பூவே வாய் திறவாயோ - 01

Advertisement

பூவே வாய் திறவாயோ


"ம்மா நிரு எந்திரிடா அப்பா கிளம்பிட்டாரு!" என்றதும் வேகமாக எழுந்து அமர்ந்தவள் "என்னம்மா இப்போ சொல்றிங்க நீங்க எந்திரிக்கும் போதே என்ன எழுப்பிவிட்டுருக்கலாமே!" என கண்களை கசக்கி கொண்டே படுக்கையில் இருந்து எழுந்தவள் குளியலறை சென்று முகம் கழுவி கலைந்த தலையை முடியை சீர் செய்து கொண்டு வெளியே வந்தாள்


"அருணா.. அருணா.. பாப்பா எந்திரிச்சிடாளா!" என சந்திரசேகர் கேட்க

"ம் எந்திரிசிட்டாங்க" என்று குரல் கொடுத்தவர் "சீக்கிரம் போ" என கூறி படுக்கையை சரி செய்து போர்வையை மடிக்க ஆரம்பித்தார்

"ம் அப்பா நா வந்துட்டேன் இப்போ கண்ண திறங்க" என்றதும் சிரித்த முகமாய் நின்றிருந்த மகளை பூரிப்புடன் கண்டவர் "அப்பா கடைக்கு போய்ட்டு வறேண்டா" என்க

"நீங்க சாப்டிங்களா ப்பா" என கேட்டாள்

"ம் சாப்டாச்சும்மா கடையில கொஞ்சம் வேலை இருக்கு இப்போவே போய் முடிச்சதான் சரியா இருக்கும், கஸ்டமர் வரும் போது அந்த வேலைய பாக்க முடியாது" என்றவர் "நீ சாப்டு காலேஜ் போய்ட்டு வா வண்டியில போறப்ப பாத்து பத்திரமா போகணும் சரியா" என நிரஞ்சனாவின் தலையில் கை வைத்து ஆசி வழங்கியவாறே கூற

"சரிப்பா நா பாத்து பத்திரமா போய்ட்டு வறேன், நேத்து என்கிட்ட பேசினிங்கள அத பத்தி நீங்க பீல் பண்ணாதீங்க எதுவும் நம்ம கைய விட்டு போகாது, நீங்க கடைய விக்க வேண்டிய அவசியமும் இருக்காது" என புன்னகைத்து கொண்டே கூற

"உன்னோட வாய் முகூர்த்தம் பலிக்கட்டும் பாப்பா சரி அப்பா போய்ட்டு வறேன்" என்றவர் "அருணா நா போய்ட்டு வறேன்" என்றதும் "ம் சரிங்க பாத்து போய்ட்டு வாங்க" என கூற விடைபெற்று கிளம்பினர்

அறைக்குள் நுழைந்தவள் "அம்மா இன்னைக்கு எந்த ட்ரெஸ் போடுறதுன்னு ஒரே குழம்பமா இருக்கு நீ செலக்ட் பண்ணி எடுத்து கொடுமே" என கேட்க

"ஏதாவது ஒன்ன போட்டுட்டு போம்மா எல்லா ட்ரெஸ்ஸுமே நல்லா தானே இருக்கு அதுவும் நீ செலக்ட் பண்ணது தானே அப்றம் என்ன!" என்று கூற

"இன்னைக்கு முக்கியமான ஒருத்தர பாக்க போகணும் ப்ளீஸ்ம்மா நீயே செலக்ட் பண்ணி கொடே என்னோட செல்ல அம்மால்ல" என அருணாவின் நாடியை பிடித்து கொஞ்ச

"சரி சரி எடுத்து கொடுக்குறேன்" என்றவர் "இந்த ப்ளாக் வித் கோல்டு நல்லா இருக்கும் போட்டுகிறயா என்றதும் "இது வேணாம் வேற நல்ல கலரா எடு முதல் தடவை அவர பாக்க போறேன்" என்றதும் வெள்ளை நிறத்தில் ஆங்காங்கே இளஞ்சிவப்பு நிற பூக்கள் தெளிக்கபட்டு இருந்த சுடியை எடுத்து காண்பிக்க

"ம் இது ஓகே" என்றவள் "தங்கஸ் ம்மா நா குளிச்சிட்டு வந்துடுறேன் எனக்கு ரெண்டு தோசை மட்டும் போதும்" என்றவாறே குளியலறை புகுந்து கொண்டாள்

அருணா சந்திரசேகரன் தவ புதல்வி நிரஞ்சனா 23 வயது நிரம்பியவள் முதுகலை வணிகம் இரண்டாம் ஆண்டு பயில்கிறாள், சந்திரசேகரன் விவசாய குடும்பத்தை சேர்ந்தவர் பருவ மழை பொய்த்து போனதால் விவசாயத்தை கைவிட்டு நில புலன்களை விற்று சென்னை வந்தனர், சொந்தமாக தொழில் தொடங்கிய போது ஆரம்பத்தில் அவர் எதிர் பார்த்து போல தொழில் அமையவில்லை நிரஞ்சனா பிறந்த நேரம் சந்திரசேகரன் ஆரம்பித்த தொழில் நஷ்டத்திலிருந்து படிப்படியாக லாபத்தில் திளைத்தது, அதிர்ஷ்டத்தின் அடையாளம் என்றும் குலம் காக்க வந்த மகாலட்சுமி என்று எண்ணியே சந்திரசேகரன் பூரிப்படைந்தார் அவள் முகத்தில் விழித்து செல்லும் நாட்கள் அனைத்தும் சுபமாகவே அமையும் என்று அவரது நம்பிக்கை

ஒரே மகள் என்பதால் அதிக செல்லம் அதே நேரத்தில் அதிக கண்டிப்பும் உண்டு, பிடிவாதம் அதிகம் நினைத்த செயலை செயல்படுத்தாமல் விடுவதில்லை இன்றும் அதே தான் நேற்று இரவு சந்திர சேகரின் புலம்பலையும் கவலையும் அறிந்து தன் தந்தைக்கு உதவ அவனை சந்திக்க செல்கிறாள் அதற்கான பரபரப்பு தான் அவளுக்கு, அவனை பற்றி சாதரணமாக குறிப்பிட்டிருந்தால் ஆயிரத்தில் அவனும் ஒருவன் என்று கடந்து செல்ல எண்ணியிருப்பாள், ஆனால் அவனை பற்றி சந்திரசேகரன் கூறியதை கேட்டு அவனை காணும் ஆவல் அவள் உள்ளத்தில் துளிர்த்து விருட்சமாய் மாறிவிட்டது ஓர் இரவுக்குள்!

குளித்து முடித்து உடைமாற்றி கொண்டு வந்தவள் ஈரக்கூந்தலை ஹேர்ட்ரையர் கொண்டு காயவைத்து சிறிய க்ளிப் மாட்டி கீழே விரிந்து இருந்த கூந்தலை இருமுறை வாரி, பிறை நெற்றியில் கருப்பு நிற பொட்டிட்டு உடைக்கு ஏற்ப சிறிய அளவிலான முத்து பதித்த காதணி செவிகளை அலங்கரிக்க மிதமான ஒப்பனையுடன் கையில் கைகடிகாரத்தை கட்டியபடி "அம்மா ரெடியா.." என்று கேட்டு கொண்டே வெளியே வர பெருமிதத்துடன் அவளையே பார்த்து கொண்டிருந்தவரை "அம்மா..." என உலுக்கியவள் "என்னாச்சு உனக்கு இப்டி பாக்குற" என்க

"இன்னைக்கு ரொம்ப அழகா இருக்க என்னோட கண்ணே பட்டுரும் போல" என கூறவும் "ரொம்ப கண்ணு வைக்காத" என்றவாறே தோசையை அவசர அவசரமாக உண்ண தொடங்கினாள்

"மெதுவா தான் சாப்ட்டா என்னவாம் இப்டி அவசர அவசரமா சாப்ட்டு எந்த கோட்டைய பிடிக்க போற" என்று கூற

"அம்மா முக்கியமான ஒருத்தர பாக்கணும் சீக்கிரம் போனா தான் அவர பாக்க முடியும்" என்றவள் அவசரமாக உண்டுவிட்டு எழ "நிரு கிளம்பிட்டயா ரெடின்னா போகலாம்" என வெளியே இருந்தவாறே குரல் கொடுத்தாள் நளாயினி

"இவ வேற தினமும் வெளிய நின்னு என்னோட பேர ஏலம் விடுறதே வேலையா போச்சு" என மூணுமுணுத்தவள் "ஏய் உள்ள வாடி உனக்கு தினமும் சொல்லணும்" என நொடித்து கொண்டவள் தன் கல்லூரி பேக்கை எடுத்து கொண்டு அருணாவிடம் விடைபெற்று கிளம்பினாள்

"ஏண்டி சீக்கிரம் கிளம்பி வர சொன்ன வீட்டுல ரீசன் சொல்றதுக்குள்ள போதும் போதும்னு ஆகிருச்சு அதுவும் என்னோட உடன்பிறப்பு கேக்குற கேள்விக்கு பதில் சொல்றதுக்குள்ள எனர்ஜியே போச்சு" என்றவள் "எதுக்கு சீக்கிரம் கிளம்பி வர சொன்ன!" என கேட்க

"ஒருத்தர பாக்க போகணும் போற வழியில சொல்றேன்" என்றவள் ஸ்கூட்டியை ஸ்டார்ட் செய்ய பின்னே ஏறிக்கொண்டாள் நளாயினி

சற்று தூரம் வரை அமைதியாக வந்தனர் நிரஞ்சனாவே பேச்சை தொடர்ந்தாள் "வம்சி கிருஷ்ணா உனக்கு தெரியுமா?" என்க

"அது யாருடி எனக்கு தெரியாதே" என்றவள் "ஏய் உன்னோட ஆளா எனக்கு தெரியாம எப்போ கரெக்ட் பண்ண" என சிரித்து கொண்டே கேட்க

"அட ச்சீ உனக்கு இத விட்டா வேற எதுவுமே தெரியாதா" என சிடுசிடுத்தவள் "கிருஷ்ணா குரூப்ஸ் எம்டி அவர பாக்க தான் போறோம்" என்றாள் நிரஞ்சனா

அடையார் செல்லும் பிரதான சாலையில் அமைந்திருந்தது கிருஷ்ணா ஸ்டோர்ஸ் நான்கு தளங்களை கொண்டு அமைந்திருந்த அந்த கட்டிடத்தின் முன்பு தன் ஸ்கூட்டியை நிறுத்தியவள் எதிர்புறம் இருந்த கடையை பார்த்து கொண்டே நளாவை அழைத்து கொண்டு வேகமாக உள்ளே சென்றாள்

இன்னும் கடை செயல்படவில்லை என்று கடை ஊழியர்கள் வரவில்லை என்பதிலேயே தெரிந்தது, குட்டையாக அதே சமயம் கட்டையாக வயிறு நான்கு மாத கர்பிணியை போல மேடிட்டு காட்டிய தோரணையிலேயே தெரிந்து போனது அவர் தான் மேலாளர் என்று கடை மேலாளரின் அருகில் சென்றவள் "சார் எம்டிய பாக்கணும் அவரு எப்ப வருவாரு?" என்றதும் "நீங்க யாரும்மா? அவர எதுக்கு பாக்கணும்?" என கேள்விகளை கேட்க

"சார் அது.. வந்து முக்கியமான விஷயம் அவர்கிட்ட தான் சொல்லணும் உங்ககிட்ட சொல்ல முடியாது" என்றாள் தயங்கியபடி

"சார் வந்துட்டாரு ஆனா அவர பாக்க முடியாதும்மா" என்றதும் "சார் அவரு தான் வர சொன்னாரு" என்றவள் சற்றும் யோசியாமல் "நீங்க வேணா அவர்கிட்ட போய் உங்க கேர்ள் பிரெண்டு வந்துருக்காங்கன்னு சொல்லுங்க அவருக்கு தெரியும்" என்றதும் இருப்பெண்களையும் ஏற இறங்க வித்தியாசமாக பார்த்தவர் தயங்கியபடி செல்ல, நிருவின் காதை கடித்தாள் நளா "ஏய் ஏண்டி அப்டி சொன்ன யாருன்னே தெரியாத ஒருத்தர" என்றதும் "வந்துட்டு பாக்காம போக சொல்றியா! இப்டி சொன்னதும் பாத்தல்ல எப்டி போறாருன்னு இன்னைக்கு பாக்காம போக கூடாது" என கூற "உன்னோட பிடிவாதத்துக்கு ஒரு அளவே இல்லாம போச்சு என்னமோ பண்ணு!" என சலித்து கொண்டாள் நளா


அறைக்கு வெளியில் இருந்தபடி
"சார் வரலாமா?" என குரல் கொடுக்க
"உள்ள வாங்க!" என்றவன் நிமிர்ந்து மேனேஜரை பார்த்தான் "என்ன சுதாகர் என்ன வேணும்?" என கேட்க

"சார்.." என்றவன் கண்ணாடி தடுப்பின் வழியே இருப்பெண்களையும் பார்த்தான் "என்ன சுதாகர் நா கேட்டதுக்கு பதில் சொல்லாம வெளிய வேடிக்கை பாத்துட்டு இருக்கிங்க என்ன விஷயம் எனக்கு வேலை இருக்கு எதுவா இருந்தாலும் சீக்கிரம் சொல்லுங்க" என சற்று எரிச்சலுடன் கூறினான்

"சார் உங்கள பாக்க ரெண்டு பொண்ணுங்க வந்துருக்காங்க" என்றதும் "யாருன்னு கேட்டீங்களா?" என்றான் வம்சி

"கேட்டேன் சார் அதுக்கு..." என தயங்கி நிற்க "என்ன சொன்னாங்க, சுதாகர் எதுவா இருந்தாலும் டக்குன்னு சொல்லுங்க எனக்கு ஒர்க் இருக்கு" என எரிச்சலுடன் மொழிந்தான் "சார் உங்க கேர்ள் பிரெண்டுன்னு சொன்னாங்க" என்றதும் "வாட்?" என அதிர்ந்தவன் "யாரு அப்டி சொன்னது?" என கேட்க

கண்ணாடி தடுப்பின் வழியிலேயே இரு பெண்களையும் காட்டினான் "இதுல யார் என்னோட கேர்ள் பிரெண்டுன்னு சொன்னது"

"அதோ அந்த வெய்ட் கலர் சுடி சார்" என காட்ட "சரி நீங்க போய் அந்த பொண்ண வர சொல்லுங்க" என்று விட்டு லேப்டாப்பில் கவனத்தை பதித்தான்

அறையை விட்டு வெளியேறிய சுதாகர் "மேடம் சார் உங்கள வர சொன்னாரு!" என்று விட்டு செல்ல

"சரிடி நீ இங்கயே இரு நா போய் பேசிட்டு வறேன்" என கூற "அதுவரைக்கும் நா என்ன பண்றதாம்"

"ம் ஒரு அஞ்சு நிமிஷம் பேச்சு தான் நாள் முழுக்க உக்காந்து பேச அந்த ஆள் என்ன என்னோட லவ்வரா கொஞ்ச நேரம் பேசாம உக்காரு உனக்கு போர் அடிச்சதுன்னா இந்தா எனக்கு அசைன்மெண்ட் எழுதிட்டு இரு" என கூற

"அய்யோ வேணாம்மா தாயே நா சும்மாவே உக்காந்துட்டு இருக்கேன் நீ என்ன பேசனுமோ பேசிட்டு வா" என கூற அவளை முறைத்து விட்டு நகர்ந்தாள் நிரஞ்சனா

"மே ஐ கமின் சார்" என அனுமதி கேட்க "யெஸ் கமின்" என்றவன் ஐந்தடி உயரத்தில் அழகு பதுமையாய் நின்றிருந்தவளை கண்டு கம்பிரமாய் எழுந்தவன் "ஹாய் டார்லிங் சொல்லிருந்தா நானே வந்துருப்பேனே நீ எதுக்கு இங்கல்லாம் வர்ற" என்றவன் இனி இப்டி ஆபிஸ்லாம் வரக்கூடாது என்ன பாக்கணும்னு தோணுச்சுன்னா ஒரு கால் பண்ணு நானே உன்ன பாக்க நீ இருக்குற இடத்துக்கே வறேன்" என கூறி கொண்டே அவள் அருகில் நெருங்கி வர பயத்தில் விதிர்விதிர்த்து போனாள் அதே சமயம் அவன் கம்பிரமான தேற்றத்தை கண்டு பேச்சற்று நின்றவள்

வேகமாக "சார் உங்க கிட்ட பேசணும் அதனால தான் நா அப்டி சொன்னேன் மத்தபடி நா உங்கள இதுக்கு முன்னாடி பாத்தது கூட இல்ல" என கூற

"ஏய் டார்லிங் என்னாச்சு எதுக்கு இப்போ பயப்படுற கூல் கூல்" என்றவன் தண்ணீர் கிளாஸை எடுத்து அவளிடம் நீட்ட வேண்டாம் என மறுத்து விட்டாள்

"சார் நா உங்ககிட்ட பேசணும்?" என்றதும் "பேசு அதுக்கு தானே என்ன பாக்க பொய் சொல்லிட்டு உள்ள வந்துருக்க" என ஏளனம் கலந்த குரலில் கூறினான்

அவன் முகத்தை பார்த்தவளுக்கு இன்னதென்று அவன் உணர்ச்சியை இனம் கண்டு கொள்ள முடியவில்லை "நீங்க பண்றது உங்களுக்கே நியாயமா சார் நீங்க பெரிய கடை வச்சுருக்கிங்க நல்லா சேல்ஸ் ஆகுது அப்றம் எதுக்கு இந்த கெட்ட புத்தி அடுத்தவங்க வயித்துல அடிக்க ஏ நினைக்கிறீங்க" என கோபத்துடன் பேச

அவன் அமைதியாக அவள் பேசுவதையே டேபிள் மேல் அமர்ந்தபடி கேட்டுக் கொண்டிருந்தான் அவன் சட்டை செய்யாமல் அமர்ந்திருப்பதை கண்டு அவளுக்கு கோபம் அதிகரித்தது "எல்லாம் பணம் இருக்குன்ற திமிரு" என்றதும் "ப்ச் எதுவா இருந்தாலும் டெரக்டா சொல்லு இந்த சுத்தி வளைச்சு பேசுறது எனக்கு சுத்தமா பிடிக்காது அதுவுமில்லாம வெட்டியா நின்னு பேசிட்டு இருக்குறதுக்கு எனக்கு டைம் இல்ல" என்று கூற


அவளுக்கு கோபத்தில் கன்னம் சிவந்தது "எனக்கும் வெட்டியா நின்னு பேசிட்டு இருக்க வேண்டிய அவசியமில்ல நானும் காலேஜ் போகணும்" என மிடுக்குடன் கூறியவள் "எங்க அப்பா கடைய விக்க மாட்டாரு அவருக்கு விருப்பமில்ல இன்னைக்கு முடிவு சொல்லுங்கன்னு சொன்னிங்கலாமே அதான் அவருக்கு பதிலா நான் வந்துருக்கேன்" என்றவள் "சர்க்கரை மாதிரி இனிக்க இனிக்க பேசுவிங்கன்னு கேள்விப்பட்டேன் அந்த வேலையெல்லாம் இனி வேணாம் இத சொல்லிட்டு போக தான் வந்தேன் சொல்லிட்டேன் எனக்கு டைம் ஆச்சு நா கிளம்புறேன்" என கூறிவிட்டு திரும்பியவளின் கை பற்றி வேகமாக இழுத்தான் வம்சி, இழுத்த இழுப்பில் அவன் மீது மோதியவள் விழிகள் விரிய திகைத்து போய் அவனை பார்த்தாள்

அவள் இடை பற்றியவன் "கேர்ள் பிரெண்டுன்னு சொல்லிட்டு ஒண்ணுமே வாங்காம போற" என்றதும் அவளுக்கு பயத்தில் இதயம் துடிப்பது தெளிவாக கேட்டது பயத்தை மறைத்து கொண்டு அவனிடமிருந்து விடுபட திமிறிக் கொண்டிருக்க அவன் பிடி மேலும் இறுகியது "என்ன பேபிம்மா பயமா? இவ்ளோ நேரம் ஜான்சி ராணி மாதிரி தைரியமா பேசிட்டு இருந்த இப்போ என்னாச்சு!" என்க

"எனக்கென்ன பயம்" என்றவள் "விடுங்க சார் அப்றம் நா போலீஸ்ல கம்பலைன்ட் பண்ணிருவேன்" என்றதும் "போன் நம்பர் வேணா கொடுக்கவா போலீஸ்ஸ இங்கயே வர சொல்லு" என்றான் வம்சி நக்கலாக

"சார் நீங்க நினைக்கிற மாதிரியான பொண்ணு நா இல்ல உங்கள பாக்குறதுக்காக தான் நா உங்க கேர்ள் பிரெண்டுன்னு சொன்னேன் அதுக்கு வேணா சாரி கேட்டுகிறேன் விடுங்க சார்" என பல்லை கடித்து கொண்டு கூறினாள்

சிரித்து கொண்டே அவள் கூறுவதை கேட்டு கொண்டிருந்தவன் கதவு திறக்கப்படும் சத்தம் கேட்டு திரும்பி பார்க்க அறை வாசலில் பாலா அவர்களின் கோலத்தை கண்டு ஆச்சர்யத்த்துடன் வாயில் கைவைத்தபடி நின்று கொண்டிருந்தான்

"டேய் உள்ள வரும்போது கதவ தட்டிட்டு வரணும்னு தெரியாது இப்டியா வருவ பாரு பயந்து போய்ட்டா என்னோட டார்லிங்" என கூற

"சார் இவரு பொய் சொல்றாரு இவரு யாருன்னே எனக்கு தெரியாது" என்றவள் வம்சியின் கையை கடித்து வைக்க வலியில் அவசரமாக கையை உதறினான், தப்பித்தோம் பிழைத்தோம் என அறையை விட்டு வேகமாக வெளியேறினாள் நிரஞ்சனா

அவள் செல்வதையே சிறு புன்னகையுடன் வம்சி கிருஷ்ணா பார்த்து கொண்டிருக்க அவனையே கண்ணிமைக்காமல் அதிசயித்தபடி பார்த்து கொண்டிருந்தான் பாலா...


தொடரும்...


வணக்கம் நண்பர்களே இத்தளத்தில் எழுதுவது இதுவே முதல் முறையாகும் புதிய எழுத்தாளார் ஆதலால் ஏதேனும் நிறை குறை இருப்பின் தங்கள் மேலான கருத்துக்களை தெரிவிக்கலாம் இத்தளத்தில் எழுத வாய்ப்பளித்த மல்லிகா மணிவண்ணன் அவர்களுக்கு எனது மன மார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறேன் நன்றி அக்கா


அன்புடன்
சுகன்யா மகேஷ்
 

banumathi jayaraman

Well-Known Member
:D :p :D
உங்களுடைய "பூவே வாய்
திறவாயோ"-ங்கிற அழகான
அருமையான புதிய லவ்லி
நாவலுக்கு என்னுடைய
மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்,
சுகன்யா மகேஷ் டியர்
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top