மனம் தீண்டும் மான் விழியாள்-15

#1
received_2825426224375726.jpeg

அத்தியாயம் -15

பறவைகள் அனைத்தும் தன் உறக்கம் கலைந்து இறை தேடி செல்ல துவங்கும் அதிகாலை நேரம் தூக்கம் கலைந்து எழுந்த சஜித் மிகவும் புத்துணர்வாக உணர்ந்தான். அப்படியே கண்களை மூடியவாறே மூச்சை நன்றாக இழுத்து வெளியிட்டவன் அப்போதுதான் கவனித்தான் தான் இருக்கும் நிலையை.

உடனே போர்வையை நன்றாக இழுத்து போர்த்தி கொண்டவன் “என்ன ஆச்சு, நான் எப்படி….”என்று யோசித்தவனின் கண் முன் இரவு நடந்த சம்பவம் அனைத்தும் நிழற்படமாக ஓடியது.

“ஹோ……ஷிட்...”என்று தலையிலடித்துக் கொண்டவன், தேவி தன்னைப்பற்றி என்ன நினைத்திருப்பாள் என்று அப்போதும் அவளைப்பற்றி யோசித்தவனாக அறை முழுவதும் தன் பார்வையைச் சுழல விட, எங்கும் அவளை காணவில்லை.

சஜித், “இவ எங்க போனானு தெரிலயே” என்று புலம்பியவன், “கல்யாண வாழ்க்கைல இன்ட்ரெஸ்ட் இல்ல,தனியா இருக்கதான் எனக்கு பிடிக்கும்னு இஷ்டத்துக்கு அவகிட்ட டயலாக் பேசிட்டு இப்போ என்ன காரியம்டா பண்ணி இருக்க,ஏன்டா இப்படி பண்ணுன”என்று தன்னையே நொந்து கொண்டிருந்தவனின் முன் வந்து குதித்தது அவன் மனசாட்சி.


இவ்வளவு நேரம் புலம்பி கொண்டிருந்தவனை ஏற இறங்க பார்த்த அவன் மனசாட்சி “ஏன்னா அவ உன் பொண்டாட்டி அவ புருஷனா நடந்துகிட்ட அவ்வளவுதான்”என்க, அவனோ அதிர்ந்து போனான் மேலும் அவன் மனசாட்சி “அவ உன் பொண்டாட்டிங்கற நினைப்பு இல்லாமையா எல்லார்கிட்டயும் இரும்பா இருக்கறவன் அவகிட்ட மட்டும் உருகி நிக்கற, அதை கூட விடு அவளுக்காகதானே இவ்வளவு நாள் இந்த வீட்டைவிட்டு தள்ளி இருந்தவன் இப்போ இங்க வந்துருக்க அப்போவே உன் மனசு அவளை உன்னோட வாழ்க்கையா, உன்னோட சரிபாதியா ஏத்துகிடுச்சுனு உனக்கு புரியல்லையா” என்று கேட்க, இங்கு சஜித்தோ திகைத்து போனான்.

பின் தனக்குளேயே “நா…நான் தேவியை என் மனைவியா ஏற்று கொண்டேனா, எனக்குள் மனைவியாக அவள் இருக்கிறாளா….ஆ….. ஆனால் எப்படி, எப்போது” என்று கேட்டு கொண்டவனை “லூசா நீ” என்பது போல் பார்த்தது அவன் மனசாட்சி.

“என்னடா எப்போங்கற அவளுடனான பந்தம் உனக்கு துவங்கும்போதே உன்னையும் அறியாமல் உன் தாயை நினைச்சியே அதை மறந்துட்டியா இல்ல இனி நடப்பது அனைத்தையும் நீங்களே பார்த்துக்கோங்கனு சொல்லி அவ கழுத்துல தாலி கட்டினியே அதைதான் மறந்துட்டியா இதுதான் உன் வாழ்க்கைனு உனக்கு தெரியும் அப்புறமும் எதுக்கு இந்த விஷயம் புரியாத மாதிரி நடிச்சுட்டு இருக்க” என்று கேட்ட மனசாட்சி மேலும் “நீ அவளை மனைவியா நினைக்காமையா அவளுக்கு ஒண்ணுன்ன உடனே அப்படி பதறுன, அவளை விரும்பாமையா என் பொண்டாட்டி மேலயாட கை வச்சனு அன்னைக்கு அவனுங்கள அப்படி புரட்டி எடுத்த, எல்லாத்துக்கும் மேல அவ முகம் வாடி நிக்கறதை பார்க்க பிடிக்காமதானே கோவிலுல அவ மனசு கஷ்டப்படற மாதிரி பேசுன அந்த ரெண்டு பேருகிட்டயும் எச்சரிக்கற மாதிரி பேசுன”என்று கேட்டது.

மனசாட்சியின் கேள்வியில் தன்னையும் தன் மனதையும் புரிந்து கொண்டவனின் இதழில் அவனையும் அறியாமல் வந்தமர்ந்தது மந்தகாச புன்னகை அதனோடே“ஆமா நீ சொன்னது சரிதான் நேத்து என்னையும் மீறி அவகிட்ட அப்படி நடந்திருக்கேன்னா அதுக்கு முக்கிய காரணம் அவ என் மனைவிங்கறதாளாதான் இருக்கும்” என்று சொல்லி கொண்டிருக்கும்போதே அவன் நினைவில் தேவி ஒரு வருடம் கடந்து பிரிந்து போவதாக சொன்னது நியாபகம் வந்தது.

உடனே கோபமாக தன் கைகளை முறுக்கியவன் “இல்ல முடியாது நீ பிரிஞ்சு போக நான் விடமாட்டேன். இவ்வளவு நடந்த பிறகும் உன்னை போக விட்ருவேனா என்ன.நீ என்னோட மனைவி,என்கூடதான் இருக்கணும், இருந்தாகனும் இதை நீயே நினைச்சாலும் மாத்த முடியாது. உன்னோட மீதி வாழ்க்கை என்னோட மட்டும்தான்” என்று தனக்குள் கூறி கொண்டவனிடம் “நேத்து நீங்க ரெண்டு பேரும் ஒன்னா இருந்ததால வந்த முடிவா இது” என்று மனசாட்சி கேட்க,

அவனோ அதை அலட்டாமல் பார்த்தவன் “அவ என் பொண்டாட்டினு எனக்குள்ள பதிவாகி போய்டுச்சு அதனால ஒரு சாதாரண கணவன் மனைவிக்குள்ள நடக்க கூடிய தாம்பத்யம்தான் எங்களுக்குள்ள நடந்திருக்கு.அதை ஒரு காரணமா வச்சு அவளை என் மனைவியா ஏத்துக்கிட்டேன்னு சொல்ல முடியாது, பட் அதை என்னோட உரிமையையும் உறவையும் உணர வச்ச தருணமா எடுத்துக்கலாம்”என்றவன் தெளிவாகி இருந்தான் இனி அவனின் வாழ்க்கை தேவியுடன்தான் என்று.

இதில் தேவியின் மனநிலை எப்படி இருக்கும் இதை அவள் எப்படி எடுத்து கொள்ள போகிறாள் என்பதைபற்றி அவன் கொஞ்சமும் யோசிக்கவில்லை.

சஜூத் தெளிவான முகத்துடன் மனைவியை பார்க்க வேண்டும் என்ற ஆவலில் குளிக்க எழ அப்போதுஅவனது போன் அலறியது. யார் அழைப்பது என்று அதை எடுத்து பார்க்க நந்தினி என்று காட்டியது. உடனே போனை எடுத்து காதில் வைத்தவனிடம் என்ன கூறப்பட்டதோ “இதோ டூ மினிட்ஸ் நான் வறேன்” என்றுவிட்டு குளியலறைக்குள் நுழைந்துவிட்டான்.

இதமான சூட்டில் மழை சாரலாக ஷவரில் இருந்து நீர் கொட்ட அதன் அடியில் நின்றிருந்தவனின் எண்ணம் முழுவதும் அவனவளிடமே இருந்தது. அவளைபற்றி யோசிக்கும்போதே அவனையும் அறியாமல் ரசனையான சிரிப்பு அவன் இதழில் தோன்றியது. “அழகு மான் குட்டி” என்று கொஞ்சி கொண்டவனின் முன் அவளின் மிரண்ட மான் விழிகள் நினைவு வர கூடவே அந்த கண்களில் இரவு இதழ் பதித்த நினைவும் அவனுள் எழுந்தது. அந்த நினைவின் தாக்கத்தால் அவனது உடல் சிலிர்த்து அடங்கியது.

உடனே தலையை கோதி தன்னை சமாளித்து கொண்டவனின் மனதில் அவளை பார்க்கும் ஆவல் அதிகமாகி கொண்டே போனது.அவளின் நினைவிலேயே உலண்டவனுக்கு இரவு தன்னையும் மீறி சுயநினைவு இல்லாமல் போனதுக்கு என்ன காரணம் என்பதை யோசிக்க மறந்துதான் போனான். அவன் நினைவில் இப்போதைக்கு முதலில் மனைவியை பார்க்க வேண்டும் அவளிடம் தங்கள் வாழ்க்கைபற்றி பேசி ஒரு முடிவிற்கு வர வேண்டும் என்பது மட்டுமே இருந்தது.

ஒருவழியாக குளித்து கிளம்பியவன் கீழே வர அவனை முறைத்து கொண்டு அமர்ந்திருந்தாள் நந்தினி. வெளியே செல்ல கிளம்பி இருந்தவளை பார்த்த சஜித் “என்ன நந்து குட்டி வெளிய கிளம்பிட்டியா என்ன” என்று பேச்சு அவளிடம் இருந்தாலும் பார்வை என்னவோ பாவையவள் எங்கே என்றே தேடி கொண்டிருந்தது.

நந்தினியோ வெகுவருடம் கடந்து அண்ணன் அழைத்த “நந்து குட்டி” என்ற வார்த்தையில் கண் கலங்கி போனாள்.சுற்றும் முற்றும் பார்த்தவன் எங்கும் தேவியை காணாமல், அவள் எங்கே என்பதை நந்தினியிடம் கேட்க எண்ணி “நந்து குட்டி தேவி எங்க ஆளையே காணோம்” என்று கேட்டவாறே அவளை பார்க்க அவளோ அவனைதான் கண் கலங்க பார்த்திருந்தாள்.

தங்கையின் கண்ணீரை கண்டு பதறியவன் “என்ன நந்து என்ன ஆச்சு” என்று கேட்க அவனை அணைத்து கொண்டவள் “நீங்க நந்து குட்டின்னு கூப்பிட்டு எத்தனை வருஷம் ஆச்சு அண்ணா”என்று அழ, அப்போதுதான் தேவியின் நினைவுகளில் இருந்து மீண்டவனாக “என்னடா இது சின்ன புள்ளை மாதிரி நீ ஒரு காலேஜோட கரஸ்பாண்டண்ட் அது நியாபகம் இருக்கா, இப்போவும் நான் நந்து குட்டின்னு கூப்பிட்டா உன்கிட்ட வேலை செய்யறவங்க என்ன நினைப்பாங்கனு யோசி ஆளும் வளரனும் அறிவும் வளரும் நந்து குட்டி நீ ஆளு மட்டுதான் வளர்ந்திருக்க”என்று இலகுவாக பேச,


அவளோ தன் அண்ணனைதான் ஆச்சர்யமாக பார்த்திருந்தாள். ஏனென்றால் எப்போதும் அவன் முகத்தில் இருக்கும் இறுக்கம் இன்று காணாமல் போய் இருந்தது.சஜித் தன் மனதில் இருப்பதை உணர்ந்து கொண்டதாலோ என்னவோ அவன் முகம் என்றும் இல்லாதவாறு வசீகரமாக இருந்ததுடன் இதழில் வாடாத புன்னகையும் இருந்தது.

நந்தினியின் பார்வையை கண்ட சஜித் “என்ன நந்து குட்டி அண்ணன புதுசா பாக்குற மாதிரி பாக்குற”என்று கேட்க, அவளோ “ஆமா அண்ணா இன்னைக்கு நீங்க புதுசாதான் தெரியறீங்க” என்றுவிட்டு “என்னமோ கேட்டிங்களே முதல்ல என்ன கேட்டீங்க” என்று யோசித்தவள் பின் நினைவு வந்தவளாக “ஹான் அண்ணிய கேட்டிங்கள்ள அவங்க சீக்கிரமே ஸ்கூல் கிளம்பிட்டாங்க இன்னைக்கு டுவல்த் எக்ஸாம் ஸ்டார்ட் ஆகுதுல அதான் பாலா சார் வர சொன்னாருன்னு போய்ட்டாங்க” என்றுசொல்லி கொண்டிருந்த சமயம் ரத்தினம் அவர் அறையில் இருந்து வெளியில் வந்தார்.

சஜூத் நந்தினி இருவரும் சிரித்து பேசி கொண்டிருப்பதை பார்த்தவருக்கு நிம்மதியாகதான் இருந்தது. ஏனென்றால் நேற்றைய அவரது வேலை சிறப்பாக முடிந்துவிட்டது இல்லையா. எப்படியோ சஜித்திற்கு தெரிய கூடாது என்று மறைத்த விஷயம் தெரியாமல் போய்விட்டது என்று நினைத்து கொண்டார்.

ஆம், நினைத்து கொண்டார்தான் ஆனால் அவர் மூலமாகவே அவனுக்குள் சந்தேக விதை விழும் என்பதை அவர் யோசித்து கூட பார்த்திருக்க மாட்டார்.

நந்தினியின் அருகில் வந்து அமர்ந்தவர் “என்னமா அண்ணன் என்ன சொல்றான்” என்று கேட்ட, பெரியப்பாவை பார்த்த பிறகே நேற்றைய சம்பவம் அனைத்தும் அவளுக்கு நினைவு வந்தது. உடனே அண்ணனின் புறம் திரும்பியவள் “ஆமா அண்ணா நேத்து எங்க போனீங்க அப்பாக்கு நேத்து திடீர்னு முடியாம போய்டுச்சு உங்களுக்கு கால் பண்ணுனா போகவே இல்லை. நான் எவ்ளோ பயந்துட்டேன் தெரியுமா” என்று சொல்ல,

வேகமாக தந்தையிடம் சென்றவன் “என்னப்பா நல்லாதானே இருந்தீங்க திடீர்னு என்ன ஆச்சு” என்று கேட்டான்.

ரத்தினம், “ஒன்னும் இல்லப்பா திடீர்னு மூச்சு விட சிரமம் ஆகிடுச்சு ஹாஸ்பிடல் போயிட்டு வந்த அப்புறம் பரவால்லை” என்று சொல்ல, அவனோ “என்னப்பா திடீர் திடீர்னு இப்படி ஆகுது பேசாம ஒரு டாக்டர வீட்டோட இருக்க மாதிரி அப்பாயின் பண்ணிடலாமா” என்று கேட்க, அவரோ “அது எல்லாம் வேண்டாம்ப்பா நான் இப்போ நல்லாதான் இருக்கேன் என்னோட பிஏ நல்லசிவம் பொண்ணுக்கு கல்யாணமாம் நான் போயிட்டு வந்தறேன்” என்று கிளம்ப அவரைத் தடுத்த சஜித் “என்னப்பா நீங்க, நேத்து தான் உடம்பு முடியாமல் போய் இருக்கு இன்னைக்கு கல்யாணத்துக்கு போறேன்னு சொல்றீங்க.ரெஸ்ட் எடுங்கப்பா அங்கிள்கிட்ட நான் சொல்லிக்கிறேன்” என்று சொல்ல அவரோ “இல்லப்பா அது சரியா இருக்காது இருபது வருஷமா என் கூடவே இருக்கவரு, அவர் வீட்டு கல்யாணத்துக்கு நான் போகலைன்னா நல்லா இருக்காதுப்பா தப்பா நினைப்பாங்க” என்றவர் மேலும் “எங்க போறேன் இங்க பக்கத்துலதானே கார்லயே போயிட்டு காரிலேயே வரப்போறேன் இதுல என்ன இருக்கு”என்றுவிட்டு ,நந்தினியின் தலையில் கைவைத்து “பயப்படாமல் காலேஜுக்கு போமா”என்றார்.

காலேஜ் என்ற பிறகுதான் சஜித்திற்கு நேற்று சென்ற வேலை அதை தொடர்ந்து நடந்த சம்பவங்கள் அனைத்தும் நினைவு வந்தது. அதை தொடர்ந்து அவனுள் பல கேள்விகள் எழ யோசனையில் மூழ்கினான். அப்போது மாணிக்கம் நந்தினியுடன் பேசும் சத்தத்தில் அவர்களை பார்த்தவனுக்கு என்ன தோன்றியதோ, தந்தை சொல்வதை ஏற்றுக் கொள்ளாதவனாக “அ…. அப்பா….நீங்க கண்டிப்பா போயே ஆகணுமா, எனக்கு என்னமோ நீங்க போறதுல விருப்பம் இல்ல, பார்க்கவும் ரொம்ப இளச்சு போய்இருக்கீங்க,முகமே ஒரு மாதிரி இருக்கு எங்களுக்கு நீங்க வேணும்” என்று சொல்ல அவரோ “போயிட்டு பத்து நிமிஷம் அங்க இருந்துட்டு உடனே கிளம்பிடறேன் போதுமா” என்றார்.

அப்போதும் மனமே இல்லாமல் சம்மதித்தவன் தந்தையிடம் தன் மனதில் எழுந்த கேள்விக்கு விடை கிடைக்குமா என்ற சந்தேகத்துடன் “அப்பா லேட் ஆகிடுச்சா நான் உங்ககிட்ட கொஞ்சம் பேசணும்” என்றான் தீவிரமான குரலில்.

மகனின் குரலில் இருந்த மாற்றத்தை உணர்ந்தவருக்கு பக்கென்றுதான் இருந்தது. இருந்தாலும் தன்னை சமாளித்து கொண்டவர் “பரவால்லை சொல்லுப்பா” என்று சொல்ல, நந்தினியின் புறம் திரும்பியவன் “நீயும் இரு நந்து உனக்கும் தெரிய வேண்டிய விஷயம்தான்”என்றுவிட்டு நேற்று நடந்த சம்பவங்கள் அனைத்தையும் கூறியவன் இறுதியில் ஹாஸ்டல் வார்டன் தன்னிடம் வந்து சொன்ன தகவல் வரை சொல்லி, “உங்களுக்கு உடம்பு சரி இல்லாமல் போனது, ஹாஸ்பிடலில் இருந்து திரும்ப வீட்டிற்கு வந்த தகவல் அனைத்தும் அவங்களுக்கு தெரிஞ்சுருக்கு அது எப்படி” என்று கேட்க, ரத்தினமோ மனதில் அதிர்ந்து போனார்.

மனதில் அந்த வார்டன் லேடியை வறுத்து எடுத்தவர் மகனின் சந்தேகம் தன் புறம் திரும்பாமல் இருக்க என்ன செய்வது என்று யோசித்து கொண்டிருந்த நேரம் நந்தினி “அண்ணா நேத்து காலேஜ்ல பிராக்டிகளுக்கு மெட்டிரியல் வந்துருக்கறதா போன் பண்ணுனாங்க நான்தான் அப்பாக்கு உடம்பு முடியல ஹாஸ்பிடல இருக்கேன்னு சொன்னேன் ஆனா வீட்டுக்கு வர்ற விஷயம் எப்படி தெரியும்னு தெரியலண்ணா” என்று சொல்ல, சஜித்தோ தந்தையை பார்த்தான்.

மாணிக்கம், “எனக்கு தெரிலப்பா” என்றுவிட, யோசனையில் மூழ்கியவன் தந்தையிடம் “இல்லப்பா நம்ம காலேஜ்ல ஏதோ தப்பு நடக்குது” என்று சொல்ல,உடனே சுதாரித்துக்கொண்ட மாணிக்கம் “என்னப்பா சொல்ற அங்க வேலை செய்யற மேலாளர் ரொம்ப நாளா நம்மகிட்ட வேலை செய்யறானே நம்பிக்கையான ஆளுனு சித்தப்பா கூட சொல்லுவானே”என்றவர் வேண்டுமென்றே தன் போக்கில் சொல்வது போல் “ஒரு வேலை சித்தப்பாவையே அவன் ஏமாற்றி இருப்பானோ,நம்பிக்கையான ஆளுனு நம்பி காலேஜ அவன் பொறுப்புல கொடுத்தா இப்படி பண்ணி வச்சுட்டானேப்பா, அது சரி வெளியாளுகிட்ட பொறுப்ப கொடுத்தது நம்ம தப்புதான்”என்றவர் சஜூத்தின் புறம் திரும்பி “தம்பி அது என்னனு இப்போவே விசாரிச்சு தெளிவாக்கிடு இல்லைனா காலேஜ் பேர் கெட்டு போய்டும்” என்று நல்லவர் போல் பேசியவர் திருமணத்திற்கு சென்று வருவதாக சொல்லி கிளம்பிவிட்டார்.

நந்தினியும் கல்லூரிக்கு கிளம்ப அவளை தடுத்தவன் “நீ நான் சொல்ற வரை காலேஜ்க்கு போக வேண்டாம் வீட்ல இருடா”என்றவன் தங்கள் கல்லூரியை நோக்கி வண்டியை செலுத்தினான்.

கல்லூரிக்கு சென்றவன் அங்கு மேலாளராக பணிபுரியும் பசுபதியிடமும் ஹாஸ்டல் வார்டன் கலாவிடமும் விசாரணை செய்ய முனைய, அவர்களை அழைக்கும் முன்னே அவர்களாகவே அவனிடம் வந்தவர்கள் தாங்கள்தான் கல்லூரி நிர்வாகத்துக்கு தெரியாமல் இந்த வேலையை செய்தது என்றும் அவர்கள் ஊரில் இருந்து படிக்க வந்த வசதி இல்லாத மாணவிகளை பணத்திற்காக பயன்படுத்தி கொண்டதாக சொல்லி சரண் அடைய சஜித்திற்கு அதிர்ச்சியாகதான் இருந்தது.

தான் வந்து விசாரிப்பதற்க்கு முன்பாக அவர்களாகவே வந்து சரண் அடைக்கிறார்கள் என்றால் இவர்களைதான் விசாரிக்க வந்திருக்கிறேன் என்ற தகவல் இவர்களுக்கு ஏற்கனவே வந்திருக்க வேண்டும். ஆனால் எப்படி இவர்களுக்கு தெரிந்தது என்று யோசித்தவன் காலை தந்தையிடம் இதைப்பற்றி பேசும்போது வேறு யார் தங்களுடன் இருந்தது என்று யோசித்தான்.

சமைக்கும் முருகனை தவிர அங்கு யாரும் இருக்கவில்லை என்பதை உறுதி செய்து கொண்டவன், அடுத்ததாக முருகனை கவனிக்க வேண்டும் என்று முடிவெடுத்து கொண்டு கலாவையும் பசுபதியையும் கைது செய்து வண்டியில் ஏற்றி அவர்கள் வண்டியை தொடர்ந்து சென்று கொண்டிருந்தவனின் போன் அலறியது.

போனை எடுத்து பார்த்தவன் அழைப்பு தெரியாத எண்ணில் இருந்து வரவும் புருவ முடிச்சுடன் பார்த்தவன், பின் அதை ஆன் செய்து காதில் வைக்க அந்த பக்கம் சொன்ன செய்தி கேட்டு திகைத்த அடுத்த நிமிடம் “நோ………”என்று அந்த இடமே அதிரும் வண்ணம் கத்தினான். அதில் பயந்த அவன் வண்டியின் டிரைவர் சடன் பிரேக் போட பெருத்த சத்தத்துடன் நின்றது அவர்கள் வந்த காவல் துறை வாகனம்.

அந்த பக்கத்திலிருந்து என்ன தகவல் வந்திருக்கும், வார்டனையும் மேலாளரையும் சரண் அடைய சொன்னது யாராக இருக்கும் என்பதை அடுத்த எபியில் பார்க்கலாம்……..


 
Saroja

Well-Known Member
#5
அப்பா மகன் கிட்ட பேசிட்டு
அவங்கள சரண்டர் ஆக சொல்லியாச்சா
போன்ல என்ன சொல்றாங்க
தேவிக்கு ஏதாவது ஆயிடுச்சா
 
#8
அப்பா மகன் கிட்ட பேசிட்டு
அவங்கள சரண்டர் ஆக சொல்லியாச்சா
போன்ல என்ன சொல்றாங்க
தேவிக்கு ஏதாவது ஆயிடுச்சா
அடுத்த எபில தெரிஞ்சுடும் சரோஜாம்மா :love::love::love::love:நன்றிம்மா :love::love::love:
 
Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Advertisement

New Episodes

Advertisement