ப்ரியசகியே 21(final)

Advertisement

Preetz

Writers Team
Tamil Novel Writer
சகி-21




நாட்கள் ஓடிவிட்டன ஆனால்...அவனால்தான் எதையும் சுலபமாக எடுத்துக்கொள்ள இயலவில்லை...இன்னொரு தாயைப் போல வள்ளியம்மாவும்...மாமனைப் போல வேலனும்...தோழியாய்...ப்ரியசகியாய்…

மாதுரியும்...இனிமையான நட்பும்...அவளது பெயரின் அர்த்தமும் அதானே...இனிமை...அவளும் இனியவளே…


வாழக்கை இப்படியே போய்விடுமோ...என்று நினைத்தப் பொழுது தென்றலாய் வந்து திசை மாற்றியவள்...காதலியல்ல...அதற்காக தங்கையுமல்ல...நட்பு மட்டுமே...அதுவே போதுமானதல்லவா...ஆனால் எல்லோரின் எண்ணவோட்டமும் ஒன்றல்லவே...சிலருக்கு கிளி...சிலருக்கு பச்சை…


மறுபடியும் எதையோ இழந்துவிட்ட உணர்வு!


சிந்து...கடைசிவரை அவளிடம் சொல்லவில்லையே...அவளை எதற்குப் பிடித்ததென்று அவனறியான்...ஆனால் பிடித்திருந்தது...முதல் நாள் அந்த லிஃப்ட்டிற்காக காத்திருந்தப் போது புயலாயவள்...
அவள் படிக்கட்டுகளை நோக்கி ஓடியது...அந்த வேர்வை வழிந்த முகத்தில் எதைக் கண்டானவன்...அனால் அந்த நொடி அவளைப் பிடித்திருந்தது...ஒருவித சுவாரஸ்யமிருந்தது...அது எந்த நொடியில் காதாலாகியது...காதலுக்கு காரணம் தேவையில்லையல்லவா…?


ஆனால் அன்று அவர் ஏன் ஆப்படி பேசினார்…?யார் மூட்டிய நெருப்பது?...ஆனால் அம்மாவின் சந்தோஷத்தை பொசுக்கிவிட்டதே...என்று அந்த நொடியும் அன்னைக்காக வருந்தினான் அந்த மைந்தன்.


அவனால் சந்திரசேகரைப் புரிந்துக் கொள்ள முடிந்தது...அவர் மகளுக்காகப் பார்க்கிறார்...ஆனால் அவன் தாயைப் பற்றிப் பேசியதை அவனால் ஏற்றுக்கொள்ளவே முடியாது...தாயையே உலகமாக்கிக் கொண்டவனுக்கு எப்படி இருக்கும்...மற்றவர் பார்வையில் தவறாக இருந்தாலும் அவனுக்கு அவன் செய்தது சரியே…


அவனது எண்ணவோட்டத்தில் கல் விட்டெறிந்ததுப் போல் அவன் வீட்டு அழைப்புமணி...அம்மா அறையில்தானிருந்தாள்...அவளும் இவனைப்போலவே எண்ண அலைகளில் தத்தளித்துக் கொண்டு…


கதவைத் திறந்ததும் அதிர்ந்துவிட்டான் அவன் கன்னத்தில் பதிந்த கரத்தால்…

அடுத்த அதிர்ச்சி அதைப் பரிசளித்தவள்...ஆம் மாதுரிதான் அங்கு நின்றுக்கொண்டிருந்தாள்…


முதலில் ‘ஓடிப் போறதுனா தனியாப் போய்த் தொலையவேண்டியதுதானே?’ என்றறைந்தவள் பின் அவனை இறுக்கமாக கட்டிக்கொள்ள அவள் அனுமதியின்றியே இரு சொட்டு நீர்மணிகள் அவன் சட்டையில் பட்டுச் சிதறியது...அவளது வார்த்தைக்கிணங்கி வெளியே நின்றுவிட்ட சிந்துவும்...அப்பொழுதே உள்ளிருந்து வந்த சுந்தரியும் நெகிழ்ந்துதான் விட்டனர் அவர்களது நட்பில்…


சுந்தரியைப் பார்த்துவிட்ட மாதுவோ இவனைத் தள்ளிவிட்டு அவரைக் கட்டிக்கொள்ள அவளது சிறுபிள்ளைத்தனத்தில் சிரிப்பு வந்தாலும் அதை காட்டிக்கொள்ளவில்லை கிறுக்கன்@கிருஷ்ணா(மாதுவிற்குபா;))...


‘என்ன ஏன் விட்டுட்டுப் போனீங்க சுந்துமா?’...என்றுப் பாவமாகக் கேட்க அவர் என்னவென்பார்…


ஹுஹ்ஹும் என்று நானும் இங்குத்தானிருக்கிறேன் என்று கணைக்க அவளோ கடுப்பாகி ‘என்ன்ன்னடா?’என்க அவனோ அடிப்பாவீ!!!இப்படி பொசுக்குன்னு வாடா போடா ரேஞ்ச்க்கு இறங்கிட்ட...என்று பார்க்க அவள் ‘சொல்லாமா கொள்ளாமா போனல்ல உனக்குலாம் அவ்ளோதான் மரியாதை’ என்று அவன் மைன்ட் வாசை கேட்ச்சிவிட அதில் கடுப்பானவனோ ‘சரி நான் போய் காஃபி போடறேன்’என்க மாதுரியும் சுந்தரியும் மட்டுமில்லாமல் வெளியில் நின்றுக்கொண்டிருந்த சிந்துவும் பதறித்தான் போனாள்...பின்னே அவள் மாப்பிள்ளைப் பார்க்க வந்திருக்கும்பொழுதா இப்படி நடக்க வேண்டும் :p


அவள் மனதிலோ விதவிதமாக சாம்பார் அணிவகுக்க அதில் அவளது அவள் மனம் அலற அந்த கதறலைக் கேட்டோ என்னவோ அவளது வருங்கால மாமியார் முதல் ஆளாக அடுக்களைக்குள் நுழைந்திருந்தார்…


அதில் கடுப்பாகிய மாதுரியோ அவனைப்பார்த்து’உன்ன…’என்றுவிட்டு வெளியேச்செல்ல அவனோ எங்கப்போறா இவ என்றவாறு பார்த்துக்கொண்டு நின்றான்…


என்னதான் மாதுரியின் வார்த்தைக்கிணங்கி வெளியே காத்திருந்தாலும்...எப்போதடா உள்ளே போவோம் என்றிருக்க குறுக்கும்நெடுக்குமாக நடந்துக்கொண்டிருந்தாள்...ஒரு பக்கம் செல் என்றதென்றால் மறுபக்கமோ வேண்டாம் அவன் உன்னை விட்டுச் சென்றான்...என்றது அவளோ அம்மாவிற்காகத்தானே என்றதை அதன் தலையிலேயே தட்டிவிட அதற்குள் அங்கு வந்த மாதுரியோ ‘அவன் இதுக்குல்லாம் சரிபட்டு வரமாட்டான் நீயே உன் ஸ்டைல்ல பேசு’ என்றவளை உள்ளிழுத்துச் சென்றாள்…


சிந்துவும் கிருஷ்ணாவும் ஒருவருக்கொருவர் பார்வையாலயே பேசிக்கொண்டிருக்க அவர்களுக்குத் தனிமையளித்து மாதுரியோ அடுக்களைக்குள் சென்றுவிட…


‘சுந்துமா என்ன மூனு கப்புதானிருக்கு?...சிந்துவுக்கு எங்க?...’என்க அவரோ


‘என்ன?...சிந்துவும் வந்துருக்காளா?’என்று நகரப்போக அவரைத் தடுத்தவளோ எதையோ சொல்லத் தயங்க சுந்தரி


‘என்னடா?...என்னாச்சு?...’என்க


‘உங்களுக்கு சிந்துவ பிடிக்குமாம்மா?’


‘ஏன்டா இப்படி கேட்கற...எனக்கு நீ கிருஷ்ணா சிந்து எல்லாம் ஒன்னுதான்டா’என்க அவளோ அவரது கைகளைப் பற்றிக் கொண்டு


‘அப்போ நீங்க... நான்... கிருஷ்ணா... சிந்து... ரஞ்சி ஆன்ட்டீ...வாசு அங்கிள்...வள்ளியம்மா… வேலண்ணா...எல்லாரும் ஒன்னா ஒரே வீட்டுல இருக்கலாமாம்மா?’என்று அவள் எதிர்ப்பார்ப்போடு…

அவர் மௌனமாகிவிட ‘ஏன் சுந்துமா உங்களுக்கு பிடிக்கலயா?’என்க அவரோ ஜன்னல் வழியாக வெளியே தெரிந்த முகில் கூட்டத்தைப் பார்த்தபடி ‘அப்படியில்லடா...சின்ன வயசுல இருந்து எல்லா விஷயத்தையும் என்கிட்ட சொல்லுவான்…’என்க அவளோ மேடையிலிருந்து கீழே குதித்து அவரைத் தோளோடு அனைத்துக்கொண்டு


‘ஓ அதுதானா சுந்து பேபி...அந்த பக்கி என்கிட்டக்கூட சொல்லல்ல…’ என அவர் அதிர்ச்சியாக அவளைப் பார்க்க அவளோ

‘ஏன் சிந்துக்கிட்டயே சொல்லல்ல…’


‘அப்புறம் எப்படி நீ சிந்துக்கிட்ட அவ்வளவு ஸ்ட்ராங்கா சொன்ன?’


‘இந்த கொஞ்ச காலத்தில நான் கிருஷ்ணாவ பத்தி நிறைய தெரிஞ்சிக்கிட்டேன்...ஆனா அவன் ஏன் சொல்லல்லன்னுதான் புரியல…’அவரோ வருத்தமுற அதைப் பார்த்தவள்


‘விடுங்க சுந்துமா இன்னைக்கு சொல்லுவான்...அதுவரைக்கும் கிருஷ்ணா ஒரு கேள்விக்குறிதான்!’


‘ஏய் வாலு!’ என்க அவளோ


‘சரி சரி பால் பொங்கப் போது பாருங்க பாருங்க...நான் கொல பசில இருக்கேன்…’என்றுவிட்டு ஓடிவிட்டாள்.


பார்வையாலயே பேசிக்கொண்டிருந்தவர்களில் முதலில் திருவாயைத் திறந்தது கிருஷ்ணாத்தான்

‘எப்படி கண்டுப்பிடிச்சீங்க?’ என அப்பொழுது ஆரம்பித்தவள்தான் அனைத்தையும் அவள் படமாக ஓட்ட அதைப் பார்த்தவனோ

‘இப்படியா பண்ணுச்சு அந்த பிஜிலி?’


‘அய்யோ நீ வேற ஒரே சரவெடித்தான்’ என்க

அந்நேரம் பார்த்து மாதுரி வெளியேவர

கிருஷ்ணாவோ ‘பாரேன் உனக்குள்ளயும் ஒரு ரௌடி பேபி இருந்துருக்கு’ என்க அவளோ


‘ஓய்!!! என்ன ஒரு ஃபைட்டோ இல்ல ஓரு ரொமான்ஸ்ஸையோ எதிர்ப்பார்த்து வந்தா நீங்க என் பையோக்ராஃபிய ஓட்டிட்டு இருக்கீங்க’என


அதில் அதிர்ந்த கருஷ்ணாவைப் பார்த்து ‘எல்லா எங்களுக்குத் தெரியும்’என்க அவன் மௌனமாகினான்...சிந்துவோ ‘ஏன் கிருஷ்ணா சொல்லல்ல…’என்க பதில் வராதுப் போகவே அவனது கைப்பற்றி தன்புறம் திருப்பி ‘என்கிட்டக்கூட சொல்லக்கூடாதா?’ என்று மாதுரி வினவ


அவளைப்பார்த்தவன் ஓரு ஆழ்மூச்சை எடுத்துவிட்டுக்கொண்டு ‘அன்னைக்கு முதல் தடவை உன்ன பார்த்தேனே...அன்னைக்குத்தான்...வீட்டுக்குப்போக லேட்டாகிடுச்சு...வீட்டுக்குப்போனா வீடு பூட்டியிருந்தது...பக்கத்து வீட்டு அக்கா அம்மாவ ஹாஸ்பிடலுக்கு கொண்டு போயிருக்கதா சொன்னாங்க...ஏன் மாது...பணம்னு வந்துட்டா மனுஷங்க மிருகமாயிடறாங்க...எனக்கு அப்பா கிடையாது அம்மா மட்டும்தான்...அவங்க என்ன எப்படி வளர்த்தாங்கன்னு எனக்குத்தெரியும்...அப்படிப்பட்டவங்களப்போய்...சொத்துக்காக...தப்பா பேசி...ச்சே...முடியல மாது...அவங்க நல்லதுக்காகத்தான் அந்த நிலத்த விக்கவேண்டாம்னு சொன்னாங்க...ஆனா அவங்களயே...ப்ச்...வெறுப்பாயிருக்கு மாது...அதான் அன்னைக்கு உன் சித்தப்பா அப்படி பேசினப்போ...யார் சொன்னதையோ நம்பி...ப்ச்…’என்க


‘ஓ அப்போ நானும் தப்பா நினைச்சிடுவேன்னு நினைச்சே அதானே...சரி இப்போ கேட்டுக்கோ...என் சுந்துபேபிய பத்தி யார் தப்பா பேசினாலும் ஏன் நீயே சொன்னாலும் நடக்கறதே வேற…’என்றது சிந்து


அப்பொழுது சுந்தரி அங்கு ட்ரேயுடன் வர அதிலிருந்த ஒரு மக்கை எடுத்துக்கொண்ட மாது ‘சும்மாவா சொன்னாங்க…’என்க சுந்தரியோ

‘என்னடா சொன்னாங்க?’

‘கர்ள்ஃப்ரெண்ட் அமைவதெல்லாம் காட் கொடுத்த வரம்னு’ என்க அவரோ


‘ஏன்டா?’


‘பின்ன என்னம்மா நல்ல நாலு அறைவிடுவான்னு பார்த்தா...இவ பத்து பக்கம் டைலாக் பேசறா…’என்க கிருஷ்ணாவோ

‘யாருக்கோ பர்ன் ஆகுதே’


‘அப்படியே ஆகிட்டாலும்’


‘சரிவிடு மாது எனக்கொரு சிந்து மாதிரி உனக்கொரு சந்து பொந்துனு கிடைக்கும்’என அதே ஊரின் மறுபக்கம் அந்த உணவை ரசித்துக்கொண்டிருந்தவனுக்கு புரையேறியது...இங்கோ இவனுக்கு விதவிதமான பரிசுகள்கிடைத்தது இருவரிடமிருந்தும்…


சுந்தரியோ ‘விளையாடினது போதும் சாப்பிடுங்க’ என்றுவிட கிருஷ்ணாவோ தப்பித்த உணர்வில்


‘தாயில்லாமல் நானில்லை

தானே எவரும் பிறந்ததில்லை’ எனப்பாட சுந்தரியோ உன்ன அவங்க அடிச்சதில தப்பேயில்ல என்றுப் பார்த்தார்


அதற்குபின் என்ன ஆட்டம் தான்...கொண்டாட்டம் தான்…

‘உனக்கிந்த பேப்பர் படிக்கற கெட்டப் பழக்கம்லாமில்லையா?’


‘அப்படியில்ல மாது இரண்டு நாளாத்தான் வாசிக்கல’ என்க அவளோ

‘நல்ல வேலை...படிச்சிருந்த நீ எப்போவோ இந்த வீட்ட காலி பண்ணிட்டுப்போயிருப்ப’என்க சிந்து வோ ஒரு அசட்டுச் சிரிப்பை சிரித்து வைத்தாள்


கிருஷ்ணாவோ ‘நீ பண்ணிருக்கது ரொம்ப பெரிய விஷயம் மாது...அவர் ரொம்ப மோசமானவர்’ என அவளுக்கோ சிறுவயதில் அவளுடன் அமர்ந்து அவள் தந்தை


‘பாதகஞ் செய்பவரைக் கண்டால் - நாம்

பயங்கொள்ள லாகாது பாப்பா!’


என்று அவளுக்குப் பாடியதே நினைவில் வந்தது...அதை மறைத்துவிட்டு அவனிடம் திரும்பி


‘அதான் எனக்கும் ரொம்ப பயமாயிருக்கு நீங்கல்லாம் என்கூடவே இருங்க’என அவனோ


‘டேய் நீ யாருன்னு எனக்குத் தெரியும் நான் யாருன்னு உனக்குத் தெரியும் நாம இரண்டுப் பேரும் யாருன்னு இந்த ஊருக்கேத் தெரியும்’ என்று அடுத்த டைலாக்கை அவிழ்த்து விட அதில் கடுப்பாகியவளோ

‘come on girls!!! let's attack him...சுந்துமா சிந்து கைல ஆயுதத்தெல்லாம் எடுத்துக்கோங்க இந்த கொசுவ இன்னைக்கு அடிச்சே ஆகனும்’ என்க அவனோ


‘ஓன்னு கூடிட்டாய்ங்கய்யா ஓன்னுகூடிட்டாய்ங்க…’என அடுத்த நொடி அவன் மேல் ஒரு தலையணை லான்ட் ஆகியிருந்தது…


இவர்களது வாழ்க்கை இதுப்போலவே எப்பொழுதும் சந்தோஷங்கள் மட்டுமே நிறைந்திருக்கும் என்றுவிட முடியாது...அது வாழ்க்கையல்லவே...ஆனால் இனி எப்படிப்பட்ட இன்னல் வந்தாலும் ஒருவருக்கொருவர் உடனிருப்பர் என்ற நம்பிக்கையுடன்...நாமும் விடை பெறுவோமாக...
 

Preetz

Writers Team
Tamil Novel Writer
ஹாய் ஸ்வீட்டீஸ்!!!

கடைசில நானும் என் முதல் கதைய எழுதி முடிச்சிட்டேன்:p... இப்படியொரு அற்புதமான வாய்ப்பை எனக்களித்த @mallika மேம் பெரிய பெரிய நன்றி!!!...அப்புறம் கதைய பொறுத்திருந்து வாசித்து ஆதரவளித்த உங்களுக்கு டஜன் கணக்குல நன்றி பார்சல் மக்களே!!!...இப்படியொரு ஆதரவ நான் சத்தியமா எதிர்ப்பார்க்கவேயில்ல... உங்க கமென்ட்ஸ்லாம்- இரண்டு க்ளாஸ் பூஸ்ட் குடிக்கிற ஃபீல்!!! ரொம்ப ரொம்ப நன்றி!!!...ப்ரியசகியே! கடைசி அத்தியாயம் போட்டுட்டேன் எப்படியிருக்குன்னு சொல்லுங்கோ!!!... M waiting!!!
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top