மண்ணில் தோன்றிய வைரம் 46

Advertisement

Anu Chandran

Well-Known Member
Tamil Novel Writer
பப்பில் இருந்த சஞ்சுவிற்கு ஏதோ அதிர்வது போல் உணர்வு தோன்ற மது தந்த போதையின் தடுமாற்றம் என்று முதலில் எண்ணியவன் பிறகு அது தொடரவும் ஆடிக்கொண்டிருந்தவன் நின்று என்னவென்று ஆராயத்தொடங்கினான்..
அப்போது தன் பாக்கெட்டினுள் செல் ஒலிப்பதை கண்டறிந்தவன் அதை வெளியே எடுக்க அதில் ஆது என்று ஒளிர தான் ஆடிக்கொண்டிருந்த இடத்திலிருந்து வெளியே வந்தவன் போனை அட்டன்ட் செய்து காதில் வைக்க
“சஞ்சு ஏன்டா போனை எடுக்க இவ்வளவு நேரம்.....நீ எங்க இருக்க?? சீக்கிரம் கிளம்பி மண்டபத்திற்கு வா..... இங்க சாருக்கு...” என்று அழைப்பு துண்டிக்கப்பட சஞ்சுவிற்கு ஏறிய போதை மழமழவென்று இறங்கியது.... ஆதுவின் பதட்டமான குரல் சாருவின் பெயர் என்று அனைத்தும் அவனுக்கு ஏதோ ஒரு விபரீதத்தை உணர்த்த அதில் அவனது பயம் அதிகரித்தது... மறுபடியும் ஆதுவிற்கு முயற்சிக்க அழைப்பு எடுக்கப்படவில்லை... நடந்தது என்னவென்று தெரியாது இங்கு நின்று நேரத்தை கடத்துவது உசிதமல்ல என்று எண்ணியவன் அஸ்வின் இருக்கும் இடம் நோக்கி விரைந்தான்...அடுத்த நாள் திருமணம் என்பதால் அஸ்வின் மது அருந்தாது அங்கிருந்த டேபிளில் அமர்ந்து ஜூசை குடித்தபடி இருந்தான்.. அப்போது அங்கு வந்த சஞ்சு விஷயத்தை கூற பதறிய அஸ்வின் என்னவென்று சரியாகத் தெரியாது மற்றவர்களின் மகிழ்ச்சியை குழப்ப வேண்டாம் என எண்ணி வருணிடம் மட்டும் விஷயத்தை தெரிவித்து விட்டு அங்கிருந்து சஞ்சுவுடன் சென்றான். பத்து நிமிடத்தில் மண்டபத்தை அடைந்த அஸ்வினும் சஞ்சுவும் வாசலில் இவர்களுக்காக காத்திருந்த ஆதுவிடம் விசாரிக்க அவள் சாருவிற்கு அடிபட்டிருப்பதாகவும் இப்போது அவளது அறையில் இருப்பதாகவும் கூற உடனடியாக அஸ்வின் அவ்விடத்தை விட்டு அகல அவனோடு பின் செல்ல முயன்ற சஞ்சுவை கரம் பற்றி தடுத்தாள் ஆது என அழைக்கப்படும் ஆத்விகா....
அவள் தடுத்ததும் என்னவென்று திரும்பிப்பார்த்த சஞ்சு அவளது குறும்புச்சிரிப்பில் குழம்பி அவளிடம் என்னவென்று விசாரிக்க அவனை இழுத்துச் சென்றாள் ஆது...
சாருவை பார்க்க விரைந்த அஸ்வின் சுற்றி நடப்பதை கவனிக்காது சாருவின் அறைக்குள் விரைய அவள் அங்கு கட்டிலில் காலில் பெரிய பண்டேஜுடன் படுத்திருந்தாள்....
அவளை அப்படி ஒரு கோலத்தில் பார்த்ததும் பதறி விட்டான் அஸ்வின். அவள் அருகே விரைந்தவன் அவள் கரம் பற்றி
“ஜிலேபி என்னாச்சு உனக்கு??? எப்படி அடிபட்டது??? பெரிய காயமா??? ஏன் இவ்வளவு பெரிய காயம்??? டாக்டர் வந்து பார்த்தாங்களா??? என்ன சொன்னாங்க? ரொம்ப வலிக்குதா??” என்று அவன் பாட்டிற்கு கேள்விகள் கேட்க அவன் கரம் பட்டதும் மூடியிருந்த விழிகளை திறந்த சாரு அவனது கேள்விப்படலம் முடியும் வரை அமைதியாக அவனை பார்த்துக்கொண்டிருந்த சாரு
“ என்ன ரௌடிபேபி இப்படி பதறுகிறாய்?? பெரிசா அடி இல்லை..... கால் பிரண்டிருச்சி.... காயம் எல்லாம் ஒன்றும் இல்லை .... லைட்டா கால் வலித்தது அதான் பாண்டேஜ் போட்டுருக்கேன்....இந்த அடிக்கெல்லாம் டாக்டரை கூப்பிட்டா டாக்டர் என்னை கீழ்ப்பாக்கத்தில் சேர்க்க சொல்லிருவாரு....... சும்மா உன்னை வரவைக்க தான்அடிபட்டிருச்சினு ஆதுகிட்ட சொல்ல சொன்னேன்.... ஆனா நீ இவ்வவளவு சீக்கிரம் வருவன நான் எதிர்பார்க்கலை.... உன்னை தனியா மீட் பண்ண தான்.....” என்று சாரு பதில் கூறிக்கொண்டிருக்க ஏதோ தன்னை சுற்றி உள்ள அனைத்தும் சூழலுவது போல தோன்றி கண்கள் மங்கலாக தெரிய என்ன நடக்கின்றது என்று உணரும் முன் அஸ்வின் அவ்விடத்தை விட்டு சென்றிருந்தான். சாருவிற்கு அப்போது கன்னத்தில் ஒரு வித எரிச்சல் உணர்வு தோன்ற தன்கையால் கன்னத்தை தொட எரிச்சல் உணர்வு இப்போது வலியாக மாறியிருந்தது...... அப்போதுதான் அஸ்வின் தன்னை அறைந்தான் என்பதை உணர்ந்தாள் சாரு..... இதுவரை யாரிடமும் அடிவாங்கியே பழக்கம் இல்லாத சாருவிற்கு அடி என்றால் என்ன என்பதை அன்று உணர்த்தினான் அஸ்வின்.... முதல் அடி என்பதால் அவளுக்கு கன்னம் சிவந்து கொவ்வைப்பழம் போல் இருந்தது.... அஸ்வின் நியாபகம் வந்தவளாக கையால் ஒரு கன்னத்தை பிடித்தபடி அவனைத்தேடி வந்தாள் சாரு...... அவன் மொட்டை மாடிக்கு சென்றதாக வெளியில் நின்ற அவளது தோழிகள் கூற அவனைத் தேடி சென்றாள் சாரு.........
மொட்டைமாடியில் தன் கோபத்தை கட்டுப்படுத்த அங்கும் இங்கும் நடந்து கொண்டிருந்தான் அஸ்வின். ஆனால் கோபமோ அணை உடைத்த வெள்ளமாய் சீறிப்பாய்ந்து கொண்டிருந்தது... அப்போது சாரு அங்கு வர அவளை பார்த்தவன் அவளை முறைத்துக்கொண்டு அவன் அங்கிருந்து செல்ல முயல அவன் கரம் பற்றி சாரு தடுக்க
“சாரு மரியாதையா கையை விடு இல்லைனா நடக்குறதே வேற..... ஐ காண்ட் கண்ரோல் மை டெம்பர்... பீளீஸ் லீவ் மீ....” என்று அவன் தன் கையை உதற அதை கண்டு கொள்ளாது அவள் இன்னும் அவனது கரத்தை இறுக்கமாக பற்ற அதில் கோபம் கொண்ட அஸ்வின் அவளை நேருக்கு நேர் பார்த்து முறைக்க அப்போது அவள் கன்னத்தில் இருந்த அவனது கைத்தடமும் அவளது கன்ன வீக்கமும் அவன் கண்ணில் பட்டது...
“ஷிட்... ஏன் ஜிலேபி இப்படி என்னை ரூடா பிஹேவ் பண்ண வைக்கிற??? உன்னை ரொம்ப சாப்டா ஹான்டல் பண்ணனும்னு நான் நினைத்தால் நீ ஏதாவது கிறுக்கு தனமா செய்து என்னோட கோபத்தை அதிகப்படுத்திட்டே இருக்க.... அது இன்று உன்னை அடிக்கும் அளவிற்கு கொண்டு வந்திருக்கு..... ஏன் இப்படி பண்ற ஜிலேபி??? நான் இப்படி உன்னை காயப்படுத்துவது எனக்கு தான் வலியை கொடுக்கின்றது... புரிந்துக்கோ ஜில்லு..... பிளீஸ் இனிமே இப்படி பண்ணாத.....”
“சாரி பேபி”
“சஞ்சு என்கிட்ட உனக்கு அடி பட்டிருக்குனு சொன்னப்போ எனக்கு எப்படி இருந்திச்சுனு உனக்கு புரியாது..... நான் ஒரு நிமிஷம் கலங்கிட்டேன்... என்னோட தவிப்பு கவலை எல்லாவற்றையும் வாய் வார்த்தையால் சொல்ல முடியாது... இப்படி தான் சொல்லாம கொள்ளாம சிங்கப்பூரிற்கு போன.... என்னை பற்றி என்னோட நிலையில் இருந்து யோசிச்சிருந்தா நீ போயிருப்பியா???? என்னோட மகிழ்ச்சிக்குனு சொன்னியே..... உன்னோடு சேர்ந்த வாழாத வாழ்க்கை எனக்கு எப்படி சந்தோஷத்தை கொடுக்கும்னு யோசிச்சியா????? எனக்கு என் குடும்பம் முக்கியம் தான் ஆனா அதுக்காக என்னை எனக்கு தெரியாமலே காதலித்து என்னை உயிருக்கு உயிராக நேசிக்கும் உன்னை எப்படி கைவிடுவேன்னு நீ நினைத்தாய்???? உனக்காக நான் எந்த எல்லைக்கும் போவேன்னு என் காதல் உனக்கு உணர்த்தவில்லையா???”
“நீ எனக்காக உன் குடும்பத்தை எதிர்ப்பன தெரிந்ததால் தான் நான் உன்னை பிரிந்து சிங்கப்பூர் போனேன்...... அந்த எந்த எல்லையும்கிறதுல உன் குடும்பம் வந்திடகூடாதுனு தான் நான் பிரிவை தேர்ந்தெடுத்தேன்......”
“ம்... உனக்கு பிரிவு சிம்பிளான விஷயமா போய்விட்டது ல???? அது என்னை எவ்வளவு பாதிக்கும்னு நீ உணர்ந்திருந்தா இந்த முடிவை நீ எடுத்திருக்க மாட்ட...”
“அது உன்னை மட்டும் இல்லை என்னையும் சேர்த்து தான் பாதித்தது.... உன்னோட பாதிப்புக்கு மருந்தா உன்னோட குடும்பம் எப்பவும் இருக்கும்.... ஆனா எனக்கு???? இதெல்லாம் தெரிந்து தான் நான் சிங்கப்பூர் போனேன்.”
“சரி.... நீ சிங்கப்பூர் போனா எல்லாம் மாறிரும்னு நீ எப்படி நினைத்தாய்??”
“தன் குடும்பத்திற்காக என் ரௌடிபேபி எதையும் தியாகம் பண்ணுவான்னு ஒரு நம்பிக்கை.....அந்த நம்பிக்கை தான் என்னை சிங்கப்பூர் போக வைத்தது....”
“நல்லா பேச கத்துக்கிட்ட....ஆனா நீ நினைத்த மாதிரி எதுவும் மாறலையே???? நாளைக்கு உனக்கும் எனக்கும் திருமணம்..”
“ஏன் மாறலை... என் பேபி அவங்க அப்பாவோடு சேர்ந்துட்டான்... அவரோட பிசினஸ்சை பார்த்துக்கிறான்....அவனுடைய பேமிலியுடன் சந்தோஷமா இருக்கான்....இது தானே நான் எதிர்ப்பார்த்தது....”
“ ஆனா நான் என்னோட அப்பா சொன்ன பெண்ணை திருமணம் செய்யனும்னு தானே நீ ஆசைப்பட்ட???? அதுதான் நடக்கலையே???” என்று அஸ்வின் வினவ சாருவிடம் பதிலில்லை...
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top