மகா நடிகன் intro & teaser

Advertisement

mila

Writers Team
Tamil Novel Writer
ஹாய் ப்ரெண்ட்ஸ் புதுக் கதை ஆரம்பிக்கலாமா?

இலங்கைல பொருளாதார நெருக்கடி பற்றி எல்லாருக்கும் தெரிஞ்ச விஷயம்தான். விலைவாசி உயர்வால் சாமானிய மக்களின் குடும்பங்களில் என்னவெல்லாம் பிரச்சினை நிகழ்கிறது எங்குறத கதையா சொல்லலாம் என்று இந்த கதையை எழுத நினைக்கிறன்.

அது மட்டுமில்ல நான் சின்ன வயசுல போதைப்பொருள் விக்கிறது, வாங்குறது எல்லாம் சினிமால பார்த்து அது எங்கோ வேற உலகம் என்று நினைச்சுகிட்டு இருந்தேன். ஆனா இப்போ எங்க வீட்டு பக்கத்துலயே நடக்கும் சம்பவங்களை பார்க்கும் பொழுது சினிமால காட்டுற எல்லாமே கற்பனை கிடையாது.


நடந்த சில உண்மை சம்பவங்களோடு கூடிய சீக்கிரம் கற்பனை கதாபாத்திரங்களை சந்திக்கலாம்.

1035610357


பத்தல பத்தல சம்பளம் பத்தல


சரக்கும் பத்தல சண்டைன்னு வந்தா

அட்றா டேய்

சும்மா இழுத்து வச்சி அட்றா டேய்



யானை வரும் பின்னே மணியோசை வரும் முன்னே என்ற பழமொழிக்கு ஏத்தது போல் வீடு வரும் முன்பாகவே கதிர்வேலின் குரல் மலைக்கு கீழ் கேட்க ஆரம்பித்தது.



"அத்த பாட்டு சத்தம் ஓவரா இருக்கு இன்னைக்கும் ஓம்புள்ள தண்ணீல மிதந்துகிட்டுதான் வாரான் போல" நொடித்தாள் கதிர்வேலின் மனைவி பத்மினி.



"வரட்டும் வரட்டும் அவனுக்கு இருக்கு இன்னக்கி" கோபத்தில் பொருமினாள் சரோஜா.



"இதையே தான் நீ தினமும் சொல்லுற" அத்தையை முறைத்தாள் மருமகள்.



மலையேறி வந்தவனுக்கு அன்னையும் மனைவியும் காட்ச்சி தர அவர்களை நோக்கி வந்தவாறே பாடலானான். கூடவே அவன் பின்னாடி வீட்டு நாயும் அவனை சுற்றி சுற்றி வந்து கொண்டிருந்தது.



எங்கம்மா குத்துற கும்மான் குத்துல

பெத்த புள்ள நீ செத்துடுவான்டி

கொம்மா என் அம்மா உன் புள்ள நான் செத்துடுவேன்

என்ன பார்வை நீ சோத்த போடுடி



லுங்கியை ஏத்தி விட்டு ஆடியவாறே வாசல்படியில் வந்தமர்ந்த கதிர்வேல் இருபத்தியேழு வயதான அவனை சரோஜா இன்னமும் வெளுத்து வாங்குவதை பாட்டிலையே எடுத்து விட்டு வம்பிழுத்தவன் சாப்பாடு போடும்படி பாட்டிலையே மனைவியை ஏவினான்.



கஜானாலே காசில்லே

கல்லாலையும் காசில்லே

கேஸில்ல, பெட்ரோலில்ல

மூணு நாளா கிவ்ல நின்னும்

ஒன்னத்துக்கும் உதவல.



ஒன்றியத்தின் தப்பாலே

ஒண்ணியும் இல்ல இப்பாலே

சாவி இப்போ திருடன் கையில

தில்லாலங்கடி தில்லாலே



ஏற்கனவே வெள்ளம் வந்து

ஊரு தண்ணில மூழ்குது

நீ கொலம்ப ஊத்துல

வயிறு பசிக்குது.

என்ன ஆனாலும் வயிறு பசிக்குதே




கதவுலையே தாளம் போட்டவாறு பாடியவன் சோறு போடுமாறு பத்மினியை பார்த்தான்.
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top