பூவிழி அசைவிலே-8

#1
பூவிழி அசைவிலே - 8


அரங்கத்தில் பலரின் கூக்குரலுக்கு காரணம் தெரியாமல், துள்ளி வரும் காளை முன்னே முட்டியதில் சிறு ரத்தக்கசிவு சிந்திய வயிற்றை பிடித்துக் கொண்டு நிமிர்ந்து பார்த்தான் நிலவன்.


அடங்கி நின்ற காளை மத ஊசியின் காரணமாக வெறி கொண்டு எழுந்து நிலவனை குத்தி கூராக்கி கிழிக்க வருவதை பார்த்த லட்சுமி தடியாய் இருந்த கொட்டகையை தளர்த்தி தாங்கி குதித்தபடி நிலவனுக்கும் அந்த காளைக்கும் நடுவில் சென்று நின்றது..


அது நிலவனை பார்த்து சீரும் முன் லட்சுமி அதன் முன்னால் மோதி முட்டி தள்ள, இரண்டுக்கும் பயங்கர பயோ வாரே நடந்தது.


லட்சுமி முட்டிய முட்டில் அந்த காளை கீழே விழுந்து சரிந்து மத ஊசியின் விளைவால் வெறி கொண்டு எழுந்து வந்து முட்ட, லட்சுமியின் ஒருபக்க கொம்பு சற்றே விலகி ரத்த ஆறு ஓட, நிலவன் மண்ணை தேய்த்து பாய்ந்தோடி அதன் வாலை பற்றி, திமிரி நிற்கும் அவன் புஜம் கொண்டு மைதானத்தில் இரண்டு சுழற்று சுழற்ற, அது நாலு காலையும் வீழ்த்தி மண்ணில் சாய்ந்தது. அதன் முதுகில் ஏறி நெற்றி பார்த்து நிலவன் குத்த காளை மயங்கி வீழ்ந்தது.


ஊர்காரர்கள் எல்லாம் ஒன்று சேர்ந்து காளையை தூக்க, நிலவன் லட்சுமியின் முதுகை நீவி அதன் முகம் தடவி செம்மண்ணை கையில் அள்ளி அதன் கொம்பில் இருந்து வரும் ரத்தத்தில் அப்ப, லட்சுமி தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டு நின்றது.


துகியும், அழகியும் நிலவனை கட்டிக் கொண்டார்கள். வெய்யோன் ஒரு வெள்ளை துணியை தண்ணீரில் முக்கி அவன் வயிற்றோடு சேர்த்து கட்டி, நிலவனை தூக்க,


நிலவன் அப்பொழுதுதான் கவனித்தான் காளை மாட்டிற்கு மத ஊசி கொடுக்கப்பட்டிருக்கும் விஷயத்தை. ஊர்காரர்கள் முன் சென்று காளையை தாங்கியவன் அதன் கண்ணை ஊற்று பாத்துவிட்டு, மூக்கில் கைவைத்து, தொண்டையை ஆட்காட்டி விரல் கொண்டு தழுவி தடவி பார்க்க, வந்ததே கோவம்.


மாட்டிற்கு காவல் காத்தவனை தேடி பிடித்து கன்னத்தில் சப்பென்று ஒன்று. அவன் கன்னம் பணியார துண்டு போல் வீங்கி, வாயின் ஓரம் குருதி விட,


“சொல்லுவே உனக்கு தெரியாம இது நடந்துருக்கவே செய்யாது. எவே இப்புடி பண்ணான். ஆரு காரணம். சொல்லுவே சொல்லு”, கோபத்தில் சிவந்து வெறியோடு அவனை பார்த்து கேட்க,


“நீங்க என்ன கேக்குறீக. எமக்கு ஒன்னும் வெளங்கலியே சண்டியரே”.


“டேய்ய்ய்ய்... திருப்பிக்கா பொய் சொன்னே எமக்கு கெட்ட கோவம் வருமாக்கும். உன்ற தோளை உரிச்சிபுட்டு உப்புகண்டம் போட்டு புடுவேனாக்கும். சொல்லுடா ஆரு இப்டி செஞ்சது”.


“ஏடே மச்சான் எதுக்கு இப்டி போட்டு அவன மிதிக்குற விடு. பாரு வயித்துல ரத்தம் வருது டவுண் ஆஸ்பத்திரிக்கு போகலாம், வா மச்சான்”.


நிலவன் கைபிடித்து இழுத்த, வெய்யோனை கன்னத்தை காட்டி பளார் என்று ஒன்று வைத்துவிட்டு, “இந்த எச்ச நாயி எவங்கூடவோ கூட்டு வச்சுபுட்டு அந்த காளைக்கு மத ஊசி போட்டு என்ன கொல்ல பாத்துருக்கான்”.


“ஐயா சாமி உம்ம கோவம் ஊருக்கே தெரியுமே நா எதுக்கு இப்பிடி செய்ய போறேன் தயவு செஞ்சு என்ன நம்புங்க சாமி”, காவல்காரன் நிலவன் காலில் விழுந்து மன்றாட,


வெய்யோன் எழுந்து மீண்டும் நிலவன் அருகில் வந்து, இரண்டு கன்னத்தையும் பொத்தி கொண்டு, “மச்சா அவந்தா ஓ காலுல விழுந்து அலர்றானே நம்பி விட்டு தொலை மச்சான்”.


திரும்பி பார்த்து வெய்யோனை முறைத்து, அவன் தலைமுடியை கொத்தாய் பற்றி சர்றென்று தூக்கி ஒரே எரி,


வெய்யோன் மலங்க மலங்க மேல்முழி விழித்துவிட்டு நிலவனை பார்க்க, அவன் இன்னும் வானத்துக்கும் பூமிக்கும் குதித்துக் கொண்டிருந்தான்.


“ஹாஹ்ஹா... டவுசர் பாண்டி நல்லா வாங்குனியா”.


“நீயா, மண்டைல இருந்து ரத்தம் கொட்டுது. அத பாக்காம நா அடி வாங்குனத பாத்து சிரிக்குறியா உன்ன”.


“போடா பக்கிரி தலையா”.


“மாமா அவர்தா எதுவும் தெரிலனு சொல்லுறாரே விட்டு தொலை மாமா”.


“இந்தாபுள்ள நீ சும்மா இரு கொஞ்ச நேரத்துல ஏ உசுரு போயிருக்கும். வீரத்துல உசுரு போனா பிரச்சனை இல்ல, ஆனா கேவலமா முதுகுல குத்தி செத்துருந்தா என்ன பண்ணுவ. டேய் இப்பம் சொல்ல போறியா இல்லையா?”. கை முஷ்டி இறுக்கி அவன் வயிற்றிலேயே ஒன்று குத்த, அந்த காவலாளி வயிற்றை பிடித்துக் கொண்டு சுருண்டான்.


அவனோடு இரவில் காவலுக்கு இருந்த காவலாளி ஓடிவந்தான். “சண்டியரே விட்டுருங்க அவே புள்ள குட்டிகாரே. நானும் ராவுக்கு அவங்கூடதா இருந்தேன். எனக்கு தெரியாம அவே எதுவும் பண்ணிருக்கமாட்டான். ஆனா...”


“என்னவே ஆனா இவே இந்த வேலை பாக்காட்டி வேற ஆரு பண்ணது”.


“அது, அது”...


காவலாளியின் சட்டை பற்றி திருகியவன், "என்னவே வந்து, போயி சொல்லுவே”.


“ராப்பொழுது உங்க ஊருக்காரவுக கொட்டகைய தாண்டி உள்ளார வந்துட்டு போனாக இருட்டுல அது யாருன்னு சரியா தெரியல சாமி. நேத்து இங்க நடந்த பஞ்சாயத்த வச்சு பாக்கும் போது அது அந்த சோ... சோலையா இருக்கும்னு தோணுது”.


மூக்கில் இருந்து பெரிய பெரிய காற்று அலைகள் வெளியில் வர, நெஞ்சில் ஓங்கி மார்தட்டிக் கொண்டே அரங்கத்தில் இறுக்கி கட்டி இருந்த கயிற்றை ஒரு மிதி மிதித்து தடியை உருவி இழுத்தான்.


“நேத்தே தோள உரிச்சு, ஊட்டி குப்புற தள்ளி சதை தனியா உசுரு தனியா பிரிச்சுருக்கணும் விட்டது எம்மமேல தப்புதா. இன்னிக்கு அவே செத்தான்”.


“மாமா, மாமா சொன்னா கேளு அந்த பரதேசி எப்டியோ போறான். ப்ளீஸ் மாமா விட்டுரு”.


கோவத்தில் வெறி தலைக்கேற விட்டான் துகியின் கன்னத்தில் சப்பென்று ஒன்று.


துகி கன்னத்தை பற்றிக்கொண்டு கீழே விழ, “மாப்பிள்ளை கேளு துகிய அடிக்குற அளவு உனக்கு கோவம் வந்தா எதிர்ல நிக்குறவனுக்கு பெரிய ஆபத்து என்ன கூட தூக்கி போட்டு மிதி ஆனா இந்த கோவத்தோட வெளிய போகாத”, வெய்யோன் நிலவன் காலை பிடித்து கதற,


“ஏலே காலவிடுவே இல்ல உன்ன எட்டி மிதிச்சே கொன்னுடுவேன்”.


“மாப்பிள்ளை என்ன நீ மிதிச்சு கொன்னாலும் பரவாயில்ல ஆனா ஏ பேச்ச கேக்காம போகாத”.


காலை இறுக்கி பிடித்து கதறிய வெய்யோனை எட்டி மிதித்துவிட்டு இறுமாப்புடன் சென்றான் நிலவன்.


வெய்யோன் அவன் பின் எழுந்து ஓடும்முன், “அண்ணா, மாமா சொன்னா எதுவும் கேக்காது வா வீட்டுக்கு போவோம். இன்னியோட சோலை செத்து ஒழியட்டும். நீ ஏ அழகி அழுகுற, மாமா பத்திரமா திரும்பி வந்துடும். ஓ மாமன கொன்னுட்டு”.


துகி...


“ப்ச்... வீட்டுக்கு போகலாம்”.


“என்ன காதலித்து என்ன பயன் கட்டிக்கொள்ள போகும் காதலி, உயிரானவள் ஒரு சொல் சொன்னால் அதை கேட்காது இறுமாப்புடன் கன்னத்தில் அப்பிவிட்டு போனது எந்தளவு நியாயம்”. துகியின் கண்ணில் கண்ணீர் ஆறு நிற்காமல் வலிந்து ஓட, ஏக்கத்தோடு வெய்யோன், அழகியை அழைத்து கொண்டு வீட்டிற்க்கு சென்றாள்.


தென்னை மரங்களுக்கும், தென்னை மட்டைக்கும் நடுவில் ஒய்யாரமாய் அமர்ந்து கள்ளை வாயில் கவுத்தி, இரண்டு காலை விரித்து, சூசகமாய் சிரித்துக் கொண்டு அமர்ந்திருந்தான் சோலை.


"ஹாஹ்ஹா... ஏன்டா ஏ வென்று, என்னையும், என்ற அக்காவையும் பஞ்சாயத்துல கூப்ட்டு நிக்க வச்சாடே மானத்தை வாங்குற? இன்னிக்கு மாடு முட்டி நீ செத்து ஒழிய போறவே பாரு”.


சோலை குடித்துக் கொண்டிருந்த மண்பானை தாழியை சில்லு சில்லாய் உடைத்து கொண்டு சென்றது நிலவன் எரிந்த தென்னை மட்டை.


நிலவனின் கோபத்தை கண்ணாற கண்ட சோலை காலை வாரியிழுத்து எழுந்து ஓட பார்க்க, நிலவன் இடது காலை தூக்கி சோலையின் பிடதியில் ஒரு மிதி. தென்னை மரங்களுக்கு தேக்கி வைத்திருக்கும் கழிவுகளில் விழுந்து புரண்டவனை பற்றி, ஓங்கி காதோர செவியோடு ஒரு அப்பு. சோலையின் காதில் இருந்து ரத்தம் சொட்ட, அவனின் தலைமுடியை தூக்கி எடுத்து நிமிர்த்தி,


“நேத்தே உன்ற உசுரு தனியா ஜீவே தனியா பிரிச்சுருக்கணுவே மூதி. உன்னை உசுரு பொழச்சு போனு விட்டது என்ற தப்பு. ம்... எம்ம கொல்ல வாயில்லா ஜீவனுக்கு மத ஊசி போட்டு அனுப்புரியோ. இந்த இந்த கைதானவே ஊசி போடுச்சு இத...”, சோலையின் தலையை இரண்டு தென்னை மரங்களின் இடுக்கில் சொருகியவன், அவன் காலை முகத்தில் வைத்து மிதித்து, வலது கையை பிடித்து திருக, அவன் வலியில் திமிறினான்.


“என்ற தங்கை குடுத்த சாப்பாட்ட சாப்பிட்டுபுட்டு தான இந்த ஒடம்ப வளத்த, இன்னிக்கு இத காக்காய்க்கு கூறு போட்டு காணாம ஆக்கிபுடுறேன்”.


தென்னை மட்டையின் நார்களுக்கு இடையில் விழுந்தடித்துக் கொண்டு ஓடி வந்தார் மரகதவள்ளி. நிலவன் சோலையை சோலிக்குள் முக்குவது போல் கழிவு வைக்கும் தூசி முட்களுக்குள் அவன் தலையை காலிட்டு அழுத்தி முக்க, ஓடிவந்த வள்ளி நிலவன் பின்னே அடித்தாள்.


“பாவி பாவி எப்பவும் என்ற தம்பிய தூக்கி போட்டு மிதிக்குறதையே பொழப்பா வச்சிருக்கியே. விடுடா விடு, அந்த கொழுப்பெடுத்த சிரிக்குதா உன்னை இப்படி பண்ண சொன்னாளா. அப்டி எத்தன நாள் ராத்திரி அவகூட குடும்பம் நடத்துன”...


சோலையை மிதித்துக் கொண்டிருந்த காலை திருப்பி வைத்து வள்ளியின் வயிற்றில் ஒரு மிதி, கோவம் பல ரூபத்தில் சிலிர்த்து ஏறி தொண்டை நரம்பு விடைத்து துடிக்க, காப்பு காய்ந்து கன்றி போன கையால் வள்ளியின் காத்தோடு ஒரே ஒரு அப்பு. வள்ளியின் தண்டால் அணிந்த காது, இரண்டு மொழம் நீளத்திற்கு தொங்க, அவள் வெற்றிலை வாயில் ஓங்கி ஒரு குத்து மொத்த பல்லும் அவன் காலடியில் விழுந்து மறுபிறப்புக்கு உத்தரவு வாங்கி போனது.


“ஏண்டி ஏ தங்கச்சிக்கு சித்தி ஆச்சே அடிக்க கூடாதுனு பொறுமையா இருந்தா உனக்கு கொழுப்பு கிலோ கணக்குல இருக்கு. நீயும் செத்து ஒழி இந்த நாயி கூட சேந்து”.


“அய்யய்யோ அய்யய்யோ யாராவது ஓடிவாங்க என்னையும் என்ற தம்பியவும் கொல்ல பாக்குறான். இந்த பாவிபய”.


நிலவன் வள்ளியின் தலையை இழுத்து தென்னை மரத்தின் கட்டையில் மோதவிட்டு அவள் கபாலத்தை இரண்டாக பொழக்க,


சோலை தடிக்கி விழுந்து எழுந்து அவன் அருகில் இருந்த இரும்பு ராடை எடுத்து கொண்டுவர, வள்ளி திரும்பி நின்று கீழே கிடந்த மண்ணை அள்ளி நிலவன் கண்ணில் போட, அவன் கண்ணை கசக்கிக் கொண்டிருக்கும் நேரம் ராடை வைத்து சோலை அவன் தலையில் அடிக்க போக, சரியான சமயத்தில் உள்ளே வந்து விழுந்தாள் ஆந்தினி.


நிலவனின் தோட்டத்தில் தோட்ட வேலைக்காக கடம்பவனால் சேர்க்கப்பட்டவர்தான் பஞ்சன். அவரின் ஒரே பேத்திதான் இந்த ஆந்தினி.


விறகு கட்டோடு தோட்டத்திற்கு சென்று கொண்டிருந்தவள் இங்கு நடக்கும் களேபரம் பார்த்து ஓடிவந்து நிலவனுக்கு விழுக வேண்டிய அடியை தன் தலையில் தாங்கிக் கொண்டாள்.


ஆந்தினி தலையில் தழும்பு விழுந்து ரத்தம் கொப்புளிக்க ஆரம்பிக்க அவள் அப்படியே மயங்கி கீழே சரிந்தாள்.


கண்ணில் பொங்கி வழியும் ஆத்திரத்தோடு சோலையை பார்க்க, அவன் நிலவனின் கோபம் கண்டு நிலையில் நிற்க முடியாது வள்ளியை கூட விட்டுட்டு ஓடிவிட்டான்.


நிலவன் தன்வயிற்றில் வரும் ரத்தத்தை கூட கவனிக்காது, ஆந்தினியின் அருகில் அமர்ந்து அவளை உலுப்ப, அவள் கண் திறக்க முடியாமல் ஆழ்ந்த மயக்கத்தில் இருந்தாள்.


“உன்ன ஆருடி குறுக்கால வரச்சொன்னா, விறகு கட்ட தூக்கிபுட்டு குடிலுக்கு போகாம, சே... தன் செம்மண் வேஷ்டியை கிழித்து அவள் தலையில் இறுக்கி கட்டியவன், வைத்தியசாலை நோக்கி அவளை கையில் அள்ளிக்கொண்டு சென்றான்”.சீரும் பாம்பை விட

சீற்றம் கொண்டவள் இவள்

அன்பு எனும் சொல்கொண்டு

உன் வாழ்வை அளிக்க

பிறந்தவள் இவள்

இவளிடம் எதை கண்டு

ஏமாற போகிறாய்

அன்பு கண்டா???

நேசம் கண்டா???

பண்பு கண்டா???

பாசம் கண்டா???

சொல் கண்டா???

செயல் கண்டா???

விசுவாசம் கண்டா???

இல்லை

எல்லாவற்றிற்க்கும் மேல்

காதல் கண்டா???காதலுக்கும்

காழ்புணர்ச்சிக்கும்

இரண்டு எழுத்துதான்

வித்தியாசம்

காதல்

நேசத்தால்

உருவானது

காழ்வு

நேசம்

மறைக்க

உருவானது

காதலும்,

காழ்வும்

போட்டி போட்டுக்

கொள்ளும் நேரம்

இடையில்

வெல்ல போவது

யாரோ???

எதுவோ?????


கன்னியின்

நேசம்

கண்டு

மயங்கி

விடாதே

கள்வா

நீ

மயங்கி

நிற்க்கும்

தருணத்தில்

உன்னையே

அறியாமல்

பல்வேறு

களேபரம்

நடக்கும்...மன்னன் வாழ்வில்

வினை விதைக்க

வந்தவள்

பார்போற்றும் உலகில்

இவனை தலைகுனிய

வைக்க பிறந்தவள்

இவனின் கருவை

சுமந்து நிற்க்கும்

பாக்கியம் பெற

போகிறவள்

எப்படி தெரியுமா???கருவில் இருந்து தான் அனைத்து

பிரச்சனையும் ஆரம்பம்...


அசைவுகள் தொடரும்...
 
#2
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
பாலா ராஜி டியர்

வெய்யோனும் துகிராவும் சொல்லுவதைக் கேட்காமல் சோலையை உதைக்கப் போய் முட்டாள் பயல் நிலவன் சாகப் பார்த்தானே

அது எப்படி பொறுக்கி தம்பிக்கு அடி விழும் நேரம் கரெக்ட்டா வள்ளி மூதேவி வந்துடுறாள்
நிலவனையும் அழகியையும் தப்பாப் பேசுற அந்த நாற வாயை இன்னும் நல்லா உடைக்கணும்

ஆந்தினிதான் நிலவனுக்கு ஜோடியா?
இவளுடைய குழந்தைக்கு அப்பா நிலவன்தானா?
ஆனால் அது எப்படி?
சோலையின் சதி ஏதாவது இருக்குமோ?

அப்போ துகிராவின் நிலைமை?
ஆந்தினியாலேதான் நிலவன் பஞ்சாயத்தில் நிற்கப் போறானா?

இதனாலே தான் சொன்ன சொல்லுக்காக கடம்பவன் இறந்து விடுவாரா?
 
Last edited:
#3
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
பாலா ராஜி டியர்

வெய்யோனும் துகிராவும் சொல்லுவதைக் கேட்காமல் சோலையை உதைக்கப் போய் முட்டாள் பயல் நிலவன் சாகப் பார்த்தானே

அது எப்படி பொறுக்கி தம்பிக்கு அடி விழும் நேரம் கரெக்ட்டா வள்ளி மூதேவி வந்துடுறாள்
நிலவனையும் அழகியையும் தப்பாப் பேசுற அந்த நாற வாயை இன்னும் நல்லா உடைக்கணும்

ஆந்தினிதான் நிலவனுக்கு ஜோடியா?
இவளுடைய குழந்தைக்கு அப்பா நிலவன்தானா?
ஆனால் அது எப்படி?
சோலையின் சதி ஏதாவது இருக்குமோ?

அப்போ துகிராவின் நிலைமை?
ஆந்தினியாலேதான் நிலவன் பஞ்சாயத்தில் நிற்கப் போறானா?

இதனாலே தான் சொன்ன சொல்லுக்காக கடம்பவன் இறந்து விடுவாரா?
லவ்லி கமெண்ட் வெயிட் அண் சீ டியர்.
 
Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Sponsored

Advertisement

New Episodes