மண்ணில் தோன்றிய வைரம் 45

Advertisement

Anu Chandran

Well-Known Member
Tamil Novel Writer
மறுநாள் திருமணத்திற்கு தயாராகிக் கொண்டிருந்தது ரத்னா மஹால்........
வண்ண நிற விளக்குகளாலும் பூக்களாலும் அலங்கரிக்கப்பட்டு இது திருமணத்திற்கான நேரம் என்ற தோரணையுடன் கம்பீரமாய் நின்றிருந்தது அத் திருமண மண்டபம். வெளியே அங்காங்கே சில அலங்கார வேலைகள் நடைப்பெற்ற வண்ணம் இருக்க உள்ளே உறவினர் கூட்டம் நிரம்பி வழிந்தது....
மணமகனது உறவுமுறைகளும் மணப்பெண்ணின் உறவினர்களும் அம்மண்டபத்தில் குழுமி இருந்தினர்..... அங்கு மணமேடையில் நலுங்கு வைக்கும் வைபவம் இடம்பெற்றுக்கொண்டிருந்தது..... நெருங்கிய உறவினர்கள் சூழ்ந்திருக்க மணப்பெண்ணிற்கு முதலில் நலுங்கு வைக்கப்பட பின் மாப்பிள்ளைக்கு நலுங்கு வைக்கப்பட்டது....
ஒருபுறம் மணமக்களுக்கு நலுங்கு வைக்கப்பட மறுபுறம் இளைஞர் பட்டாளம் சந்தனத்தை கையில் எடுத்துக்கொண்டு யுவதிகளை நோக்கி படையெடுத்தனர்.... சிலர் அவர்களது ஆக்கிரமிப்பில் சிக்கிக்கொள்ள சிலர் லாவகமாக தப்பிக்கொண்டனர்....இவ்வாறு அந்த இடமே அமர்களமாய் இருந்தது....நலுங்கு உற்சவத்திற்கு அழைக்கப்பட்டிருந்த உறவினர்கள் அனைவரும் மணமக்களை வாழ்த்தி சென்றனர்.
இவ்வாறு எட்டு மணியளவில் நலுங்கு உற்சவம் முடிவடைய பந்தி ஆரம்பிக்கப்பட்டது...பெரியவர்கள் அனைவரும் உணவிற்கு சென்றுவிட சிறியவர்கள் பட்டாளம் மெஹேந்தி இடுவதற்காக நடுச்சாலையிலே தங்கியது.....
பெண்கள் ஒரு புறம் மெஹேந்தி இட்டவாறு இருக்க மறுபுறம் ஆண்கள் அவர்களை வம்பளந்து கொண்டு இருந்தனர்....
அங்கு ஆண்கள் குழுவில் மணமகன் அஸ்வின் நடுநாயகமாக அமர்த்தப்பட்டு கேலி கிண்டல்களுக்கு தலைமை தாங்க பெண்கள் புறம் சாரு நடுநாயகமாக அமர்ந்திருக்க மற்ற பெண்கள் அதற்கு பதிலடி கொடுத்த வண்ணம் இருந்தனர்...
முதலில் மணப்பெண் சாருவிற்கு மருதாணி இடப்பட அதில் மணமகன் பெயரின் முதல் எழுத்தை மருதாணி இடும் பெண் கேட்க அதற்கு பெண்கள் கூட்டத்தினர் டி என்று கூற சாருவோ ஆர் என்று உளறி விட அந்த பட்டாளம் ஒன்றாக ஓ போட்டது.... அதில் சாரு வெட்கப்பட்டு மறுகையால் முகத்தை மூடிக்கொள்ள அஸ்வினோ அவளிற்கு மேல் வெட்கப்பட மறுபடியும் கூட்டம் ஓ போட்டு அவர்களை ஓட்டியது...
கூட்டத்தில் ஒரு பெண்
“ மருதாணி நல்லா சிவந்திச்சினா பொண்ணுக்கு பையன் மேல அன்பு அதிகமா இருக்கமாம்.....”
“அப்போ சிவக்கலைனா ???” என்று ஆண்கள் கூட்டத்தில் ஒருவன் கேட்க
“ பையனுக்கு பொண்ணு மேல பிரியம் அதிகமாக இருக்குமாம்”என்று கூற
“ஆக மொத்தம் சிவக்குதோ இல்லையோ பிரியம் இருக்கும்னு சொல்லுறீங்க??” என்று இன்னொருவன் கேட்க
“ஆமா..... கையில போடுற மருதாணி சிவப்பதற்கும் பல வருஷம் வாழப்போற வாழ்க்கைக்கும் என்ன சம்பந்தம்... வெளிநாட்டுக்காரன் கல்யாணத்தில பொண்ணு மருதாணி போட்டுக்குதா.... இல்லையே??? அவங்க சந்தோஷமா வாழலையா?? மருதாணி பங்ஷனை நம்ம முன்னோர்கள் கொண்டு வந்ததற்கு காரணம் மருதாணி எல்லா வகையான மருத்துவ குணங்களையும் கொண்ட பொருள்.... உடல் சூட்டை தணிக்கிறது, ஹார்மோன் குறைபாட்டை தீர்ப்பது, நோயெதிர்ப்பு சக்தியை வழங்குவது, கிருமி தொற்றுகளுக்கு வேலியா இருப்பது இப்படி பல நன்மைகள் இருக்கு.... மணமகளுக்கு மெஹெந்தி பங்ஷன் செயவதற்கு காரணம் அவங்களோட ஸ்ரெஸ்சை குறைப்பதற்கு..... திருமணம்னு வரும் போது மணமகளுக்கு பல வேறுபட்ட பயம் உருவாகும். அது கடைசியால் ஸ்ரெஸ்ஸாக உருவெடுக்க வாய்ப்பிருக்கு.... அப்படி இருக்கும் பட்சத்தில் அவங்க வாழ்க்கையின் முக்கிய நிகழ்வான திருமணத்தை அனுபவித்து கொண்டாட முடியாது..... அதை நிவர்த்தி செய்வதற்காக தான் இந்த மெஹெந்தி பங்ஷன்....... அதோடு எந்த வித நோய் தொற்றும் மணமக்களுக்கு வந்துவிட கூடாது அப்படிங்கிற காரணமும் இருக்கு.......
ஹார்மோன்கள் செயற்பாட்டை இந்த மருதாணி கட்டுப்படுத்துகின்றது..... இதெல்லாம் மருத்துவ குணம்.... இதில்லாமல் அந்த காலத்தில் லவ் மேரேஜ் ரொம்ப கம்மி.... ஆரேன்ஜ்ட் மேரேஜ் தான் ரொம்ப அதிகம்... புகுந்த வீட்டில் தம் பெண்ணை எப்படி நடத்துறாங்கனு பெண் வீட்டினர் தெரிந்துக்கவும் இந்த மருதாணி உதவியது....”
“அது எப்படி??”
“பெண் மறுவீடு வரும் போது பெண்ணோட அம்மா மணமான பெண்ணோட கையை நோட்டம் விடுவாங்களாம்... அதோட சிவப்பு தன்மையை வைத்து அவங்க பொண்ணை புகுந்த வீட்டில் எப்படி நடத்துறாங்கனு தெரிந்துகொள்ளுவாங்களாம்.... இப்போ எல்லாம் நிறைய வசதிகள் இருக்கு...ஆனா அப்போ அதெல்லாம் இல்லை.... அதுனால மெஹெந்தியோட சிவப்பு தன்மையை வைத்து பெண்ணோட நிலையை கண்டுபிடித்து திருப்தி அடைவாங்கலாம்..”
“அதாகப்பட்டது என்னான்னா சி.சி.டி.வி கேமராவோட வேலையை மருதாணி செய்திருக்குனு சொல்லுறீங்க....”
“அதே அதே.... அப்புறம் இந்த பங்ஷனில் இன்னொரு விடயம் இருக்கு”
“அது என்னது??”
“மணப்பெண்ணோட கையில மணமகன் எழுத்தை எழுதும் போது அதை பார்த்தவுடன் தெரியாத மாதிரி தான் எழுதுவாங்க.... அதை மணமகன் சரியாக கண்டுபிடிக்கனும்.... அவங்களுக்குள்ள ஒரு புரிந்துணர்வை ஏற்படுத்துகின்ற நோக்கத்தோடு இப்படி செய்றாங்க...”
“ ஓ...இப்படி ஒரு மேட்டரும் இருக்கா?? டேய் அஸ்வின் சாரு கையில உன்னோட நேம் எங்க இருக்குனு கண்டுபிடி போ.....” என்று என்று நண்பர் பட்டாளம் அஸ்வினை எழுப்பிவிட அவனும் சாரு அமர்ந்திருந்த இடம் நோக்கி சென்றான்...
அஸ்வின் சாரு அருகில் சென்றதும் பெண்கள் பட்டாளம் அவர்கள் இருவரையும் கலாட்டா செய்யத்தொடங்கினர்.
சாருவின் அருகில் அமர்ந்த அஸ்வின் அவளது மருதாணி இடப்பட்ட கரத்தினை கேட்டு அவனது கரம் நீட்ட அவளோ சிறு வெட்கத்துடன் நாணம் கலந்து தன் கரத்தினை நீட்ட அவன் எழுத்தினை கண்டுபிடிக்கும் முயற்சியில் இறங்கினான்..
அப்போது அஸ்வினை ஓட்ட எண்ணி சஞ்சு மற்றும் வருண்
“சஞ்சு நீ ஆஞ்சநேயர் பக்தனை பார்த்திருப்ப.... ஆனா ஆஞ்சநேயர் பக்தர்னு சொல்லி அந்த கிருஷ்ணர் வேலை பார்க்கிறவங்களை பார்த்திருக்கியா??” என்று வருண் ஆரம்பிக்க
“யூ மீன் இந்த மொரட்டு சிங்கிள்னு சொல்லிட்டு மன்மதன் வேலை பார்க்கிற பிளே பாய்சை சொல்லுறியா???”
“அட அவங்க கூட பரவாயில்லை டா..... இந்த துர்வாசகர் மாதிரி காதல் கசக்குதய்யானு இருந்திட்டு திடீர்னு ரோமியோவா மாறி சுற்றியுள்ளவர்களுக்கு ஹய் வால்டேஜில் ஷாக் கொடுக்கிறவங்களை நீ பார்த்திருக்கியா???”
“இல்லை வருண் இவ்வளவு நாள் பார்த்ததில்லை.... ஆனா இப்போ இங்க என் கண் முன்னாடி பார்க்கிறேன்... கடைசி வரைக்கும் சன்னியாசம் தான் அப்படிங்கிற லெவலுக்கு பிரபோஸ் பண்ண வந்த பொண்ணுங்களை எல்லாம் சிஸ்டர்னு கூப்பிட்டு ஓட விட்ட ஒருத்தன் இப்போ மேரேஜ் பண்ண போறானாம்.... அதுவும் லவ் மேரேஜாம்......”
“அவன் சன்னியாசம் இருப்பதால நண்பனான நானும் சன்னியாசியாக தான் இருக்கனும்னு ஒரு கெட்ட எண்ணத்துல செட்டாகின்ற பொண்ணுங்க எல்லார்கிட்டயும் அட்வைசுங்கிற பேரில் கழுத்தறுத்து எல்லோரையும் தலை தெறிக்க ஓட வைத்தவன் இப்ப வருங்கால மனைவியோட கையில் மருதாணி போட்டு கேம் விளையாடிட்டு இருக்கானாம்...... என்ன கொடுமை சஞ்சு இது.... வேணா வேணானு சொன்னவனுக்கு லட்டு மாதிரி என்னோட தங்கச்சி கிடைச்சிருக்கா....... ஆனா வேணும் வேணும்னு சொன்ன எனக்கு ஒரு அட்டு பிகர் கூட கிடைக்க மாட்டேன்குது....”
“ பீல் பண்ணாதிங்க பிரோ யானைக்கு ஒரு காலம் வந்தா பூனைக்கு ஒரு காலம் வரும்....”
“எங்க யானைக்கும் பூனைக்கும் வருகின்ற காலம் மொத்தமா அவனுக்கு மட்டுமே வருது....... ஒரு பாதி எனக்கு வந்திருந்தா கூட இன்னேரம் இரண்டு பிள்ளைக்கு அப்பாவா இருந்திருப்பேன்..... இவனுக்கு பிரண்டா இருந்ததுக்கு தண்டனையா எனக்கு சன்னியாசம்னு அந்த கடவுள் முடிவு பண்ணிட்டாரு போல...” என்று வராத கண்ணீரை வருண் துடைத்துவிட அவனது பாவனையில் அனைவரும் சிரித்தனர்.... ஆனால் அந்த கேலிக்கு உரியவனோ மருதாணி ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்தான்.....
சாருவின் கையில் வரையப்பட்டிருந்த டிசைனில் ஒரு இதய வடிவ குறிக்குள் ஜே என்ற எழுத்துடன் பின்னிப் பிணைந்து எழுதப்பட்டிருந்த ஆர் என்ற எழுத்தினை கண்டுபிடித்து கூற அங்கிருந்த அனைவரும் கை தட்டி ஆர்ப்பரித்தனர்.... சாருவோ அவனை சைட் அடித்துக்கொண்டிருக்க அஸ்வினோ அவள் பக்கம் திரும்பாது தன் நண்பர் பட்டாளத்தின் கலாட்டாக்களுக்கு இசைந்து கொடுத்துக் கொண்டிருந்தான்.
நிச்சயத்திற்கு பின் திருமணத்திற்கு ஒரு வாரம் இருக்கும் போது வருவதாக கூறி அஸ்வின் யூ.எஸ் பறந்துவிட்டான். நிச்சயத்திற்கு பிறகு அஸ்வின் சாருவை தொடர்பு கொள்ளவில்லை..... இவள் தொடர்பு கொள்ள முயன்றபோதும் வாய்ஸ் மெசேஜிற்கே சென்றது..... இது தொடர சாரு தன் பழைய அதிரடியில் இறங்கினாள்... முன் போல் தாறுமாறாக பேசி வாய்ஸ் மெசேஜ் அனுப்பினாள்..... தினமும் அவன் மொபைல் ஹாங் ஆகும் அளவிற்கு வாய்ஸ் மெசேஜ், லவ் கோட்ஸ், அவளது புகைப்படங்கள் ,கவிதைகள் என்று பலவற்றை அனுப்புவாள்......... அவன் கடுப்பாகி அவளை திட்டுவதற்காகவேனும் அழைப்பான் என்று காத்திருக்க அவனிடமிருந்து எந்தவித பிரதிபலிப்பும் இல்லை....... இவ்வாறு நாட்கள் செல்ல திருமணத்திற்கு இரண்டு நாட்கள் இருக்கையில் அஸ்வின் யூ.எஸ் இல் இருந்து வந்தான்.... வந்த பின்னும் இதே கண்ணாம்பூச்சி ஆட்டம் தொடர இன்று தான் இருவரும் நேரடியாக பார்த்துக்கொண்டனர்..... அப்போதும் அஸ்வின் அவளிடம் மட்டும் பாராமுகம் காட்ட சாருவிற்கு எவ்வாறு அஸ்வினை சமாதானப்படுத்துவது என்று தெரியவில்லை.... ஆனால் திருமணத்திற்கு முன் அவனை எவ்வாறாயினும் சமாதானப்படுத்தியே ஆக வேண்டுமென உறுதி பூண்ட சாரு அதற்கான சந்தர்ப்பத்தை எதிர்பார்த்து காத்திருந்தாள்......
ஆடல் பாடல் கலாட்டாக்களுடன் பெண்கள் மெஹெந்தி வைத்து முடிக்க, பின் ஒவ்வொருவாராக அங்கிருந்து கலைந்து சென்றனர்....
ஆண்கள் பட்டாளம் பாச்சுலர்ஸ் பாட்டி என்று கூறிவிட்டு அஸ்வினை இழுத்துக்கொண்டு அருகிலிருந்த பப்பிற்கு சென்றனர்.....
சாருவோ எப்படியேனும் அஸ்வினை சந்தித்து விட வேண்டும் என்று எண்ணி சஞ்சுவை தொடர்பு கொண்டாள்... ஆனால் அவளால் தொடர்பு கொள்ள முடியவில்லை... வருணிற்கு அழைக்க அவனையும் தொடர்பு கொள்ள முடியவில்லை......
என்ன செய்யலாம் என்று யோசித்தவளுக்கு அந்த விபரீத யோசனை தோன்றியது......
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top