பூங்கொடி 5

sutheeksha eswar

Writers Team
Tamil Novel Writer
#1
Hi மக்களே

காதல் கொண்டேனே பூங்கொடி 5 பதிவு செய்தாச்சு. உங்க கமெண்ட்ஸ்காக தான் நான் காத்திருக்கிறேன்.

கமெண்ட்ஸ் இல்லனா பொம்மை ஸ்டிக்கர் கூட போடலாம். இந்த பிள்ளை இந்த கதையையும் அந்தரத்துல நிறுத்திடுமோனு பயப்படாம தையிரிமா நம்பி படிங்கபா.

ஏன்னா நம்பிக்கை அதானே எல்லாம்.
பூங்கொடி 5
அன்றைய பொழுது பெண்கள் உணவு அருந்தாமல் இருக்க, மற்றவர்களுக்கும் அவர்களை விட்டு உண்ண மனது இல்லை.
அன்றைய பொழுது ஒரு வித மௌனத்துடன் அழுத்தமாக கழிய, அவர்கள் என்றும் மகிழ்ந்து இருக்கும் கொன்றை மரம் கூட, அவர்களின் அமைதி கண்டு அதுவும் சோகமாக தனது இலைகளை கூட அசைக்க பிரியப் படாமல் இருந்தது.
மறுநாள் பொழுதில் கூட இவர்களது சண்டை முடிவுக்கு வராமல் போக, சுகுணா தான் முறுக்கி கொண்டு திரிந்தாள்.
நாட்கள் அதன் போக்கில் செல்ல, ஒரு வாரம் இடையில் ஓடி மறைந்து இருந்தது.
அனைவரின் பெற்றோரும் அந்த அறையில் கூடி இருக்க, சுகுணாவின் மெத்த படித்த தந்தை தான், தனது மகள் இனி இவர்களுடன் சேர மாட்டாள் எனவும், தான் அவர்களுடன் சேராமல் பார்த்துக் கொள்கிறேன் எனவும் வாக்கு கொடுத்து விட்டு, மகளது சார்பாக ஒரு மன்னிப்பு கடிதமும் எழுதி கொடுத்து விட்டு சென்றார்.
ஸ்வேதாவின் தாயோ அவளை முறைத்து விட்டு,
“பிள்ளைங்கனா அப்படி இப்படி இருக்க தான் செய்வாங்க மேடம்!”
இதுக்கெல்லாமா அம்மா அப்பா வ வர சொல்லணும்? அவ செஞ்சது தப்பு தான் நான் இல்லன்னு சொல்ல மாட்டேன்!”
“ஆனா பசங்கள எல்லாம் பிரிச்சு வைக்க மாட்டேன். என் மக படிப்புள்ள வேணா இனிமே உதவி செய்வா!” என அத்துடன் பேச்சு முடிந்தது என்பது போல சென்று விட்டார்.
அவரையே சோகத்துடன் பார்த்துக் கொண்டு இருந்த நண்பர்கள் கூட்டத்திடம் வந்தவர், அவர்களிடம் பொதுவாக நலம் விசாரித்தார்.

“ஏண்டி கூறு கெட்டவளே! இப்படியா மாட்டிக்கிற மாதிரி தப்பு செய்வாங்க?
தப்பு செஞ்சாலும் தடையம் இல்லாம செய்யனும்!” என தனியாக அழைத்து திட்ட தான் செய்தார்.
“அதுக்காக எல்லாம் அந்த மேதாவி மனுஷன் மாதிரி எல்லாம் நான் சொல்ல மாட்டேன்!”
வாழ்க்கை னா நாலும் இருக்க தான் செய்யும் எல்லாத்தையும் பார்க்கத் தான் வேணும்!”
“இதெல்லாம் ஒரு விஷயம்னு, என்ன கூட்டிட்டு வர சொன்னங்கன்னு நீ வேற வந்து கண்ண கசக்கிட்டு நிக்குற !”
“படிச்ச இவங்களுக்கு தான் வேற வேலை கெடையாதுனா, வீட்டுல இருக்குற எங்களுக்கும் வேற வேல கழத கிடையாதா?”
என மகளிடம் திட்டியவர் , நண்பர்களிடமும் விடை பெற்று கொண்டார்.
வினோத் தான், “ஸ்வேதா! நான் கூட உங்க அம்மா கூட, சுகுணா அப்பா மாதிரி பேசக் கூடாதுன்னு சொல்வாங்கனு தான் நெனச்சேன் ! ஆனா உங்க அம்மா சான்சே இல்லை போ!” என பாராட்டினான்.
அதனை அவளும் ஒரு சிறு தலையசைப்புடன் ஏற்றுக் கொண்டாள்.
இப்போது தான் வினோத் ராதிகாவின் நினைவு வந்தவனாய்,
“ஹே! அவள மறந்துட்டேன் பாரேன்!
அவங்க வேற பார்க்கவே டெரர்ஆ இருப்பார்!
அவர் வேற என்ன சொல்ல போறாரோ?” என அவன் தான் அவளுக்காக பயந்தான்.
ஆனால் சம்பந்தம் உடையவளோ , “எங்க அப்பா கிடா மீசை வந்தோன, யாருக்கெல்லாம் பைத்தியம் பிடிக்க போகுதோ?” என நினைத்தாள்.
அவள் நினைத்த மாதிரி தான் அங்கு இருந்த அனைவரையும் கிழித்து தொங்க விட்டுக் கொண்டார் மனிதர்.
“என் புள்ள விளையாட்டு பிள்ளை தான்! அதுக்காக இப்படி பால் வாடி புள்ள மாதிரி கூப்புட்டு வச்சு சொல்லனுமா?”
“என்ன இருந்தாலும் நீங்க உங்க வகுப்புள்ள வச்சே நாலு அடி அடுச்சு இருந்தா கூட நான் வருத்தப்பட்டு இருக்க மாட்டேன்!

அத விட்டு புட்டு நாள் பூரா பிள்ளைகள வெளிய நிக்க வச்சு இருக்கீங்க! ரெண்டு மணி நேரம் ஒரு இடத்துலே வேற நிக்க வச்சு இருக்கீங்க!”
இடையில் எதோ பேச வந்த பத்மா மேடத்திற்கும், பேச வாய்ப்பே தராமல் அவர் பாட்டுக்கு பேசிக் கொண்டு இருந்தார்.

“அவங்க ஒன்னும் சின்ன புள்ளைங்க இல்லை”
என்ன அந்த வயசுக்கு கொஞ்சம் விளையாட்டு தனமா இருப்பாங்க! அவ்ளோதானே! இதை போய் பெரிய விஷயம் ஆகிட்டு! நீங்க பண்றத பார்த்தா தான், சின்ன புள்ள தனமா இருக்குது!”
பின் அங்கிருந்த சுகுணாவின் அப்பாவை ஒரு பார்வை பார்த்து,
பத்மா மேடத்திடம்,
“புள்ளைங்களுக்கு நம்ம தான் நல்லது கேட்டது சொல்லி தரனும்.”
“அவங்களுக்கு தெரியாது ! அத விட்டு புட்டு உடனே வா! உடனே வானா! இருக்குற சோலி எல்லாத்தையும் விட்டு புட்டு வந்தா, நீங்க என்னடா னா இந்த சின்ன விஷயத்துக்கு எல்லாம் பஞ்சாயத்து வச்சு, பெத்தவங்கள வேற கூப்டு விட்டு இருக்கீங்க!”
இத போய் பெரிய விஷயமா எடுத்துக்கிட்டு, பெத்தவங்கள வா வா னு வேற அவசரப் படுத்துறீங்க!”
“நாங்க என்னமோ! ஏதோனு! எங்க சோலி எல்லாத்தையும் விட்டுட்டு வந்தா, என் மகா இது தான் பா விஷயம்குறா!”

இருவருக்கும் பொதுவாக ஒரு கொட்டு வைத்து முடித்தார்.
அதில் ராதிகாதான் வந்த சிரிப்பை அடக்கி கொண்டு நின்றாள்.
சுகுணா, அவளை தான் பாராமல் பார்த்தாள்.
அவள் பார்ப்பது தெரிந்தும், அவள் அவளது புறம் திரும்பவே இல்லை.
ராதிகாவின் தந்தை அவ்வாறு சொன்னதும் இருவரின் முகமும் இஞ்சி தின்றது போல ஆனது.

பேசி முடித்ததும்வெளியே வந்து, அவள் அருகே வந்தவர்,
“ பாப்பாவ கூட இருந்து பார்த்துக்கோங்கையா!
நீங்க இருக்கீங்க என்ற தயிரியதுள்ள தான், நாங்க நிம்மதியா அங்க இருக்கோம்!” என பொதுவாக சொன்னவர்,
“அப்பா! இந்த வினோத்தும் சந்தோசும் என்னோட புளி சாதத்தை புடுங்கி சாப்டுட்டாங்க பா !”
என இருவரும் மீதும் குற்றப் பத்திரிகை வாசித்தாள்.
அவர் கடகட வென சிரித்து விட்டு, “ஏன் கழுத! கூட்டாளிகள் எல்லாம் இருக்குறப்போ, உங்க அம்மா கிட்ட சேர்த்து செய்ய சொல்லி இருக்க வேண்டியது தானே!”
“அடுத்த தடவ அம்மா கிட்ட இவங்களுக்கும் சேர்த்து கட்ட சொல்லு ! என்ன சரியா ?”
சுகுணாவின் தந்தை சென்றதும், “இந்த சின்ன விஷயத்துக்கு எல்லாம், சண்டை போட்டுட்டு பேசாம இருக்க கூடாது மா!
இது எல்லாம் ஒரு பிரச்சனையே கிடையாது !”
என்றவர்,
போகும் போது, “ நீயும் எங்க மகா மாதிரி தான் த்தா!”
“ பார்த்துக்கோங்க தம்பிகளா!” என்று ஆண்களிடமும் சொல்லிவிட்டு ஒரு தலையசைப்புடன் விடை பெற்றார்.

செல்லும் அவரை வழிஅனுப்ப அவளும் பின்னே செல்ல, அவளது தலையை ஆதுரமாக தடவி, ஒரு தலை அசைப்புடன் விடை பெற்றார்.
வினோத் மற்றும் சந்தோஷ் தான், அவரை திகைத்து போய் பார்த்து இருந்தனர்.
ஏன் என்றால் படித்தவர் என சொல்லப்படும் சுகுணாவின் தந்தை , இந்த சிறு விஷயத்தை பெரிதாக எடுத்துக்கொள்ள,
அனால் படிக்காத மனிதர் என சொல்லப்பட்ட ராதிகாவின் தந்தை தனது செயலால் உயர்ந்து விட்டார்.
சுகுணாவின் தந்தை வந்தவுடன் அவரிடம் பேச இவர்கள் செல்ல, அவர் தனது பார்வையாலே, அவர் தள்ளி நிறுத்தி வைத்து விட்டார்.
அதில் அதிருப்தி அடைந்த நண்பர்கள், இவரே இப்படி என்றால் ராதிகாவின் தந்தையா கேட்கவே வேணாம் என்று நினைத்து தான் ஒதுங்கி நின்றது.
அனால் அவர் இவ்வளவு இலகுவாக இருந்தது, அவர்களுக்கு பிடித்து இருந்தது.
நாட்கள் இவ்வாறு செல்ல, சுகுணாவிடம் ஸ்வேதா பேச சென்றாலும் அவள் ஒதுங்கியே இருக்க, ஸ்வேதாவும் அவளை அதன் பிறகு தொந்தரவு செய்ய வில்லை.
அவர்களுடனே இருந்தாலும் அவள் ராதிகா மற்றும் ஸ்வேதாவிடம் பேசாவிட்டாலும், மற்றவர்களிடம் பேசிக் கொண்டு தான் இருந்தாள், ஒரு இடைவெளியுடன்.
அது அவர்களுக்கும் புரிந்து தான் இருந்தது. யாரும் அவர்களுக்குள் தலை இடவில்லை.
எப்போதும் ஆரவாரத்துடன் இருக்கும் அந்த கொன்றை மரத்தடி, இப்போது எல்லாம் ஒரு மௌனத்தை தத்து எடுத்து கொண்டு இருந்தது.
நாட்கள் அதன் போக்கில் செல்ல, அந்த வருடத்திற்கான முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு கல்லூரி தொடங்கியது.
இவர்களுக்கு கல்லூரி துவங்கி ஒரு மாதமும், மேலும் சில வாரங்களும் சென்று இருக்க, ஒரு நாள் ராதிகாவின் தந்தை அவளை காண வந்து இருப்பதாக, அவர்களது வகுப்பு தோழி ஒருத்தி வந்து சொல்லி செல்ல,
துள்ளி குதித்துக் கொண்டு ஓடினாள், தந்தையை காண்பதற்கு.
அவர் ஆபீஸ் ரூம் வாசலில், ஒரு உயரமான மனிதருடன் தலையை ஆட்டி ஆட்டி பேசிக் கொண்டு இருக்க, தந்தையை சுற்றும், முற்றும் தேடி பார்த்தவள், அவரை கண்டு கொண்டவள் அருகே விரைந்தாள்.
அவரது பக்கத்திலேயே, சாதாரண உயரத்தில் ஒரு பெண்ணும் நின்றுக் கொண்டு இருப்பதை, அருகில் செல்லவும் தான் கவனித்தாள்.

“அப்பா!” என அழைத்துக் கொண்டே அவள் அருகில் செல்ல, “வாடா பாப்பா!” என வாஞ்சையுடன் அழைத்தவர்,
அவளது தோளில் கை போட்டு, “இது தான் என் மக ராதிகா!” சிறு இடைவெளி விட்டவர்,

“இங்க தான் கெமிஸ்ட்ரி ரெண்டாவது வருஷம் படிக்குறா என்ன வேணுனாலும் பாப்பா செஞ்சு தரும்!” என அந்த நெடிய மனிதரிடம் அறிமுகப் படுத்தியவர்,
பாப்பா இது அரசலூர்ல இருக்காங்கள நம்ம சிந்தாமணி சித்தி அவங்க கொழுந்தன் பொண்ணு! என அவளுக்கு அறிமுகம் செய்தவர்,
“இங்க தான் பாப்பா நீ படிக்குறதுல மொத வருஷம் சேர்ந்து இருக்கு!”
“பாப்பாக்கு இது புது இடம்!
இங்க யாரும் பழக்கம் கிடையாது! , நீ தான் பாப்பாக்கு எல்லாம் சொல்லி தந்து கூடவே இருந்து பார்த்துக்கோ!” என பெயர் தெரியாத அந்த பெண்ணின் பொறுப்பை, அவளிடம் தந்தார், அவளது தந்தை.
அவள் எல்லா பக்கமும் புரிந்தது போல மண்டையை உருட்ட,
“ பாரு! இவ்வளவு நேரம் பேசினேன் பேர் கேட்க மறந்துட்டேன் !” என மறதியில் முன் நெற்றியை தட்டிக் கொண்டவர்,
“இவர் பேர் மகேஸ்வரன். இது அவர் பொண்ணு பாக்கியலக்ஷ்மி!” என சொன்னவுடன் அவள் உடனே தனது தந்தையை பாசமாக பார்த்து வைக்க,
ராதிகா உடனே கண்டு கொண்டாள், “ஒஹ்! இதுவும் நம்ம கேஸ் தானா!”
என மனதில் நினைத்துக் கொண்டாள்.
மகேஸ்வரன் தொண்டையை செருமிக் கொண்டு, “அது சின்ன வயசுல வச்ச பேர் ! செர்டிபிகேட் ல எல்லாம் அபர்ணா தான் இருக்கு !”
என மகளின் முறைப்பில் இருந்து தப்பிக்க அவசரமாக சொன்னார்.
அன்றைய தினம்புது மலர்களுக்கு என்பதால், மணி அடித்ததும் அனைவரையும் ப்ரேயர் ஹாலில் கூடுமாறு அறிவிப்பு வர,
“சரிம்மா! அப்பா நான் போயிட்டு வரேன்! நீ பார்த்து இருந்துக்கோ என்ன!”
எது வேண்டும் என்றாலும் இந்த அக்கா கிட்ட கேட்டுக்கோ!” என மகேஸ்வரன் அவளிடம் விடைபெற கண்ணில் நீர் மல்க தந்தைக்கு தலை அசைத்தாள் , அபர்ணா.
“சரி மா! அப்போ நானும் கிளம்புறேன்!” என ராதிகாவின் தந்தை பூபதியும் கிளம்ப ஆயத்தமாக,

மற்றவர்களுக்கு தெரியாமல் அவள் கண்களால் கெஞ்ச, “இந்தா! இத செலவுக்கு வச்சுக்கோ!” என்று சில ஆயிரம் தாள்களை தந்தவர்,
மகளின் கெஞ்சும் விழிகளால், “இருங்க! இதோ வந்துடுறேன்!” என சொல்லி சென்றவர், கை நெறைய தனது வண்டி நிறுத்துமிடம் சென்று கை நிறைய தின்பண்டகள் வீட்டில் இருந்து கொண்டு வந்தது போதாது என மேலும் மகளுக்கு வெளியே சென்று வாங்கி கொண்டு வந்தார்.
இதை எல்லாம் ஒரு புன்னைகயுடன் பார்த்துக் கொண்டு இருந்தாள், அபர்ணா.
அவர்கள் இருவரும் கிளம்பியதும், கொஞ்ச நாள் கஷ்டமா தான் இருக்கும் ராதிகா பேச ஆரம்பிக்க,
பதிலுக்கு ஒரு புன்னகையை மட்டும் பதிலாக தந்தாள், அபர்ணா.
“அப்பாவ கிளம்ப சொல்லிட்டியா?” என கேட்க,
“இல்லக்கா! எனக்கு வேண்டிய திங்க்ஸ் எல்லாத்தையும் வாங்கி கொடுத்துட்டு, ஈவினிங் தான் ஊருக்கு போவாங்க!” என சொல்ல
அதுவரை எங்க இருப்பாங்க இல்ல இங்க அப்பா பிரின்ட் வீடு இருக்கு இங்க ஒரு வேலை இருக்குனு வேற சொன்னாங்க அத முடிச்சுட்டு என பார்த்துட்டு தான் போவாங்க என முடிக்கவும் ஹால் வரும் சரியாக இருந்தது.
ராதிகா தான், “எனக்கு கிளாஸ் போகணும்! லேட் ஆச்சு!
நான் உன்ன அப்புறமா பார்க்குறேன் வேற எந்த ஹெல்ப் வேனாலும் தயங்காம கேளு!”
“என் கிளாஸ் அந்த பக்கம் செகண்ட் பில்டிங் ல பிரஸ்ட்!” என சொல்லி சென்றாள்.
அவள் சென்று மறைந்தவுடன், தன் முன்னே இருந்த அந்த ஹாலை அண்ணார்ந்து பார்த்தாள், அபர்ணா.
காதல் கொள்வேன்...
 
Attachments

Last edited:

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Advertisement

New Episodes

Advertisement