பூவே வாய் திறவாயோ - 07

Advertisement

"டேய் சீக்கிரம் கிளம்பிவாங்கடா நேரமாச்சு பொம்பளைங்க நாங்களே சீக்கிரம் கிளம்பிட்டோம் ரெண்டு பேரும் ரெடியாகி வர்றதுக்கு இவ்ளோ நேரமா..?" என்று கீழே இருந்து ரஞ்சனி குரல் கொடுக்க


"கிளம்பியாச்சு சித்தி இன்னும் ஒரு அஞ்சு நிமிஷம்" என்று அறையிலிருந்தவாறே வம்சி குரல் கொடுத்தான் "எத்தனை அஞ்சு நிமிஷம் நல்ல நேரம் முடியிறதுக்குள்ள கிளம்பனும் இன்னும் ரெண்டு நிமிஷத்துல கீழ இறங்கி வரல நா மேல வந்துருவேன்" என்று மிரட்ட "சரி வந்துடுறோம்" என்று பதில் வந்ததும் அவ்விடம் விட்டு நகர்ந்தார் ரஞ்சனி


"டேய் அண்ணா கண்டிப்பா வேஷ்டி கட்டிக்கிட்டு தான் வரணுமா பேண்ட் போட்டுகிறேனே நடக்கும் போது தடுக்குமே எல்லார் முன்னாடியும் தடுக்கி கீழ விழுந்துட்டேன்னா மானமே போயிரும்" என்று பாலா புலம்ப


"ப்ச் அப்டி எதுவும் ஆகாது நா பாத்துகிறேன் நீ பேசாம இரு" என்று வேஷ்டியின் கரை முன்னே தெரியுமாறு கட்டி விட "நீ பாத்துகிட்டு தான் இருப்ப நா கீழ விழுகுறத!" என்று கூற


நமட்டு சிரிப்புடன் "பாத்துகிட்டு சும்மா இருக்க மாட்டேன் நீ விழுந்ததுக்கு பொண்ணு வீட்டுக்காரங்க தான் காரணம்னு அவங்க மேல பழிய போட்டுருவேன்" என்றதும் "அப்பா சாமி நீ எதுவும் பண்ண வேணாம் நானே இந்த பொண்ணுக்கு என்ன பிடிக்கிதோ பிடிக்கலையோன்னு பயந்துட்டு இருக்கேன் நீ எதுவும் ஏடாகூடமா பண்ணிறாத நிச்சயம் முடியிற வரைக்கும் வாய திறக்காம இருந்தாலே போதும்" என்றதும் "சரி வாய திறக்கல வா போகலாம் எல்லாரும் கிளம்பிட்டாங்க கடைக்கு வேற போகணும்" என இருவரும் கீழே இறங்கி வர


இரு மகன்களையும் கண் கொட்டமல் பார்த்து கொண்டிருந்தார் ரஞ்சனி 'என்ன சித்தி அப்டி பாக்குறிங்க நல்லா இருக்கா!" என்று புருவம் உயர்த்தி வம்சி கேட்க


"என் கண்ணே பட்டுரும் போல இருக்கு" என்று இருவரின் கன்னத்தையும் திருஷ்டி கழித்தவர் "சீக்கிரம் போய் மோதிரத்தை வாங்கிட்டு நேரா பொண்ணு வீட்டுக்கு வந்துருங்க" என்று விட்டு "பொண்ணு வீடு தெரியுமா?" என சந்தேகம் கொண்டு கேட்க


"தெரியாது சித்தி நகை கடையில இருந்து கிளம்பும் போது கால் பன்றேன் வழி சொல்லுங்க வந்துடுறோம் இப்போ கிளம்புறோம்" என்று விடைபெற்று கிளம்பினர்


நளா வீட்டில் நிச்சயத்திற்கு வருபவர்களை வாசலில் நின்ற வண்ணம் மூர்த்தியும் ரவிந்திரனும் வரவேற்க சரோஜா வந்தவர்களுக்கு காஃபியை கொடுத்து கொண்டிருக்க "அக்கா பூ எங்க வச்சுருக்கிங்க வந்தவளுக்கு கொடுக்கணும்" என்று அருணா கேட்க


"பூஜை ரூம் செல்ப்ல இருக்கும் பாரு" என்றவர் "அருணா நளா ரெடியாகிட்டாளா இன்னும் கொஞ்ச நேரத்துல மாப்பிள்ளை வீட்டுக்காரங்க வந்துருவாங்க" என்றதும் "இதோ போய் பாக்குறேன்" என்றவர் பூஜை அறை சென்று பூ எடுத்து கொடுத்து விட்டு நளாவின் அறையை நோக்கி சென்றார்


"அழுகாதடி பிடிக்கலைன்னு போல்டா சொல்லிரு அப்றம் யாரு என்ன பண்ண முடியும்?" என்று நிரஞ்சனா கூற


"உனக்கு தெரியாது நிரு நிச்சயம் பண்ணாலே பாதி கல்யாணம் முடிஞ்ச மாதிரி தான் அப்டி இருக்குறப்போ இந்த நிச்சயம் நின்னு போச்சுன்னா!, என்ன பத்தி எது சொன்னாலும் பரவாயில்ல பொண்ணு வேற யாரையாவது லவ் பண்ணுதான்னு கேப்பாங்க உண்மைய சொன்னாலும் நம்ப மாட்டாங்க அப்றம் அப்பாவையும் அம்மாவையும் ஒரு மாதிரி பாப்பாங்க"


"அதுமட்டுமில்ல அவருகிட்ட என்ன மாதிரி சொல்லி வச்சுருக்காங்கன்னு தெரியல சந்தோஷமா என்ன நிச்சயம் பண்ண வருவாரு அவரு மனசு கஷ்டப்படுமே அவரு என்ன தப்பு பண்ணாறு என்னால அவருக்கு வேற மாதிரியான பேர் கிடைக்கணுமா பாவம் அவரு அத நினைச்ச தான் கஷ்டமா இருக்கு" என்று கூற


"அதனால விருப்பம் இல்லாம கல்யாணம் பண்ணிக்க போறயா? உனக்காக யோசி இப்போ உன்ன கட்டிக்க போறவரோட மனசு கஷ்டபட கூடாதுன்னு கல்யாணம் பண்ணிட்டு நாளைக்கு நீ கஷ்டப்படுவ, விருப்பமில்லாத வாழ்க்கைய வாழ்றத்துக்கு இப்போவே பிடிக்கலைன்னு சொல்லிட்டு போலாம்" என சற்று கோபமாக கூற


உள்ளே நுழைந்த அருணா "நிரு ரெடி பண்ணியாச்சா.." என்றதும் "அந்த கொடுமையை நீயே பாரு" என்று விலக நளாயினி முகம்
களையிழந்து வாடி இருக்க கண்ணீருடன் அமர்ந்திருந்தாள் "ப்ச் ஏண்டி இப்போ அழுகுற நிச்சயம் தானே பண்ண போறாங்க இப்போவே கல்யாணமாகி போற மாதிரி அழுதுட்டு இருக்க முதல கண்ண துடை, எல்லாருக்கும் நடக்குறது எப்படியும் நடக்க போறது தானே அப்பா அம்மா எது பண்ணாலும் அது உன்னோட நல்லதுக்கு தான் பண்ணுவாங்க" என்றவர்


"ஏய் நிரு இன்னும் கொஞ்ச நேரத்துல மாப்பிளை வீட்டுகாரங்க வந்துருவாங்க முகத்தை கழுவி மறுபடியும் மேக்கப் போட்டுவிட சொல்லு லேசா இருந்தா போதும் சீக்கிரம் ரெடி பண்ணுங்க" என்று விட்டு தன் மகளை பார்க்க நீல நிற சல்வார் அணிந்து நின்று கொண்டிருந்தாள் "ஏய் இது என்னடி சுடி போட்டுட்டு வந்து நிக்கிறவ போய் நல்லா புடவை கட்டிட்டு வா அது தான் நல்லா இருக்கும்" என்று கூற


"இதுக்கு என்னம்மா குறைச்சல் இதுவே போதும் நல்லா தான் இருக்கு என்னையவா பொண்ணு பாக்க வர்றாங்க" என்று சலித்து கொள்ள


"சொன்னத செய்டா அம்மா கபோர்ட்ல புது புடைவை இருக்கும் உனக்கு வாங்கி வச்சது தான் அத எடுத்து கட்டிக்கிட்டு வா போ" என்க "என்னம்மா நீங்க" நொந்து கொண்டே தன் இல்லம் சென்றாள்


"மாப்பிளை வீட்டுக்காரங்க வந்துட்டாங்க" என்று வெளியில் இருந்து வந்த குரலில் வேகமாக ஹாலில் போர்வையை விரித்து வைக்க வாசல் வரை வந்து மூர்த்தி சரோஜா இருவரும் வரவேற்றனர், வரிசையாக தம்பூலங்களை வந்து வைத்து விட்டு உடன் வந்த பெண்கள் அடுத்த அறையில் சென்று அமர்ந்து கொண்டனர்


ரஞ்சனி - கோபால், சோபனா - தனபதி இரு தம்பதிகளும் அமர பல்லவி பெண்ணை பார்த்து விட்டு வருவதாக சென்று விட்டார்
மூர்த்தி சரோஜா தம்பதிகள் அவர்களின் எதிரில் அமர ரவீந்திரன் "மாப்பிளைய காணோம்" என்றதும் "பின்னாடி வர்றாங்க தம்பி அதுக்குள்ள நாம பேச வேண்டியத பேசிறலாம்" என்ற தனபதி சோபனாவின் காதில் கிசுகிசுக்க" ஒரு நிமிஷம்" என்று கூறிவிட்டு பல்லவியை நாடி சென்றார்


"அண்ணி இங்க வந்து உக்காந்துட்டு இருக்கீங்க வாங்க" என்றதும் "நா எதுக்கும்மா அங்க நீங்க பேசி முடிங்க நல்ல காரியம் நடக்கும் போது நா எதுக்கு வந்துகிட்டு அதான் வரும் போதே சொல்லிட்டேன்ல போய் பேசி முடிக்க சொல்லு" என்று கூற


"அண்ணி நீங்க இல்லாம எப்டி! நல்ல காரியம் நடக்குது நீங்க முன்னாடி இருந்து நடத்தி வைக்கணும்னு ஆசைப்படுறோம் இந்த காலத்துல போய் இதெல்லாம் யாரு பாக்குறாங்க வாங்க அண்ணி கையோட உங்கள கூட்டிட்டு வர சொன்னாங்க உங்க தம்பி" என்று கூற


"எந்த காலமா இருந்தா என்ன? என்னால இந்த கோலத்துல வந்து உக்கார முடியாது போம்மா நல்ல நேரம் முடியிரத்துக்குள்ள போய் பேசி முடிங்க" என்றவர் "பசங்க வந்துட்டாங்களா!" என சங்கடத்துடன் கேட்டு கொண்டிருக்க


"நல்ல மனசு இருந்தா போதும்" என்ற குரல் கேட்டு இருவரும் பின்னே திரும்பி பார்த்தனர் பிங்க் நிற பட்டு புடவையில் அழகு தேவதையாய் நிரஞ்சனா நின்று கொண்டிருக்க "சாரி நீங்க பேசுரத நா கேட்டுகிட்டு தான் இருந்தேன் மன்னிச்சிருங்க" என்றவள் "நல்ல காரியம் பண்றதுக்கு நல்ல மனசு போதும் ஆன்ட்டி நீங்க இந்த கோலத்தை சகுன தடையா பாக்கிறீங்க உங்க கூட இருக்குறவங்க வீட்டுக்கு மூத்தவங்களா பாக்குறாங்க நீங்க முன்னாடி இருந்து நடத்தினா எல்லாம் நல்ல படியா நடந்து முடியும்னு நினைக்கிறாங்க ஆன்ட்டி, எல்லாரும் ஒரு நாள் போக போறவங்க தான் நிலையா இந்த உலகத்துல யாரும் வாழ மாட்டாங்க புருஷன் இறந்துட்டானு யாரும் இந்த காலத்துல உடன்கட்டை ஏறுறது இல்ல அதெல்லாம் அந்த காலம், உங்கள அவங்க அம்மா ஸ்தானதுல பாக்குறாங்க சாஸ்த்திரம் சம்ரதாயம் எல்லாமே நாம அதாவது மனுஷங்க உருவாக்குனாது தானே போங்க ஆன்ட்டி யாரும் எதுவும் சொல்ல மாட்டாங்க ஒரு மாதிரியாவும் பாக்க மாட்டாங்க "என்று கூற


"இந்த பொண்ணு சொல்றது சரிதான் அண்ணி அத்தை மாமா போனதுக்கப்றம் எங்களுக்கு எல்லாமே நீங்க தானே வாங்க அண்ணி போகலாம் நேரம் ஆகுது" என்றதும் சரியென்றவர் "உன்னோட பேர் என்னம்மா" என்று கேட்க "நிரஞ்சனா" என்றவள் "சரிங்க ஆன்ட்டி உள்ள பொண்ணு தனியா இருக்கா நா போறேன்" என்று கூறிவிட்டு செல்ல


"நல்லா பொண்ணா இருக்காள நம்ம வம்சிக்கு பொருத்தமா இருக்கும்" என்றவர் சபைக்கு சென்றார் சபையில் பேசி முடிக்க வேண்டிய சில விஷயங்களை பேசி முடிக்க மாப்பிள்ளை வந்த பாடில்லை மூர்த்தியும் சரோஜாவும் சங்கடத்துடன் மாப்பிள்ளை வீட்டாரை பார்க்க அவர்களும் சங்கடத்துடன் பெண் வீட்டாரை பார்த்தனர் "போன் போட்டு எங்க இருக்காங்கன்னு கேளு இவ்ளோ நேரமா ஆக போகுது மோதிரத்தை வாங்கிட்டு வர்றதுக்கு இதெல்லாம் காலையிலே பண்ணிருக்க கூடாது" என்று தனபதி சிடுசிடுக்க


"பொண்ணு வீடுன்னு பாக்குறேன் இல்லன்னா வாயில நல்லா வந்துரும் கடைக்கு கிளம்புனவன வேலை விஷயமா வெளிய அனுப்பிட்டு பேசுறாறு பேச்சு" என்று சோபனா நொடித்து கொள்ள


"சரி சரி விடு என்னோட தப்பு தான் இப்போ அவங்க எங்க இருக்கங்கன்னு கேக்க சொல்லு நல்ல நேரம் முடிய போகுது" என்று சோபாவின் காதில் கிசுகிசுப்பான குரலில் கூற


"மாப்பிள்ளை வந்துட்டாருப்பா" என்ற ரவீந்திரன் வாசல் பக்கம் செல்ல இருவரும் காரிலிருந்து இறங்கி வந்தனர் இருவரில் யார் மாப்பிள்ளை என்று அங்கிருந்தவர்களே குழம்பி போயினர்


"உள்ள வாங்க மாப்பிள்ளை" என்று ரவீந்திரன் அழைக்க "பாத்தில்ல மரியாதை எல்லாம் எப்டி தர்றாங்கன்னு" என்று பாலா கூற "ம் பலி ஆடுக்கு முதல இப்டித்தான் பண்ணுவாங்க அப்றம் தானே இருக்கு கச்சேரி" என்று வம்சி கூற "போடா இவனே உன்கிட்ட பெருமையா சொன்னேன் பாரு என்ன சொல்லணும்" என்றவன் சபையில் அமர்ந்திருந்த பெரியவர்கள் அனைவரையும் மரியாதை நிமித்தம் வணங்கிய பாலா கோபலின் அருகில் அமர உடன் வம்சியும் அமர்ந்தான் "ஏண்டா மோதிரம் வாங்கிட்டு வர்றதுக்கு இவ்ளோ நேரமா" என்று ரஞ்சனி கேட்க


"அத ஏ சித்தி கேக்குரிங்க ஏதோ அவசர வேலையா மதியமே கடைய மூடிட்டு போயிட்டாரு அங்க போன பிறகு தான் எங்களுக்கே தெரியும் அவருக்கு போன் பண்ணி வர சொல்லி அப்றம் கடைய திறந்து இவன் செலக்ட் பண்றதுக்குள்ள போதும் போதும்னு ஆகிருச்சு வழி கேட்டு ஒரு வழியா வந்து சேந்துட்டோம்" என்று அலுத்து கொள்ள


"அய்யா நிச்சயதார்த்த பத்திரிகை படிச்சிறலாமா" என்று ஐயர் கேட்க "படிங்க" என்றதும் நிச்சய ஓலையை படித்து முடித்தவர் "ஐய்யா பொண்ண வர சொல்லி இந்த புடைவை கொடுத்து கட்டிட்டு வர சொல்லுங்கோ" என்று கூற


மூர்த்தி "அருணா பொண்ண கூட்டிட்டு வாம்மா" என்றதும் நளாவை அழைத்து வந்தனர் பாலா நளாவை கண்டு திகைத்தான் என்றால் அருகில் அமர்ந்திருந்த வம்சியோ விழிகள் விரிய நிரஞ்சனாவை கண்டு முதலில் திகைத்தவன் பின் பார்வையாலேயே அளந்தான் நளா நிமிர்ந்தும் பாலாவை பார்க்கவில்லை வம்சியை கண்டு "அய்யோ இவனா.." என திகைத்த நிரஞ்சனா எதையும் வெளி காட்டி கொள்ளாமல் தாம்பூலத்தை வாங்கி கொண்டு பெண்ணை அழைத்து சென்றாள்


"டேய் இன்னைக்கு காலையில பாத்த பொண்ணு" என்றதும் "ஆமா அதனால என்ன?" என்றான் வம்சி சாதரணமாக


"அந்த பொண்ணு நம்மள பத்தி என்ன நினைச்சுருக்குமோ காலையில நீ பண்ண கூத்துல" என்றதும் "நம்மள இல்ல உன்ன பத்தி நீ தானே கட்டிக்க போற" என்றவன் "இரு பாப்போம் என்ன நடக்குதுன்னு வீடியோ எடுத்துட்டு இருக்காங்க கொஞ்சம் சிரிச்ச முகமா இரு" என்று கூற


"அண்ணன் தம்பி என்னடா ரகசியம் பேசிட்டு இருக்கீங்க கொஞ்ச நேரம் அமைதியா இருங்க பொண்ணு வீட்டுக்காரங்க நம்மள தான் பாத்துட்டு இருக்காங்க" என்ற ரஞ்சனி


"என்னடா மகனே பொண்ணு பிடிச்சிருக்கா பாக்கணும் பாக்கணும்னு குதிச்சிட்டு இருந்தயே நேர்ல எப்டி இருக்கா" என்று கேட்க


"நல்லா தான் இருக்கா எனக்கு பிடிச்சிருக்கு" என சிறு வெட்கத்துடன் பாலா கூற "பாருடா மாப்பிளை வெட்கப்படுறாரு" என்ற வம்சி "டேய் போதும் நீ வெட்கப்படுறதா என்னால பாக்க முடியல" என்று கூற "பாக்க முடியல்லன்னா கண்ண முடிக்கோ" என்றதும் "எல்லாம் நேரம்ண்டா" என்று நொந்து கொள்ள


பெண்ணை அழைத்து கொண்டு வந்தனர் நளாவும் நிருவும் பிங்க் நிற புடவையில் வர பெண் யார் என்று அலங்காரம் செய்து கொண்டதில் தான் கண்டு கொண்டனர் "பொண்ண மனையில் உக்கார வைங்க" என்ற ஐயர் பெண் மாப்பிளை இருவரையும் ஒன்றாக அமர வைத்து மாலை மாற்ற சொல்லி இருவிட்டாரும் நிச்சய தாம்பூலம் மாற்ற இனிதாய் முடிந்தது நிச்சயதார்த்தம் வந்த விருந்தினர் ஒவ்வொருவராக விடைபெற்று கொண்டிருந்தனர், அடுத்த மாதம் திருமண தேதி குறிக்க அதற்கான ஏற்பாடுகள் என்னவென்று இருவிட்டாரும் பேசி கொண்டிருக்க வம்சியும் பாலாவும் தனியாக அமர்ந்திருந்தனர்


"ப்ச் இது சரி வராது இரு நா வறேன்" என்ற வம்சி எழுந்து சென்று "ஒரு நிமிஷம் நா கொஞ்சம் பேசலாமா" என்றதும் அனைவரின் பார்வையும் வம்சியின் பேரில் திரும்ப மூர்த்தியிடம் "அங்கிள் மாப்பிள்ளைக்கு பொண்ணுகிட்ட தனியா ஏதோ பேசணுமா உங்ககிட்ட எப்டி கேக்குறதுன்னு தயங்கிட்டு இருக்கான் பொண்ணு வீட்டுகாரங்க அனுமதி தரணும்" என்று கேட்டதும் பாலா முறைக்க ரஞ்சனி கண்களை விரித்த வண்ணம் பார்த்து கொண்டிந்தார் கோபாலோ "நடத்துடா மகனே" என்று கண்களால் சைகை கட்ட சோபனா கணவரிடம்


"உங்க பையனுக்கு கொஞ்சமாவது விவஸ்தை இருக்கா பெரியவங்க பேசிட்டு இருக்கும் போது குறுக்க வந்து பேசுறான்" என்றதும் "இங்க பாரு சோபா அவன் என்னோட பையன் மட்டும் இல்ல உனக்கும் பையன் தான்! என்னோமோ அவன பெத்ததுல எனக்கு மட்டும் தான் பங்கு இருக்குன்ற மாதிரி பேசுற உனக்கும் தான் பங்கு இருக்கு" என்று கூற


"கடவுளே அத பேசவேண்டிய இடமா இது" என்றவர் "சரி சரி நம்ம பையன் தான்! உங்ககிட்ட பேசுனேன் பாருங்க என்ன சொல்லணும்" என்று நொடிக்க "பரவாயில்ல சோபா கோபத்துலயும் அழகா தான் இருக்க முதல் முதல உன்ன பொண்ணு பாக்க வந்த ஞாபகம் வருது எனக்கு" என்று அசடு வழிய


"அண்ணா போதும் எல்லாரும் உங்கள தான் பாக்குறாங்க இதெல்லாம் வீட்டுல வச்சுக்க கூடாதா!" என்ற கோபால் "என்ன அண்ணி நீங்களுமா" என்றதும் "அய்யோ கடவுளே என்னோட மனத்தை வாங்குறதுக்குன்னே வந்துருக்காரு" என தனபதிக்கு மட்டும் கேட்கும் குரலில் கூறியவர்


"டேய் வம்சி என்னடா பெரியவங்க பேசிட்டு இருக்கும் போது மரியாதை இல்லாமா இடையில வந்து பேசுறது போகும் போது பொண்ண பாக்கலாம் இப்போ போய் உக்காரு" என்று அடக்க


"இதுல என்ன சம்பந்தி இருக்கு பெரிய மாப்பிள்ளை சொல்றது சரிதானே நம்ம அந்த காலத்து ஆளுக நமக்கு என்ன தெரியும் பேசிட்டு வரட்டும் அதான் நிச்சயம் முடிஞ்சிருச்சே" என்ற மூர்த்தி "அம்மா நிரஞ்சனா இங்க வா" என்றதும் வேகமாக வந்தவள் "சொல்லுங்க அங்கிள்?"


"மாப்பிள்ளையையும் நளாவையும் பின் பக்கம் இருக்குற தோட்டத்துக்கு கூட்டுட்டு போம்மா" என்றதும் "சரிங்க அங்கிள்" என்றவள் வம்சியை ஒரு பார்வை பார்த்து விட்டு செல்ல பின்னோடு இரு ஆண்களும் சென்றனர்...
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top