மசாலா வேர்க்கடலை

Advertisement

Bhuvana

Well-Known Member
மசாலா வேர்க்கடலை

தேவையான பொருட்கள்:

வேர்க்கடலை - 1/2 கிலோ
மிளகாய் தூள் - 2 ஸ்பூன்
சோம்பு தூள் - 1/4 ஸ்பூன்
இஞ்சி, பூண்டு விழுது - 1 ஸ்பூன்
கடலை மாவு - 3 ஸ்பூன்
அரிசி மாவு - 1 ஸ்பூன்
உப்பு, எண்ணெய் - தேவைக்கு ஏற்ப

செய்முறை :

ஒரு பாத்திரத்தில் மேற்கூறிய பொருட்கள் அனைத்தையும் ஒன்றாக சேர்த்து சிறிதளவு தண்ணீர் தெளித்து பிசறி விட்டு 10 நிமிடம் வைக்கவும்.

கடாயில் எண்ணெய் விட்டு சூடானதும் கொஞ்சம் கொஞ்சமாக போட்டு கருக விடாமல் எடுக்கவும்.

மொறு மொறுப்பான மசாலா வேர்க்கடலை ரெடி.

குறிப்பு : பச்சை வேர்க்கடலை உபயோகப் படுத்தவும்.
எல்லாம் சேர்த்து பிசறி விடும் போது விருப்பம் இருந்தால் நறுக்கிய கறிவேப்பிலை சிறிதளவு சேர்த்து கொள்ளலாம்.

தண்ணீர் தெளித்து தான் பிசற வேண்டும்.
 

Attachments

  • 20210610_145840.jpg
    20210610_145840.jpg
    2.3 MB · Views: 2
Last edited:

Geetha sen

Well-Known Member
மசாலா கடலை கடையில் தான் வாங்கியிருக்கேன் மசாலாவோடு ஒட்டாமல் கடலை தனியாக வந்திடுமோன்னு பயம். இதை செய்து பார்த்திடலாம்:love::love::love:
 

Bhuvana

Well-Known Member
Super snacks(y)
Thank you so much
மசாலா கடலை கடையில் தான் வாங்கியிருக்கேன் மசாலாவோடு ஒட்டாமல் கடலை தனியாக வந்திடுமோன்னு பயம். இதை செய்து பார்த்திடலாம்:love::love::love:
செஞ்சு பார்த்துட்டு சொல்லுங்க
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top