ப்ரியசகியே உன் ப்ரியமானவன் நானடி-2

Advertisement

அத்தியாயம்-2:


images.jpeg-373.jpg


நாம் தேவையில்லாமல் அடுத்த நபரின் சொந்த விஷயத்துக்குள் மூக்கை நுழைக்க வேண்டாம் என்று அவன் மனசாட்சி அறிவுறுத்த, அது உண்மை என்பதால் அதற்கு பிறகு அவளின் பக்கம் தன் பார்வையை திருப்பாமல் தான் உண்டு தன் வேலை உண்டு என்று தான் கொண்டு வந்திருந்த ஒரு புத்தகத்தை எடுத்து படிக்க ஆரம்பித்தவன், அதன் பிறகு அதிலேயே மூழ்கினான்.
அவளும் ஜன்னல் வழியாக வெளியே வேடிக்கை பார்த்துக்கொண்டே, தன் அண்ணன் வாங்கி வந்திருந்த தின்பண்டங்களை ரசித்து ருசித்து சாப்பிட ஆரம்பித்தாள்.


அவள் சிப்ஸை கடிக்கும் சத்தத்தில் லேசாக புத்தகத்திலிருந்து முகத்தை நிமிர்த்தி அவளை பார்த்தவன்,என்ன நினைத்தானோ..மீண்டும் புத்தகத்திலேயே
மூழ்கிவிட்டான்.

சிறிது நேரத்திலேயே வயிறு நிரம்பியது அவளுக்கு... நேற்றிரவு பயத்தினாலும் பதற்றத்தினாலும்...சரியாக தூங்காததால் கண்கள் சொருக ஆரம்பித்துவிட்டது.
எப்போது தூங்கினோம் என்று தெரியாமலே தூங்க ஆரம்பித்துவிட்டாள்.
(எம்மா ஹீரோயின்... தின்ன உடனேயே தூங்கிட்டியா மா .....)

புத்தகத்திலேயே மூழ்கியவன் எதேச்சையாக எதிரே இருந்தவளை பார்க்க,அவளோ நன்றாக தின்றுவிட்டு குழந்தை முகபாவத்துடன் உறங்கிக் கொண்டிருந்தாள்.
அவளையே பார்த்துக்கொண்டிருந்தவன், தன்னை அறியாமலேயே...அவள் குழந்தை முகத்தை ரசிக்க ஆரம்பித்து விட்டான் .
அங்கு இங்கும் அலைபாயும் மீன் போன்ற கண்கள் இப்பொழுது மூடியிருந்தது.அவள் கூந்தல் முடிகளோ....அவளது ஆப்பிள் கன்னத்தில் அங்குமிங்கும் நடனமாடிக் கொண்டிருக்கு அதை ஒதுக்க சென்ற தன் கைகளை கட்டுப்படுத்திக் கொண்டான்.
அவளது முகத்திலேயே அவனது பார்வை நிலைக்க, அதை வேறு புறம் திருப்ப முடியாமல் கஷ்டப்பட்டவன்.பின் தன்னை சமாளித்துக் கொண்டு அவளைப் பற்றி எண்ண ஆரம்பித்தான்.
"யார் இவள்?எங்கே செல்கிறாள்?எதற்காக வீட்டிலும் நண்பர்களிடம் பொய் சொல்லி விட்டு செல்கிறாள்?அவளை அனுப்ப வந்தவன் யார்?"என்று யோசித்து கொண்டே இருந்தான்.

அடுத்த ஸ்டேஷன் வரவும் தூக்கம் கலைந்து எழுந்த ஹர்ஷினி சோம்பல் முறித்துவிட்டு வாட்சைப் பார்த்தாள்.
"ச்சே வெறும் ரெண்டு மணி நேரம் நான் தூங்கி இருக்கேனா...."என்று சலித்துக் கொண்டு அவளது இடது புறமாக இருந்த இருக்கைகளை பார்க்க..... அங்கிருந்தவர்கள் எல்லாம் தூங்கிக் கொண்டும் புத்தகம் அல்லது மொபைலில் மூழ்கியும் இருந்தனர்.

சரி வெளியேவாது வேடிக்கை பார்க்கலாம் என்று திரும்பியவள், அங்கு நின்ற சிலரை பார்த்துவிட்டு, "ஆத்தாடி காட்டுமிராண்டி மாதிரி இருக்கானுகளே... இந்த சைடு நம்ம திரும்பிட கூடாது பா... ஆபத்தான பகுதி அபாயமான பகுதி" என்று மனதுக்குள் சொல்லிக் கொண்டாள்.

" ஊருக்கு போய் சேர்றதுக்கு இன்னும் எவ்வளவோ நேரம் இருக்குதே...கொஞ்ச நேரம் வேணும்ணா ஃபோன்ன நோண்டலாம்... அதுக்கப்புறம் என்ன செய்ய...
ம்ம்கூம்.... ஹர்ஷி உன்னால தாக்குப் பிடிக்க முடியுமா?"என்று தன்பாட்டிற்கு புலம்பிக் கொண்டிருந்தாள்.

அப்பொழுதுதான் கவனித்தாள் அவள் எதிர்புறம் இருந்தவன் அந்த இடத்தில் இல்லை என்பதை...
"நம்ம எதுக்க...இருந்த பனை மரத்த காணோம்...ஒருவேளை இறங்கிட்டானோ..இல்லல்ல லக்கேஜ்னா இருக்கே"என்று யோசித்தவளை மேலும் குழப்பபடுத்தாமல் வந்து சேர்ந்தான் அவன்...
கையில் ஒரு தண்ணீர் பாட்டிலும் உணவு பொட்டலமும் வைத்திருந்தான்.

"ம்ம்...சரி அதான் வந்துட்டான்ல ஃப்ரண்டா ஆயிரு டி... இல்லனா ட்ராவல் முடியிற வரைக்கும் உனக்கு போர் தான் அடிக்கும்" என்று நினைத்துக்கொண்டு...
"ஹலோ சார்... "என்றாள் ஹர்ஷினி
முதலில் அதிர்ந்தவன்.
பின் சமாளித்து....

"ஹலோ...."என்றான்.

"ஐ அம் ஹேமஹர்ஷினி... B.E.,

'அடியே உன்னோட பேரு சொன்னா மட்டும் போதாது அது என்ன B.E., ன்னு ஒரு இடைச்செருகல். உன்ன லூசு னு நினைச்சுடாம...' என்றது அவளது மனசாட்சி...

'பின்ன அரியர் இல்லாமல் கிளியர் பண்ணிடோம்ல... அதை பெருமையாக வெளியே சொல்றதுல என்ன தப்பு. யார் கேட்டாலும் நான் இத தான் சொல்லுவேன்.'
என்று மனசாட்சிக்கு பதில் சொன்னவள்,

"உங்க நேம் என்னன்னு தெரிஞ்சுக்கலாமா..." என்று அவனிடம் கேட்டாள்.
அவள் பெயரை தனக்குத்தானே கூறி பார்த்துக் கொண்டவன் லேசான புன்முறுவலுடன்....

"ஐ அம் ஹர்ஷாதித்யன்..."
என்றான்.

"எங்க ஒர்க் பண்றீங்க" என்று ஹர்சினி கேட்டதும் அவளை யோசனையாக பார்த்தான் ஹர்ஷா.

" என்ன ஒர்க் பண்றேன்னு சொல்றதுக்கு இவ்வளவு யோசனையா" என்று மனதிற்குள் சலித்துக் கொண்டவளிடம்...

'பின்ன உன்ன மாதிரியா எல்லாரும் ஓட்ட வாயா இருப்பாங்களா என்ன?...' என்று கேட்டது மனசாட்சி.

" ஐயோ ஈஸ்வரா இது தொல்லை வேற தாங்க முடியலையே நீ அங்குட்டு போ... நான் இங்கிட்டு போறேன் " என்று நழுவி விட்டாள் ஹர்ஷினி.

"என்னோட வேலையை விட்டுவிட்டு சொந்த ஊருக்கு போறேன்" என்றான் ஹர்ஷா.

ஆனால் என்ன வேலை பார்த்தான் என்று மட்டும் சொல்லவில்லை.
அதை கவனிக்கும் அளவிற்கு நம் ஹர்ஷினிக்கு பொறுமையும் புத்திசாலித்தனமும் இல்லையே!

"ஓஹோ நீங்க வேலையில்லா பட்டதாரி 3.0. வா...."

லேசாக சிரித்துக் கொண்டே ஆமாம் என்று தலையாட்டிய ஹர்ஷா, "இன்னும் டிராவல் முடிய டைம் இருக்கு. சோ ஃபிரண்ட்ஸ் ..."
என்று கை நீட்ட...

ஹர்ஷினியும்.... தன் தயக்கத்தை விடுத்து ஃபிரண்ட்ஸ் என்று கை குலுக்கினாள்.
இருவரும் சினேகமாக புன்னகைத்துக் கொண்டனர்.

"உங்க சொந்த ஊர் என்ன?"என்று கேட்டாள் ஹர்ஷினி.

"தேனி "என்றான் ஹர்ஷா.

"ஓஓ.... நானும் அங்க தான் போறேன் "
என்றாள் ஹர்ஷினி...

ஓஓஓ....என்றவன்....
எதுக்கு...???என்று தனது ஆர்வத்தை மறைத்துக்கொண்டு கேட்டான் ஹர்ஷா.

ஒரு நொடி திருதிருவென்று முழித்தவள் பின் தன்னை சமாளித்துக் கொண்டு
"என் ஃபிரண்ட பார்க்க போறேன்" என்றாள்.

" பாய் ஃபிரண்டா? கேர்ள் ஃபிரண்டா? கண்டிப்பா ஏதோ லவ் மேட்டர் தான? நா சொன்னது கரெக்ட் தானே..." என்று ஹர்ஷா ஆர்வம் தாங்காமல் அடுக்கிக்கொண்டே போக...

"ஹலோ வெயிட் வெயிட் வெயிட் லவ் வா நாங்க எல்லாம் முரட்டு சிங்கிள் எந்த வலைளையும் சிக்க மாட்டோம்... சிறுத்தை சிக்கும் ல சில்வண்டு சிக்காது ல..." என்று ஹர்ஷினி குரலை மாற்றி பேச,
ஹர்ஷாவிற்கு சிரிப்பு தாங்கவில்லை...
சிரித்து முடித்தவன்,
" நல்லா பேச்ச மாத்துற... ஏதோ ஒரு பெரிய விஷயத்துக்காக தான் நீ போறேன்னு எனக்கு தோணுது ...நீ போன் பேசும்போது நான் கேட்டுட்டு தான் இருந்தேன்"
என்றவனை ஹர்ஷினி முறைத்து பார்க்க,
"ஹேய் எதுக்கு நீ இப்ப முறைக்கிற? கண்டிப்பா நான் ஒட்டு கேட்கல... பிகாஸ் நீ பேசுறது இந்த கம்பார்ட்மெண்டிலிருந்து அடுத்த கம்பார்ட்மெண்ட் வரைக்கும் கேட்டிருக்கும்" என்று அவளை வாரி விட்டு மேலும் தொடர்ந்தான்.
" நீ எங்க போறதா இருந்தாலும் நிறைய ஆபத்து இருக்கு... உன்ன பார்த்தாலே தெரியுது நீ அந்த அளவு மெச்சூர்ட் இல்லன்னு தனியா வேற போற நீ எங்க போறேன்னு ஏதாவது சொன்னேனா... என்னால முடிஞ்ச ஹெல்ப்ப கண்டிப்பா பண்றேன்" என்றான் ஹர்ஷா உறுதியாக...

"ஹலோ எனக்கு 22 வயசு முடிஞ்சு 23 ஆக போகுது ... ஐ அம் மேஜர்" என்றவளை இடைமறித்து,
"வயசுக்கும் மெச்சூரிட்டிக்கும் சம்பந்தம் இல்ல" என்றான் ஹர்ஷா.
ஹர்ஷினி முகம் லேசாக சுருங்கியது.

அதைக் கவனித்த ஹர்ஷா,
"சொல்ல இஷ்டம் இல்லன்னா பரவால்ல... சாரி... ஓவரா அட்வான்டேஜ் எடுத்துட்டேன்"என்று மன்னிப்புக் கேட்டுவிட்டு அமைதியானான்.

ஹர்ஷினிக்கு சங்கடமாக இருந்தது.
தொண்டையை செருமிக் கொண்டு அவனைப் பார்த்தவள்,
"சொல்ல நான் தயார்... கேட்க நீங்க தயாரா? ஒரே ஒரு கண்டிஷன் யாருகிட்டயும் இத சொல்லக்கூடாது"

"நீ சொல்ல போறது என்ன அணுகுண்டு ரகசியமா... சொன்னதும் வெடிக்கிறதுக்கு"

"ஈஈஈ நீங்க போட்ட மொக்கைக்கு நாளைக்கு சிரிக்கிறேன்..."
என்று அவனை வாரியவள்...

அவன் முறைப்பதை பார்த்து நாக்கை கடித்து விட்டு,
"ஹி ஹி ஹி ஹி ரகசியம்னா... இல்ல....கொஞ்சம்
பொிய்யயய... ஃப்ளாஷ்பேக் அதான்...நான் சொன்னா தூங்கிற மாட்டீங்கள...."என்றாள் குறும்பாக...
[எப்பா உங்களுக்கும்தான்.... பிளாஷ்பேக் சொன்னா... கதை படிக்கிற யாரும் தூங்க கூடாதுனு... கண்டிஷன் போட்ருக்கா... ஹர்ஷினி.... கண்டிஷனுக்கு ஒத்து வரலனா... மேடம் ஃப்ளாஷ்பேக் சொல்ல மாட்டாங்களாம்]

அவள் அப்படி சொன்னதும் அவளது குறும்புத்தனத்தை ரசித்தவன்....
"தூங்க மாட்டேன்" என்றான் இழுவையாக...

"உங்கள நான்...எப்டி நம்புறது சார்... சோ பிங்கி ப்ராமிஸ் பண்ணுங்க...
நம்புறேன்..."
என்றாள் ஹர்ஷினி.

"அது என்ன...பிங்கி ப்ராமிஸ்..."
என்று புரியாமல் அவளைப் பார்த்தான்.... ஹர்ஷாதித்யன்...

அவன் புரியாமல் பார்ப்பதை பார்த்த ஹர்ஷினி...
"உங்களுக்கு பிங்கி ப்ராமிஸ் பண்ண தெரியாதா...???" என்று கேட்டாள்.

அவன் இல்லை என்பது போல் தலை அசைக்க....

"அதை ஏன் சொல்ல
தயங்குறீங்க? நானே உங்களுக்கு பிங்கி ப்ராமிஸ் னா என்னன்னு சொல்லித் தாரேன்" என்றவள்...

ஏதோ பாடம் எடுக்கும் டீச்சரை போல் முகத்தை வைத்துக்கொண்டு....
"அது உங்களோட சுண்டுவிரலையும் என்னோட சுண்டுவிரலையும் கோர்த்துக்கணும் மா.. அப்புறம் நம்ம என்ன ப்ராமிஸ் பண்ணுறோமோ...அதை மனசுல நினைச்சுட்டு கண்ண மூடி கடவுள்கிட்ட ப்ராமிஸ் பண்ணிக்கணும்...
அவ்வளவுதான்...ஹர்ஷா சார்...
சிம்பிள் தான்..."
என்றாள் ஹர்ஷினி

" ஓஹோ "என்றவன் அவனது சுண்டு விரலை நீட்ட....

ஹர்ஷினியும்
அவனது சுண்டுவிரலை தன் சுண்டு விரலோடு கோர்த்துக்கொண்டாள்...

பின் அவனிடம்...
"நான் சொல்லப்போறத யார்கிட்டயும் சொல்லக்கூடாது... அப்படி சொன்னா சாமி...கண்ணை குத்திடும்...அத ஞாபகம் வச்சுக்கோங்க...இப்போ கண்ணமூடி மனசுக்குள்ள பிராமிஸ் பண்ணிக்கோங்க... பாக்கலாம்..." என்றவள் கண்ணை மூடி கொண்டாள்...

"பில்டப் எல்லாம் ஓவரா தான் இருக்கு..."என்று நினைத்தாலும் கண்களை மூடி கடவுளிடம் பிரார்த்தித்துக் கொண்டான்...

கண்களைத் திறந்த ஹர்ஷினி மீண்டும் ஹர்ஷாவிடம்,
"தூங்கிடாதீங்க.... சார்" என்று கூறினாள்...

"ம்ம்ச்... எத்தனை தடவை கேக்குற...தூங்க மாட்டேன்...தூங்க மாட்டேன்...தூங்க மாட்டேன் போதுமா" என்றான்.
அவளது விரலோடு விரல் கோர்த்து இருப்பதை பார்க்காமல்...
"சீக்கிரம் சொல்லு சஸ்பென்ஸ் தாங்கல.... " என்றான்.

" சார்...தயவு செஞ்சு என் விரல கொஞ்சம் ரிலீஸ் பண்றீங்களா...???" என்றால் அவளது விரலை இழுத்துக் கொண்டே....

ஈஈஈஈ....என்று இளித்தவன் அவளது விரலை விடுவித்தான்.

"சிரிப்ப பாரு....பனமரத்துக்கு அழகாத்தான் இருக்கான்..."
என்று நினைத்தவள்...தன் எண்ணம் போகும் போக்கை கண்டு...
"ஐயோ...நம்ம நினைப்பு சரி
இல்ல...டிஸ்டன்ஸ்...டிஸ்டன்ஸ்.. மெயின்டைன் பண்ணணும்... இல்லனா கனவுல வர்ற உன்னோட பிரின்ஸ் தாடி வளர்க்காத தேவதாஸ் ஆகிடுவான்..." என்று நினைத்தவள் மானசீகமாக தன் தலையில் தானே... கொட்டிக் கொண்டாள்.

சொல்வாள் சொல்வாள் என்று அவள் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தவன்,
" ஹலோ மேடம் நான் உன்னோட விரலை விட்டு பத்து நிமிஷம் ஆகுது...நீ என்ன யோசனைல இருக்க..."என்றான் அவள் முன் சொடக்கிட்டவாறே....

"ஆஆ...அது...அத... எப்படி..."
என்று உளறியவள்....
"ஹா்ஷி... சொதப்பாத டி..."என்று தனக்கு தானே சொல்லிக்கொண்டு....
"ம்ம்ம்... சொல்லறேன்...."
என்று கதை சொல்லத் தயார் ஆகினாள்....
.
.
.
.
மையிட்ட கண்களைச்
சிமிட்டி சிமிட்டி....
குழந்தையென
நீ பேசுகையில் ...
பேச வந்த வரிகளை
மறந்து
உன் விழி வழி
என் உயிரை
தொலைகிறேன் ...
ப்ரிய சகியே!!!
தொடரும்.....

ப்ரியசகியே உன் ப்ரியமானவன் நானடி.....:love:
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top