மண்ணில் தோன்றிய வைரம் 35

Advertisement

Anu Chandran

Well-Known Member
Tamil Novel Writer
அஸ்வின் சாருவிடம் எழுப்பிய வினாவிற்கு அவளிடம் பதில் இல்லை. காரணம் ஷெண்பா சாருவிடம் நடந்து கொண்ட முறை.....
விடுமுறைக்கு வீட்டிற்கு வரும் சாருவை நன்றாக கவனித்துக்கொள்வார் ஷெண்பா. வேளா வேளைக்கு அவளது அறைக்கே உணவினை அனுப்பிவைப்பார்.... அவர் அவளிடம் நலம் விசாரிக்கும் போது அவளது பதில் ஒற்றை வார்த்தையில் முடிந்துவிடும்..... அவள் ஒதுங்கி சென்றாலும் அவர் அவளை ஒதுக்கி வைக்காது பார்த்து கவனித்துக்கொள்வார்...
“என்ன ஜிலேபி சைலண்ட் ஆகிட்ட??? நான் கேட்டதுக்கு பதில் சொல்லு உன்னோட ஷெண்பா சித்தி கெட்டவங்க இல்லைதானே???”
“இல்லை தான் பேபி... ஆனாலும் அவங்களை நல்லவங்க காட்டகரிக்குள்ள சேர்க்க மனது ஒப்புக்கொள்ள மாட்டேன்குது...”
“ சரி நீ இந்த கேள்விக்கு பதில் சொல்லு??? அவங்களை எதனால உனக்கு பிடிக்கலை?? உன்னோட அம்மா ஸ்தானத்திற்கு அவங்க வந்தது தப்பென்று நினைக்கிறியா??”
“இல்லை பேபி அப்படி எனக்கு எப்பவும் தோன்றியதில்லை... சொல்லப்போனா அப்பா செகண்ட் மேரஜ் பண்ணது கூட எனக்கு தப்பென்று தோன்றவில்லை.... ஆனா அன்று அப்பாவோட அம்மாவும் அவங்களும் பேசிக்கிட்டது தான் நான் அவங்களை வெறுக்க காரணம்...”
“சரி நீ என்ன நினைக்கிறனு எனக்கு புரியிது ஜிலேபி.... ஆனா நீ ஒரு விஷயத்தை கவனிக்காமல் விட்டுட்ட... அன்று உன்னோட பாட்டி சொன்னதை உன்னோட சித்தி கேட்டாங்கனு சொன்னியே..... அதை என்றாவது அவங்க செயலில் காட்டியிருக்காங்களா?? உன்னோட விஷயத்தில் எதிலாவது அவங்க தலையிட்டிருக்காங்களா??? அங்க உன் பாட்டி சொல்வதை கேட்டு இருந்தாங்கனா மாமா இறந்த பிறகு கம்பனி உன் பேருக்கு வந்ததை எதிர்த்த உறவினர்களை ஏன் தடுத்தாங்க??? நீ ஏன் இந்த ஆங்கிலில் இருந்து யோசிக்க மாட்டேன்ற??” என்ற அஸ்வினின் வினா சாருவிற்கு தன் தவறை சுட்டிக்காட்டியது... ஆம் அப்போதுதான் தன் சித்தியின் நற்குணத்தை புரிந்துகொண்டாள். என்னதான் தான் முகம் கொடுத்து பேசாவிட்டாலும் விடுமுறை நாட்களுக்கு வீட்டிற்கு வரும் தன்னை அவர் முகம் சுழிக்காது சீராட்டியது, தன் தேவைகளை பார்த்து பார்த்து நிறைவேற்றியது என்று அவர் செயல்கள் ஒவ்வொன்றும் தன் மீதான அன்பை மட்டுமே வெளிக்காட்டியது.... ஆனால் அந்நேரம் அறியாமையால் அவரை புறக்கணித்தது இப்போது மிக வேதனையை தந்தது... அதைவிட வேதனையூட்டிய விடயம் அவர் தன் தந்தையுடன் வாழ்ந்தது குறுகிய காலம் என்பதே. ஒரு பெண்ணான சாருவிற்கு அவரின் வேதனையை இப்போது புரிந்து கொள்ளமுடிந்தது....பின் ஒரு முடிவெடுத்தவளாக அஸ்வினிடம்
“தாங்ஸ் ரௌடி பேபி...... இவ்வளவு நாளா ஒரு நல்லவங்களை பற்றி தப்பா நினைத்திருந்தேன்.... நீ தான் அதை தப்புனு எனக்கு புரியவச்ச.. இல்லைனா நான் வாழ்நாள் முழுவதும் அவங்க அன்பை புரிந்து கொள்ளாமலே இருந்திருப்பேன். லவ் யூ டா ரௌடி பேபி..” என்று அவனது கன்னம் திருப்பி சாரு தன் செவ்விதழால் ஒரு முத்தமொன்றை பரிசளிக்க அஸ்வினோ தேனுண்ட வண்டானான்.
“ ஏன் ஜிலேபி தப்பான டைமில் இப்படி தாறுமாறா கிப்ட் குடுக்குற???” என்று ஒரு மார்க்கமாய் அஸ்வின் சாருவை நோக்க சாருவோ அதை கவனிக்காது
“ இன்னும் நிறைய கிப்ட் குடுப்பேன் என்னோட ரௌடி பேபிக்கு..... அவன் தான் என்னோட தப்பை புரிய வைத்தான்..... எனக்கென்று உறவுகள் இருக்குனு புரியவைத்தான்..... நான் சித்தியை இந்த சண்டே பார்த்து அவங்களை கையோட கூட்டிட்டு வரலாம்னு இருக்கேன்.. இப்போ தம்பியும் வளர்ந்திருப்பான்... ரெண்டு பேரையும் இனி என்கூடாவே என்னோட வீட்டுலயே வைத்து பார்த்துக்கொள்வேன்... இந்த டைம் மெடிக்கல் காம்பையும் சித்தி தான் ஓபன் பண்ணுவாங்க... அம்மா மாதிரி யாரும் தவறான உணவு பழக்கத்தால் இறந்துவிட கூடாதுனு தான் இந்த மெடிக்கல் கேம்பும் மெடிக்கல் செஷன்சும் இயர்லி கான்டக்ட் பண்ணுறேன். அதை இந்த முறை சித்தியே ஓபன் பண்ணட்டும்.. அது தான் நான் அவங்களுக்கு செய்ற மரியாதை ...”என்று சாரு தன்பாட்டில் பேசியபடி இருக்க அஸ்வினிடம் இருந்து எந்த பிரதிபலிப்பும் இல்லையே என்று சாரு அவனை திரும்பி பார்க்க அவனோ மன்மத அம்பை தன் கண்களில் ஏந்தி அவளை தாக்குவதற்கு தயாரான நிலையில் இருந்தான்....
அவனது பார்வை சாருவினுள் ஏதோ ஒரு புது உணர்வை கிளப்ப அவளோ பேச மடந்தையாகினாள்... அவனது பார்வை அவளிடத்தில் வெட்கத்தை உண்டு பண்ண அவள் அதை மறைக்கும் பொருட்டு தலை குனிந்தாள். அவளது வெட்கத்தால் அந்த இருட்டிலும் சிவந்து ஜொலிக்கும் அவளது வதனம் அஸ்வினை இன்னும் பித்தனாக்கியது... தன் கரத்தால் அவளது கரம் பற்றிய அஸ்வின் அவளது புறங்கையில் இதழொற்றினான்.. அதில் கூச்சமடைந்த சாரு தன் தலையை மறுபக்கம் திருப்ப அஸ்வினோ அவளது தாடையை பற்றி அவன் புறம் திருப்பினான். வெட்கத்தால் சிவந்து ஜொலித்த அவளது வதனம் வானில் காய்ந்து கொண்டிருந்த நிலவிவுடன் போட்டியிட்டது.. அலைகள் போல் ஆர்பரித்த அவளது உணர்வுகளை அடக்கும் வழி தெரியாது அவள் தன் சிவந்த அதரங்களை கடிக்க மீனின் வாயில் மாட்டிய தூண்டில் போல் அவளது பற்களுக்கிடையில் சிறைபட்டிருந்த அந்த தக்காளிப்பழ செவ்விதழ்களை தன் கைகளால் விடுவித்தான் அஸ்வின்.
அதில் இன்னும் வெட்கம் வரப்பெற்ற சாரு “அஸ்வின்” என்று முனங்க
“ரௌடி பேபி சொல்லு ஜிலேபி” என்றவாறு அவள் முகத்தினை அஸ்வின் கையிலேந்தி அவளது கண்களை நேருக்கு நேர் நோக்க அவளும் உயிரை ஊடுருவிச்செல்லும் அவன் பார்வை வீச்சை தாங்கி நின்றாள்... ஓரிடத்தில் நிற்காது அங்குமிங்கும் அலைப்பாயும் அவளது கருமணிகள் இரண்டும் அவனது விம்பத்தை திரையிட அந்த நிலவொளியில் அதை கண்ட அஸ்வினிற்கு அவளது இதயத்தில் தன் இருப்பிடத்தை தெரிந்துகொண்டாதான ஒரு உணர்வு.....
அவனிடம் எதையோ எதிர்பார்த்து ஏங்கி நிற்பது போல் அடிக்கடி மூடித்திறந்த அவளது இமைகள் அவனது மையலை இன்னும் அதிகரித்தது....
அவன் அவளது முகம் நோக்கி குனிய அவளோ தன் எதிர்ப்பார்த்தது தான் என்றாலும் பெண்களுக்கே உரிய நாணம் அவளை தன் கண்களை மூட வைக்க அவளது முகம் நோக்கி குனிந்த அஸ்வின் நிலையில்லாது ஓடிக்கொண்டிருந்த அவளது மூடிய விழிகள் இரண்டின் மீதும் இதழ் பதித்தவன் பின் அவள் காதோரம் இருந்த கூந்தல் கற்றையை ஒதுக்கிவிட்டவன் அவள் கன்னத்தோடு கன்னம் வைத்து
“ நிலவு கூட உன்
கன்னக்கதப்பை
பார்த்து
பொறாமைப்படுகின்றது...
என்றும்
என் தனிமைக்கு
துணை நிற்கும் அதற்கு
ஒரு வரி கவிதையேனும்
இயற்ற முன்வராத என் நா
இன்று
உன் கன்னச்சிவப்பு
கண்டு மயங்கி
அருவியாய் கவி பாட
முயன்றதை கண்டு..” என்று அவளது காதோரம் கிசுகிசுக்க சாரு தன் வசம் இழந்து அவன் தோளில் சாய்ந்தாள்.... இவர்களது மோனநிலையை கலைக்கவென்று சாருவின் செல் ஒலித்தது..... அதில் அவர்களது மோனநிலை கலைய இருவரும் விலகி அமர்ந்து கொண்டனர்.
போனை ஆன் செய்த சாரு
“டேய் ஏன்டா சிவபூஜையில நுழைந்த ??”என்று அந்தப்புறம் அழைப்பிலிருந்த சஞ்சுவிடம் பாய அவள் கேட்ட தொனியில் அஸ்வின் சிரிக்கத்தொடங்கினான்....
அவனை சாரு முறைக்க அவன் தன் கைகளால் வாயை மூடிக்கொண்டு நிறுத்திய சிரிப்பை மீண்டும் தொடர்ந்தான்..
“ஏன் சாரு கோயில்ல இருக்கியா?? நான் ஏதும் டிஸ்டர்ப் பண்ணிட்டேனா???”
“ஆமா கோயில்ல இருந்து சிவபூஜை பண்ணிட்டு இருந்தேன். நீ கரடி மாதிரி உள்ள நுழைஞ்சி கெடுத்துட்ட...” என்று சாரு கூற சஞ்சய் சிவபூஜை கரடி என்ற வார்த்தைகளிலே புரிந்து கொண்டு “ஹாஹா அதான் மேடத்திற்கு கோபமா??? நட்புனா அதான் மா.... பூஜை நேரத்தில் மட்டும் இல்லை எல்லாவற்றிலும் குழப்பத்தை உண்டு பண்ணுவோம்....” என்றுவிட்டு சஞ்சு சிரிக்க அதில் கடுப்பான சாரு
“இப்படி சிரிக்கத்தான் கால் பண்ணியா??”
“இல்லை ..ஒரு டீல் பற்றி பேசத்தான் கால் பண்ணேன்... ஆனா இப்ப எனக்கு சிரிக்கனும் போல தோனுது...” என்றுவிட்டு மீண்டும் சஞ்சு சிரிக்க சாரு கடுப்பில் அழைப்பை துண்டித்துவிட்டாள்.
பின் அவன் மீதிருந்த கோபத்தை அஸ்வினை அடித்து தீர்த்துக்கொண்டாள்... பின் இருவரும் அங்கிருந்து கிளம்பி சென்றனர்.....
இவ்வாறு அழகாய் சென்றுக்கொண்டிருக்கும் அவர்களது வாழ்விற்கு விதி என்ன செய்ய காத்திருக்கிறது.....???
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top