பூர்வ - ஜென்மம் - Episode 1 to 3

Advertisement

விடியற்காலை

ரித்திகா அந்த கூரை வேய்ந்த வீட்டினின்றும் வெளியே வந்தாள்.

மாஞ்சோலை, முக்கால்வாசி பழமையையும் இந்த தலைமுறையினர் முயன்று உருவாக்கிய புதுமையும் சேர்ந்து விளங்கும் ஒரு கிராமம்.

முக்கால் ஏக்கர் பரப்பளவு உள்ள நிலம் சுற்றிலும் தோட்டம். ரித்திகா தோட்டத்துக்குள் சென்றாள். தோட்டத்தை சுற்றிலும் மரங்கள் மற்றும் ஒரு சாதாரண வேலி. பூக்களின் நறுமணமும், கொஞ்சம் தொலைவில் உள்ள ஏரியிலிருந்து கலங்கள் வழியாக தண்ணீர் ஓடும் ஒலியும், ஏரி கரையில் உள்ள கோயிலில் போடப்பட்ட கண்ணன் பாட்டும் சேர்ந்து ரித்திகாவுக்கு ஒரு புதுவகையான அனுபவத்தையும் உற்சாகத்தையும் கொடுத்தது.

அந்த சமயம் குட் மார்னிங் என்று சொல்லி கொண்டு Gopi வந்து நின்றான் ரித்திகா ஹாய் குட் morning கோபி சொல்லி வரவேற்றாள்.

இங்க என்ன பண்ற ரித்திகா - கோபி

ஹ்ம்ம் பூ கிள்ளிக்கிட்ருக்கேன் விளையாட்டாக பதில் சொன்னாள்.

பிறகு இருவரும் கொஞ்ச நேரம் தோட்டத்தில் சுற்றி கொண்டும் செடி கொடிகளை ஆராய்ந்து கொண்டும் அதற்கான அறிவியல் பெயர்களை நினைவில் கொண்டு வந்தும் பேசி கொண்டிருந்தார்கள்.

ரித்திகா கோபி இருவருமே நல்ல நண்பர்கள். அதுவும் ஒரு நினைவு அலைவரிசையில் பயணிக்கும் நண்பர்கள். சென்னையில் கடலோரத்தில் அமைந்துள்ள கட்டிடத்தின் 12 வது மாடியில் உள்ள ஒரு டிடெக்ட்டிவ் ஏஜென்சியில் பணியாற்றுபவர்கள். அதனால் இப்படியொரு சூழ்நிலை, அமைதி, உற்சாகம் இதுவரை அவர்கள் கண்டதில்லை. இதற்கான பாராட்டு நிச்சயம் இவர்களுடைய chief Mr . ரகுராமனுக்கே.

தோட்டத்திற்கு வெளியே ஒரு குரல் ஒலித்தது இவர்களை அழைத்து. இருவரும் வெளியில் வந்து தங்களுக்கு தரப்பட்ட காபி டம்பளர்களை பெற்று கொண்டனர் . காபி அருந்திவிட்டு சிற்றுண்டிக்கு தயாராகுமாறு சொல்லிவிட்டு சென்றாள் அந்த பெண்மணி. கொஞ்ச நேரம் இருவரும் தங்கள் ப்ராஜெக்ட் வேலையை பற்றி பேசிவிட்டு தத்தம் அறைக்கு தயாராக சென்றனர்.

இருவரும் இளங்கலை ஜௌர்னலிசம் படித்தவர்கள். பெரிய பத்திரிகையிலும் மீடியாவிலும் இடம் பெற வேண்டும் என்று ஆர்வம் உள்ளவர்கள். ஆனால் மற்ற துறைகளை காட்டிலும் இதில் போட்டியும் தன்னுடைய தனித்தன்மையை இழந்து செயல் படவேண்டிய சுழலும் அதிகம். ஆகையால் இவர்கள் சரியான வாய்ப்பை எதிர்பார்த்துக்கொண்டு கோபியின் மாமாவிற்கு நண்பரான Mr . ரகுராமனிடம் வேலைக்கு சேர்ந்தனர்.

Mr ரகுராமன் கிட்டத்தட்ட 10 வருடங்களாக தாரா டிடெக்ட்டிவ் ஏஜென்சியை நடத்தி வருகிறார். இவர் சிறைதுறை அதிகாரியாக இருந்து விருப்ப ஓய்வு பெற்றவர். நேர்மையானவர். ரித்திகா மற்றும் கோபியை தவிர இன்னும் 3 பேர் இவரிடம் வேலை பார்த்து வருகின்றனர். அவருடையது ஒரு அலுவலகம் என்று சொல்லமுடியாது. அனுபவங்களை பரிமாறி கொள்ளும் இடம் என்று சொல்லலாம். ஆனால் எந்த கேஸை எடுப்பது, விசாரிப்பது என்பதை முடிவு செய்வது Mr .ரகுராமன் & Mr .ஜோசப் . Mr . ஜோசப் என்பவர் அரசு இலாகாவில் ஒரு பொறுப்புள்ள பதவி மற்றும் அதிகாரத்தில் இருந்து விருப்ப ஓய்வு பெற்றவர். அது மட்டுமல்லாமல் Mr .ரகுராமின் நெடுநாளைய நண்பர். Mr . ரகுராமன் வாழ்வில் ஏற்பட்ட கசப்பான தருணங்களில் பக்க பலமாக நின்றவர்.



Thodarum...1


இருவரும் குளித்து தயாராகி வந்தனர். இட்லியும் ஆப்பமும் சிற்றுண்டியாக பரிமாறப்பட்டது. அதில் கிராமத்தின் மணமும் கிராம மக்களின் மனதும் உணர முடிந்தது இருவராலும். சாப்பிட்டு முடித்து நன்றி சொல்லிவிட்டு கிளம்பினர்.

இவர்கள் இங்கு வந்திருப்பது ஆர்கானிக் விவசாயத்தின் அவசியத்தையும் அதை சார்ந்து இருக்கும் சிறு குறு தொழில்களில் உள்ள வேலைவாய்ப்புகளையும் பற்றிய ஒரு documentary பிலிம் எடுப்பதற்காக.

ஊர்தலைவரின் வேண்டுகோளிற்கிணங்க Mr .ரகுராமன் இவர்களை அனுப்பியுள்ளார். அலுவலக பணியில் இடைவெளி வரும்போது இவர்களின் ஜௌர்னலிசம் படிப்பிற்கான தன்னாலான முயற்சிகளை செய்வார்.

ரித்திகா, கோபி யை அழைத்து செல்ல மாட்டு வண்டியை அனுப்பி இருந்தார்கள்.

ஆர்கானிக் பார்ம் இவர்கள் எதிர்பார்த்ததை விட அழகாகவும் நேர்த்தியாகவும் இருந்தது. ஊர் தலைவர், கூட்டு விவசாயத்தின் மேன்மையையும், ஆர்கானிக் முறையில் பயிரிடவேண்டிய அவசியத்தையும் , அதற்கு தேவையான உரம் தயாரிப்பு, சந்தைப்படுத்தல் ஆகியவற்றை பற்றி எடுத்துரைத்தார். அடுத்ததாக விவசாயத்தை சார்ந்துள்ள தொழில்கள் பற்றியும் அதை வெற்றிகரமாக எப்படி நடத்த முடியும் என்பதை எடுத்துரைத்தார். இவர்களுக்கே இவரிடம் இவ்வளவு விடயங்கள் கிடைக்கும் என்று எதிர்பார்க்கவில்லை. Chief சொன்னார் என்பதற்காகதான் இதில் ஈடுபட்டனர். ஊர் தலைவர் ராணுவ அதிகாரியாக பணியாற்றியவர் என்பது தெரியவந்தது.

மேலும் இரண்டு நாட்கள் தங்கி குறும்படத்திற்கான போட்டோக்களையும், இன்னபிற தேவைகளையும் சேகரித்தபிறகு சென்னைக்கு கிளம்ப ஆயத்தமாயினர்.

விடைபெற வேண்டி ஊர் தலைவரை பார்க்க சென்றனர். கொஞ்ச நேரம் பேசியிருந்துவிட்டு கிளம்ப அவர் இன்னும் இரண்டு நாட்கள் தங்கி செல்லும்படி கேட்டார். காரணம் நாளை மறுநாள் நடக்கவிருக்கும் நூலக திறப்பு விழா மற்றும் சந்தை கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டும் விழா.

இருவருக்கும் மறுக்க இயலவில்லை. அதன்பிறகு கொஞ்ச நேரம் தனக்கும் இவர்களுடைய chief கும் இடையிலான நட்பு மற்றும் ராணுவத்தில் இருக்கும்போது ஏற்பட்ட சில சுவாரஸ்யமான சம்பவங்களை பேசி கொண்டிருந்தனர். அந்த இரண்டு நாட்களுக்குள் ஊரை சுற்றியுள்ள, பார்க்க வேண்டிய இடங்களுக்கு சென்று வந்தனர். அனைத்து ஏற்பாடும் ஊர்தலைவருடையது. மலை மேல் இருக்கும் கோவில் அதன் பக்கத்தில் இருக்கும் அருவி, பழத்தோட்டம். இவர்கள் இருவருக்குமே மிகுந்த உற்சாகத்தை கொடுத்தது.

திறப்பு விழா நாள், ஊர் மக்கள் அனைவரையும் வந்திருந்தனர். இன்னும் சற்று நேரத்தில் முக்கிய பிரமுகர் வந்துவிடுவார் என்று பேசிக்கொண்டனர். இவர்கள் இருவரும் போடப்பட்டிருந்த நாற்காலிகளில் இரண்டாவது வரிசையில் அமர்ந்தனர்.

சிறிது நேரத்தில் கார் வரும் ஓசை கேட்டு ஊர் மக்கள் அனைவரும் எழுந்து நின்றனர். அனைவருக்கும் வணக்கம் கூறிக்கொண்டே மேடை மீது ஏறிக்கொண்டிருந்தான் தனஞ்செயன்.

தனஞ்செயன் வளர்ந்து வரும் ஒரு அரசியல்வாதி. மேடையில் ஏறி நின்று ஒரு முறை மக்கள் அனைவரையும் ஒரு நோட்டம் விட்டான். இது அரசியலில் முதல் பாடம்.

Rithika வை அங்கு அவன் எதிர்பார்க்கவில்லை.

Thodarum...2


Rithika வும் அவனை பார்த்தாள். சட்டென்று நினைவில் கொண்டு வர முடியவில்லை, ஆனால் எங்கோ பார்த்த நினைவு. அவனுக்கு அப்படியில்லை மனதில் பதிந்த உருவம். மேடை பேச்சுகள் ஆரம்பமானது. நூலகத்தின் அவசியம், அதன் பராமரிப்பு அனைத்தும் அறிவிக்கப்பட்டது.

அவளுக்கும் நினைவுக்கு வந்தது பார்வைகளை பரிமாறிக்கொண்ட சந்தர்ப்பம். ஆனால் இந்த இரண்டரை வருடத்தில் அவனிடத்தில் இப்படியொரு மாற்றம் எதிர்பாராதது.

இரண்டரை வருடத்திற்கு முன்பு அவளுடைய கல்லூரி ஆண்டுவிழாவில் சந்தித்தது. கல்லூரி நிர்வாகம் நிகழ்ச்சிக்கு தலைமை தாங்க ஒரு முக்கிய அரசியல் பிரமுகரை அழைத்தது. அவரோடு வந்தவன் தான் இப்போது மேடையில் உரையாடிக்கொண்டிருக்கும் தனஞ்செயன்.


தனஞ்செயன் ஒரு அரசியல்வாதியாக உருவாக வேண்டுமென்று பாடுபடுபவன். அரசியல்வாதி என்றால் அனைவரும் நினைப்பது போல் முதலமைச்சர், பிரதமர் பதவி ஆசை இல்லை. அதற்கும் மேலாக கட்சியை தன் கட்டுப்பாட்டில், தன் கட்டளைக்கிணங்க அனைத்தும் நடைபெற வேண்டும் என்ற ஆசை. புதுவிதமான ஆசைதான் ஆனால் நடக்காது என்று சொல்ல முடியாது. முயன்றால் முடியாதது எதுவும் இல்லை .

இவர்களின் அறிமுகம் எப்படி ஏற்பட்டது என்றால், கல்லூரியில் அனைவருக்கும் ஒரு தலைப்பு கொடுக்கப்பட்டது கட்டுரை போட்டிக்காக , “அரசியலும் அறநெறியும் “. அதில் ரித்திகாவுக்கு முதல் பரிசு கொடுக்கப்பட்டது. அப்போது மேடையில் ஏற்பட்டது இவர்களின் பார்வை சங்கமம்.

திறப்பு விழா முடிந்து ஊர்த்தலைவர் இவர்கள் இருவரையும் தனஞ்செயனுக்கு அறிமுகப்படுத்தி வைத்தார். இருவருமே ஏற்கனவே தெரிந்ததுபோல் தங்களை வெளிப்படுத்திக்கொள்ளவில்லை . அது ஏனென்று அவர்களுக்கும் தெரியவில்லை. பரஸ்பரம் வணக்கம் செய்து கொண்டனர். தனஞ்செயன்னும் பொது வேலையாக வந்திருப்பதால் அதற்கு மேல் அங்கு நிற்க இயலவில்லை. வண்டியில் ஏறும்முன் ஒருமுறை திரும்பி பார்த்தான் அவளும் பார்ப்பது தெரிந்தது. உள்ளத்திற்குள் ஒரு வீணையின் நாதம். முகத்தில் உற்சாகத்தின் ஊற்று. ரித்திக்காவிற்கும் என்னவென்று சொல்லமுடியாத உணர்வு. ஆனால் பிடித்திருந்தது.

Rithikkavum கோபியும் மதிய உணவுக்குப்பின் சென்னைக்கு புறப்பட்டனர்.

சென்னை மாநகரம், காலை 4 :30 மணி, Koyambedu பேருந்து நிலையம்

இருவரும் பேருந்தில் இருந்து இறங்கினர்.ஆட்டோ பிடித்து Sholinganallur செல்ல கேட்டனர். இரண்டு ஆட்டோக்கள் பிறகு மூன்றாவது ஆட்டோ கொஞ்சம் இவர்கள் சொன்ன தொகைக்கு ஒத்து வரவும் ஏறிக்கொண்டனர். பயணிக்கும்போது தாங்கள் சேகரித்த விவரங்களை பற்றி விவாதித்தனர்.

முதலில் ரித்திகாவின் வீடு, ஒரு இரண்டு தெருக்கள் தள்ளி கோபியின் இல்லம் .ரித்திகா இறங்கி கொண்டாள். கோபியை பார்த்து அலுவலகத்தில் சந்திப்போம் என்று விடை பெற்றுக்கொண்டாள்.

ரித்திகாவின் வீடு, ஒற்றை மாடி வீடு அழகாக நேர்த்தியாக இருந்தது. மாஞ்சோலை அளவுக்கு இல்லை என்றாலும் வீட்டை சுற்றி சிறிய தோட்டம் இருந்தது. அவள் அம்மாவின் கைவண்ணம். அப்பா ராமானுஜம் கல்லூரி கணித பேராசிரியர் இன்னும் இரண்டு வருடத்தில் ஓய்வு பெறவேண்டிய வயதை எட்டிவிடுவோமே என அவ்வப்போது கவலைகொள்பவர். ஒரு தம்பி நேத்ரன் visual communication பயின்று கொண்டிருக்கிறான். அம்மா Jothi வீட்டு பொறுப்பாளி. படிப்பாளியும் கூட குமுதம், குங்குமம்,ஆனந்தவிகடன் ஒன்றும் பாக்கியிராது. அதோடு தோட்டக்கலையும். மொத்தத்தில் அளவான குடும்பம் சிரமம் இல்லாத வாழ்க்கை.


அலுவலக நேரம், தாரா டிடெக்ட்டிவ் agency

சேகரித்து வந்த விபரங்களையும் விடீயோவையும் பற்றி கலந்தாலோசித்து கொண்டிருந்தனர்.

குறும்படம் நன்றாகவே வந்திருந்தது. படத்தின் முடிவில் மேலும் விவரங்களுக்கு தொடர்புகொள்ள அந்த ஊர்தலைவரின் முகவரியும் தொலைபேசி எண்ணும் கொடுக்கப்பட்டது.

சில நாட்கள் சென்றன. அந்த சில நாட்களில் இவர்கள் தேடாமலேயே அவரவர்கள் பற்றிய செய்திகள் காதில் விழுந்து கொண்டிருந்தன. மனதில் பதிந்து கொண்டிருந்தனர்.


“ரித்திகா தனஞ்செயன்” மனதில் சொல்லி பார்த்துக்கொண்டாள். பிறகு தன் எண்ணப்போக்கை எண்ணி தன்னையே திட்டி கொண்டாள். இதுநாள் வரையில் ஒரு வார்த்தை கூட பேசவில்லை, அவன் எப்படிப்பட்ட குணமுடையவன் என்பது தெரியாது, அவனுடைய குடும்ப சூழல் பற்றி தெரியாது, ஆனால் மனதில் இப்படியொரு எண்ணம் வந்ததை நினைத்து வருந்தினாள்.

நடப்பது எல்லாம் நம்மை கேட்டா நடக்கின்றன. நம் வாழ்வில் ஒரு சில விஷயங்கள் ஏன் நடந்தது, எதற்காக நடக்கிறது என்று நாமே யோசிக்கும் அளவுக்கு இருக்கும். நம்முடைய தலையீடு இல்லாமலேயே நடக்கும். அனேகமாக அனைவரது வாழ்விலும் இப்படி பட்ட தருணங்களை சந்தித்திருப்போம். விதியின் விளையாட்டு என்று சொல்லிக்கொள்ளலாம் . பூர்வ ஜென்ம பலன் என்றும் சொல்லிக்கொள்ளலாம்.

Thodarum...3
 

banumathi jayaraman

Well-Known Member
:D :p :D
உங்களுடைய "பூர்வ
ஜென்மம்"-ங்கிற அழகான
அருமையான புதிய லவ்லி
நாவலுக்கு என்னுடைய
மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்,
ரேகா முரளிநாதன் டியர்
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top