ப்ரியசகியே உன் ப்ரியமானவன் நானடி-3

Advertisement

அத்தியாயம் 3

ஹர்ஷினி தீவிரமான முகபாவத்துடன் சொல்ல ஆரம்பித்தாள்.

"நான் சென்னை பொண்ணுதான்... அப்பா சுகந்தன்... சென்னை ஹைகோர்ட்ல அப்பா ஃபேமஸ் லாயர்... அம்மா துளசி பீ.டி டீச்சரா ஆ இருந்தவங்க... ரொம்ப ஸ்ட்ரிக்ட் ஆபீஸர்... அவங்களுக்கு நாங்க நாலு பசங்க... நான்தான் லாஸ்ட்... கடைக்குட்டி சிங்கம் ... எங்க அம்மாவை தவிர யாருக்கும் அஞ்சாத தங்கம்...
எனக்கு ஒரு அக்கா ரெண்டு அண்ணா... அக்காவுக்கு மேரேஜ் முடிஞ்சு பெங்களூர்ல செட்டில் ஆகிட்டா... ரெண்டாவது அண்ணாவுக்கும் மேரேஜ் முடிஞ்சு அண்ணிகிட்ட சரண்டர் ஆகிட்டாங்க... மூணாவது அண்ணன் எனக்கு ரொம்ப பிடிக்கும் அவனும் கோயம்புத்தூரில் ஒரு காலேஜ்ல ப்ரொஃபஸரா ஒர்க் பண்றான். மொத்தத்துல இப்ப நா மட்டும் தான் வீட்ல இருக்கேன். எங்க அம்மா ராணி மங்கம்மா இருக்காங்களே.... சரியான அல்லிராணி... ஸ்ட்ரிக்ட் ஆபிஸர்... இதை செய்யாத... அத செய்யாத... இங்க உட்காராத... அங்க உட்காராத...இப்படி பேசாத..ஃ அப்படி பேசாதன்னு கமெண்டரி கொடுத்துட்டே இருப்பாங்க... என்ன ரொம்ப சின்ன பொண்ணு மாதிரி ட்ரீட் பண்ணுவாங்க .... முக்கியமா அவங்களுக்கு நான் பேசுறதே பிடிக்காது என்று உதட்டை பிதுக்கினாள் அவள்.


'கரெக்ட் கரெக்ட் இது வாயா இல்ல வாய்க்காலா... நான் ஸ்டாப்பா பேசுது இல்லன்னா சாப்பிடுது... உன்னை எப்படி தான் ஆன்ட்டி சமாளிக்கிறாங்களோ... ஒரு விஷயத்தை ஷாட்டா சொல்றத விட்டுட்டு இப்டி ஜவ்வு மாதிரி இழுத்துட்டு இருக்காளே...."என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டு புன்னகைத்துக் கொண்டான் ஹர்ஷா.

"சரி இப்போ உன்னோட குடும்ப வரலாறு தான் சொல்ல போறியா?" என்று ஹர்ஷா குறுக்கே கேள்விகேட்க...

"ஹையோ சார் இதெல்லாம் சொன்னா தான் நான் சொல்றது புரியும்..." என்றவள்....
"இந்த ராணி மங்கம்மா இருக்காங்களே ...அதாவது எங்க அம்மா அவங்க என்னோட மூணாவது அண்ணனுக்கு மேரேஜ் பண்ணலாம்னு முடிவு பண்ணிட்டாங்க.... ஆனா அவன் ஹர்ஷிக்கு முடிஞ்சா தா நான் முடிப்பேன் ன்னு சொல்லிட்டான்" என்று கண்களை சுருக்கி அவனை பாவமாக பார்த்தாள்.


"அப்போ மேரேஜ்க்கு பயந்து வீட்டை விட்டு ஓடி வந்துட்டியா?" என்று சந்தேகமாக ஹர்ஷா கேட்க...

"சேச்சே மீ குட் கேர்ள்.... ஓடிப் போற அளவுக்கு எங்க அம்மா அப்பா எங்க விருப்பத்துக்கு எதிரா ஒன்னும் செய்ய மாட்டாங்க .... எனக்கு மேரேஜ் முடிக்கிறது பத்தி நோ ப்ராப்ளம்... பட் எனக்கு நிறைய ஆசைகள் இருக்கு"
என்றவளை முறைத்துப் பார்த்தான் ஹர்ஷா.


"அப்போ வீட்ல சொல்லிட்டு வந்து இருக்கலாமே அட்லீஸ்ட் ஃப்ரண்ட்ஸ் கிட்ட கூட சொல்லிட்டு வந்திருக்கலாம்...."

"அதுலயும் பிராப்ளம் இருக்கு... எங்க அம்மாவுக்கு அண்ணா ஒருத்தங்க கொல்கத்தாவில் இருக்காங்க... அவருக்கும் உங்கள மாதிரி பனைமர சைஸ்ல ஒரு தடி மாடு இருக்கு. அது தலையில என்ன கட்டி வைக்கலாம்னு எங்க அம்மா அப்பா கிட்ட பேசுறது நான் கேட்டேனே.... அதுவும் சீக்கிரமே.... கிட்டத்தட்ட ஒரு மாசம் இருக்கு அதுக்குள்ள என்னோட ஆசையை நான் பூர்த்தி செஞ்சே ஆகணும். அம்மா கண்டிப்பா என்னை தனியா இங்கே விட மாட்டாங்க ..."என்று பெருமூச்சு விட்டாள் ஹர்ஷினி.

ஹர்ஷா அவளை முறைத்துப் பார்த்தான். அவனிடமே அவனை பனைமரம் தடிமாடு என்றெல்லாம் சொல்ல எவ்வளவு துணிச்சல் வேண்டும்....

அவன் முறைப்பதை கவனித்தவள் "ஹர்ஷா சார் இப்படி எல்லாம் பாசமா பார்க்கக்கூடாது.... அப்புறம் ப்ளாஷ்பேக் சொல்லமாட்டேனாக்கும்" என்று விழிகளை உருட்டி அவனைப் போல் முறைத்து காட்டியவள்....
விட்ட இடத்திலிருந்து சொல்ல ஆரம்பித்தாள்....


"எனக்கு கிராமத்து வாழ்க்கைனா ரொம்ப பிடிக்கும் ....அதை எல்லாத்தையும் மூவி ல தான் நான் பார்த்து இருக்கேன் அங்க இருக்கிறவங்க எல்லாரும் ரொம்ப தங்கமானவங்க ...இந்த சிட்டி லைஃப் பொல்யூஷன் இரைச்சல் நெருக்கடி இதை எல்லாத்தையும் விட்டுட்டு வில்லேஜ் லைஃப் வாழனும்னு எனக்கு ரொம்ப ஆசை... அம்மா அப்பா கிட்ட இத பத்தி சொல்லி பார்த்தேன்... பட் அவங்க மேரேஜ் ஆனதும் ஹஸ்பன்ட் கூட போ னு சொல்லிட்டாங்க... அப்பா எப்பவுமே பிசி தான் ....காலைல 10 மினிட்ஸ் நின்னு பேசிட்டு போய்விடுவார் பாசமானவர் தான்... பட் ஏதோ அவர்கிட்ட மிஸ்ஸிங். அம்மாவ பத்தி சொல்லவே வேண்டாம்.... அம்மாவுக்கு வீட்டிலும் வெளியிலும் நிறைய வேலை இருக்கும்.. அம்மா மகளிர் சுய உதவி குழுவில் முக்கியமான மெம்பர்... சமூகத்துக்காக உழைக்கணும்னு நினைக்கிறவங்க... ரெண்டு பேருக்குமே என்கூட டைம் ஸ்பென்ட் பண்றது ரொம்ப ரொம்ப கம்மி...எல்லாமே என் கிட்ட இருந்தும் இல்லாத மாதிரி ஒரு ஃபீலிங்ஸ் எனக்கு ஃபிரண்ட்ஸ் நிறைய பேரு தான் பட் அவங்க கூட என்ன வெளில விடவே மாட்டாங்க... கீர்த்தி என்னோட அம்மாவோட பெஸ்ட் ஃப்ரெண்டோட பொண்ணு ...சோ அவள நம்பி வேணா விடுவாங்க பட் அவ ஒரு அல்ட்ரா மார்டன் பொண்ணு ....அவ என்கூட எப்படி வில்லேஜ் வருவா... எங்க வீட்ல இருந்தாலே ஏதோ கூண்டுக்குள்ளே அடங்கி கிடந்த மாதிரி ஒரு ஃபீலிங்... ஒருநாள் நியூஸ் பேப்பர்ல தேனி மாவட்டத்துல ஜல்லிக்கட்டு நடக்கப் போறத நியூஸ் வந்து இருந்துச்சு... எனக்கு ஜல்லிக்கட்டு நா ரொம்ப பிடிக்கும் இங்க மெரினாவில் நடந்த ஜல்லிக்கட்டு போராட்டத்தில் கூட என்னால கலந்துக்க முடியல ...அதுக்கு அம்மா விடல.... பட் நான் ரொம்ப அடம் பண்ணி என் பிரண்ட்ஸ் கூட சேர்ந்து அங்கே போராட்ட பண்ணவங்க எல்லாருக்கும் சாப்பாடும் ஜூஸும் கொடுத்துட்டு வந்தேன் இப்போ எனக்கு தேனிக்கு போய் ஜல்லிக்கட்டு பாக்கணும்னு ரொம்ப ஆசை வந்தது ஜல்லிக்கட்டும் பாத்துக்கலாம் என்னோட வில்லேஜ்ல வாழணுங்கிற ஆசையும் பூர்த்தி பண்ணிக்கலாம் ...பிகாஸ் அதுவும் ஒரு கிராமம் தான... பட் அங்க எப்படி போறதுன்னு எனக்கு தெரியல நிறைய யோசிச்சேன் அப்பதான் எனக்கு என் கூட படிச்ச சுகன்யா ஞாபகத்துக்கு வந்தாள்... அவளுக்கு தேனி தான் சொந்த ஊர் அவளும் வில்லேஜ் தான் ஸ்டார்டிங் ல அவள ரொம்ப கிண்டல் பண்ணாங்க... எனக்கு அது சுத்தமா பிடிக்கல எல்லார் கூடவும் சண்டை போட்டேன் அவ ரொம்ப நல்ல பொண்ணு அதனால எனக்கு சீக்கிரமே பெஸ்ட் ஃபிரண்ட் ஆகிட்டா கீர்த்திக்கும் அவளுக்கும் ஆகவே ஆகாது இரண்டு பேருமே முட்டிப்பாங்க.... காலேஜ் முடிஞ்சதும் அவ ஊருக்கே ரிட்டன் போயிட்டா... அவளுக்கு ரொம்ப நாள் கழிச்சு கால் பண்ணினேன்... உங்க ஊருக்கு வரட்டா ன்னு கேட்டேன் அவளுக்கு ரொம்ப ஹாப்பி தான் எங்க வீட்ல சொன்னா கண்டிப்பா விட மாட்டாங்கன்னு தெரியும்... கீர்த்தி கிட்ட சொல்லலாம்னு பார்த்தா அவளுக்கும் சுகன்யாவுக்கு தான் ஆகாதே ...அதனால அவ கிட்டயும் சொல்ல முடியல... சோ நானே ஒரு பிளான் பண்ணினேன்... அம்மா கிட்ட கீர்த்தி அண்ட் மத்த ஃப்ரெண்ட்ஸ் கூட டூர் போறதா சொல்லிட்டேன்... கீர்த்தி கிட்ட ஃபேமிலி கூட வெளியே போறதா சொல்லிட்டேன்... பிராப்ளம் சால்வ்ட்..... இப்ப நான் ஜாலியா வில்லேஜ் க்கு போ போறேன் டன்டன்டன் ப்ளாஷ்பேக் ஓவர்...."
என்று பெருமூச்சு விட்டு விட்டு.... எதிரே உள்ளவனை பார்க்க...அவனோ அசந்து தூங்கி விட்டான்...:sleep:


அவன் தூங்கிக்
கொண்டிருப்பதை பார்த்து கடுப்பாகிய ஹர்ஷினி.....
"அடப்பாவி...!!!
பன மரம்... பிங்கி ப்ராமிஸ மீறிட்ட டா....உன்ன என்ன செய்றேன்னு பாரு..."
என்று கோபத்தோடு அவன் கைகளில் வைத்திருந்த புத்தகத்தை இழுத்தாள்... ஹர்ஷினி...


அதில் எழுந்தவன்....

"அதுக்குள்ள சொல்லி முடிச்சிட்டியா..."
என்று அப்பொழுதுதான் தூங்கி எழுந்தது போல ஆச்சரியத்தோடு கேட்க...


அவள் முறைக்கவும்...
சிரித்துக்கொண்டே...
"நீ சொன்ன கதைய கொஞ்சம் தான் கேட்டேன்..... படு மொக்கையா இருந்துச்சா அதான் என்ன மீறி தூக்கம் வந்துட்டு...நான் என்ன செய்ய முடியும்... தூக்கம் வந்தா...தூங்க தான முடியும்.... என்று அவளை சீண்டுவதற்காக பாவமாய் முகத்தை வைத்துக்கொண்டு... சொன்னான் ஹர்ஷாதித்யன்.


ஹர்ஷினியோ உர்ரென்று முகத்துடன் அவனைப் பார்க்காமல் திரும்பிக்கொண்டாள்.

அவள் அவ்வாறு முகத்தை திருப்பிக் கொண்டதிலும் ஒரு குழந்தைத்தனம் தான் தெரிந்தது ஹர்ஷாவுக்கு...
மனதினுள்...
"ஆஹா கோச்சிக்கிட்டாளே..... இவ இன்னும் வளரவே இல்லை... இன்னும் சின்ன குழந்தை மாதிரி தான் இருக்கா...எப்படி கையை அசைச்சு...அசைச்சு...கதை சொல்லுறா... யாருன்னு தெரியாத என்கிட்ட போய் இதெல்லாம் சொல்கிறாளே கள்ளங்கபடமில்லாத குழந்தை மனசு இவளுக்கு....
மீண்டும் அவளைப் பார்க்க...அவள் இன்னும் முகத்தை தூக்கி வைத்துக் கொண்டுதான் இருந்தாள்.


சிறிது நேரம் அவள் முகத்தை ரசித்து பார்த்த
ஹர்ஷாதித்யன்...


"சின்ன குழந்தை மாதிரி கியூட்டா கோவப்படுறா..."
என்று நினைத்தான்.


அதற்குள் அவன் மனமோ...
அவளை ரசிப்பதற்கும்... முட்டுக்கட்டை போட்டது.
" வேண்டாம்டா....இந்த ட்ராவல் இன்னும் சில மணி நேரத்துல முடிஞ்சிரும்.... அதுக்கு அப்புறம் நீ யாரோ...அவள் யாரோ... வீணா ஆசையை வளத்துக்காத.... நீ ஆசைப்பட்ட எதுவுமே சின்ன வயசுல இருந்து...உனக்கு கெடச்சது இல்ல...அப்டி...கிடச்சாலும்...அது
நெலச்சது இல்ல..."
என்று மனம் சொன்னதை மறுக்க முடியாமல்...
அமைதி ஆகினான் ஹர்ஷா.


ப்ரியசகியே....
உன் அருகாமையில்....
பனிகோர்த்த
பசும்புல்லாய் பரவசம் கொண்டேனடி...
நான்...!!!
வெயில் வந்தால்
பனித்துளி
விலகிவிடும்
என்று
அறியாத
புல்வெளிப் போல...!!!


முகத்தை தூக்கி வைத்துக் கொண்டிருந்த ஹர்ஷினி..அவன் தன்னை சமாதானபடுத்துவான் என்று அமைதியாக இருக்க... அவனோ...அவளை கண்டுகொள்ளாமல்
இருக்கவும்...ஹர்ஷினியின் முகம் வாடிய மலரை போல ஆனது.


எதேச்சையாக அவளைப் பார்த்தவன்...
அவளது வாடிய முகத்தை பார்த்ததும்....
"ஹய்யோ.... பாக்க பாவமா இருக்கே...அட்லீஸ்ட் அவ கூட இருக்குற கொஞ்ச நேரமாவது அவ கூட பேசிக்கிட்டே
வருவோம்... "
என்று நினைத்துக்கொண்டு...


"ஆமா உன்ன ஸ்டேஷனுக்கு விட ஒருத்தன் வந்தானே அவன் யாரு?"
"பிங்கி ப்ராமிஸ் மீறினவங்க கிட்ட... நான் எதுவும் சொல்ல மாட்டேன்..." என்று மேலும் முகத்தை தூக்கி வைத்துக் கொண்டாள் அவள்...


"ஹா ஹா ஹா... சும்மா தூங்குற மாதிரி நடிச்சேன். உண்மையிலேயே ஃபுல்லா கேட்டேன்..." என்றவனை நம்பாமல் பார்த்தாள் ஹர்ஷினி.

"உண்மையா தான் சொல்றேன்... நம்பலனா திரும்பவும் பிங்கி பிராமிஸ் பண்றேன்..."என்று விரலை நீட்டினான் அவன்.... முகம் மலர்ந்தவள்...
"வேணாம் நான் நம்புறேன்..." என்றுவிட்டு,


"என்ன ஸ்டேஷனுக்கு விட வந்தது கதிர் ...எங்க காலேஜ் சீனியர்... சுகன்யா ஓட லவ்வர்...ரெண்டுபேரும் அத்தை மாமா பசங்க தான் இரண்டு பேர் குடும்பத்துக்குள்ள ஏதோ சண்டை போல அதனால பேசிக்கிறது இல்ல.... பட் கதிர சின்ன வயசுல இருந்தே சுகன்யாவுக்கு ரொம்ப பிடிக்குமாம்... அவர பாக்கரதுக்காக தான் சுகன்யா சென்னைக்கு வந்து அவர் படிச்ச காலேஜிலேயே ஜாயின் பண்ணதா சொல்லி இருக்கா.... எனக்கு கதிர் அண்ணன் மாதிரி... ரொம்ப சண்டை போடுவோம்" என்று கூடுதல் தகவலும் கொடுத்தாள் ஹர்ஷினி.

"சோ அவருக்கு நீ எங்க போறேன்னு தெரியும் தெரியும்?"

"பின்ன சொல்லாமயே கொண்டு விட வருவாங்க?"

"உனக்கு தான் அறிவு இல்ல... அவனுக்கு மா இல்ல? உன்ன போய் தனியா அனுப்பி வச்சிருக்கான்... யாருனே தெரியாத என்கிட்டயே இவ்ளோ விஷயம் சொல்லலாமா..? இந்த பேசிக் அறிவுகூட இல்ல... உன்ன எல்லாம் தனியா அனுப்பி வச்சிருக்கான்... யாராவது சாக்லேட் கொடுத்து கூப்பிட்டாலே...ஹையா ஜாலின்னு பின்னாடியே போய்டுவ போல ....இந்தக் காலத்துல குழந்தைங்க கூட கவனமா இருக்காங்க.... உன்னையெல்லாம் எந்த கேட்டகிரியில் சேர்க்க? என்று படபடவென்று பொரிந்து தள்ளினான் ஹர்ஷா.

கண்கள் கலங்கி உதட்டை பிதுக்கிக் கொண்டு அவனை முறைத்துப் பார்த்தவள், "நீ கேட்டு தானே நான் சொன்னேன்... இனி உன்கிட்ட பேசமாட்டேன் போ" என்று தனது கைக்குட்டையால் மூக்கை உறிஞ்சிக் கொண்டே,உர்ரென்ற முகத்துடன் ஜன்னல் பக்கமாக திரும்பிக் கொண்டாள் அவள்...

ப்ச்ச் ... என்று தலையை கோதிக் கொண்டவன், மனதிலோ "கொஞ்சம் ஓவரா தான் பேசிட்டோமோ?" என்றிருந்தது.

மனதில் நினைத்ததை அவள் மீது இருந்த அக்கறையால் வெளிப்படையாக திட்டிவிட்டான் ஹர்ஷா... ஆனால் அவள் கண் கலங்கியதை பார்த்ததும் மனது தாங்கவில்லை....

"இங்க பாரு ஹர்ஷினி..." என்று அவளை கூப்பிட..

அவள் ஜன்னலோரம் திரும்பி இருந்தாள். அவனை திரும்பியே பார்க்கவில்லை.

"உன் மேல உள்ள அக்கறையால் தான் சொன்னேன் சாரி ..."என்று அவன் தன்னிலை இறங்கிவந்து மன்னிப்பு கேட்டும் அவள் திரும்பிப் பார்க்காமலேயே இருக்க, அவன் வீட்டு குழந்தைகளுக்காக வாங்கி வைத்திருந்த சாக்லேட்டில் இரண்டை எடுத்து அவள் முன் 'சாரி' என்று நீட்டினான் ஹர்ஷா...
சாக்லேட்டை பார்த்ததும், "ஹைய்யா சாக்லேட்" என்று முகம் மலர்ந்து அதை வாங்க கையை நீட்டியவள்...
அதற்குள் அவன் சொன்ன... "யாராவது சாக்லேட் குடுத்து கூப்பிட்டாலே ஹையா ஜாலின்னு பின்னாடியே போய்டுவ போல இந்தக் காலத்துல குழந்தைங்க கூட கவனமா இருக்காங்க ... உன்னையெல்லாம் எந்த கேட்டகிரியில சேர்கிறதுன்னு தெரியல" என்று சொன்னது நினைவு வர... சாக்லேட்டை வாங்காமல் கையை மடக்கிக் கொண்டாள் அவள்.


சாக்லேட்டை பார்த்ததும் முகமலர்ந்து அதை வாங்க கையை நீட்டியவள், பின் எதையோ யோசித்து முகம் சுருங்கி கையை மடக்கி கொண்டதைப் பார்த்தவன்....
"நம்ம ஃப்ரெண்ட்ஸ் தான.... நீ என்கிட்ட ஷேர் பண்ணதுல எந்த தப்பும் இல்ல ... நான் தான் தப்பா பேசிட்டேன் சாரி ப்ளீஸ் இதை வாங்கிக்கோ" என்று மீண்டும் அவளிடம் கொடுத்தான் ஹர்ஷா.


இம்முறை முறைத்துக்கொண்டே அதை வாங்கிக் கொண்டவள்.... ஹர்ஷா சிரிப்பதை பார்த்து,
"நான் இன்னும் ஃபுல்லா உங்களை மன்னிக்கல கொஞ்சூண்டு தான் மன்னிச்சு இருக்கேன்..."என்றுவிட்டு எதை முதலில் சாப்பிட இரண்டு சாக்லேட்டையும் மாறி மாறிப் பார்த்தாள்....


அதற்குள் அவர்களுக்கு வலப்பக்கமாக இருந்த சீட்டில் தனது பாட்டியின் மடியில் இருந்த குழந்தை ஒன்று.... அவளையே கண்ணிமைக்காமல் பார்க்க அதைப்பார்த்ததும்... சிரித்துக்கொண்டே குழந்தைக்கும் சாக்லெட்டில் ஒன்றை கொடுத்துவிட்டு.... தன் சாக்லேட்டின் கவரைப் பிரித்து சாப்பிட ஆரம்பித்தாள் ஹர்ஷினி.

அவள் சாக்லெட் சாப்பிடுவதை ரசித்து பார்த்தவன் தொண்டையை செருமிக்கொண்டு, "பக்கத்துல ஒருத்தன் இருக்கேன் அவனுக்கும் கொஞ்சம் கொடுக்கலாம் இல்லன்னா வயிறு வலிக்கும்" என்றான்.
அவன் திடீரென்று தனது சாக்லேட்டில் பங்கு கேட்டதால் திருதிருவென்று முழித்தவள்,
"வயிறு வலிச்சாலும் பரவாயில்ல....
சாக்லேட் ல பங்கு எல்லாம் குடுக்க முடியாது..." என்று ஒரே வாயில் மொத்த சாக்லேட்டையும் தள்ளிக் கொண்டாள்....


"ஹேஹே சும்மாதான் கேட்டேன்... பொறுமையா சாப்பிடு..." என்பதற்குள் அந்த எக்ஸ்ட்ரா லார்ஜ் சாக்லேட் முழுவதையும் அவளது வாய்க்குள் தள்ளி இருந்தாள்...
உதட்டிற்கு மேலேயும் ஓரங்களிலும் சாக்லேட் ஒட்டியிருக்க, அதை கூட கவனிக்காமல் மூக்கு விடைக்க தன்னை முறைத்து கொண்டிருந்தவளை பார்த்தவனுக்கு சிரிப்பை அடக்க முடியவில்லை.


"ஓய் மீசைக்காரி... வாய தொட... ஹா ஹா ஹா" என்று ஹர்ஷா குலுங்கி குலுங்கி சிரிக்க...

அதற்கு மேலும் அவனை முறைக்க முடியாமல் சிரித்து விட்டாள் அவள்...

"ஓய் பனமரம் சிரிக்கும்போது ரொம்ப அழகா இருக்கடா.... அதுவும் நீ சிரிக்கும்போது கன்னத்தில் விழும் குழி ரொம்ப ரொம்ப அழகா இருக்கு சான்சே இல்ல..." என்று உள்ளுக்குள் இவள் அவனை சைட் அடித்துக்கொண்டு ஜொள்ள...
கரெக்டாக மனசாட்சி என்ட்ரி கொடுத்தது.


"ஹர்ஷி குட்டி... இப்படி நீ சைட் அடிக்கிறது மட்டும் உங்க அம்மா ராணி மங்கம்மாவுக்கு தெரிஞ்சா எவ்வளவு நல்லா இருக்கும்..." என்று அது குரல் கொடுக்க....

"தெரிஞ்சா தானே..." என்று இவளும் அசால்டாக பதில் கொடுத்தாள்.

"இவ்வளவு தைரியமா பேச மாட்டியே நீ..." என்று அது யோசிக்க...

"அட போடி மனசாட்சி இனிமேல் இருந்து நானும் மீசை வச்ச கிராமத்துக் காரி தான்... என்கிட்ட வம்பு பண்ண வால வெட்டிப் புடுவேன் வெட்டி.... ஓடிப்போ... இல்லனா வெட்டு ஒன்னு துண்டு ரெண்டு" என்று இவள் அதை விரட்ட....

"ம்ம்க்கும்... ரொம்ப தேறிட்ட... என்கிட்ட நீ மாட்டாமயா போவ... அப்ப வச்சிக்கிறேன் உன்ன... என் கெரகம் பன்னி குட்டி எல்லம் பஞ்ச் டயலாக் பேசுது அதெல்லாம் நான் கேட்க வேண்டியதா இருக்கு... என்ன கொடுமை சரவணன் இது" என்று போற போக்கில் அவளது காலை வாரிவிட்டு சென்றது மனசாட்சி.

"அடச்சீ பேசாம போ ..." என்று இவளும் உள்ளுக்குள்ளே திருப்பிக் கொண்டாள் ஹர்ஷினி.
 
Last edited:
அவள் சிந்தனையை கலைப்பது போல்,
"நீ மூவி ல எல்லாம் பார்த்த மாதிரி கிராமத்து வாழ்க்கை அவ்வளவு ஈஸி கிடையாது... உன்னால சமாளிக்க முடியாமல் கூட போகலாம்" என்று எச்சரித்தான் ஹர்ஷா.

கைக்குட்டையால் வாயை துடைத்துக் கொண்டிருந்த ஹர்ஷினி நிமிர்ந்து அவனைப் பார்த்து,
"என்ன பத்தி என்ன நினைச்சீங்க ஹர்ஷா சார் ....பாக்கத்தான் டம்மி பீஸ் மாதிரி இருப்பேன்.... ஆனா நா ல்லாம் எங்க ஏரியால பெரிய ரவுடி.... எங்க தெருவுல வந்து கேட்டா என்ன பத்தி அப்படி சொல்லுவாங்க பெருசுங்கல்ல இருந்து சிறுசுங்க வரைக்கும் என்ன பட்டாசுன்னு தான் கூப்பிடுவாங்க.... எங்க தெரு எம்எல்ஏ கூட என்ன பார்த்தா பேசாம போகமாட்டார் ....அம்புட்டு கெத்து புள்ள கிட்ட போய் இப்படி சொத்த விஷயத்தை சொல்றீங்களே... எனக்கு பின்னாடி ஒரு படையே இருக்கு..... கிராமத்துல இருக்கிறதெல்லாம் சப்ப மேட்டர் சால்ட் வாட்டர்.... அங்க அருவா கம்பு எல்லாம் இருக்குமா... அதுவே போதும் பச்சக் பச்சக் னு சண்டை போடுவேன்.... எனக்கு கராத்தே கூட தெரியும் தெரியுமா?" என்று அவள் சொல்ல சொல்ல ஹர்ஷாவிற்கு தான் மூச்சு முட்டியது.

"ஹோய் ஹோய் மீசைக்காரி... மூச்சு விட்டு பேசு ... நான் ஸ்டாப்பா எப்படி தான் பேசுறியோ...." என்ற அலுத்துக் கொண்டவன்...

அவர் முறைப்பதைப் பார்த்து...
" நம்புறேன் தாயே நம்புறேன்.... நீ பெரிய ரவுடி தான் ... உங்க ஜில்லா டான் தான்" என்று ஹர்ஷா ஒத்துக்கொள்ள...

"அதுதுதுதுது...." என்று தனது குர்தியின் காலரை கெத்தாக தூக்கி விட்டுக் கொண்டாள் அவள்....

அதற்குள் அடுத்த ஸ்டேஷன் வந்துவிட ,
"உனக்கு ஏதாவது வேணுமா...?"என்று ஹர்ஷா கேட்டான்.

"லிஸ்ட் போட டைம் இல்லையே..." என்று இவள் சொல்ல....
"அவ்வளவு நேரம் எல்லாம் இங்க நிக்காது... சீக்கிரம் இப்போ என்ன வேணும்ன்னு சொல்லு..." என்று அவன் எழ....
அவர்களின் அருகே உள்ள இருக்கையில் இருந்த வயதான பாட்டி,
"கொஞ்சம் தண்ணி பாட்டிலும் என் பேத்திக்கு பாலும் பிஸ்கட்டும் வாங்கிட்டு வந்துடுங்க தம்பி... புண்ணியமா போகும்" என்றார்....

"அதுக்கென்ன பாட்டி வாங்கிட்டு வந்துடறேன்..." என்று அவர் தந்த பணத்தை வாங்கிக் கொண்டவன்,
ஹர்ஷினியைப் பார்க்க...

"வாயாலேயே சொல்றேன்... நோட் பண்ணிக்கோங்க" என்றவள்.... அவன் சரி என்று சம்மதமாக தலையாட்டிய உடன்,
"எனக்கு மூணு பொட்டேட்டோ சிப்ஸ் பாக்கெட்... ஒரு கடலை மிட்டாய் பாக்கெட் ....ஒரு சாஃப்ட் ட்ரிங்க்ஸ் அப்புறம் ஒரு கவின்ஸ் மில்க் ஷேக்... சாக்லேட் பிளேவர் தான் வேணும்... அப்புறம் ரெண்டு மெதுவடை, ரெண்டு சம்சா,ரெண்டு பஜ்ஜி, ரெண்டு கட்லட் ரெண்டு ஸ்பிரிங் ரோல்ஸ் சூடா இருந்தா மட்டும் வாங்குங்க... கேஎஃப்சி பாப்கார்ன் சிக்கன் வேணும்... அப்புறம்....." என்று அவள் ஆரம்பிப்பதற்குள்.... "இத வாங்குறதுக்குள்ளயே ட்ரெயினை எடுத்துடுவாங்க..." என்று சொல்லிவிட்டு தப்பித்தோம் பிழைத்தோம் என்று இறங்கிவிட்டான் ஹர்ஷா....

"சார் சாக்லேட் கேக் சொல்ல மறந்துட்டேன்" என்றவளின் குரல் அவன் பின்னாடியே துரத்தியது.

"யப்பா சாமி இவ்வளவு சாப்பிடுவாளா?"என்று நினைக்காமல் இருக்க முடியவில்லை அவனால்...
அவன் திரும்ப ட்ரெய்னில் ஏறும் பொழுது அங்கிருந்த அனைவரிடமும் கலகலவென்று பேசிக் கொண்டிருந்தாள் ஹர்ஷினி.

"பியூட்டி பாட்டி உங்க பேத்தி உங்கள மாதிரிதான் பியூட்டியா இருக்கா... கரெக்ட் தானே ரமா அக்கா" என்று பக்கத்திலிருந்த பெண்மணியிடம் கேட்க அவரும் சிரித்துக் கொண்டே "ஆமா ஹர்ஷி" என்றார்.

"என்ன கண்ணு இப்படி சொல்லிட்ட... என் புருஷனுக்கு அப்புறம் நீ தான் என்ன அழகு ன்னு சொல்லி இருக்க" என்று அந்த வயதிலும் வெட்கப்பட்டார் பாட்டி....

"ஐயோ ஐயோ எம்புட்டு அழகு பியூட்டி பாட்டி நீங்க... வெட்கப்படும் போது சான்சே இல்ல" என்று நெட்டி முறித்தாள் ஹர்ஷினி.

அவளின் கன்னம் தொட்டு...
"நல்ல பேசுற தாயி நீ..." என்றார் பாட்டி பாசத்துடன் ...

"பின்ன... வாய் இல்லனா என்ன நாய் தூக்கிட்டு போயிடும்னு எங்க அம்மா சொல்வாங்களே பியூட்டி" என்று பாட்டியைப் பார்த்து கண்ணடித்தாள் ஹர்ஷினி....

"நீ இருக்குற வெயிட்டுக்கு நாய் எல்லாம் உன்னை தூக்கிட்டு போகாது தாயி" என்று பாட்டி காலை வார அனைவரும் சிரித்தனர்.

"பாட்டிஈஈஈ" என்று பல்லைக் கடித்தாள் ஹர்ஷினி...

"சும்மா சும்மா தமாசுக்கு சொன்னேன் தாயி ..."என்று தனது பொக்கை வாய் வைத்து சிரித்தவரை முறைக்க முடியாமல் சிரித்துவிட்டாள் ஹர்ஷினி..

"தங்கச்சி இந்த அண்ணாவுக்கு கல்யாணம் வந்துடு"என்று பாட்டியின் அருகே அமர்ந்திருந்த ஒருவர் பத்திரிக்கையை எடுத்து நீட்ட...

"வரே வா அண்ணாத்த ....கல்யாணமா உங்களுக்கு .... அடடா மாப்பிள்ளை கலை இப்பவே மூஞ்சில தெரியுதே. அண்ணாத்த.... பல்பு போடாமலேயே லைட் எரியுதே.... அண்ணி ரொம்ப லக்கிதான்..." என்று கிண்டல் செய்தாலும் ஹர்ஷினி பத்திரிக்கையை வாங்கிக் கொண்டாள்.

அவள் பேசியதைக் கேட்டுக் கொண்டே வந்தவன்....

"அதுக்குள்ள இவ்வளவு க்ளோஸ் ஆகியாச்சா..."என்று ஆச்சரியமாகி பாட்டியிடம் வாங்கிய பொருட்களை கொடுத்து விட்டு தனது இருக்கையில் அமர்ந்தான்.

அவனைப் பார்த்ததும், "சரி பியூட்டி பாட்டி... இவ்வளவு நேரம் நான் ஸ்டாப்பா பேசி வயித்துக்குள்ள மீன் குட்டி ஓடுது சாப்பிட போறேன்...." என்று தனது இருக்கைக்கு வந்து அமர்ந்தவள்,

"எல்லாம் வாங்கிட்டீங்களா? தாங்க ஹர்ஷா சார்... எவ்வளவு ஆச்சு?" என்று பணத்தை எடுக்க தனது கைப்பையைத் திறந்தாள்....

"ஹே அதெல்லாம் வேண்டாம்... இந்தா" என்று கவரைக் கொடுத்தான் ஹர்ஷா....

அதை வாங்கிக் கொண்டவள்,
"என்ன சார் பணம் வேண்டாம்னு சொல்லிட்டீங்க... என்னதான் ஃபிரண்ட்ஸா இருந்தாலும் கடன் அன்பை முறிக்கும்... சிலநேரம் எலும்பையும் முறிக்கும்.... அதுமட்டுமில்லாம எனக்கு கடன் வாங்குறது பிடிக்கவே பிடிக்காது" என்று விளையாட்டு போல் சொல்லி நாளும் குறிப்பிட்ட தொகையை அவனிடம் கொடுத்தாள்.

அவள் மனத்திருப்திக்காக அவள் கொடுத்த பணத்தை வாங்கிக் கொண்டான் ஹர்ஷா...
அவன் வாங்கி வந்திருந்த தின்பண்டங்களை அவனுக்கும்... அங்கு இருந்தவர்களுக்கும் பகிர்ந்து கொடுத்துவிட்டு தான் சாப்பிட்டாள்....
நேரம் வேகமாக செல்வது போலிருந்தது இருவருக்கும்....
"ம்ம்ம்.... இன்னும் கொஞ்ச நேரம்தான் இருக்கு இறங்கவேண்டிய ஸ்டேஷன் வர்றதுக்கு..." என்றான் ஹர்ஷா.

"ஆமா "என்றாள்....ஹர்ஷினி சோகமாக....

"எனிவேஸ்... தேங்க்யூ இந்த ட்ராவலிங்ல நான் ரொம்ப ஹேப்பியா இருந்தேன்...
ரொம்ப நாள் கழிச்சு இன்னைக்கு தான் நான் ஹேப்பியா மனசு விட்டு
சிரிச்சேன்..உன் கூட யார் இருந்தாலும் லைஃப் ஃபுல்லா ஹேப்பியா இருப்பாங்கன்னு...எனக்குத் தோணுது... " என்றவன்

"நீ போற இடத்துல ஏதாவது பிரச்சனைனா எனக்கு போன் பண்ணு...இதான் என்னோட மொபைல் நம்பர்..."
என்று தனது விசிட்டிங் கார்டை அவளிடம் நீட்டினான்.

"இவன் இவ்வளவு நீளமா கூட பேசுவானா ..."
என்று ஆச்சரியத்தோடு வாயைப் பிளந்து கேட்டுக் கொண்டிருந்த ஹர்ஷினி அவன் கொடுத்த கார்டை வாங்கிக் கொண்டாள்.

"என்னோட நம்பர சேவ் பண்ணிக்கோ..."
என்றவன்... வேறு எதுவும் பேசாமல் கண்களை மூடி சீட்டில் சாய்ந்து அமர்ந்து கொண்டான்.

காலையில் ஏழரை மணிக்கு தொடங்கிய இவர்களின் பயணம் இதோ இன்னும் சிறிது நேரத்தில் முடிய போகிறது....

மீண்டும் சந்திப்பார்களா...???
இவர்கள்....

( சந்திப்பாங்க சந்திப்பாங்க இல்லனா ... என் பொழப்பு எங்க நடக்க..;))


தொடரும்....

ப்ரியசகியே உன் ப்ரியமானவன் நானடி:love:
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top