பொன்னியின் செல்வன் - திரைப்பட கதாப்பாத்திரங்கள்

Advertisement

Saroja

Well-Known Member
முதல் விசயம் மணிரத்னம் படத்தில் வெளிச்சம்
இருக்காது வசனங்கள் மெதுவாக பேசுவாங்க
கதையில் வரும் கதாபாத்திரங்களும் எல்லாமே
ஆளுமை கம்பீரம் அழகு வீரம் சாந்தம்
நகைச்சுவைவார்த்தைகளின் தெளிவு
அதை அப்படியே எதிர் பார்க்க முடியாது
ஆனால் இப்ப இருக்கிற குழந்தைகளுக்கு
படிக்க பிடிக்காதவங்களுக்கு இது சரி வரலாம்
ஆனா படிக்கும் போது நம்ம மனதில் வந்தியதேவன்
குந்தவை நந்தினி எல்லாரையும் கற்பனையில்
பார்த்த சுகம் வருமா
எத்தனை தடவை படித்தேன் என்றே தெரியவில்லை
 
Sarayu

Super Moderator
Tamil Novel Writer
பொன்னியின் செல்வன், எனக்கு படிக்கும் வாய்ப்பு கிடைச்சப்போ பத்தாவது ஆண்டுப் பரிட்சைக்கான தேர்வு விடுமுறை.. அதாவது அடுத்த வாரம் பரீட்சை வச்சுக்கிட்டு இந்த வாரம் பொன்னியின் செல்வன் 5 புத்தகங்களும் சூழ இருந்த நாட்கள் அது..

படிச்சு முடிச்சது 3 நாள்ல படிச்சேன்.. ஆனா அதுக்கப்புறம் எத்தனை முறை படிச்சேன்னு இப்போ வரைக்கும் தெரியலை..

நான் அடிக்கடி முனுமுனுக்கும் பாட்டு "இனிய புனல் அருவி தவழ் இன்ப மலை சாரலிலே.."

மணிமேகலை பாடுறது போல காட்சி அமைப்பு இருக்கும்..

அதெல்லாம் நம்மளோட கற்பனைல நம்ம விருப்பத்துக்கு சில காட்சிகள் மனசுல ஓட்டி பார்த்திருப்போம்...

பொன்னியின் செல்வன் படிச்சிட்டு தஞ்சை போகணும்னு அவ்வளோ ஆசை.. வெறின்னு கூட சொல்லலாம்.. வந்தியத் தேவன், அருள்மொழி வர்மர், ஆழ்வார்கடியான்.. கரிகாலன்.. பழுவேட்டரையர், கந்தமாறன், நந்தினி, மணிமேகலை, குந்தவை, பூங்குழலி, வானதி, குடந்தை ஜோதிடர், சுந்தரச் சோழர், ஊமை பிச்சி, சேந்தன் அமுதன், முகத்துவாரம், புத்த பிட்சுக்கள், ரவிதாசன், ஹப்பா..!!!!

இப்படி சொல்லிட்டே போகலாம்...

இவர்கள் அத்தனை பேரையும் ஒரு காட்சி அமைப்புக்குள்ள கொண்டு வர முடியுமா??!!!!!!!
 
selvipandiyan

Well-Known Member
நானும் பள்ளி இறுதியில் தான் படிச்சேன்,அந்த நேரம் நல்ல ஜலதோஷமும் காய்ச்சலும் வேற!அன்னிலருந்து இன்னிக்கு வரை படிக்க எடுத்தாலே திட்டு வாங்குறதுதானே வேலை!ஒரு ஓரமா படுத்து ஒரு வாரத்தில் படிச்சு முடிச்சேன்!இரவில் காய்ச்சல் வேகத்தில் கதையும் கனவில் வரும்!வந்தியத்தேவன் போல நானும் கனவில் குதிரை வேகமா ஓடுவது போல எல்லாம் கனவு கண்டு முழிச்சு குழம்பியிருக்கேன்!அன்னிக்கு நான் கனவிலும் நினைக்கல,பின்னாளில் அதே திருச்சி குடமுருட்டி தஞ்சை எல்லாம் பார்க்க போறேன்னு!காவிரியை முதலில் பார்க்கும் போது எனக்கு அவ்வளவு ஆனந்தமா இருந்தது!பூங்குழலை தான் கண் முன் தெரிஞ்சா!
 
Raasitha

Writers Team
Tamil Novel Writer
பொன்னியின் செல்வன் - திரைப்படம் என்ற செய்தி

ஒரு சேர எனக்கு எதிர்பார்ப்பையும் பயத்தையும் கொடுத்தது மச்சி...

கல்கியின் எழுத்துக்களில் உள்ள ஆளுமையை வசீகரத்தை வல்லமையை எதிர்ப்பார்ப்பை உணர்வை நிறைவை எந்தவொரு திரைப்படமோ காணொளியோ கொடுக்கவே கொடுக்காது.

இதில் நம்முடைய கற்பனை உருவங்கள் உடைந்து போகும் வாய்ப்புண்டு.

ஆனால் அதே சமயம் புத்தகம் வாசிக்க விருப்பமில்லாதவர்களும், படிக்கத் தெரியாதவர்களும், தமிழ் தெரியாதவர்களும், குழந்தைகளும் என அனைவரிடமும் காணொளியால் கொண்டு சேர்ப்பிக்க முடியும்....

எதிர்பார்ப்போ அச்சமோ எதுவோ முடிவை படம் வந்த பிறகே பார்க்க முடியும்...
 
saveethamurugesan

Writers Team
Tamil Novel Writer
பொன்னியின் செல்வன் ஒரு காவியமா மனசுல பதிஞ்சு போச்சு, அதை காட்சிப்படுத்தினா நிச்சயம் நாம மனசுக்குள்ள நினைச்ச அந்த உருவகத்தை கொண்டு வரமுடியாது... இதுல வர்ற ஒருத்தரை கூட என்னால அந்த கேரக்டரோட சம்மந்தப்படுத்தி பார்க்கவே முடியலை... மணி சார்க்கு எதுக்கு இந்த விபரீத ஆசைன்னு தெரியலை...
 
ஆழ் கடல் தான் ஓய்ந்திருக்க, அகக் கடல் தான் பொங்குவதேன்.... பூங்குழலியை நினைக்கிறப்போ தான் இது தான் மனசுல வரும்..

எத்தனை நிமிர்வான பெண்...
 
Sarayu

Super Moderator
Tamil Novel Writer
பொன்னியின் செல்வன் - திரைப்படம் என்ற செய்தி

ஒரு சேர எனக்கு எதிர்பார்ப்பையும் பயத்தையும் கொடுத்தது மச்சி...

கல்கியின் எழுத்துக்களில் உள்ள ஆளுமையை வசீகரத்தை வல்லமையை எதிர்ப்பார்ப்பை உணர்வை நிறைவை எந்தவொரு திரைப்படமோ காணொளியோ கொடுக்கவே கொடுக்காது.

இதில் நம்முடைய கற்பனை உருவங்கள் உடைந்து போகும் வாய்ப்புண்டு.

ஆனால் அதே சமயம் புத்தகம் வாசிக்க விருப்பமில்லாதவர்களும், படிக்கத் தெரியாதவர்களும், தமிழ் தெரியாதவர்களும், குழந்தைகளும் என அனைவரிடமும் காணொளியால் கொண்டு சேர்ப்பிக்க முடியும்....

எதிர்பார்ப்போ அச்சமோ எதுவோ முடிவை படம் வந்த பிறகே பார்க்க முடியும்...

எஸ் மச்சி.. ஒரு சிறு திருப்தி இதுதான்.. இது வரைக்கும் படிக்காதவங்க, கண்டிப்பா படமா வந்த பிறகு அதுல என்னதான் இருக்குனு தெரிஞ்சிக்க கண்டிப்பா படிப்பாங்க
 
Sarayu

Super Moderator
Tamil Novel Writer
பொன்னியின் செல்வன் ஒரு காவியமா மனசுல பதிஞ்சு போச்சு, அதை காட்சிப்படுத்தினா நிச்சயம் நாம மனசுக்குள்ள நினைச்ச அந்த உருவகத்தை கொண்டு வரமுடியாது... இதுல வர்ற ஒருத்தரை கூட என்னால அந்த கேரக்டரோட சம்மந்தப்படுத்தி பார்க்கவே முடியலை... மணி சார்க்கு எதுக்கு இந்த விபரீத ஆசைன்னு தெரியலை...

மொத்த கதையும் கொண்டு வர முடியாது.. ஆனா ஒரு லைன் மட்டும் எடுத்து பண்ணுவார் போல
 
பொன்னியின் செல்வன், எனக்கு படிக்கும் வாய்ப்பு கிடைச்சப்போ பத்தாவது ஆண்டுப் பரிட்சைக்கான தேர்வு விடுமுறை.. அதாவது அடுத்த வாரம் பரீட்சை வச்சுக்கிட்டு இந்த வாரம் பொன்னியின் செல்வன் 5 புத்தகங்களும் சூழ இருந்த நாட்கள் அது..

படிச்சு முடிச்சது 3 நாள்ல படிச்சேன்.. ஆனா அதுக்கப்புறம் எத்தனை முறை படிச்சேன்னு இப்போ வரைக்கும் தெரியலை..

நான் அடிக்கடி முனுமுனுக்கும் பாட்டு "இனிய புனல் அருவி தவழ் இன்ப மலை சாரலிலே.."

மணிமேகலை பாடுறது போல காட்சி அமைப்பு இருக்கும்..

அதெல்லாம் நம்மளோட கற்பனைல நம்ம விருப்பத்துக்கு சில காட்சிகள் மனசுல ஓட்டி பார்த்திருப்போம்...

பொன்னியின் செல்வன் படிச்சிட்டு தஞ்சை போகணும்னு அவ்வளோ ஆசை.. வெறின்னு கூட சொல்லலாம்.. வந்தியத் தேவன், அருள்மொழி வர்மர், ஆழ்வார்கடியான்.. கரிகாலன்.. பழுவேட்டரையர், கந்தமாறன், நந்தினி, மணிமேகலை, குந்தவை, பூங்குழலி, வானதி, குடந்தை ஜோதிடர், சுந்தரச் சோழர், ஊமை பிச்சி, சேந்தன் அமுதன், முகத்துவாரம், புத்த பிட்சுக்கள், ரவிதாசன், ஹப்பா..!!!!

இப்படி சொல்லிட்டே போகலாம்...

இவர்கள் அத்தனை பேரையும் ஒரு காட்சி அமைப்புக்குள்ள கொண்டு வர முடியுமா??!!!!!!!
Unmaiyil ponniyin selvan padikkum vaippuenakkum 10 vaguppu podhu vidumuraiyil kidaithathu.. en ammaval enakku arimuga padutappatadu... enakku endrum padikka pidikkum analum mudalil5 bagangalaiyum partha pozhudhu bayamaga kooda irundadhu muzhuvadumaga mudippoma endru... aanal pidikka arambitha piragu naanum vandhiyathevan udan vaazha aarambithen... aadi padinettil arambitha payanam ennai vandhiyathevan udan avan yositha podhu naan yosithu sandaiyidum podhu porpurindu nagaikkum podhu nagaittu varundumpodhu varundhi pazhuvettaraiyarai kandapodhu viyandu nandini kanda podhu mayangi kundavaiyai kanda podhu aalumaiyil kirangi vanadhiyai kandapodhu marundu arulmozhiyai parthapodhu ivanpirantha tamilkudiyil pirantharkai peruvagai kondu poonguzhaliyai kanda podhu ivalaipol dhairyamai vaazhavendum endru aaval kondu tirumalaiyin arivil aacharyapattu manimegalaiyin kaadhilil karaindu kaneervittu vanthen... idhu varai ethanai murai padithiruppen endru theriyathu... aanal idhu thiraippadamaga eppadi varum enbathu karpanaikkukooda ondru... let's wait and watch...
 
Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top