மண்ணில் தோன்றிய வைரம் 34

Anu Chandran

Well-Known Member
Tamil Novel Writer
#1
ராணி கல்லூரி இறுதியாண்டு படித்துக்கொண்டிருந்தார்.... அன்று கல்லூரி வாசலில் அவருக்காக காத்துக்கொண்டிருந்தார் செல்வம் என்றழைக்கப்படும் செல்வநாயகம்...
கல்லூரி கேட்டை தாண்டி வந்த ராணி செல்வத்தை பார்த்து கையசைக்க அவரும் ராணியை நோக்கி வந்தார். அங்கிருந்து இருவரும் சென்ற இடம் அருகிலிருந்த பூங்காவிற்கு....
செல்வம் பற்றி சொல்வதானால் அவர் கிராமத்தில் பிறந்து வளர்ந்தவர்... படிப்பதற்காக நகரத்திற்கு வந்தவருக்கு அவரது ஜூனியரான ராணியை பார்த்தவுடன் பிடித்து போனது.... அவரிடம் தன் காதலை கூறிய போது ராணி அதனை மறுத்துவிட்டார். ஆனாலும் முயன்று ராணியை தன் காதலுக்கு சம்மதம் சொல்ல வைத்தார்....
ராணி அனாதை இல்லத்தில் வளர்ந்தவர்.. இல்லத்தின் உதவியாலே கல்லூரிப்படிப்பை அவரால் தொடர முடிந்தது. அச்சந்தர்ப்பத்திலேயே செல்வம் தன் காதலை வெளிப்படுத்தினார்.... பல அறிவுரைகள் எச்சரிக்கைகளை புகுத்தி வளர்க்கப்பட்ட ராணிக்கு செல்வத்தின் காதலை ஏற்பதில் பயம். ஆயினும் அவரது ஆழமான காதல் ராணியை ஏற்கவைத்தது.....
இருவரும் பூங்காவில் வழமையாக அமரும் இடத்தில் அமர்ந்ததும் செல்வம் பேச ஆரம்பித்தார்....
“ராணிமா... எங்க வீட்டில் எனக்கு பெண் பார்க்கிறாங்க”
“என்னங்க சொல்லுறீங்க???”
“நான் நம்ம காதலை வீட்டில் சொன்ன பிறகு தான் இந்த ஏற்பாடு”
“என்னங்க..... அப்போ....” என்றவாறு ராணி அழத்தொடங்க
“ஐயோ ராணிமா இப்போ நீ எதுக்கு அழுற?? கண்ணை துடைத்துக்கோ முதலில்.... முதல்ல நான் சொல்ல வருவதை முழுமையாக கேளு..?” என்று செல்வம் கூற ஒப்புக்காக ராணி கண்ணை துடைத்துக்கொண்டாலும் கண்கள் இப்போ அப்போ என்று கண்ணீரை வெளிவிடுவதற்கு தயாராக இருந்தது..
“ம்.. சொல்லுங்க...”
“நாம எங்க வீட்டுக்கு தெரியாம கல்யாணம் பண்ணிக்கலாம் ராணிமா.... இது மட்டும் தான் இப்ப நம்மால் செய்யக்கூடிய ஒன்று... எங்க வீட்டில் முதலில் எதிர்த்தாலும் காலப்போக்கில் நம்மை ஏற்றுக்கொள்வார்கள்”
“வேணாங்க.... திரும்ப நாம பேசிப்பார்க்கலாம்... ஒரு அழகான கூட்டில் இருக்கிற உங்களை என்னோட சுயநலத்திற்காக பிரித்து கூட்டிட்டு போக விரும்பலை.... இப்போ உறவுகள் வேணாம்னு தோனும்.. ஆனா உறவுகளின் அருமை அதுக்காக ஏங்குனவங்களுக்கு தான் தெரியும்... பிளீஸ் ங்க... மறுபடியும் உங்க வீட்டிலே பேசி பார்க்கலாம்....”
“இல்லை ராணிமா எவ்வளவோ பேசிப்பார்த்திட்டேன் அவங்க முடியவே முடியாதுனு சொல்லிட்டாங்க..நம்ம அவங்களுக்கு தெரியாம கல்யாணம் பண்ணிக்கறது தான் நாம சேர்வதற்கு ஒரே வழி” என்று செல்வம் பல காரணங்களும் சமாதானங்களும் சொல்லி ராணியை திருமணத்திற்கு சம்மதிக்க வைத்தார்.
அவர்களது திருமணம் நண்பர்கள் துணையோடு கோயிலில் நடைபெற்றது…
அவர்கள் தம் வாழ்வை ஒரு கூலிவீட்டில் தொடங்கினர். செல்வம் ஒரு கம்பனியில் அப்போது எக்சிகியூட்டிவ்வாக கடமையாற்றிக்கொண்டிருந்தார்… ராணியும் அவருக்கு உதவும் முகமாக செல்வம் தடுத்தும் வேலைக்கு சென்றார்.. இருவரது உழைப்பும் பணப்புழக்கத்தை அதிகப்படுத்தியது… தன்னை ஒதுக்கிய பெற்றோர் முன் தன் மனைவியுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து காட்ட வேண்டும் என்ற வெறி செல்லத்தினுள் இருந்ததால் தன் நெடுநாள் கனவான கண்ஸ்ரக்ஷன் கம்பனியை தமது சேமிப்பு பணத்தையும் வங்கியிலிருந்து பெற்ற கடன் தொகையையும் மூலதனமாக இட்டு தொடங்கினார்… ஆரம்பித்த புதிதில் சில சறுக்கல்கள் இருந்தாலும் தன் விடா முயற்சியினாலும் அவரது பால்ய சிநேகிதன் ராமின் துணையினாலும் தொழிலில் காலூன்றினார்…. அந்த சமயத்திலேயே அவர்களுக்கு சாரு பிறந்தாள்…. அவள் பிறந்த நேரம் அவரது தொழில் அசுர வளர்ச்சியடையத் தொடங்கியது… தொழில் தொழில் என்று தன் முழு நேரத்தையும் அதில் செலவிட்டவர் தன் குடும்பத்துடனான நேரத்தை குறைத்துக்கொண்டார்…. அவரது வேலைப்பலு அறிந்த ராணி அதை கண்டுகொள்ளாதவாறு வெளியில் காட்டிக்கொண்டாலும் மனமோ செல்வத்துடன் நேரம் செலவழிக்கவே ஏங்கியது…. ஆனால் அந்த ஏக்கத்தை போக்கவென்றே அவருக்கு துணையாய் இருந்தாள் சாரு….. அவளுக்கு எதுவென்றாலும் அம்மா துணை வேண்டும்…. காலை எழும்பியதிலிருந்து அம்மா அம்மா என்று ராணியின் முந்தானையை பிடித்துக்கொண்டே சுற்றுவாள். அவளது அம்மாவே அவளின் உலகம்…. அவளுக்கு அனைத்தையும் கற்றுக்கொடுத்தார் ராணி…….அவளுக்கு தைரியத்தை புகட்டுவதற்காக அவளை ஸ்போட்சில் ஈடுபடுத்தினார்….. தற்காப்பிற்கு கராத்தே பயில வழி செய்தார்…. அவை மட்டும் போதாதென்று பாட்டு டான்ஸ் என்று அனைத்தையும் பயிற்று வித்தார்… அவள் உடல்ரீதியாக மட்டுமே பெண் …... மனரீதியாக ஒரு ஆணிற்கு நிகரான ஆளுமையுடன் வளர்க்கப்பட்டாள்.
அது பிற்காலத்தில் சாருவிற்கு பெரிதும் உதவியது….. சிறு வயதிலேயே புத்திசாலியாக திகழ்ந்தாள்…. பள்ளியில் கல்வி, விளையாட்டு என்று அனைத்திலும் அவளே முதலிடம்…. இப்படி இவர்களது நாட்கள் அழகாக சென்று கொண்டிருக்க அக்குடும்பத்தின் மகிழ்ச்சியை கெடுப்பதற்கென்றே நிகழ்ந்தது ராணியின் மரணம்……அவரது மரணத்தின் பின் சாரு தனிமைபடுத்தப்பட்டாள்…… அம்மா என்று ஒருவரை மட்டும்கொண்ட அவளது உலகம் இப்பொழுது யாருமில்லாது இருண்டிருந்தது… தந்தை என்றொருவர் இருந்தாலும் அவரை இதுவரை எதற்கு நாடியதில்லை…. அதாவது அவர் நாடுவதற்கு சந்தர்ப்பம் வழங்கவில்லை…… ஆனால் இனிமேல் தன் துணை அவருக்கு தேவை என்றுணர்ந்த சாரு அவருக்கு தன்னால் ஆன அனைத்தையும் செய்து கொடுத்தாள்…. அவளது அம்மா இறக்கும் போது அவள் பிளஸ் டூ படித்துக்கொண்டிருந்தாள்……
இந்த நேரத்திலேயே செல்வத்தின் குடும்பத்தினர் புது குழப்பத்தை உண்டு பண்ணினர்……
அன்று சாரு பாடசாலை முடிந்து வீடு திரும்பும் போது அவளது வீடு அலங்கரிக்கப்பட்டு வீட்டில் விருந்தினர்கள் நிரம்பி வழிந்தனர்… வீட்டின் இந்த மாற்றத்திற்கு காரணம் அறியாத சாருவோ தன் தந்தையை தேடிச்சென்றாள்….
அவள் செல்லும் வழியில் அவளது அன்னையின் பெயர் அடிபட அந்த இடத்திலேயே நின்று அவர்கள் பேசுவதை கேட்கத்தொடங்கினாள்…
“இங்க பாரு ஷெண்பா… நீ இனி புத்தியா பிழைச்சுக்கனும்… செல்வம் நல்ல பையன் தான். ஆனா அந்த அனாதை சிறுக்கி ராணி ஏதோ மாயம் பண்ணி அவனை எங்ககிட்ட இருந்து பிரிச்சிட்டா….. இப்போ அவ போனதால எங்க பையன் எங்களுக்கு திருப்பி கிடைச்சிட்டான்…ஆனா அவளோட ரத்தமா அவ மக இருக்கா…. அவளும் அந்த ராணி மாதிரியே தான்… ராங்கி பிடிச்சவள்….. நீ தான் அவளை அடக்கி உன் கட்டுக்குள் வச்சிருக்கனும்…. அதுக்கு நீ செல்வத்தை உன் கைக்குள் போட்டுக்கொள்ளனும்…… இதெல்லாம் நீ சரிவர செய்யலைனா செல்வம் பய சொத்துபத்து எல்லாத்தையும் அந்த அனாதை பெத்த மகளுக்கே எழுதி வச்சிருவான்…. அவளை காரணம் காட்டி தான் இந்த கல்யாணத்தையே நடத்துனோம். அதனால இனிமே நீ புத்தியா பிழைச்சா தான் உன்னோட வாரிசுக்கு ஏதாவது சொத்து சுகத்தை சேர்க்க முடியும்… நான் சொல்வது உனக்கு புரிந்திருக்கும்னு நினைக்கிறேன்….. .” என்று செல்வத்தின் அம்மா தன் புது மருமகள் ஷெண்பாவிடம் கூறிக்கொண்டிருந்தாள்….. அதை கேட்டுக்கொண்டிருந்த சாருவிற்கோ ஆத்திரம் அழுகை என்று அனைத்தும் ஒரு சேர வந்தது….. அவளது அறைக்கு வந்தவள் அழுது தீர்த்தாள். பின் ஒரு முடிவு எடுத்தவளாக தன் தந்தையிடம் சென்று தான் ஆஸ்டலில் தங்கி படிக்கப்போவதாக கூறினாள்….. செல்வமும் சரி என்றுவிட அவளின் ஆஸ்டல் வாசம் ஆரம்பமானது…… விடுமுறைக்கு வீட்டிற்கு வருபவள் தான் உண்டு தன் வேலை உண்டு என்று இருப்பாள்….. என்ன தான் ஷெண்பா அவளுடன் நல்ல உறவை ஏற்படுத்திக்கொள்ள முனைந்தாலும் சாரு அதனை ஏற்க முனையவில்லை……. காரணம் அன்று சொல்வத்தின் தாயார் பேசிய பேச்சு….. ஆனால் சாருவிற்கு தெரியாத ஒன்று ஷெண்பா அவரது அறிவுரைகளை காதால் கேட்டாரே ஒழிய அதை செயற்படுத்த முனையவில்லை…….
இவ்வாறு சென்று கொண்டிருக்க ஷெண்பா மற்றும் செல்வத்திற்கு ஒரு ஆண் குழந்தை பிறந்தது… அதற்கு ரதன் என்று பெயர் சூட்டினர்….. சாரு இரண்டாம் வருடம் படித்துக்கொண்டிருக்கும் போது செல்வம் இறந்து போனார்…. அவரது உயில் கம்பனியும் ஒரு வீடும் சாருவிற்கென்றும் ஏனைய சொத்துக்கள் அனைத்தும் ஷெண்பா மற்றும் அவரது மகன் ரதனிற்கும் என்றும் அறிவித்தது. ஆனால் அவரது உறவினர்கள் சாருவின் பெயரில் இருந்த சொத்துக்களையும் ஷெண்பாவின் பெயரிற்கு மாற்றுமாறு சாருவிடம் கூற அதனை ஷெண்பா தடுத்துவிட்டார்…. அதுவே சாரு ஷெண்பா மற்றும் ரதனை பார்த்த கடைசி நாள்…… பின் அவளது வாழ்க்கை சக்கரம் சுமூகமாக ஓடிக்கொண்டிருக்கிறது…

என்று சாரு தன் கதையையினை முடிக்க அஸ்வின்
“ஏன் ஜிலேபி நீ அதற்கு பிறகு உன் சித்தியை பார்க்கவே இல்லையா??”
“இல்லை அஸ்வின் அவங்க அதற்கு பிறகு ரதனோடு அவங்க ஊருக்கு போய்ட்டாங்க…. நானும் அவங்களை பற்றி தெரிந்துகொள்ள ஆசைப்படவும் இல்லை…”
“ஓ… ஆனா நான் ஒன்று கேட்பேன் நீ தப்பா எடுத்துக்க கூடாது…”
“இல்லை சொல்லு…”
“உன்னோட சித்தி தப்பானவங்கனு உனக்கு தோனுதா????”
“ஏன் அப்படி கேட்குற??”
“நீ சொல்வதை கேட்டப்போ அவங்க கெட்டவங்க இல்லைனு தோனுது???? நீ என்ன நினைக்கிற ஜிலேபி???” என்று அஸ்வின் கேட்க சாருவிடம் பதிலில்லை….
 

New Episodes