பூர்வ - ஜென்மம். — episode 10 & 11

Advertisement

இவர்கள் இருவரும் பேசிக்கொண்டிருந்தது அந்த பினாமியின் காதுகளில் சில கட்சி காரர்கள் ஓதினர்.

ஏற்கனவே மகன் சிறைக்கு சென்ற வருத்தமும், கட்சி பொறுப்பு பறிபோன கவலையிலும் இருந்தவர்க்கு இவர்கள் சொன்ன விஷயம் இது கூட்டுசதியோ என்று தோன்றியது. மகனை பார்க்க செல்லும்போது இந்த விஷயத்தை பற்றி சொல்ல அவனுக்குள் பழிவாங்கும் வெறி மேலிட்டது.

கட்சி அலுவலகத்தில் உள்ள சிறு சிறு வேலைகளை முடித்து விட்டு, மற்றவர்களுக்கு உகந்த வேலைகளை பணித்து விட்டு இரண்டு நாட்களில் ஊருக்கு செல்ல திட்டமிட்டான். அவருடைய தந்தைக்கு பெருமை தான் என்றாலும் அரசியலில் காணப்படும் சூழ்ச்சிகள் அவருக்கு பயத்தை தந்தன. முதன் முதலில் கட்சியில் தொண்டனாக சேர போவதாக சொன்னபோதே இது சரிவராது என்று அறிவுரை கூறினார். ஆனால் அவனுடைய அரசியல் தாகம் அதெயெல்லாம் ஏற்பதாக இல்லை. அவன் முன்னேறும்விதம் அவருக்கு கொஞ்சம் ஆறுதல் அளிப்பதாக இருந்தது.

திட்டமிட்டபடி ஊருக்கு பயணமானான். ரித்திக்காவிற்கு சொல்ல வேண்டும் என்று தோன்றிற்று. உடனே கைபேசி எடுத்து அவளுக்கு அழைப்பு விடுத்தான். மறுமுனையில் ரிங் போயிற்று சிறிது நேரம் கழித்து ஹலோ என்ற குரல். இவன் எதுவும் பேசாமல் குரலை கேட்டுக்கொண்டிருந்தான்.

அவளுக்கு இவனுடைய எண் தெரியாததால் அதை பொருட்படுத்த வில்லை. சிறிது நேரம் கழித்து மீண்டும் அழைத்தான். அப்போது கோபியும் அவளும் எடிட்டரின் அறையில் நாளை பிரசுரிப்பதாக இருந்த செய்தியை பற்றி பேசிக்கொண்டிருந்தனர். கைபேசியை எடுக்கவில்லை. அவனுக்கு கிடைத்த வாய்ப்பை விட்டுவிட்டோமே என்ற கவலை. ஓட்டுநர் பக்கத்தில் இருக்கும்போது பேசவும் தயக்கமாக இருந்தது. யாரையும் இந்த காலத்தில் நம்பமுடியாது . சிற்றுண்டி காக நிற்கும்போது அழைத்தான். அப்போது தான் ரித்திகா வீட்டின் உள்ளே நுழைந்தாள். யாருடைய எண் இதுவரை மூன்றுமுறை வந்து விட்டது என்று சொல்லிக்கொண்டே எடுத்தாள். தனஜெயன் அவசரமாக ஹலோ நான் தான் பேசுகிறேன். அவளுக்கு குரல் பிடிபடவில்லை. நான்தான் என்றாள் யார் என்று சற்று உரக்க கேட்டாள். பிறகு பேச ஆரம்பித்தான். தனஞ்செயன் பேசுகிறேன் இது என்னுடைய எண் தான் என்றான்.


ஓ அப்படியா சாரி என்னால் அப்போது பேசயிலவில்லை என்று வருத்தம் தெரிவித்தாள். அது தன்னுடைய தனிப்பட்ட எண் எனவும் குறித்துக்கொள்ளும்படியும் கூறினான். பிறகு தான் ஊருக்கு சென்றிக்கொண்டிருப்பதாக கூறினான். அவனுடைய தந்தையை பற்றியும் தங்கையை பற்றியும் கூறினான். கிட்டத்தட்ட 10 நிமிடங்கள் பேசினர். ரித்திக்காவின் குடும்பத்தை பற்றி அவனும் கேட்கவில்லை அவளும் சொல்லவில்லை. ஆனால் அவனுக்கும் கேட்கவேண்டும், அவளுக்கும் பகிர்ந்துகொள்ள வேண்டும் என்று இருந்தது.

Thodarum ...10


தனஞ்செயனின் தந்தை ஒரு வரனின் புகைப்படத்தை காட்டி தனக்கு மிகவும் பிடித்திருப்பதாகவும் தங்கைக்கும் சம்மதம் என கூறினார். அவனுக்கு பிடித்திருந்தால் அவர்களை பெண் பார்க்க வர சொல்லலாம் என்று எண்ணினார். பையன் Chennai ஏர்போர்ட்டில் கஸ்டம்ஸ் துறையில் பணிபுரிவதாக கூறினார். சரி என்று அடுத்த 10 நாட்களில் ஒரு நல்லநாள் பார்த்து வரசொல்லினர்.

தனஞ்செயன் குடும்பத்திற்கு கொஞ்சம் நிலமும் இருந்தது. அதில் கரும்பு பயிரிட்டு இருந்தனர். இப்போது அறுவடை சமயமாகையால் நேரம் சரியாக இருந்தது. அறுவடை, மில்லுக்கு அனுப்புதல், மக்கள் கோரிக்கைகள், களப்பணி என நாட்கள் மின்னல் வேகத்தில் ஓடியது. ஊருக்கு வந்து இருமுறை தொலைபேசியின் வாயிலாக பேசிக்கொண்டனர். ஆனால் ஏதோவொரு தடங்கல் தயக்கம் இருவருக்கும் இருந்தது. சகஜமான ஒரு பேச்சுவார்த்தை இருவருக்கும் இடையில் ஏற்படவில்லை.

ரித்திக்காவிற்கு இந்த வேலையில் ஒரு நிறைவு இருந்தது. ஒன்று தன் படிப்புக்கு ஏற்ற வேலை மற்றொன்று அலுவலக சூழல். தற்போது எடிட்டராக இருப்பவரும் சப் எடிட்டரரும் தங்களுடைய அனுபவங்களை அவளுக்கு எடுத்துரைத்தனர். எந்த சூழ்நிலையை எப்படி எதிர்கொள்ள வேண்டும், எப்படி வினாக்களை தொடுத்தால் கேள்விக்கான பதிலை பெறமுடியும் என அறிவுறுத்தினர். கோபியை தான் அடிக்கடி பார்க்கமுடிவதில்லை. அவன் வேறு பத்திரிகையில் சுற்றுலா தலங்களை பற்றிய கட்டுரைகளை எழுதி கொண்டிருந்தான். தொலைபேசி உரையாடல்களை பகிர்ந்து கொண்டனர். ரித்திக்காவிற்கு தனஞ்செயனை பற்றி கோபியிடம் சொல்லவேண்டும் என்று தோன்றும் ஆனால் எப்படி எடுத்துக்கொள்வான் என்பது தெரியாததால் நேரில் பார்க்கும்போது சொல்லிவிடலாம் என்று காலத்தை கடத்தி வந்தாள்.

ஒரு ஞாயிறன்று மதிய வேளையில் கோபி ரித்திக்காவின் வீட்டுக்கு வந்திருந்தான். அடுத்தவாரம் ஜெய்ப்பூர் போகவேண்டி இருப்பதால் ரித்திகாவை பார்த்துவிட்டு போகலாம் என வந்தான். அனைவரும் அமர்ந்து சாப்பிட்டு கொண்டிருந்தனர். நேத்ரன் தனக்கும் விடுமுறை தான் அதனால் தானும் வருவதாக சொன்னான். அவன் அம்மா விடுமுறை விட்டிருப்பது தேர்வுக்கு படிப்பதற்காகத்தான் ஊர் சுற்ற அல்ல என்று மறுத்தாள். பிறகு ஒரு வழியாக சமாதானம் செய்து ஊருக்கு போக சம்மதம் வாங்கிவிட்டான்.


மதிய உணவுக்குப்பின் சிறிது நேரம் அலுவலகத்தை பற்றியும் பொது விஷயங்களை பற்றியும் பேசிக்கொண்டிருந்தனர். பிறகு கோபி கிளம்ப தயாரானான். ரித்திக்காவிற்கு கோபியிடம் தனஞ்செயனை பற்றி சொல்ல இதைவிட ஒரு நல்ல சமயம் கிடைக்காது எனவே தானும் கூட வருவதாக கூறினாள். சரியென்று இருவரும் கோபியின் வீட்டிற்கு கிளம்பினர்.

Thodarum ..11
 

banumathi jayaraman

Well-Known Member
:D :p :D
மிகவும் அருமையான பதிவுகள்,
ரேகா முரளிநாதன் டியர்
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top