பூவே வாய் திறவாயோ - 08

Advertisement

பின்னால் வந்தவர்களை "நீங்க வெளிய வெய்ட் பண்ணுங்க பொண்ண கூட்டிட்டு வறேன்" என்க


"ஏ உள்ள வந்து பேச கூடாதா கல்யாணம் முடிஞ்சா எப்டியும் இந்த ரூம்ம இவனும் ஷேர் பண்ணி தானே ஆகணும்" என்று பாலாவை குறிப்பிட்டு வம்சி கூற


"அது கல்யாணம் முடிஞ்ச பிறகுதானே! இன்னும் கல்யாணம் முடியல நிச்சயம் மட்டும் தான் நடந்துருக்கு அது ஞாபகம் இருக்கட்டும், அதுவுமில்லாம இது பொண்ணு இருக்குற ரூம் அதனால தான் சொன்னேன்" என்றவள் "இப்டி என்கிட்டயே பேசிட்டு இருக்க போறீங்களா இல்ல பொண்ணு கிட்ட பேசாமலே போக போறீங்களா!" என்றதும் வேகமாக "டேய் அண்ணா சும்மா இருடா" என்று அடக்கிய பாலா "நாங்க பின் பக்கம் வெய்ட் பண்றோம் நீங்க பொண்ண கூட்டிட்டு வாங்க" என்று வம்சியை அழைத்து கொண்டு செல்ல


"ஆள பாரு சரியான திமிரு பிடிச்சவனா இருப்பான் போல கோட்டான் இவன கட்டிக்க போறவ என்ன பாடு பட போறாளோ கடவுளே" என நொந்து கொண்டு அறைக்குள் சென்றாள்


குழப்பத்துடன் நளா அமர்ந்திருக்க "ஏ இப்டி முகத்தை தூக்கி வச்சுக்கிட்டு உக்காந்திருக்க எல்லார் முன்னாடியும் பிடிக்கலைன்னு சொல்றத விட்டுட்டு இங்க கன்னத்துல கைவச்சுட்டு உக்காந்துட்டு இருக்க! இப்பவும் ஒன்னும் கெட்டு போகல மாப்பிள்ளை உன்கிட்ட ஏதோ பேசணுமா பின்னாடி இருக்குற தோட்டத்துல வெய்ட் பண்ணிட்டு இருக்காரு அவர்கிட்ட தெளிவா சொல்லிரு நல்ல சான்ஸ் கோட்டை விட்டுறாத!" என்றவள்


"அப்றம் மாப்பிள்ளை வேற யாரும் இல்ல நேத்து கிருஷ்ணா ஸ்டார் போயிருந்தோமே அந்த நெடு மாடுகிட்ட பேசுறதுக்கு அவரோட தம்பி தான் ஆள் பாக்க நல்லா தான் இருக்காரு இருந்தாலும் பிடிக்காத ஒருத்தர் கூட வாழுறதெல்லாம் சரி வராது எதுனாலும் தைரியமா பேசு சரியா" என கூற திகிலடைந்த முகத்துடன் நளா நிருவை பார்த்தாள் "இப்டி முழிக்கிறத விட்டுட்டு போ போய் பேசு வெய்ட் பண்ணிட்டு இருக்காங்க" என்று அழைத்து செல்ல


தயங்கியபடி பாலாவின் அருகில் நளா வந்ததும் வம்சி சற்று விலகி நின்றான் நளா சற்று தள்ளி நின்றிருந்த நிருவை பார்க்க" பேசு" என கண்களால் ஜாடை காட்ட


தொண்டையை கனைத்து "நா உங்க கிட்ட ஒரு விஷயம் சொல்லணும்...." என தயங்க "அதுக்கு முன்னாடி நா ஒன்னு சொல்லணும் சொல்லலாமா?" என்றதும் பாலாவின் முகத்தை அப்போது தான் ஏறெடுத்து பார்த்தாள் பார்த்த மாத்திரத்தில் மீண்டும் தலை குனிந்தவள் "சொல்லுங்க!" என்று கூற


"நீங்க என்ன பத்தி என்ன நினைக்கிறீங்கன்னு எனக்கு தெரியாது ஆனா ஒன்னு மட்டும் சொல்றேன் நீங்க எதுவா இருந்தாலும் தைரியமா வெளிப்படையா என்கிட்ட சொல்லலாம் நா பீல் பண்ண மாட்டேன், எனக்கு தெரிஞ்சு உங்களுக்கு இந்த கல்யாணத்துல விருப்பம் இல்லன்னு நல்லா தெரியிது பரவாயில்ல எனக்கு இதெல்லாம் புதுசு இல்ல பழகி போனது தான் உங்கள சேத்து ரிஜாக்ட் பண்ற பொண்ணுங்க லிஸ்ட் மூணு" என்றவன் "நீங்க ஃபீல் பண்ண வேணாம் நானே ஏதாவது ஒரு காரணத்தை சொல்லி கல்யாணத்தை நிறுத்திடுறேன் உங்க பேர் அடிப்படாது நா கிளம்புறேன் நீங்க பேச நினைச்சத நா பேசிட்டேன்னு நினைக்கிறேன்" என்று ஓர் அடி எடுத்து வைத்தவனை


"ஒரு நிமிஷம்" என்று தடுத்தவள் "என்னோட விருப்பம் என்னன்னு கேக்காம நீங்களா ஏதோ ஒன்ன நினைச்சுட்டு பேசிட்டு போறீங்க என்ன உங்களுக்கு பிடிக்கலையா?" என்றதும் வேகமாக திருப்பியவன் "பிடிக்காம தான் பொண்ணு பாக்க வருவாங்களா உங்கள போட்டோல பாத்தது இல்ல, நேத்து பாத்தேன் ஆனா நீங்க தான் பொண்ணுன்னு எனக்கு தெரியாது இப்போ பாத்ததும் உங்கள பிடிச்சு போச்சு இருந்தாலும் உங்களுக்கு விருப்பம் இல்லையோன்னு ஒரு எண்ணம் எனக்குள்ள இருந்துச்சு, விருப்பம் இருந்திருந்தா எனக்கு கால் பண்ணிருப்பிங்களே, என்னோட டவுட் இங்க வந்த பிறகு கிளியர் ஆகிருச்சு நா நினைச்சது சரிதான்னு ஒரு முறை கூட என்ன நீங்க நிமிர்ந்தே பாக்கல அதுலயே தெரிஞ்சுக்கிட்டேன் உங்களுக்கு இந்த கல்யாணத்துல விருப்பம் இல்லன்னு" என்று கூற


"ஹப்பா என்ன ஒரு நீளமான ஸ்பீச்சு" என்றவள் "நீங்க சொல்றது உண்மை தான் இந்த கல்யாணத்துல விருப்பம் இல்லாம தான் இருந்துச்சு கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி, ஆனா என்கிட்ட நீங்க வெளிப்படையா உங்கள பத்தி சொன்னதும் உங்கள மறுக்க மனசு வரல அதுக்காக பரிதாபமன்னு நினைச்சுக்கிறாதீங்க உங்கள எனக்கு பிடிச்சிருக்கு உங்களுக்கும் என்ன பிடிச்சிருந்தா பேசலாம் இல்லன்னா கிளம்புங்க" என்றதும் "இல்ல! எனக்கு பிடிச்சிருக்கு" என்று அவசரமாக கூற நளா சிரித்து விட்டாள் உடன் பாலாவும் சிரிக்க இருவரும் தங்கள் விருப்பு வெறுப்புகளை பகிர்ந்து கொள்ள ஆரம்பித்தனர்


சிறு சிறு பாத்திகளில் பூக்களும் கீரை வகைகளும் முளைத்திருந்தன தென்னை மரம் இரண்டு சற்று ஆளுயரத்திற்கு வளர்ந்திருந்தது அவற்றை பார்த்து கொண்டிருந்தவன் தனியாக நின்று கொண்டிருந்த நிரஞ்சனா அருகில் வர முகத்தை திருப்பி கொண்டாள் "என்ன டார்லிங் என்மேல கோபமா! என்ன கோபம்ன்னு சொன்னா உன்னோட கோபத்துக்கு காரணம் என்னன்னு தெரிஞ்சு என்னோட பேபிய சமாதனம் பண்ணுவேன்" என்று கூற


"இங்க பாருங்க சார் முதல இந்த பேபி டார்லிங்ன்னு சொல்லி கூப்பிடுறத நிறுத்துங்க செம்ம... கடுப்பாகுது உங்களால தான் நேத்து நான் பனிஸ்மெண்ட் வாங்குனேன் இதெல்லாம் எனக்கு தேவையா நேத்து முழுக்க கிளாஸ் அட்டென் பண்ணவே இல்ல" என்று குமுற


"அச்சோ! அதுக்கு தான் இந்த கோபமா" என்றவன் "ஆமா என்னால எதுக்கு பனிஸ்மெண்ட் வாங்குன நான் தான் எதுவும் பண்ணலயே!" என்று நமட்டு சிரிப்புடன் கேட்க


"எதுவும் பண்ணலையா பண்றதெல்லாம் பண்ணிட்டு" என்றவள் "நேத்து கிளாஸ் கவனிக்கவே முடியல எல்லாம் உங்களால, உங்க நினைப்பு தான்" என்றவள் தன் பேசியதின் பொருளை அப்போது தான் உணர்ந்தாள் நாக்கை கடித்து கொண்டு அவனை பார்க்க புன்னகை முகமாய் அவளை பார்த்து கொண்டிருந்தான் வம்சி


சட்டென முகத்தை மாற்றி கொண்டு "ஒரு நிமிஷம் இருங்க" என்றவள் தன் இல்லம் சென்று கையில் பிளாஸ்டிக் கவரை கொண்டு வந்து "இந்தாங்க உங்களால தான் பனிஸ்மெண்ட் வாங்குனேன் அதனால நீங்க தான் எழுதிட்டு வரணும் தியரி ரெட் இங்க்ல அண்டர் லைன் பண்ணிருக்கேன் நூறு தடவை எழுதணும் இது அசைன்மெண்ட் சரியா" என போலியாய் புன்னகைத்தவள் மீண்டும் ஒரு முறை "நூறு தடவை எழுதணும் மண்டே சப்மிட் பண்ணனும் ஓகே நல்ல பிள்ளையா சமத்தா எழுதி கொண்டு வந்துரனும் ஓகே பேபி" என்று அவன் கன்னம் கிள்ளி கையில் புத்தகத்தை திணித்து விட்டு செல்ல


"அடிப்பாவி நீ பண்ண தப்புக்கு நா எழுதனுமா! உன்ன யாருடி என்ன நினைச்சுட்டு இருக்க சொன்னது" என்றெண்ணியவன் கையில் உள்ளதையும் அவளையும் மாறி மாறி பார்த்து கொண்டிருந்தான்


நளாவின் அருகில் சென்று "போதும் பேசிட்டனா போகலாம்" என்றதும் "பேசியாச்சு எனக்கு அவர கல்யாணம் பண்ணிக்க சம்மதம்" என்று நாணத்துடன் கூற


"அடி பாவி கொஞ்ச நேத்துக்கு முன்னாடி வரைக்கும் கல்யாணம் வேணம் படிக்கணும் விருப்பமில்லன்னு சொல்லிட்டு இருந்த மாப்பிளையா பாத்ததும் கவுந்திடயா" என்றவள் "குடிகாரன் பேச்ச கூட நம்பிறலாம் கூடவே இருக்குற உன்ன மாதிரி பிரெண்ட நம்பவே கூடாது" என்று அங்கலாய்த்து கொள்ள


"சரி சரி விடு ரகசியத்தை எல்லாம் வெளிய சொல்லிட்டு இருக்க கூடாது என்னோட இமேஜ் ஸ்பாயில் ஆகுதா இல்லையா!"என்று நளா கூற


"அது தான் போச்சே இனி என்ன இருக்கு ஸ்பாயில் ஆகுறதுக்கு" என்றவள் "மாப்பிளை சார் எதுக்கும் இவகிட்ட பாத்து நடந்துகோங்க உங்கள நினைச்சா தான் பாவமா இருக்கு எப்டி இவள சமாளிக்க போறீங்களோன்னு" என்று பாவமாய் முகத்தை வைத்து கொண்டு கூற


"என்னோட ஃவைப்ப நா சமாளிச்சிருவேன் முடியலைன்னா சரண்டர் ஆகிற வேண்டியது தான் சிஸ்டர் அப்றம் நமக்கு சோறு கிடைக்காதுல்ல" என்றதும் பாலாவின் கையில் கிள்ளியவள் "கல்யாணம் முடியட்டும் உங்கள வச்சுக்கிறேன்" என்க


"வெல்கம் பேபி வழிமேல் விழி வைத்து காத்துக்கொண்டிருப்பேன் உன் வரவுக்காக" என்று கூற


"அய்யோ மாப்பிளை சார் அவ சும்மாவே ஆடுவா இதுல நீங்க கால்ல சலங்கைய கட்டிவிட்ட மாதிரி இப்டி வசனம் பேசினா.. சொல்ல வேண்டியதே இல்ல! நான் தான் பாவம் என்ன தான் பாடா படுத்துவா" என்று கூறியதும் பாலா சிரிக்க நளா முறைத்து கொண்டிருந்தாள்


நிருவின் செயலில் திகைத்து நின்றவன் தன்னை நிதானித்து கொண்டு மூவரின் அருகில் வந்த வம்சி "டேய் நேத்து நைட்டு என்கிட்ட பொண்ணு எப்டி இருப்பாளோன்னு புலம்பிட்டு இப்போ சிரிச்சு பேசிட்டு இருக்க" என்றதும் "ஐய்யோ கடவுளே என்ன கலகம் பண்ண போறானோ" என்று எண்ணிய பாலா "அடேய் அண்ணா அவளே மனசு மாறி ஓகே சொல்லிருக்கா இடையில வந்து குட்டைய குழப்பாதடா நீ என்ன சொன்னாலும் கேக்குறேன்" என்று வம்சியின் காதில் கிசுகிசுக்க


"என்ன! என்ன! ரெண்டு பேரும் ரகசியம் பேசிட்டு இருக்கீங்க என்ன விஷயம் அவரு ஏதோ சொல்ல வந்தாரு நீங்க தடுகுறிங்க அப்டின்னா என்ன பத்தின விஷயமா தான் இருக்கும் என்ன பத்தி ஏதோ சொல்லிருக்கிங்க" என்ற நளா "நீங்க சொல்லுங்க பெரிய மாமா" என்க


"அதெல்லாம் ஒன்னுமில்லம்மா சும்மா என்ன சீண்டி பாக்குறான் என்னடா" என்று பாலா சமாளிக்க "நீங்க முழிக்கிற முழியிலேயே தெரியிது" என்றவள் "நீங்க சொல்லுங்க" என்று அழுத்தமாக கேட்க


"அது ஒன்னுமில்லமா பொண்ணு முட்டைக்கோஸ் மாதிரி இருந்தா என்ன பண்றதுன்னு என்கிட்ட யோசனை கேட்டான் அந்த மாதிரியெல்லாம் இருக்காது அழகா இருக்கும் அம்மா அப்பா நேர்ல போய் பாத்துட்டு வந்துருக்காங்கள்ல அவங்க நல்ல பொண்ண தான் பாத்திருப்பாங்கன்னு சொன்னே நம்பவே இல்லையே!, பிறகு சித்திய கூப்ட்டு அவங்க சொன்ன பிறகு தான் கொஞ்சம் நம்புனான் அப்பவும் முழுசா நம்பல" என்று கூற நளா பாலாவை தீயாய் முறைத்தாள்


"அம்மா தாயே அப்டி முறைச்சு பாக்காத முட்டைக்கோஸ் மாதிரி இருந்தா என்ன பண்றதுன்னு யோசனை கேட்டேன் தான்! ஆனா இவன் சொல்ற மாதிரியெல்லாம் இல்ல என்ன உன்கிட்ட போட்டு கொடுத்து நல்ல பேர் வாங்க ட்ரை பண்றான் நம்பாத நா அப்டியெல்லாம் சொல்லிருப்பேனா" என்று அவசரமாக கூற பெண்கள் இருவரும் சிரித்து விட்டனர் "உங்கள நம்புறேன் பெரிய மாமா மாட்டி விடுறதுகாக சொல்லிரு பாரு" என்றதும் "ம்ஹும் நீயும் அவன் கூட்டா ஆக மொத்தம் நா சொல்றத யாருமே நம்ப மாட்டீங்க என்னமோ பண்ணுங்க ஆனா ஒன்னு மட்டும் சொல்றேன் இவன் கிட்ட பாத்து இரு" என்று எச்சரிக்கும் குரலில் கூற


"என்மேல உனக்கு என்னடா அண்ணா காண்டு, நானே ஏதோ கொஞ்சம் ஃபர்பார்ம் பண்ணி பில்டபெல்லாம் கொடுத்து ஒத்துக்க வச்சுருக்கேன் சந்தோஷமா ஆரம்பிக்க போற என்னோட வாழ்க்கையில ஏடாகூடமா பேசி கும்மி அடிச்சிட்டு போயிராதா உனக்கு புண்ணியமா போயிரும்" என்று அவனுக்கு மட்டும் கேட்கும் குரலில் கூற "உன்ன பாத்தாலும் பாவமா தான் இருக்கு சரி பிழைச்சு போ" என்று பெருத்தன்மையாய் கூற "எல்லாம் என்னோட நேரம்" என்று நொந்து கொண்டவன் பெண்கள் இருவரிடமும் பேச்சை தொடங்க வம்சியின் கடை கண் பார்வை நிருவின் மேல் விழுந்திருந்தது இளம் வயதினர் நால்வரும் வெளியில் நின்று பேசி கொண்டிருந்தனர்


சந்திரசேகரும் அருணாவும் சரோஜா மூர்த்தியின் அருகில் அமர்ந்திருந்தனர் தயக்கத்துடன் பல்லவி அமர்ந்திருக்க அவர் தயங்குவதை கண்டு "என்ன சம்மந்தியம்மா ரொம்ப தயங்குற மாதிரி தெரியிது எதுவா இருந்தாலும் சொல்லுங்க" என்று மூர்த்தி கேட்க


"அது ஒன்னுமில்ல சம்மந்தி ஒரு விஷயம் சொல்லணும் நீங்க எதுவும் தப்பா எடுத்துக்க கூடாது உங்க பொண்ண நிச்சயம் பண்ண வந்த இடத்துல பெரியவனுக்கு பொண்ணு பாத்துட்டோம் அதான் பொண்ணு வீட்டுகாரங்க கிட்ட சம்மதம் கேட்டுட்டு ரெண்டு கல்யாணத்தையும் ஒண்ணா வச்சுரலாம்னு இருக்கோம் நீங்க என்ன சொல்றிங்க" என்று கேட்க


"இதுல என்ன இருக்கு சம்மந்தி பெரிய மாப்பிள்ளைக்கு நல்ல பொண்ணா இருந்தா பேசி முடிச்சிற வேண்டியது தானே நல்ல விஷயம் தான் கல்யாண செலவு மிச்சம் தனி தனியா பண்ண வேண்டியதில்ல, நீங்க பொண்ணு யாருன்னு சொல்லுங்க பேசி முடிச்சிருவோம்" என்று மூர்த்தி கூற


"உங்களுக்கு தெரிஞ்சவங்க தான் அவங்க வேற யாரும் இல்ல இவங்க பொண்ணு நிரஞ்சனா தான்" என்றதும் அருணாவும் சந்திர சேகரும் ஒருவரை ஒருவர் திகைப்புடன் பார்த்து கொண்டனர்


"அட நல்ல விஷயம் தான் ரெண்டு பேரும் சின்ன வயசுல இருந்தே க்ளோஸ் பிரெண்ட் ஒரே நேரத்துல ஒரே மேடையில ஒரே வீட்டுக்கு மாட்டுபொண்ணா போறது ரொம்ப சந்தோஷமா இருக்கு சம்மந்தி" என்ற மூர்த்தி "நீ என்ன சொல்ற சேகர் நல்ல இடம் ரெண்டு பேரும் ஒரே வீட்டுல இருந்தா எந்த கவலையும் இல்ல பாரு, தெரியாத இடத்துல கொடுக்குறதுக்கு தெரிஞ்ச இடத்துல பொண்ண கொடுக்குறது நல்லது தானே எப்டியும் படிப்பு முடிஞ்சதும் கல்யாணம் பண்ணி வைக்க தானே போற சரின்னு சொல்லு" என்று மூர்த்தி கூற


"ஆமா அண்ணா இவரு சொல்றது சரிதான் ரெண்டுபேரும் ஒண்ணா ஒருத்திருகோருத்தர் துணையா இருப்பாங்கள சரின்னு சொல்லுங்க" என்ற சரோஜா "என்ன அருணா வாய் பாத்துட்டு இருக்க அண்ணேகிட்ட எடுத்து சொல்லு நல்ல இடம் அதுவா தேடி வரும் போது தட்டி கழிக்கிறது நல்லா இருக்காது" என்று கூற


"நா என்ன அக்கா சொல்றது அவரு விருப்பம், அவருக்கு சரின்னா எனக்கு ஏந்த ஆட்சோபணையும் இல்ல நல்ல இடமா தான் தெரியிது" என்ற அருணா "ஒரு நிமிஷம் நாங்க ரெண்டுபேரும் பேசிட்டு வந்து சொல்றோம்" என்றவர் சந்திர சேகரை தனியாக அழைத்து செல்ல


"அவங்க பேசிட்டு வரட்டும் சம்பந்தி நல்ல முடிவ தான் சொல்லுவாங்க" என்று மூர்த்தி கூற மெலிதாய் புன்னகைத்து கொண்டனர் வம்சியின் குடும்பத்தினர், பெண்ணை பார்த்ததும் நிச்சயம் முடிந்த உடன் குடும்பத்தாரிடம் தன் எண்ணத்தை கூறிவிட்டார் பல்லவி அவர்களுக்கும் அவரின் விருப்பம் சரியென தோன்ற நிரஞ்சனாவை பேசி முடிக்க சம்மதம் தெரிவித்தனர் வம்சியிடம் பின்பு தெரிவித்து கொள்ளலாம் என்று பல்லவி கூறிட அவர்களுக்கும் அது சரியெனவே தோன்றியது அவன் அபிப்பிராயத்தை கேட்டால் நிச்சயம் ஒத்து கொள்ள போவதில்லை உறுதி படுத்தி கொண்டு சொல்லுகிற விதத்தில் எடுத்து சொல்லி கொள்ளலாம் என தீர்மானித்து பேச தொடங்கினர்


அருணாவும் சந்திர சேகரும் தனியாக சென்று பேசினர், அருணா "என்ன சொல்றிங்க நல்ல சம்பந்தம் அவங்களே கேக்குறாங்க சரின்னு சொல்லிறலாமா?" என்க


"நீ சொல்ற மாதிரி நல்ல சம்பந்தம் தான் ஆனா பொண்ணு கிட்ட ஒருவார்த்தை கேட்டுக்கலாமே அவ கிட்ட கேட்டுகிறது நல்லது தானே ஏன்னா வாழ போறவ அவ"


"அவகிட்ட கேட்டா சரின்னு சொல்ல போறாளே இன்னும் ஒரு வருஷம் போகட்டும்னு தான் சொல்லுவா எல்லாம் நாமா தான் செய்யணும் நாம எது செஞ்சாலும் அவளோட நல்லத்துக்கு தான் எடுத்து சொன்னா புரிஞ்சுப்பா நா அவகிட்ட பேசிக்கிறேன் நீங்க என்ன சொல்றிங்க அவங்க காத்துகிட்டு இருக்காங்க சரின்னு சொல்லிறலாமா" என்று ஆர்வத்துடன் கேட்க


"எனக்கு சம்மதம் தான் நல்ல சம்பந்தம் சரின்னு சொல்லிருவோம்" என இருவரும் பேசி முடிவெடுத்து வர அனைவரும் ஆர்வத்துடன் இருவரையும் பார்த்தனர் என்ன சொல்ல போகிறார்களோ என்று!


"எங்களுக்கு பொண்ண கொடுக்க சம்மதம் மாப்பிளை கிட்ட ஒரு வார்த்தை கேட்டுக்கோங்க" என்றதும் "அவன் எங்க பேச்ச தட்டவே மாட்டான் நாங்க பேசி முடிவெடுத்தா போதும் அவனுக்கும் சம்மதம் தான்" என்று பல்லவி கூற


"அப்டின்னா சரி சும்மா பாக்கு வெத்தலை மாத்தி உறுதி பண்ணிருவோம்" என்றதும் "பாக்கு வெத்தலை எதுக்கு தாம்பூலமே மாத்திறலாம்" என்ற மூர்த்தி மகனிடம் "பூஜை ரூம்ல ரெண்டு தாம்பூலம் எடுத்துட்டு வா" என்றதும் "பூ பழம் பாக்கு வெத்தலை இதர பொருட்களை வைத்து எடுத்து வர இரு வீட்டாரும் இரு உள்ளங்களின் விருப்பம் என்னவென்று கேளாமல் தட்டை மாற்றி கொண்டனர் பாலாவின் நிச்சயதோடு வம்சியின் நிச்சயதார்த்தமும் இனிதாய் முடிந்தது...
 
இது என்ன நியாயம் புள்ளங்ககிட்ட
கேக்காம
நடக்குமா
நீங்க கேக்குறது நியாயம் தான் சிஸ் ஆனா வம்சி கிட்ட கேட்டா வேணான்னு சொல்லுவான் அதனால அவன்கிட்ட கேக்காம கல்யாணத்த பேசி முடிக்கிறாங்க அவன் வேணான்னு சொல்றதுக்கும் இவங்க கேக்காம இருக்குறதுக்கு காரணம் இருக்கு பின்னாடி வர்ற அத்யாயதுல சொல்றேன் அப்றம் நிரஞ்சனா அப்பா அம்மா பேச்ச மீற மாட்டா அந்த நம்பிக்கையில அவங்க சரின்னு சொல்லிட்டாங்க அவளோட விருப்பம் கேட்காம
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top