ப்ரியசகியே 13

Advertisement

Preetz

Writers Team
Tamil Novel Writer
சகி-13






கிருஷ்ணா


கட்டிலில் உட்கார்ந்து தான் பேசி முடிக்கும் வரை தன்னையே வைத்த கண் வாங்காமல் பார்த்துக்கொண்டிருந்த தாயை பார்க்க அவரோ இன்னமும் அவனைதான் பார்த்துக்கொண்டிருந்தார்.

உற்சாகமாக பேசிக்கொண்டிருந்தவன் பேசி முடித்த பின்பே அவரிடம் அந்த வித்தியாசத்தை உணர்ந்தான்.


‘அம்மா…’ என்க அவரோ


‘என்கிட்ட இத சொல்லனும்னு உனக்கு தோணவேயில்லல’


‘அப்படியில்லம்மா இத அன்னைக்கே சொல்லனும்னு தான் நினைச்சேன் ஆனா நாம எதிர்பார்க்காத நிறைய விஷயம் நடந்திடுச்சு…’என அவருக்குமே பழையது எதுவும் நினைத்து பார்க்ககூட விருப்பமில்லை


‘சரி விடு...அந்த பொண்ணு பேரென்ன சொன்னே? நீ சொல்றத வச்சு பார்த்தா ரொம்ப பொறுப்பானவளா இருப்பா போலையே’


‘ஆமாம் மா தன்ன சுத்தி இருக்கவங்க கஷ்டப்படக்கூடதுன்னு அப்பவே நினைச்சவ மா’ என்றவன்


‘ஆனா அவ பேர நான் சொல்லமாட்டேனே...வேணும்னா நீயே கேட்டு தெரிஞ்சிக்கோ’என்க


‘அதுக்கென்ன எனக்கு கால் பண்ணிக்குடு நானே கேட்டுக்கறேன்’


அவனும் முயன்று பார்த்தான் ஆனால் அவள் மீட்டிங்கில் இருக்கிறாள் என்ற தகவல் மட்டுமே கிடைத்தது.


‘அவ மீட்டிங்கல இருக்காளாமா’


‘ஓ… ஆனா அவளுக்கு நேரமிருந்தா வீட்டுக்கு கூப்டிட்டு வாயேன்….நீ குடுத்த பில்டப்புல அவள பார்க்கனும்போல இருக்கு’ என்க அவனும் சரியென்றுவிட்டான்.


‘பாரு பேசிக்கிட்டே இருந்ததில நேரம் போனதே தெரியல...நான் கடைக்கு போய்ட்டு வரேன்’


‘என்ன வாங்கனும்?’


‘வெல்லம் தீரப்போகுது இப்பவே வாங்கிட்டோம்னா அப்புறம் அலைய வேண்டாம்’


‘நான் போய்ட்டு வரேன்’


‘நானே போய்ட்டு வரேன் இந்த வெதருக்கு கொஞ்சம் நடந்துட்டு வரலாமான்னு பார்க்கறேன்’


‘சரி அப்போ நானும் வரேன் நான் மட்டும் தனியாயிருந்து என்ன பண்ண’


‘சரி வா’என்றுவிட இருவரும் கிளம்பிவிட்டனர்.


கடையில் நின்றுக்கொண்டிருந்தவனுக்கு போன் வர ‘ஒரு நிமிஷம்’ என்றுவிட்டு வெளியில் வந்து எடுத்து பார்த்தால் மாதுரிதான்


‘ஓய்ய்ய் கூப்ட்டிருந்தியா ?’


‘ஆமா நீ மீட்டிங்கல இருக்கேன்னு சொன்னாங்க’


‘ஆமா இப்போ தான் முடிஞ்சுது இன்னும் 1 ஹார் ட்ராவல் வீட்டுக்கு. சரி அத விடு நீ எதுக்கு கூப்பிட்ட?’


‘அதுவா அம்மா உன்கிட்ட பேசனும்னு சொன்னாங்க அதான் கால் பண்ணேன்.ஆமா நீ இப்போ எந்த ஏரியால இருக்க ஒரு மணிநேரம் ட்ராவல் பண்ற அளவுக்கு’ என்க அவளும் அந்த ஹோட்டல் பெயரைச்சொல்ல


‘ஓ...எங்க வீட்டு பக்கத்துல தான் இருக்கியா’


‘உங்க வீடு எங்க இருக்கு’ என்று கேட்டவள் அவன் சொல்லவும்


‘எனக்கு தெரிஞ்சவங்களும் அங்க தான் இருக்காங்கப்பா’


‘யாரு?’ என அதற்குள் அவளுக்கு அங்கே ஒரு சின்ன வேலை வந்துவிட


‘ஹேய் ஒரு சின்ன வேலை நான் அப்புறமா கூப்பிடவா ?’


‘ஓய்ய் நீ இங்க தானே இருக்க வீட்டுக்கு வாயேன் அம்மாகூட உன்ன பார்க்கனும்னு சொன்னாங்க’


‘ஓகே அப்போ நான் அங்க வந்துட்டு கூப்பிடறேன் ஃபைவ் மினிட்ஸ்ல அங்க இருப்பேன்’ என்று அனைத்துவிட்டாள்.


அதற்குள் சுந்தரியும் வாங்கவேண்டியதையெல்லாம் வாங்கிக்கொண்டு வர அவரிடமிருந்து பையை வாங்கிக்கொண்டு நடக்க ஆரம்பித்தான்.


அவர்களுக்கு முன்பே அங்கு வந்திருந்தவள் க்ரௌன்ட் ஃபோளோரிலேயே காத்திருந்தாள். கையிலிருந்த போனில் பார்வையை பதித்திருந்தவள் எதேர்ச்சையாக நிமிந்து பார்க்க அவள் கண்ணில் முதலில் பட்டது சுந்தரிதான்.

சுந்தரியை பார்த்துவிட்டவள் வேகமாக அவரை நெருங்க அதற்குள் அவரும் அவளை பார்த்திருந்தார். இது எதுவும் தெரிந்திராத கிருஷ்ணாவோ சுந்தரியிடம் ‘அம்மா இவ…’ என்று ஆரம்பிப்பதற்குள்.


‘சுந்துமா’


‘மாதுகண்ணா’ என்று இருவரும் நலம் விசாரிக்க ஆரம்பித்துவிட்டார்கள். இதை பார்த்துக்கொண்டிருந்த கிருஷ்ணாவிற்கு தான் ஒன்றும் புரியவில்லை ‘பே…’என்று விழித்துக்கொண்டிருந்தான்.


ஆனால் அவர்கள் தான் இவனை கண்டுக்கொள்ளவேயில்லையே.

பொறுமையை இழந்தவன் ‘என்ன நடக்குது இங்க? நானும் இங்க தானிருக்கேன்’ என்று கடுப்பாக கூற


‘ஹேய் கிருஷ்ணா நீ எப்போ வந்த?’


‘நான் அப்போதில இருந்து இங்க தான் இருக்கேன்’


‘உனக்கு இவன முன்னாடியே தெரியுமாமா?’

என்று சுந்தரி வினவ மாதுரி வாயை திறக்கும் முன்பே கிருஷ்ணா பதிலளித்திருந்தான்


‘மா நான் சொன்னேன்ல இவதான் மாதுரி’என்க


‘நீ எப்போடா பேர சொன்ன’


‘ நானாவது பரவால பேரத்தான் சொல்லல….உனக்கு எப்படி இவள தெரியும்?’


‘டேய் நான் சொல்லிருக்கேன்ல மாதுரிய பத்தி’ என்க அவனுக்கு சத்தியமாக நினைவிலில்லை அவர் பேசியதை கவனித்திருந்தாலும் பெயர் நினைவிலிருக்கவில்லை. அவன் என்ன சொல்வதென்று தெரியாமல் திரு திருவென விழித்துக்கொண்டிருக்க மாதுவோ


‘பாருங்கமா அப்போ நீங்க பேசுனத அவன் கவனிக்கவேயில்ல’ என்று போகிற போக்கில் கொளுத்தி போட அவனோ பாவமாக முழித்து


‘அம் யுவர் பெஸ்ட் ஃப்ரெண்ட்’என்று வடிவேலு டையலாக்கை அவிழ்த்துவிட கடுப்பான சுந்தரி


‘அவன் அப்படி தான்மா இந்த மாதிரி ஏதாவது டைலாக் சொல்லி வைப்பான் வா நம்ம போலாம்’ என்று அவளை கூட்டிச்சென்றுவிட்டார். முதலில் புரியவில்லை என்றாலும் சுந்தரிக்கு தெரிந்தவர் அதுவும் இந்த இடத்தில் தெரிந்தவர் என்றவுடனே புரிந்துவிட்டது யாரென்று.


பையை தூக்கிக்கொண்டு மேலே வந்தவன் இருவரையும் காணவில்லையென்று அடுக்களை பக்கம் எட்டி பார்க்க அங்கே சமையல் மேடை மேல் மாது உட்கார்ந்திருக்க அவளிடம் பேசியபடியே சுந்தரி காபி போட்டுக்கொண்டிருந்தார். ஏதோ சுவாரஸ்யமாக பேசிக்கொண்டிருந்தவர்களை பார்த்தவன் உள்ளே போகலாமா வேண்டாமா என்று பட்டிமன்றம் நடத்தி கடைசியில் வேண்டாம் என்று பையை டேபிளில் வைத்துவிட்டு சோஃபாவில் அமர்ந்துக்கொண்டான்.


சிறிது நேரம் கழித்து ட்ரேயில் மூன்று காபி மக்குகளுடன் ஹாலுக்கு வந்த மாதுரி அவன் எதிரே உட்கார்ந்துக்கொண்டு


‘இங்கிருந்து ஆஃபிஸ் ரொம்ப தூரமாச்சே டெய்லி எவ்வளவு நேரம் ட்ராவல் பண்ற?’


‘அது ட்ராஃபிக்க பொறுத்து மாது மினிமம் 1 ஹார் ஆகும் அதுக்குத்தான் அந்த ஏரியாவிலேயே வீடு தேடிட்டிருக்கேன்’ என அதற்குள் அடுக்களையிலிருந்து வெளியே வந்த சுந்தரி மாதுவை பார்த்துவிட்டு


‘ காபியை குடிக்கலையா மாது ஆறிடப்போகுது சீக்கிரம் குடி நான் ஸ்நாக்ஸ் எடுத்துட்டு வரேன்’ என்று மறுபடியும் உள்ளே சென்றுவிட்டார். சிறிது நேர யோசனைக்கு பிறகு மாதுரி ‘ஒரு நிமிஷம்’ என்று அடுக்களைக்குள் சென்றுவிட்டாள்.


என்ன பேசினாலோ ஏது பேசினாலோ கொஞ்ச நேரத்தில் திரும்பி வந்தவள் முகத்தில் அப்படி ஒரு சந்தோஷம். கிருஷ்ணாவிடம் வந்தவள்.


‘கிருஷ்ணா ஒரு ஐடியா!!! பேசாம நீங்க ஏன் நம்ம வீட்டுக்கு வரக்கூடாது.’


‘அப்படின்னா?’


‘ஹேய்...நீ வீடுதான தேடிட்டிருக்க பேசாம நம்ம வீட்டுக்கு வாங்களேன் ஔட் ஹவுஸ் காலியாகத்தானிருக்கு சோ உன் ப்ரைவசிக்கு எந்த ப்ராப்ளமும் வராது’என்க அவளையே பார்த்துக்கொண்டிருந்தவன்


‘அது சரியா வராது மாது’என்க


‘ஏன்? ஏன் சரியா வராது நான் என்ன உனக்கு ஃப்ரியாவா குடுக்கறேன் நீ வாடகை குடு எல்லாம் சரியா வரும்’ என்று சொன்னவள் கிட்சனிலிருந்து எட்டி பார்த்த சுந்தரியை பார்த்து கண்ணடித்தாள் பின்னே அவரும் இதேதான் கூறினார் அங்கு வருவதாக இருந்தால் வாடகை குடுப்போம் என்று. சரியென்று அங்கே அவரை சம்மதிக்க வைத்துவிட்டு இங்கே இவனிடம் அதையே வேறு விதமாக சொல்லி சம்மதிக்க வைத்துவிட்டாள்.


முதலில் முடியாதென்றவன் அவள் வாடகை வாங்கிக்கொள்வேன் என்றவுடன் சரியென்றுவிட்டான். அங்கிருந்து கிளம்பும்போது ‘ இந்த வீக்கென்டே ஷிஃப்ட் பண்ணிடலாம் என்றுவிட்டு கிளம்பினாள்.


அந்த வார இறுதியில் அவர்களும் அவள் வீட்டிற்கு குடிபெயர்ந்திருந்தனர்.


அடுத்துவந்த ஒரு சனிக்கிழமையன்று மாதுவின் வீட்டிற்கு வந்தாள் சிந்து


‘வள்ளியம்மா...வள்ளியம்மா…’ என இவள் அழைக்க உள்ளிருந்து வந்தவர்


‘வாம்மா வா...ரொம்ப நாளாச்சு உன்ன பார்த்து இரு காபி எடுத்துட்டு வரேன்’


‘ இல்ல வள்ளியம்மா காபியெல்லாம் வேண்டாம் மாது எங்க?’


‘ மாது சுந்தரியக்கா வீட்டுக்கு போயிருக்கா மா’என


‘ஓ...சரி ம்மா நான் அங்க போறேன்’ என்று கிளம்பிவிட்டாள்.


ஆம் வந்த சில நாட்களிலேயே தனது எளிமையான பேச்சால் சுந்தரி வள்ளிக்கு அக்காவாகிவிட்டார்.

கதவு திறந்து கிடக்கவே லேசாக தட்ட உள்ளிருந்து எட்டிப்பார்த்த மாது சிந்துவை கண்டவுடன் ‘ஹே...வா வா சிந்து உள்ள வா’ என்றழைத்துவிட்டு உள்ளே திரும்பி


‘ சுந்துமா யார் வந்திருக்கானு பாருங்க...சிந்து வந்திருக்கா’ என்று இங்கிருந்தபடியே குரல் கொடுக்க அவரோ


‘ ஒரு நிமிஷம்டா இந்தோ வந்திடறேன்’ என்றார்.


இவள் சிந்துவை உட்கார வைத்துவிட்டு இவளும் அவளெதிரே அமர்ந்துக்கொண்டாள். அதற்குள் சுந்தரியும் வர அவரிடம்


‘சுந்துமா நான் சொன்னேன்ல சிந்து இவதான்’ என்று விட்டு அவளிடம் திரும்பி


‘சின்னு இவங்கதான் சுந்துமா’ என்று அறிமுகம் செய்து வைக்க சுந்தரியோ


‘உன்ன இது வரைக்கும் பார்த்தது மட்டும்தான்மா இல்லை மத்தபடி உன்ன பத்தி மாது நிறைய சொல்லிருக்கா’ என


‘எனக்கும் அதேதான் ஆன்டீ ஒரு மணிநேரம் பேசுனா அதுல அரைமணி நேரம் நீங்களும் கிருஷ்ணாவும்தான் இருப்பீங்க’என


‘ஹேய்...என்ன நீங்க ரெண்டுபேரும் பெருமையா சொல்றீங்களா இல்ல டேமேஜ் பண்றீங்களா’ என


‘ நிச்சயமா டேமேஜ்தான் பண்ணிருப்பாங்க மாது’என்று சொன்னபடி வீட்டிற்குள் நுழைந்தான் கிருஷ்ணா.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top