மண்ணின் காரிகையவளோ 2

Advertisement

அத்தியாயம் 2

அந்த பெண்மணியின் கண்களில் தெரிந்த நேசத்தைப் பார்த்தவனுக்கு தன்னையும் இவ்வாறு நேசிக்கும் மனைவி வேண்டும் என்ற ஆசை தோன்ற வழக்கம் போல் மனதில் தோன்றிய யாரென்று அறியாத அந்த பெண்ணை வரைய ஆரம்பித்தான் ஸ்ரீதரன்...

அவன் வரைந்துக் கொண்டிருக்கும் போதே கதவைத் தட்டிவிட்டு உள்ளே வந்த நர்ஸ் " டாக்டர் ஒரு எமர்ஜென்சி கேஸ்... " என்று பதற்றத்துடன் தெரிவித்தார்...

தான் வரைந்துக் கொண்டிருந்ததை ஓரமாக வைத்த ஸ்ரீதரன் உடனடியாக எமர்ஜென்சி வார்டிற்கு சென்று நோயாளியைப் பார்த்தவன் " நர்ஸ் ஆபரேசனுக்கு ரெடி பண்ணுங்க... சீக்கிரம்... " என்று கட்டளைப் பிறப்பித்துவிட்டு அவரைச் சோதிக்க ஆரம்பித்தான்....

***************

யோசனையாய் அமர்ந்துக் கொண்டிருக்கும் கணவரை வெகுநேரமாய் கவனித்த நாச்சியார் "ஏனுங்க ரொம்ப நேரமா யோசனையாவே இருக்கீங்க.... " என்று வினவ அதில் சிந்தைக் கலைந்து தன் மனைவியை நோக்கினார் சுந்தரபாண்டியன்...

"அது வந்து.... ஒன்னுமில்லமா... " என்றவர் மீண்டும் யோசனையில் ஆழ்ந்து விட

" உங்களுக்குள்ளே வைச்சுக்கிட்டு ஏனுங்க விசனப்படுறீங்க... என்றகூட சொல்லக்கூடாத விசயமா... அப்படினா சொல்ல வேண்டாமுங்க.... " என்று அப்பாவியாய் கூறிய நாச்சியாரைப் பார்த்து வழக்கம் போலவே வியந்தார் சுந்தரபாண்டியன்....

"சொல்லக் கூடாதுனுலாம் இல்ல நாச்சியா... நம்ம மாறனுக்கு ஒரு வரன் வந்துருக்கு.... ஜோசியர் வந்து கொடுத்துட்டு போனாரு... நல்ல குடும்பம் பொண்ணும் நல்லா தங்கமான பொண்ணுனு சொன்னாரு... ரெண்டு பேத்துக்கும் நல்லப் பொருத்தம்... " என்று தயங்கிக் கொண்டே கூறிய கணவரை ஆச்சரியமாகப் பார்த்தார் நாச்சியார்...

"ஏனுங்க நல்ல விஷயம் தான இதுக்கு ஏன் இம்புட்டு யோசன.... "

"நல்ல விஷயம் தான் நாச்சியா... ஆனா மாறனுக்கு மூத்தவன் விஷ்வேஷ்வரன்... அவனுக்கு கல்யாணம் பண்ணாம எப்படிமா இவனுக்கு பண்ண முடியும்... நம்ம சவியும் இன்னும் காலேசு முடிக்கல... அதுவும் இல்லாம அவுங்க ரெண்டு பேத்து மனசுல என்ன இருக்குனும் தெரியாதே நாச்சியா... " பெருமூச்சுடன் கூறினார் சுந்தரபாண்டியன்....

"ஏனுங்க சவி நம்ம விஷ்வாக்கு தானு நம்ம அவ பொறந்த அப்பவே முடிவு பண்ணியாச்சு.... அந்த குட்டிக் கழுதையும் நம்ம சொன்னா கூட கேக்க மாட்டா ஆனா அவன் சொன்னா தட்டாம கேக்குறா... மாமா மாமானு அவனையே வால் புடிச்சுட்டு சுத்துறா... அவனும் தான் யாராவது ஒருத்தர்கிட்ட ஒருநிமிசத்துக்கு மேல பேசிக் கேட்டுறுக்கோமா... ஆனா சவிகிட்ட மணிக்கணக்கா கூட பேசுறான்... " என்று நாச்சியார் விலாவரியாக எடுத்துரைக்க திருதிருவென விழித்தார் சுந்தரபாண்டியன்...

"எல்லாம் சரி நாச்சியா இதெல்லாம் தெரிஞ்ச விஷயம் தான இப்போ ஏன் சொல்லுற.... " என்று வினவியக் கணவரைக் கண்டு தலையிலடித்துக் கொண்டார் நாச்சியார்...

"இக்கும்.... நீர்லாம் என்னத்த இத்தன வருஷம் பஞ்சாயத்த பண்ணீலோ... உங்களுக்கு இன்னும் புரிலயா... இரண்டு பேரும் ஒருத்தர ஒருத்தர் விரும்புறாங்க... " ரகசியம் போல் நாச்சியார் மெதுவாய் கூற

"அட... அவிங்க இரண்டு பேரும் விரும்புனா ஏன் இன்னும் நம்மகிட்ட சொல்லாம இருக்காங்க... வரட்டும் அந்த படவா இன்னைக்கு அவனுக்கு இருக்கு... " தோளில் துண்டை கோவமாக உதறி போட்டக் கணவரை முறைத்த நாச்சியா

"ஏனுங்க உங்களுக்கு காலம் போனக் கடைசில மூளை மங்கி போச்சா என்ன... "

"அடியே யாருக்கு காலம் போன கடைசிலனு சொல்லுற... இன்னமும் ஜல்லிக்கட்டுல இறங்குனா பத்துக் காளைய அசராம அடக்குவேன்டி... " ஆவேசமாய் கூறிய கணவரைக் கண்டு முகத்தை வெட்டினார் நாச்சியார்...

"ஆமா ஆமா இப்போ தான் உமக்கு இளமை திரும்புதுனு நினைப்பாக்கும்... இரண்டு பேரும் சின்னஞ்சிறுசுக எப்படி வெளிப்படையா நம்மகிட்ட சொல்லுவாங்க.... சவி சின்னப்பொண்ணு... விஷ்வா தோளுக்கு மேல வளர்ந்த பையன் அவன் எப்புடி நம்மகிட்ட வந்து சொல்லுவான்... அவனுக்கு சங்கடமா இருக்காதா... " என்று அவர் விளக்கியதும் பேரன் பேத்தியின் மனநிலை புரிந்தது... இருந்தாலும் மனைவியின் முன் சுந்தரபாண்டியன் விரைப்பாக இருக்க

"என்ன வயசானவரே உமக்கு புரிஞ்சுதா இல்லயா... "

"அடிக் கழுதை உன்ன... " என்று சுந்தரபாண்டியன் எழ அதற்குள் சிரித்துக் கொண்டே சமையலறைக்குள் புகுந்து கொண்டார் நாச்சியார்...

மனைவி கூறியதில் மனதில் இருந்த குழப்பம் தீர்ந்து விட திருவிழா முடிந்ததும் இரு ஜோடிகளுக்கும் திருமணம் முடிவு செய்து விடலாம் என்று முடிவெடுத்தவர் மனைவியிடமும் மகன் மருமகளிடமும் தெரிவிக்க அனைவரும் சந்தோஷத்துடன் சம்மதித்தனர் ...

"இப்போதைக்கு சின்னவங்ககிட்ட சொல்ல வேண்டாம்... நம்ம ஜோசியர்கிட்ட நல்ல நாள் நேரம் கேட்டுப்போட்டு சொல்லிக்கலாம்..." என்று சுந்தரபாண்டியன் கூற அனைவருக்கும் அதுவே சரியாகப்பட்டது...

"ஆமாங்க அதுவும் சரிதான்... அந்த குட்டிக் கழுத வேற தாம்தூம்னு குதிப்பா... யாரக் கேட்டு முடிவு பண்ணீங்க எனக்கு இன்னும் கல்யாண வயசு வரலனு..." என்று நாச்சியா வசவுப் பாட தனது பேத்தியை குறை கூறிய நாச்சியாவை முறைத்தார் சுந்தரபாண்டியன்....

"என்ற பேத்திய ஏதாவது சொல்லலனா உனக்குப் பொழுது போகாதே...." என்றதும் தாடையில் முகத்தை இடித்து திருப்பிக் கொண்டார் நாச்சியார்...

"ஆமா எனக்கு பொழுது போகலனு நீர் பாத்தீரோ... முந்தா நேத்து அசலூர்ல நல்ல வரன் வந்துருக்குனு ஜோசியர் வந்தாரு அதுக்குப் போய் அந்தக் குதி குதி குதிச்சு இனி இங்க ஜாதகத்தோட வந்தீங்க கைய வெட்டிருவேனு மிரட்டி அனுப்பிருக்கா... ஆனாலும் இம்புட்டு கொலுப்பு ஆகாது அவளுக்கு.... புடிக்கலனா பதமா சொன்னா என்ன அவளுக்கு.... எல்லாம் நீங்களும் அந்த விஷ்வா பயலும் குடுக்கறச் செல்லம்... மூன்னு அண்ணங்காரனுங்க இருக்கானுங்கனு தான் பேரு ஒருத்தனாவது கண்டிக்கிறானா அவள... " நாச்சியா கவலையாகக் கூற சிரித்தார் சுந்தரபாண்டியன்...

"என்ற பேத்தி தைரியத்தப் பாராட்டாம எதுக்குப் புள்ள திட்டுற... இந்த ஊருலயே அவள மாதிரி தைரியமா ஒத்த புள்ளய காட்டுப் பாக்கலாம்.... "

"ஆமா ஆமா உங்க பேத்தி தைரியத்த நீர் தான் மெச்சிக்கனும்... " என்று வாய் கூறினாலும் பேத்தியின் தைரியத்திலும் துணிச்சலிலும் எப்பொழுதுமே நாச்சியாருக்கு ஓர் பெருமை உண்டு....

வீட்டிற்குள் நுழைந்த சவி அனைவரும் ஒன்றாக பேசிக் கொண்டிருப்பதைப் பார்த்து " என்ன நம்ம இல்லாம ஒரு மீட்டிங் போட்டுறுக்காங்க... என்னனு பாப்போம்.... " என்று நினைத்தவள்

"என்ன என்னை விட்டுட்டு எல்லாரும் பேசிட்டு இருக்கீங்க .... அப்பாரு நீங்களுமா... " என்று வினவியபடி தனது அப்பாரின் அருகில் அமர்ந்தாள் சாம்பவி...

"அது ஒன்னும் இல்ல கண்ணு சும்மா பேசிட்டு இருந்தோம்... சரி பாப்பா அப்பாரு பேச்ச கேப்பீங்க தான... " மென்மையாக வினவினார் சுந்தரபாண்டியன்...

"என்ன அப்பாரு இப்படிலாம் கேட்டுப்புட்டு இருக்கீங்க... நீங்க இத செய் சவினு சொன்னா செய்யப் போறேன்..." என்றவளின் பதிலில் அனைவருக்கும் மனம் திருப்தியாகவும் நிம்மதியாகவும் இருந்தது....

*****************

வயலில் வேலை முடித்து மதிய உணவிற்காக வீட்டிற்கு வந்தான் விஷ்வேஷ்வரன்... முகம் கைகால் அலம்பிவிட்டு உள்ளே வந்த மகனை கண்ட அன்புச்செல்வி

"வாப்பா நானே உன்னய வரச்சொல்லலாம்னு இருந்தேனாக்கும்... " என்று கூறிய அன்னையை ஆச்சரியமாகப் பார்த்த விஷ்வா

"என்னங்கம்மா அப்படி என்ன தலைப்போற விசயம்... "

"இப்போ தான் எங்கய்யா கூப்பிட்டாரு விஷ்வா... திருவிழா முடிஞ்சதும் உனக்கும் சவிக்கும் கல்யாணம் பேசலாம்னு சொன்னாருப்பா.... " அகமகிழ்ந்து அன்னை கூற விஷ்வாவிற்கோ இன்ப அதிர்ச்சியாக இருந்தது...

"அம்மா சாம்பவி சரினு சொல்லிட்டாளாமா... " எனினும் மனதின் ஓரத்தில் அழுத்திக் கொண்டிருக்கும் கேள்வியை அன்னையிடம் வினவினான்...

"அவ என்ற மருமவ விஷ்வா... அவ பொறந்தப்பவே முடிவு பண்ணது இதெல்லாம்.... "

"மா எதுக்கும் சாம்பவிகிட்ட ஒரு வார்த்தை கேட்டுட்டு எதுவா இருந்தாலும் முடிவு பண்ணுங்க.... எக்காரணம் கொண்டும் அவள நீங்க யாரும் கட்டாயப்படுத்தக் கூடாது...அப்படி ஏதாதுனு தெரிஞ்சிச்சு நடக்குறதே வேற... " அழுத்தமாய் உரைத்தவன் உள்ளே சென்று விட சவிக்கும் விஷ்வாவைப் பிடிக்கும் தானே என்ற எண்ணத்தில் அவன் பேச்சை அன்புச்செல்வி பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை...

******************

மருத்துவமனையில் வேலை முடித்து சோர்வுடன் உள்ளே வந்த ஸ்ரீதரன் ஹாலில் அமர்ந்திருந்த அன்னையின் மடியில் படுத்துக் கொண்டு கண்களை மூட மகனின் தலையை மெதுவாக நீவினார் பத்மா...

"என்ன கண்ணா இன்னைக்கு கஷ்டமான வேலையாப்பா...."

"ஆமாம்மா மினிஸ்டர் அனந்தராஜை யாரோ சூட் பண்ணிட்டாங்க... கரெக்ட்டா ஹார்ட்லயே புல்லட் ஏறிருச்சு... ரொம்ப கிரிட்கல்லான சிச்சுவேஷன்மா... சாரோட வைஃப் வேற ரொம்ப துடிச்சு போயிட்டாங்க.... ஆனா அவங்க கண்ணுலயே சார் மேல அவங்க எந்த அளவுக்கு பாசம் வைச்சுருக்காங்கனு தெரிஞ்சுதும்மா... உண்மைலயே சார் ரொம்ப லக்கி... நம்மள உண்மையா எந்த எதிர்பார்ப்பும் இல்லாம நேசிக்கிற லைஃப் பார்ட்னர் கிடைக்குறதுலாம் அதிர்ஷ்டம்மா..... " மனதிலிருப்பதை அன்னையிடம் ஸ்ரீதரன் கூற மகனை குறும்பாய் நோக்கினார் பத்மா....

"கவலைப்படாதீங்க டாக்டர் சார்... உங்களுக்கும் அளவில்லாம உங்கள நேசிக்குற மாதிரி ஒரு பொண்ண கண்டுபிடிச்சு உங்களுக்குக் கட்டி வைச்சுறேன்.... " அன்னை கூறியதும் ஸ்ரீதரனின் மனதில் தன்னால் அந்த பெண்ணின் முகம் தோன்ற அவனின் முகமோ நாணத்தில் ஜொலித்தது....

சட்டென்று அன்னை மடியிலிருந்து எழுந்தவன் " மா நான் போய் ரெப்ரஷ் ஆகுறேன்.... " என்றவன் நிற்காமல் மேலே ஓடிவிட மகனின் வெக்கத்தை கண்டுக் கொண்ட பத்மா சிரித்தார்...

குளித்து உடைமாற்றிவிட்டு வந்த ஸ்ரீதரன் பாதி வரைந்து வைத்திருந்த ஓவியத்தை முழுதாக வரைந்து முடித்தவன் " ஹே அழகி எங்க இருக்க நீ... உனக்காக இங்க ஒரு இதயம் உன்னையே நினைச்சு துடிச்சுட்டு இருக்குனு தெரியுமா உனக்கு.... " தனக்குள்ளே கேட்டுக் கொண்டவன் கண்ணாடியில் தன் நிலையைப் பார்த்து சிரித்தான்....

"ஒரு டாக்டர இப்படி பொலம்ப விட்டுட்டியே அழகி... நீ யாரு உன் பேரு என்ன எந்த ஊரு எதுவும் தெரியாது... ஆனாலும் எனக்கு என் காதல் மேல நம்பிக்கை இருக்கு... அது கண்டிப்பா உன்கிட்ட என்ன கொண்டு வந்து சேர்க்கும்... " முழுமனதுடன் தன் காதலின் மேல் நம்பிக்கை வைத்தான் ஸ்ரீதரன்....

(அய்யா - கோவை வட்டாரத்தில் சிலர் தந்தையை அய்யாவென்றும் அழைப்பர்.

அப்பார் - தந்தைவழித் தாத்தா

ஆத்தா - தந்தைவழிப் பாட்டி

அப்புச்சி - தாய்வழித் தாத்தா

அம்முச்சி - தாய்வழிப் பாட்டி )

தொடரும்

ஹாய் கண்மணிகளே❤... படிச்சுட்டு மறக்காம கருத்துக்களை சொல்லுங்க பட்டூஸ்❤❣...
 

Attachments

  • 0001-617787099_20210430_205651_0000.png
    0001-617787099_20210430_205651_0000.png
    2.5 MB · Views: 1

banumathi jayaraman

Well-Known Member
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
கனிமொழி டியர்

விஷ்வேஷ்வரன் ஏன் அவ்வளவு அழுத்தமா சொல்லுறான்?
சாம்பவியிடம் விஷ்வாவுக்கு சந்தேகமா?
ஓவியப் பெண்ணை ஸ்ரீதரன் எப்போ மீட் பண்ணுவான்?
 
Last edited:
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
கனிமொழி டியர்

விஷ்வேஷ்வரன் ஏன் அவ்வளவு அழுத்தமா சொல்லுறான்?
சாம்பவியிடம் விஷ்வாவுக்கு சந்தேகமா?
ஓவியப் பெண்ணை ஸ்ரீதரன் எப்போ மீட் பண்ணுவான்?
Upcoming episodes la therinjurum akka ❣... Thanks a lot akka ❤❣❤❣
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top