மண்ணில் தோன்றிய வைரம் 42

Advertisement

Anu Chandran

Well-Known Member
Tamil Novel Writer
நாடு திரும்புவதற்காக தயாராகிக்கொண்டிருந்த சாருவிற்கு அழைத்தான் சஞ்சு...
“சொல்லு சஞ்சு???”
“.......”
“இன்னும் வன் ஹவரில் ஏர்போர்ட்டில் இருக்கனும் டா..... பாக்கிங் கொஞ்சம் இருந்தது.... அதான் அதை செய்திட்டு இருக்கேன்....”
"......"
“ஆமா டா சரியா மார்னிங் நைன் ஓர் கிளாக் ரீச் ஆகிருவேன்.... நீ பிக்கப் பண்ண வந்துருவ தானே??”
“....”
“ஓகே நான் லாண்ட் ஆனோன உனக்கு கால் பண்றேன்.... பாய்...” என்றுவிட்டு அழைப்பை கட் செய்தாள் சாரு.....
ஆம் இன்றோடு சாரு சிங்கப்பூர் வந்து ஒரு வருடம் ஆகிவிட்டது......
இடத்தில் மட்டுமல்லாது வாழ்விலும் பல மாற்றங்கள்...
சிங்கப்பூரில் சஞ்சுவின் அக்கா ப்ரீத்தி வீட்டிலேயே தங்கியிருந்தாள் சாரு.... ப்ரீத்தியிற்கு அப்போது தான் குழந்தை பிறந்து நான்கு மாதம். அதனால் ப்ரீதிக்கு துணையாய் சஞ்சுவின் அம்மா இருந்தார்.... சாரு வந்ததும் இரு மாதங்கள் தங்கியிருந்த சஞ்சுவின் அம்மா மகனை சீராட்ட தாயகம் திரும்பி விட்டார்.... சாருவின் நிலை பற்றி சஞ்சு ஏற்கனவே ப்ரீதிக்கு சொல்லியிருந்த படியால் ப்ரீதியும் சாருவிற்கு தன் முயற்சியால் யதார்த்தத்தை உணர்த்த முயன்றாள்... அது சாருவிற்கு புரிந்தாலும் அவள் அதை வெளிக்காட்டாது நடந்து கொண்டாள்.... அவளுக்கு அந்த குட்டி தேவதை கவினயா உடனே நேரம் சுகமாக கரையும்.... காலையில் அவளை குளிப்பாட்டுவதில் உதவி செய்யும் ப்ரீதியின் கணவர் ஶ்ரீதரை பார்க்கும் போது ஏனோ சாருவிற்கு அஸ்வின் நியாபகம் வரும்.... ப்ரீதியும் ஶ்ரீதரும் ஒருவருக்கு மற்றொருவர் துணையாய் வேலைகளை பரிமாறிக்கொள்வதும் வார்த்தையாடிக் கொள்வதையும் பார்க்கும் போது சாருவிற்கு ஏனோ அஸ்வினோடு தான் அவர்களது எதிர்காலம் பற்றி பேசியது நினைவில் வரும்..... அது அவள் மறக்க நினைக்கும் அனைத்தையும் மீண்டும் நியாபகப்படுத்தும்...
அவன் தன்னை மறக்க வேண்டுமென சிங்கப்பூர் வந்தவள் அவனது நினைவிலேயே தன் நாட்களை கடத்தினாள்..... இடையிடையே சஞ்சுவும் ஷெண்பாவும் அவளுக்கு அழைத்து அவளது நலம் விசாரிப்பார்கள்.....
அவ்வாறு ஒரு நாள் சஞ்சு பேசும் போது அஸ்வின் அவனது ரெசிக்னேஷன் லெட்டரை சமர்ப்பித்துள்ளதாக கூறினான்... அதை கேட்ட சாருவிற்கு முதலில் அதிர்ச்சி என்றாலும் அதை தொடர்ந்து அவன் தன் தந்தையின் கம்பனியில் மானேஜிங் டைரெக்டராக சார்ஜ் எடுத்துக்கொள்ளப்போவதாக சஞ்சு கூறிய செய்தி அவளுக்கு தான் எண்ணியது நடந்துவிட்டது என்ற திருப்தியை அளித்தது.... அடுத்து அவனது திருமணம் பற்றி சஞ்சுவிடம் கேட்க அவளுக்கு நா எழவில்லை.... அவள் கேட்கவில்லை என்றாலும் சஞ்சு அவன் திருமணத்திற்கு சம்மதித்து விட்டதாகவும் ஒரு வருடத்திற்கு பின் திருமணத்தை வைத்துகொள்ளலாம் என்று அவன் கூற வீட்டு பெரியவர்களும் சரி என்று அவன் விருப்பப்படி நடக்கட்டும் என்று சம்மதித்ததாகவும் கூறினான். இதை கேட்ட சாருவிற்கு சொல்லொண்ணா துக்கம் அவளை சூழ்ந்து கொண்டது…..இதற்கு தானே ஆசைப்பட்டாய் என்று அவளது மனசாட்சி அவளை ரணப்படுத்த பதில் சொல்லமுடியாது அழுகையில் கரையவே அவளால் முடிந்தது…… அந்த வேதனையை ஆற்ற அவளுக்கு உதவியாய் இருந்தது அவளது பிசினசும் கவினயாவுடன் அவள் களிக்கும் பொழுதுகளும்… காலையில் இருந்து தன் கம்பனி விரிவுபடுத்தல் வேளைகளில் மூழ்கி இருப்பவள் வீட்டிற்கு வந்ததவுடன் குழந்தையோடு குழந்தையாக மாறி விடுவாள்…. குழந்தையுடன் விளையாடுவது, ஒவ்வொரு வார்த்தைகளையும் சரியாக பேசக்கற்றுக்கொடுப்பது, காட்டூன் பார்ப்பது, உணவூட்டுவது, தூங்கவைப்பது என்று அவளது நேரத்தை கடத்துவாள்……..
பகலெல்லாம் தன் துயரை மறைக்க முடிந்த அவளால் இரவு படுக்கையில் வீழ்ந்த பின் எழும் அஸ்வினின் நினைவுகளை அவளால் என்றும் தடுக்க முடிந்ததில்லை……. அவளது எண்ணங்கள் முழுதும் அவனை சுற்றியே வட்டமிட அதற்கு அவளது மொபைலில் இருந்த அவனது புகைப்படங்களும் அவனது வாய்ஸ் ரெக்காடிங்கும் தீனியாய் இருக்கும்……அஸ்வினுடன் இரவில் உரையாடுவதை வழமையாய் வைத்திருந்தவள் ஒவ்வொரு இரவும் அவர்கள் உறையாடுவதை போனில் ரெக்கோர்ட் செய்து வைத்திருப்பாள்….. இப்போது அந்த வழமையை மாற்றியவளால் அவனது குரல் கேட்காது உறக்கம் வராது…..
இரவில் அவன் நினைவுகள் ஆக்கிரமிக்கும் போது அந்த வாய்ஸ் ரெக்கோடிங்சை கேட்பதை வழக்கமாக்கிக் கொண்டாள்.. அது அவளை துயில் கொள்ளச்செய்யும் இன்றியமையாத தாலாட்டாக மாறிப்போனது………
சோசியல் மீடியாவில் அவனைப்பற்றி அறிய முயன்ற போது அவன் அவளை அனைத்து கணக்குகளிலும் பிளாக் பண்ணியிருப்பது தெரியவந்நது………
அவள் சிங்கப்பூர் வந்த பின் புதிய நம்பர் மாற்றியதும் சஞ்சுவிற்கு அழைத்து தெரியபடுத்தியவள் புதிய இலக்கத்தை யாரிற்கும் கொடுக்க வேண்டாம் என்று கூறிவிட்டாள்…
இவ்வாறு பன்னிரு மாதங்கள் கடக்க அவளது புதிதாக ஆரம்பிக்கப்பட்ட பிரான்சும் இலாபம் ஈட்ட தொடங்க இதோ தாயகம் திரும்ப புறப்பட்டு விட்டாள் சாரு….
ஏர்போட்டில் போர்டிங் பாஸ் உடைத்துவிட்டு தனக்கு பதியப்பட்டிருந்த விமானத்தில் தனக்கென்று ஒதுக்கப்பட்டிருந்த சீட்டில் சென்று அமர்ந்தாள் சாரு…. என்னதான் சிங்கப்பூரில் இருந்தாலும் அவளது நினைவுகள் எப்போதுமே அஸ்வினை சுற்றியே இருந்தது….ஒவ்வொரு நிமிடமும் அவனை பற்றி எண்ணியே கரைந்தது…..
நாடு திரும்பிய பின் அஸ்வினை சந்திக்க வேண்டு வருமோ என்ற பயம் வந்தாலும் அவன் தன் தந்தையின் கம்பனியை பொறுப்பெடுத்திருப்பதாக சஞ்சு கூறியதால் நிச்சயம் அவன் யூ.எஸ் இல் தான் இருப்பான் என்று உறுதியாக நம்பினாள்…அதை எண்ணி ஒரு புறம் ஆசுவாசப்பட்டாலும் மறுபுறம் அவனை தன் கண்களால் காணமுடியாதே என்ற ஏக்கமும் எழுந்தது…..
தன் எண்ணங்கள் கட்டுக்கடங்காது அஸ்வினை சுற்றியே வலம் வர அதை அடக்கும் வழி தெரியாது தன் ஏன்ட் பார்க்கில் இருந்த ஐபோடில் பாடல் கேட்க எண்ணி ஹெட்செட்டை காதில் பொருத்தினாள்…. அதுவும் சிட்டுவேஷன் சாங் பாடியது…..
சொன்னாலும் கேட்பதில்லை கன்னி மனது

சொன்னாலும் கேட்பதில்லை கன்னி மனது
ஒன்றை மறைத்து வைத்தேன்
சொல்ல தடை விதித்தேன்
நெஞ்சை நம்பி இருந்தேன்
அது வஞ்சம் செய்தது

சொன்னாலும் கேட்பதில்லை கன்னி மனது

கன்னி மனம் பாவம் என்ன செய்ய கூடும்
உன்னை போல அல்ல
உண்மை சொன்னது – நீ

சொன்னாலும் கேட்பதில்லை கன்னி மனது

உனை தவிர எனக்கு விடியலுக்கோர் கிழக்கு
உலகினில் உள்ளதோ உயிரே

சூரிய விளக்கில் சுடர் விடும் கிழக்கு
கிழக்கு-க்கு நீ தன் உயிரே

எல்லாம் தெரிந்திருந்தும்
என்னை புரிந்திருந்தும் சும்மா
இருக்கும் படி சொன்னேன் நூறு முறை

சொன்னாலும் கேட்பதில்லை கன்னி மனது

ஓ நங்கை உந்தன் நெஞ்சம் நான் கொடுத்த லஞ்சம்
வாங்கி கொண்டு இன்று உண்மை சொன்னது

சொன்னாலும்
சொன்னாலும் கேட்பதில்லை கன்னி மனது

விழி சிறையில் பிடித்தாய் விலகுதல் போல் நடித்தாய்
தினம் தினம் துவண்டேன் தளிரே

நதி என நான் நடந்தேன் அணை தடுத்தும் கடந்தேன்
ioகடைசியில் கலந்தேன் கடலே

எல்லாம் தெரிந்திருந்தும்
என்னை புரிந்திருந்தும் சும்மா
இருக்கும் படி சொன்னேன் நூறு முறை

பூ எடுத்து நீரில் பொத்தி வைத்து பாரு
வந்து விடும் மேலே வஞ்சி கொடியே

சொன்னாலும்
சொன்னாலும் கேட்டிராது கன்னி மனது

சொன்னாலும் கேட்பதில்லை கன்னி மனது....

பாடலின் ஒவ்வொரு வரிகளும் அவளது மனநிலையை எடுத்திரைக்க அதில் ஆண் பாடகர் பாடும் வரிகள் அஸ்வின் அவளை கேள்வி கேட்கும் விதமாய் அமைய பாட்டை நிறுத்துவிட்டு கண்மூடி தூங்க முயற்சிக்க அங்கேயும் அவளுக்கு அமைதி கிட்டவில்லை.... இவ்வாறு சுமார் நான்கு மணித்தியாலங்களின் பின் தரையிறங்கியது விமானம்... செக்கின் முடிந்து வெளியே வந்த சாருவை கையசைத்து தன்னை அடையாளம் காட்டினான் சஞ்சு... அவனருகே வந்த சாருவை பயணம் பற்றி விசாரித்துவிட்டு கிளம்புமாறு அவசரப்படுத்தினான் சஞ்சு.....
“டேய் சஞ்சு எதுக்கு இப்படி அவசரப்படுத்திற?? இப்படி அவசரப்படுகின்ற அளவுக்கு எந்த நடந்தது???”
“இதுவரைக்கும் எதுவும் நடக்கலை.... ஆனா இனிமே தான் பல தரமான சிறப்பான சம்பவங்கள் நடைபெறபோகுது...”
“என்ன நேற்று பேட்ட படம் பார்த்தியா??”
“ஈஈஈஈஈஈ...”
“போதும் ரொம்ப இளிக்காம விஷயத்தை சொல்லு.....”
“அதுதான் நீ பார்க்க போறியே.... ஏன் அவசரப்படுற????”
“பில்டப் எல்லாம் ரொம்ப பலமா தான் இருக்கு.... மகனே ஏதாவது மொக்கையா இருந்துச்சி உனக்கு இருக்கு கச்சேரி.....”
“ஹாஹா.... கச்சேரி உனக்கா எனக்கானு இன்னும் கொஞ்ச நேரத்தில் தெரிந்திரும்...”
“என்ன சொல்ற???”
“ஒன்றும் இல்லை.... கொஞ்ச நேரத்திற்கு கேள்வி கேட்காம வா....... அதுவே நீ எனக்கு பண்ணப்போற பெரிய உதவி...”
“சரி பிழைத்து போ” என்று சாரு காரினுள் அமர்ந்து வேடிக்கை பார்க்க தொடங்கினாள்...
கார் அவளது வீட்டை அடைந்ததும் அதிலிருந்து இறங்கிய சாரு வீட்டின் முன்புற அலங்கரிப்புக்களை பார்த்து அதிர்ச்சி அடைந்தாள்.... வீடு ஏதோ விசேஷ வீடு போல் பூக்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.... வாசலிற்கு செல்ல முயன்ற சாருவை தடுத்த சஞ்சு அவளை பின் வாசல் வழியே அழைத்து சென்றான்... தன்னை சுற்றி என்ன நடக்கின்றது என்று புரியாத சாரு சஞ்சு இழுத்த இழுப்பிற்கு அவன் பின்னால் சென்றாள்... அவன் அவளை அழைத்து சென்று நிறுத்திய இடம் அவளது படுக்கையறை..... அங்கு பல பெண்கள் சூழ்ந்திருக்க வாசலில் நின்ற சாருவை ஷெண்பா
“வந்துட்டியாமா சாரு.....நானும் எங்க நேரத்திற்கு வராம இருந்திருவியோனு பயந்திட்டேன்.... சரி போய் சீக்கிரம் குளிச்சிட்டு இந்த புடவையை மாத்திட்டு வா.. பியூட்டிசியன் வெயிட் பண்ணுறாங்க... சீக்கரம்...” என்று சாருவின் கையில் டவலையும் ஒரு சேலையையும் கொடுத்து அவளை ஏதும் கேட்க விடாது பாத்ரூமிற்குள் தள்ளாத குறையாக உள்ளே அனுப்பினார் ஷெண்பா......
என்ன நடக்கிறது ??? என்ன நடக்கப்போகின்றது என்று புரியாத சாரு பாத்ரூமில் யோசித்தவாறு நின்றாள்........
அதன் பின் என்ன?????
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top