பூங்கொடி 2

sutheeksha eswar

Writers Team
Tamil Novel Writer
#1
Hi மக்களே

காதல் கொண்டேனே பூங்கொடி 2 அத்தியாயம் பதிவு செய்து விட்டேன்.

இந்த கதை இங்க பதிவு செய்யும் போது, பானுமதி அம்மா நினைவு ரொம்ப வருது.

அடிக்கடி என் முந்தைய கதைகளுக்கு பதிவுகள் கேட்டுகிட்டே இருப்பாங்க. அவங்களுக்காகவே சீக்கிரம் அந்த கதையை முடிச்சு அவங்க கைல கொடுக்கணும்னே நெனச்சு இருந்தேன்.

என்னாலும் முடில. இந்த கதை எழுத ஆரம்பித்தேன். இதை முழுசா முடிக்கணும் னு நெனப்பேன். ஆனா படிக்க அவங்க இல்லாம போய்ட்டாங்க.

Miss u banuma.
கதை ஆரம்பிக்கும் போது உங்க lovely புது novelku என்னோட வாழ்த்துக்கள் டியர்.

ஒவ்வொரு பதிவின் போதும் நான் தான் பிரஸ்ட் டியர். அப்புறம் ஒரு கமெண்ட் இது எல்லாம் இல்லாம கதை பக்கமே ரொம்ப வெறுமையா இருக்கு பானுமா.

Sorry மக்களே. கொஞ்சம் emotional ஆகிட்டேன்.

பூங்கொடி இதோ.


காதல் கொண்டேனே பூங்கொடி

கொடி 2
“ச்சீ! விடு நாயே! அப்படி தப்பிக்க பார்க்காத, நீயும் உட்கார்ந்து எழுது அப்ப தான் முடிக்க முடியும்!” என சொல்லி அவனை உதைக்க, “உதைக்காத டா, பேன்ட் அழுக்காகுதுல்ல!”,
“ நாயே! உனக்கு எழுதி தரதே பெருசு இதுல வெட்டியா பேசிக்கிட்டு இருக்க!” என அவனை சாட ,
“வந்து ஒழுங்கா உட்கார்ந்து எழுதி தொலை! இல்ல, அப்படியே போட்டு போய்டுவேன்!” என விவேக் அவனை மிரட்ட
“சரி! சரி கோச்சுக்காத என் செல்லக்குட்டி” என அவனை கொஞ்ச,
“சரி பேப்பரை கொடுடா வெட்டியா பேசிக்கிட்டு இருக்காம” என சந்தோஷ் சொல்ல, அவனை பார்த்த இருவரும் பிரசன்னா மற்றும் விவேக் சிரிக்க,
வினோத் அசடு வழிந்தான். “டேய் அவன் எப்போடா இதெல்லாம் கொண்டு வந்தான் !” என்று அவர்கள் இருவரும் சொல்ல,
“ நாயே! அப்போ வெறும் பைய மட்டும் தான் தூக்கிட்டு வரியா?” என அவன் கேட்க,
“யார பார்த்து என்ன வார்த்தை டா சொல்லிட்ட நான் காலேஜுக்கு வெறும் டிபன் பாக்ஸ் மட்டும் தான் கொண்டு போவேன்னு எங்க செத்துப் போன பக்கத்துக்கு வீடு பெரியப்பா மேல சத்தியம் பண்ணி இருக்கேன் டா!” என அவன் சொல்ல,
“பண்ணி எப்படி எல்லாம் நேரத்தை ஓட்டுது பார்த்தியா” என அவன் சொல்ல, அங்கே ஒரு சிரிப்பும் சந்தோசமாக இருந்தது.
அவர்களது இந்த செல்ல சண்டையை பார்த்து சிரித்தபடி, அவர்கள் மீது பூ தூவி ஆர்பரித்தது, அந்த கொன்றை மரம்.

இப்படி அவர்களது நேரம் கலகலப்பாக சென்றுக் கொண்டு இருக்க, கல்லூரி மணியும் சத்தமாக அடித்து, அனைவரையும் சற்று பரபரப்பாக மாற்றியது.
“டேய்! பெல் அடிச்சுட்டாங்க டா ! இன்னும் எழுதி முடிகலையா ?”என்று சந்தோஷ் கேட்க ,
“இல்லடா! இன்னும் நாலு பேஜ் எழுத வேண்டியது இருக்கு டா!” என வினோத் சொல்ல,
“ நாயே! இதுக்கு தான் முன்னாடியே எழுதி வை னு சொல்றது என்னைக்காவது சொல்றத கேடு இருக்கியா!” என அவனை திட்ட,
“சரி சரி விடு விடு கோச்சுக்காத மச்சி கூல் டவுன்! கூல் டவுன்! கூல் டவுன்!” என வடிவேலு மாடுலேஷனில் சொல்ல,
“செருப்பு பிஞ்சுடும் நாயே!” என விவேக் சொல்ல, பிரசன்னா அமைதியாக இவர்களை ரசித்த வண்ணமே மீதியை எழுதி முடித்து, கோடு போட்டு, எழுதிவற்றை சரிப் பார்த்து அடுக்கி வைத்தான்.
இவன் செய்வதை கவனித்த வினோத், “எரும! என்னைக்கும் இல்லாம இந்த தடவை ஒழுங்கா எழுதிட்டு, ஒரு வார்த்தை சொன்னியாடா நீ?”
என அவனிடம் முகத்தை தூக்கி வைத்துக்கொள்ள,
“டேய்! பெல் அடிச்சது கேட்டுச்சா இல்லையா இன்னைக்கு முதல் ஹவர், நம்ம ஆமகுஞ்சு தான் டா! நீ பாட்டுக்கு ஆடி அசஞ்சு வர?” என விவேக் அவனை திட்ட,
எல்லாத்தையும் அள்ளிப் போட்டுக் கொண்டு அங்கிருந்து ஓட்டம் பிடித்தது அந்த வானவில் கூட்டம்.
பெண்கள் மூவரும் உள்ளே நுழைந்து, அவர்களிள் இடத்தில் அமர, விவேக் மற்றும் பிரசன்னா “ஆமைகுஞ்சு” என்று செல்லமாக அழைக்கப்படும் அவர்கள் வேதியியல் பிரிவு தலைவர் மீனாட்சி சுந்தரம் உள்ளே நுழைவதற்கும் இவர்கள் வருவதற்கும் சரியாக இருந்தது,
மேஜையில் தனது பொருட்களை வைத்து விட்டு, “எக்ஸ்கியூஸ் மீ” என்ற குரலில் அவர்கள் இருவரையும் ஒரு முறை கூர்ந்து கவனித்து விட்டு “கெட் இன்” என உள்ளே வர அனுமதி அளிக்க,
அவர்கள் பின்னே 1 நிமிட தாமதத்தில் வந்த சந்தோசும், வினோத்தும் வெளியே மாட்டிக் கொண்டனர்.
அவசரமாக அவர் இருவரும் உள்ளே வந்து பிறகு அவரை பார்த்ததும், “ஐயோ மச்சான் !இந்த ஆளு வந்துட்டார் டா போச்சு மாட்டுனோம்.
இம்போசிஷன் கொடுத்தே சாவடுச்சுடுவாறே இந்த ஆளு. இன்னைக்கு யார் முகத்துல நான் முழிச்சேனே தெரியல? போயும் போயும் இந்த ஆளுகிட்டையா நான் மாட்டிக்கணும்?”என சந்தோஷ் புலம்ப,
“டேய்! சும்மா இருடா! அவருக்கு பாம்பு காது. அப்பறம் இம்போசிஷன் கொடுத்துற போறாரு. ஏற்கனவே இன்னைக்கு எஸ்.பி கு வேற அசைன்மென்ட் வைக்கணும் அப்புறம் ரெண்டத்தையும் யாரு எழுதறது?’ அவனை வினோத் அதட்ட,
இதிலேயே ஒரு ஐந்து நிமிடம் சென்று இருக்க ஒரு வழியாக, இருவரும் ஒரு பெருமூச்சு விட்டு வாயிலில் வந்து நிற்க,
பாடம் எடுக்க தயார் ஆனவர், வாயிலில் இவர்கள் இருவரும் நிற்கவும், தனது கை கடிகாரத்தை பார்க்க, பின் மறுபடியும் இவர்களை பார்க்க,
“இஸ் திஸ் தி டைம் போர் என்டரிங் தி கிளாஸ்?” என அவர் வினவ,
“சாரி சார்!” என்ன சந்தோஷ் சொல்ல, வினோத் மட்டும் அமைதியாக நிற்க, அவனை மேலும் கீழும் ஒரு பார்வை பார்த்தவர்,
பின் என்ன நினைத்தாரோ, “கெட் இன்” என உள்ளே வர
அனுமதி அளிக்க, வினோத்தான் திருதிருவென முழித்தான்.
தனது விதியை நொந்துக் கொண்டே அவன் உள்ளே வந்து அவனது இடத்தில் அமர,
அவர் பாடம் நடத்த ஆரம்பித்தார்.
முதலில் சிரிது நேரம் அமைத்தியாக இருந்த வினோத் அவர் தன்னை கவனிக்க வில்லை என்று உறுதி படுத்திக் கொண்டு, அடுத்து சமர்பிக்க வேண்டிய அசசைன்ம்ன்ட்டை அவன் மேஜைக்கு அடியில் வைத்து எழுத,
முதலில் இவனை கவனிக்காத சந்தோஷ் பிறகு இவன் செய்துக் கொண்டு இருக்கும் வேலையை பார்த்து அதிர்ச்சி அடைந்து, மெதுவாக விவேக்கை கூப்பிட்டு கா
ட்ட, aவனும் அதிர்ந்து போய் பார்க்க,
அதனை எல்லாம் கண்டுக்கொள்ளவே இல்லை நமது வினோத்.
அதில் கடுப்பாகி சந்தோஷ் அவனை கூப்பிட, அதே சமயம் அதனை கவனித்து விட்ட மீனாட்சி சுந்தரம்,
“ஹே! யூ தட் ரெட் ஷர்ட் வாட் ஆர் யூ டூயிங் தேர்?” என அவர் கேட்க,
உடனே அவன் எழுந்து நின்று “நத்திங் சார்” என,
அவனை ஒரு முறை பார்த்து விட்டு, “சிட் டவுன்”, என அவர் சொல்ல,
அவன் அமைதியாக உட்கார்ந்து கொள்ள இதை எல்லாம் பார்த்தும் ஒரு சிரிப்புடன் அவனது வேலையை பார்த்துக் கொண்டிருந்தான் வினோத்.
அவன் கடுப்புடன் அவனை முறைத்து விட்டு, அமர,
விவேக் அவனை மறுபடியும் கூப்பிட சொல்ல, “முடியாது போடா!” என அவன் முறுக்கி கொள்ள,
இம்முறை பிரசன்னாவை விட்டு கூப்பிட சொன்னான்.
அவன் இவர்களை கவனிக்காமல் இருக்க, மறுபடியும் சந்தோஷை கெஞ்ச அவன் கூப்பிட
“என்னடா உனக்கு இப்போ பிரச்சினை?
அவரே கண்டுக்கலை நீயேண்டா என் உயிரை வாங்குற?” என அவன் சொல்ல ,

“எக்கேடோ கேட்டு போய் தொலை!” என அவனை வாழ்த்திவிட்டு அவன் திரும்ப,
அவர்கள் இருவரையும் தான் முறைத்துக் கொண்டு இருந்தார், மீனாட்சி சுந்தரம்.
“ஹே நான் உனக்கு ஏற்கனவே வார்ன் பண்னேன்ல மறுபடியும் கிளாஸ் ல பேசிக்கிட்டு இருக்க!”,
“இல்ல சார்” என அவன் எதுவோ சொல்ல வர,
“நோ மோர் எக்ஸ்யுசெஸ்”
“ கெட் அவுட்!” என சொல்ல, அவனும் தனது உடமைகளை எடுத்துக் கொண்டு அமைதியாக வெளியேறினான்.
சிரிது நேரம் கழித்து விவேக்
இதனை தொடர அவனையும் அவனை தொடர்ந்து வினோத்தையும் கேள்வியே கேட்காமல் வெளியேற்ற பட,
முதலில் வெளியே வந்த சந்தோஷ் அங்கு ஒரு ஓரமாக நின்றுக் கொண்டு இருக்க,
இவர்கள் இருவரையும் பார்த்ததும் வாயை மூடிக் கொண்டு சிரித்தான்.
அதில் கடுப்பான விவேக் வினோத்தை முறைக்க அவனோ வேறெங்கோ பார்த்துக்கொண்டு இருந்தான்.
இவர்கள் மூவரும் வெளியே நிற்க, பிரசன்னா மாட்டும் உள்ளே அமர்ந்து பாடம் கவனிக்க,
இதை பார்த்த சந்தோஷ், “ டேய் ! மச்சான் பாருடா அவன் மட்டும் உள்ள உட்கார்ந்து இருக்கான்
நாம மூணு பேரு மட்டும் வெளிய நிக்குறோம் !”
என சொல்ல,
“விடுடா! நம்ம தான் வெளிய வந்துட்டோம் அவனாவது நோட்ஸ் எடுக்கட்டுமே!” என சொல்லிவிட்டு, அப்படியே திரும்பி வினோத்தை பார்த்து முறைக்க,
“சரிடா! சரிடா! அங்க பாரு என சொல்லிஅவனது கன்னத்தை பிடித்து முன்னாடி திருப்ப, “
உன்ன அப்புறம் கவனிச்சுக்குறேன்!” என சொல்ல, அவனை வேற எதுவும் செய்ய முடியாமல் வாசலில் நின்றுக் கொண்டே நோட்ஸ் எடுக்க ஆரம்பிக்க
சிறிது நேரம் நல்ல பிள்ளையாக இருந்த வினோத் சந்தோஷை சுரண்ட, அவன் தொலை உலுக்கிக் கொள்ள, மறுபடியும் விடாமல் சுரண்ட, கடுப்புடன், “ என்னடா?” என கேட்க,
அவன் கண்ணால் பிரசன்னாவை காட்ட, அவனோ முதலில் புரியாமல் புருவம் சுருக்கியவன் பிறகு வேண்டாம் என விவேகை ஒரு தரம் பார்த்து விட்ட மறுப்ப தலை ஆட்ட,
மறுபடியும் ஏதோ சொல்ல, சரி என ஒத்துக்கொண்டான் சந்தோஷும்.
வினோத் மெதுவாக தன்னிடம் இருந்த நோட்டில் இருந்து ஒரு பேப்பரை கிழித்து சுருட்டி ஜன்னல் வழியாக பிரசன்னா மேல் எறிய,
அவன் மீது படாமல் போக, இரண்டு முறை படாமல் மூணாவது முறை அவன் மீது பட
அவன் திரும்பி பார்க்க, அதே நேரம் மீனாட்சியும் போர்டு புறம் இருந்து திரும்ப, அவர் கண்ணில் விழுந்தது வெளியே பார்த்த பிரசன்னா தான்.
“பிரசன்னா!” என அவனை உரக்க அழைத்தவர், நான் இங்க பாடம் நடத்திகிட்டு இருக்கேன் நீ என்னகென்ன னு வெளியே வேடிக்கை பார்த்துகிட்டு இருக்க?”
அவன் எழுந்து நிற்க,
“ஓகே! இந்த ஈக்குவேஷேன்னை சால்வ் பண்ணு வா!” என அவனை அழைக்க அவனும் திரு திருவென முழிக்க பிறகு என்ன அவனுக்கும் கெட் அவுட் தான்.
வெளியே வந்த பிரசன்னாவும் அவர்களோட நிற்க, வினோத் தனது குறும்பை மறுபடியும் தொடர வாசலில் நின்ற நால்வரையும் அங்கே கூட நிற்க கூடாது என சொல்ல,
சந்தோஷும் வினோத்தும் சிரித்துக் கொண்டே வந்தார்கள் என்றால், விவேக்கும் பிரசன்னாவும் வினோத்தை முறைத்துக் கொண்டே வந்தார்கள்..
சற்று தள்ளி வந்த பின், யாரும் இல்லை என உறுதி செய்துக் கொண்டு அவனை, “ எல்லாத்துக்கும் இந்த பன்னாடை தான் காரணம்!”
என விவேக் மொத்த ஆரம்பிக்க,
அவனை தடுத்த பிரசன்னா,
“விடு மச்சான் இவனை இங்க வச்சு வெளுக்க கூடாது நம்ம எடத்துல வச்சு தான் வெளுக்கணும்!” என சொல்ல

அடி வாங்கி அலறிய வினோத் ஓட பார்க்க, அவனை துரத்திக்கொண்டு ஓட ஆரம்பித்தார்கள், நண்பர்கள் மூவரும்.
ஒரு இடத்தில் பிரசன்னா அவனை முந்தி சென்று அவன் காலரோடு கொத்தாக பிடித்து, “எங்க ஓடுற?
ஓடுனா மட்டும் உன்ன விட்டுடுவோமா?” என கேட்டபடி அவன் முதுகில் குனிய வைத்து முழங்கையால் ரெண்டு குத்து குத்த,
“ஆ!” என அலறிக்கொண்டே சிரித்தான் வினோத். பின் சந்தோஷ் தான்,
“ டேய் விடுங்க டா!” என சொல்லி, அவனது வாயை பொத்தி மூடி கொண்டு போய் அவர்களது ஆஸ்தான இடமான கொன்றை மரத்தின் அடியில் வைத்து வெளுத்தனர்.
“டேய்! டேய்! விடுங்க டா நானே அவர் எப்படா வெளிய அனுப்புவாறு நான் அசைன்மன்ட் எழுதி அடுத்த பிரியடுல வைக்கலாம் னு வெயிட் பண்ணினேன்.
ஆனா அவர் தான் உள்ள கூப்பிட்டார் சரி ஒழுங்கா நானே அவர் கிட்ட மாட்டாம எழுதிக் கிட்டு தான் இருந்தேன்.
நான் பாட்டு எழுதி இருந்து தான் கூட எந்த பிரச்னையும் இல்ல, நாலு பக்கம் தான் இருந்தது. . இவர் தான் ஒழுக்க சிகாமணி மாறி வந்து இவன் மட்டும் மாட்டுனதும் இல்லாம, எல்லாரையும் சிக்க வச்சுட்டான்!”
என சந்தோஷை கை கட்ட,
“டேய்! என்னைவே அடி வாங்க வைக்க பாக்குறியா?” என கேட்டவாறே ,
“ தள்ளுங்கடா!” என மற்றவர்களை விலகி விட்டு அவனை இப்போது இவன் அடிக்க ஆரம்பித்தான்.
அந்த இடமே அவர்களின் கூச்சலும் கலாட்டவுமாக நிறைந்து இருந்தது.
காதல் கொள்வேன்...
 
Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Advertisement

New Episodes

Advertisement