிடிக்கலைனா பரவால்லை இனி பிடிக்க வச்சுக்கோ என்னோடதான் உன் வாழ்க்கை” என்றவன் அவள் அதிர்ந்த தோற்றத்தை கூட கண்டு கொள்ளாமல் அறையை விட்டு சென்றுவிட்டான்.

அதன்பின்னும் அவனோடு வாழ பிடிக்காத தேவி அவனை சஜித் என்றே அழைக்கிறாள்.இதில் கடுப்பாகும் சஜித் அவளை முறைத்துவிட்டு எதுவும் பேசாமல் சென்றுவிடுவான். இல்லையேல் கத்திவிட்டு செல்வான்.

அது எல்லாம் தேவிக்கு வருத்தத்தை கொடுத்தாலும் பிரியவேண்டும் என்ற அவள் முடிவில் எந்த மாற்றமும் இருக்கவில்லை.அதே போல் தன் பொருள் தன்னைவிட்டு போக கூடாது தன்னுடனே வைத்து கொள்ள வேண்டும் என்ற சஜித்தின் முடிவிலும் மாற்றம் இல்லை. அதை எல்லாம் இப்போது நினைத்து பார்த்தவள் கண்ணில் திரண்ட நீரை உள்ளிழுத்தவாறு வீட்டிற்குள் நுழைந்தாள்.

சஜித் தானே பரிமாறி உண்டு கொண்டிருந்தான் அப்போது அவனுக்கு விக்கல் வர வேகமாக அவன் அருகில் சென்றவள் “பொறுமையா சாப்பிடுங்க ஜித்து என்ன அவசரம்”என்றவாறு நீரை எடுத்து தர, அவளது ஜித்து என்ற அழைப்பில் விழுக்கென்று அவளை நிமிர்ந்து பார்த்தவனின் விழிகள் அவளிடம் “இவ்வளவு அக்கறை இருக்கவ எதுக்கு பிரியணும்னு நினைக்கற என்று கேட்டவாறே, நீரை அவள் கரம்பற்றி வாங்க வெடுக்கென்று கையை இழுத்து கொண்டாள். சஜித்தோ “ரொம்ப பண்ணாதடி” என்றவாறு மீண்டும் தன் சாப்பிடும் வேலையை பார்க்க ஆரம்பித்தான்.

அங்கு மாணிக்கமோ நரக வேதனையை அனுபவித்தார். கை கால்கள் மரத்து போனது போல் தோன்றியது ஆனால் அதை அசைக்க முடியவில்லை அதுமட்டுமில்லாமல் விபத்தில் அடிப்பட்டதால் வலி ஒவ்வொரு பக்கத்திலும் தோன்ற நாகப்பனிடம் புலம்புவார்.


ஒவ்வொரு சமயம் வலியை தாங்க முடியாமல் “அப்பா ப்ளீஸ்ப்பா என்னை கருணை கொலை செஞ்சுடுங்க என்னால முடியல இப்படி வலியையும் வேதனையும் தாங்கிட்டு வாழரத்துக்கு நான் செத்துடலாம்” என்க, கேட்ட நாகப்பனோ துடிதுடித்து போனார்.

சோகத்தில் பெருஞ்சோகம் புத்திர சோகம் என்று சொல்வார்கள். ரெண்டு ஆண் வாரிசை பெற்று அவர்களை அருமை பெருமையாக வைத்து பார்த்தவர்,தனக்கு அவர்கள் கொள்ளி வைப்பார்கள் என்று நினைத்திருக்க அவர்களுக்கு தான் கொள்ளி வைக்கும் நிலை வந்துவிடுமோ என்று பயந்துதான் போனார்.

அந்த சோகத்திலேயே அவரின் உடல்நிலையும் அதிகம் பாதிக்கப்பட்டது. மற்ற வேலைகள் எதிலும் கவனம் செலுத்த முடியாமல் தள்ளாடினார். இதில் கல்லூரி மாணவர்களுக்கு அந்த போதை பொருளை கொடுத்து அவர்களின் உடலில் ஏற்படும் மாற்றத்தை தெரிவிக்க வேண்டும் என்று வெளிநாட்டவருடன் போட்ட ஒப்பந்தம் வேறு சஜித்தால் தடைப்பட அவர்களின் அழுத்தம் அதிகமாக வேறு வழி இல்லாமல் அவர்களுக்கு பல கோடி ரூபாய் கொடுத்து அவர்களை சரிகட்ட வேண்டியதாகி போனது.

அன்று அப்படிதான் நாகப்பன் ஹாலில் அமர்ந்து யோசித்து கொண்டிருக்க அவரது கவனத்தை கலைத்தது மாணிக்கத்தின் அறையில் இருந்து வந்த அனத்தல் சத்தம் அத்தோடே அவர் “தயவு செஞ்சு என்னை கொன்னுடுங்க இந்த வலிய என்னால தாங்க முடியல என்று கத்தி கொண்டே இருக்க மகனின் அலறலையும் அவரின் வேதனையும் இவ்வளவு நாட்களும் பார்த்து கொண்டிருந்தவர் ஒரு முடிவுடன் மகனின் அறையை நோக்கி செல்ல அவரை பின் தொடர்ந்து சென்றது ஒரு உருவம்.

நாகப்பன் கவனிக்காத வண்ணம் அங்கிருந்த கதவின் பின் ஒளிந்து கொண்ட உருவம் அங்கு நடப்பதை கண்ணில் வன்மத்துடன் பார்க்க துவங்கியது.

மாணிக்கத்தின் அருகில் சென்ற நாகப்பன் “என்னப்பா என்ன ஆச்சு ரொம்ப வலிக்குதா இப்புடி அனத்துரியே” என்று கேட்க,

மாணிக்கம், “அப்பா எதாவது பண்ணுங்க என்னால சுத்தம்மா முடியல.முட்டில எல்லாம் கொடையர மாதிரி இருக்கு கை கால்ல எல்லாம் வலி உயிர் போகுது”என்று சொல்ல, அவரையே வெறித்து பார்த்தவர் “கொடுக்கறேன்ப்பா கொடுக்கறேன் இந்த வலில இருந்து முழுசா உனக்கு விடுதலை கொடுக்கறேன்”என்றவர் அவரது மாத்திரைகள் வைக்கும் கப்போர்ட் பக்கம் சென்றவரின் மனம் மகனுக்காக துடித்தது.

நாகப்பன் மகனின் துடிப்பை பார்த்து என்ன முடிவு எடுப்பார் என்பதை அடுத்த எபில பார்க்கலாம்……….
 
Saroja

Well-Known Member
#2
அவங்க பண்ணுன பாவம்
அப்பா மகன் ரெண்டு பேரும்
அனுபவிக்கிறாங்க
யாரு அந்த உருவம்

தேவி ஏன் இப்படி இத்தனை
பிடிவாதம் பிரியனும்னு
 
#3
அச்சோ!!! என்ன தேவிம்மா இது பிடிவாதம்??? சஜித் இல்ல உன் ஜித்து பாவம் இல்ல????
அப்பா செஞ்ச பாவம் பிள்ளைக்கு என்றால் பிள்ளையும் கூட்டு களவாணி, அனுபவித்து தான் ஆக வேண்டும்!
 
#4
அவங்க பண்ணுன பாவம்
அப்பா மகன் ரெண்டு பேரும்
அனுபவிக்கிறாங்க
யாரு அந்த உருவம்

தேவி ஏன் இப்படி இத்தனை
பிடிவாதம் பிரியனும்னு
அந்த உருவம் யாருனு ரெண்டு எபில தெரிஞ்சுடும்ம்மா :love::love::love::love:

கொஞ்சம் எடுத்து சொல்லுங்க தேவிக்கு தேவை இல்லாம பிடிவாதம் பிடிச்சுட்டு இருக்கா :love::love:நன்றி sarojamma
 
#5
அச்சோ!!! என்ன தேவிம்மா இது பிடிவாதம்??? சஜித் இல்ல உன் பாவம் இல்ல????
அப்பா செஞ்ச பாவம் பிள்ளைக்கு என்றால் பிள்ளையும் கூட்டு களவாணி, அனுபவித்து தான் ஆக வேண்டும்!
பிள்ளையும் அனுபவிக்கனும்னா சஜித்தும் அனுபவிக்கனுமா sis பாவம் இல்ல அவன் கொஞ்சம் பார்த்து பண்ணுங்க. நன்றி சிஸ் :love::love::love::love:
 
Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Advertisement

New Episodes

Advertisement