பூங்கொடி 15

sutheeksha eswar

Writers Team
Tamil Novel Writer
#1
ஹாய் மக்களே


காதல் கொண்டேனே பூங்கொடி 15 பதிவு செய்துட்டேன். போன பதிவுக்கு கருத்துக்களை பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.


அதே மாதிரி இந்த பதிவுக்கும் உங்க கருத்துக்களை சொல்லுங்க மக்களே.நன்றி

நான் உங்கள்
சுதீக்ஷா ஈஸ்வர்பூங்கொடி 15
“நீ என்ன இன்னும் நம்பள என நினைக்குறேன்!” என வேதனையுடன் சொல்லவும்,
“அப்படி எல்லாம் ஒண்ணுமில்லைடி!” என அவசரமாக அபர்ணா இடைமறிக்க,
உடனே தனது வலது கையை நீட்டி
அவள் பேசுவதை தடுத்து நிறுத்தியவள்,


“நீ என்ன உன் பிரின்டா நெனக்கலை அப்படி தானே? நான் உனக்கு யாரோ தானே” என அவள் தன்னை தோழியாக நினைக்கவில்லை எனும் ஆதங்கத்தில் பேசி விட,

“இப்படி எல்லாம் பேசாதடி எனக்கு கஷ்டமா இருக்கு!” என அபர்ணா வேதனை நிறைந்த குரலில் சொல்லவும்,
“நீ என்கிட்டே எதுவும் சொல்லாதது அதை விட கஷ்டமா இருக்குறது உனக்கு புரியலையா?” என மனதில் உள்ள வேதனையை வார்த்தைகளில் நிறைத்து கேட்க,


அவளிடம் சொல்லக் கூடாது என்று எல்லாம் அவள் நினைக்கவில்லை. உண்மையில் நேற்று இருந்து அவள் அவளாகவே இல்லை அது தான் உண்மை. அனைத்தையும் யோசித்து பயந்து கொண்டு இருந்தாள்.சிறிது தயங்கி விட்டு நேற்று நடந்ததை அனைத்தையும் சொல்ல,
“லூசாடி நீ இதுக்கெல்லாம் பயப்படுவியா?” என விட்டாள் அவளை அடித்து விடுபவள் போல கடிந்து கொண்டவள்,


“இத உங்க வார்டன் கிட்டையோ, இல்ல நம்ம மேம் இப்போ கேட்டப்போ அவங்க கிட்டையோ சொல்லி இருக்கலாம் தானே! நீயே ஒரு முடிவு எடுத்துட்டு பின்னாடி அவஸ்தை படாதே!” என தோழியாய் அவளது முட்டாள் தனம் கண்டு திட்ட,“அட்லீஸ்ட் அந்த அக்காகிட்ட கூட சொல்லி இருக்கலாம் தானே அவங்க உனக்கு ஹெல்ப் செய்வாங்க தானே!” எனவும்,

“எனக்கு பயமா இருந்தது”, என ஒரு வரியில் தனது மனதில் உள்ள அனைத்தையும் கூறி விட்டு கைகளில் முகம் புதைத்து அவள் அழுகவும், இவளை கண்டு பாவமாக தான் இருந்தது சௌமியாக்கு.


என்ன செய்வது என தெரியாமல் அழுது கொண்டு இருக்கும் தனது தோழியை கண்டு முதலில் கோவம் இருந்தாலும், இப்போது பார்க்கும் போது அவளை கண்டு பாவமாக தான் இருந்தது, அவளுக்கும்.
அவளது பயமும் நியாயம் தானே.

எப்படியோ இது அவளது பெற்றோருக்கு தெரிந்து விட்டால், அவர்கள் பயந்தது போல நடக்கிறது என இவளை அவர்களுடனே அழைத்து சென்று விட்டால், என இவள் பயப்படுவதும் இவளுக்கு புரிந்து தான் இருந்தது.
ஆனால் இவளது பயம் அநாவசியம் என இன்னொரு மனது சொல்லியது.


அதனை கேட்க இவள் தயாராக இருக்க வேண்டுமே,
“நான் வேணா உங்க வார்டன் கிட்ட சொல்லட்டுமா, இல்ல நம்ம ஹேமா மேம் கிட்ட ஹெல்ப் கேட்போமா?” எனவும்,


அது வரை அழுது கொண்டு இருந்தவள், இவளது குரலில் நிமிர்ந்து அவசர அவசரமாக, “இல்லை! வேணாம்! வேணாம்! இப்போ தானே மேடம் கேட்டதுக்கு இல்லைன்னு அவ்ளோ தூரம் சொல்லிட்டு வந்தேன்” என மறுத்தாள்.


மேலும் தொடர்ந்தவள், “இல்லை வேண்டாம். இதை அப்படியே விட்டுடுவோம்”, என அவள் மறுக்க இவளுக்கு அவளது காரணமற்ற பயத்தை கண்டு எரிச்சலாக இருந்தது.


நான் இப்போது கோவம் கொண்டால், இவள் இன்னும் தனக்குள் சுருங்கி போய் விடுவாள் என நினைத்தவள்,

“அந்த அக்கா கிட்ட சொல்லி, அவங்க மூலமா நம்ம உங்க வார்டன் கிட்ட பேசுவோமா?” எனவும்,


“இல்லடி அந்த பொண்ணு தூது தான் வந்தாள். ஆனா அவன் யாருனே தெரியலையே!” என இவள் சொல்லவும்,


“அதுக்கு தாண்டி நானும் சொல்றேன் இத நம்ம மேடம் மூலமாக ஹாண்டில் செய்வோம்!” என கூறவும்,


“இல்ல எப்படியாவது இது நம்ம ஹச்.ஒ.டி க்கு தெரிஞ்சுடும். அதே மாதிரி தான் அங்கேயும் அப்படியே ரெண்டு டிபார்ட்மெண்ட் முழுசும் தெரிஞ்சுடும்” என அவள் மறுக்கவும்,


“மண்ணாங்கட்டி! பேசாதடி! என் வாயில ஏதாவது வந்துட போகுது!” என கடுப்பாய் மொழியவும்,


விட்டால் உடனே அழுது விடுபவள் போல இவளது கோவை முகம் கண்டு இப்பவோ அப்போவோ என கண்ணீர் கண்களில் கரை கட்டி நிற்கவும், சௌமியா தன்னையே நொந்து கொண்டு,


“அப்போ என்ன தாண்டி செய்ய சொல்ற?” என இவள் முட்டாள்தனமான பயத்தில்
இவளுக்கு சுள்ளென கோவம் வந்தது. தன்னை நொந்து கொண்டு, “இப்போ என்ன தான் செய்யணும்னு நீ சொல்ற?” என இழுத்து பிடித்த பொறுமையுடன் கேட்க,


அந்த பொண்ணு கிட்டையே எனக்கு அதுல எல்லாம் ஈடுபாடு இல்லன்னு சொல்ல வேண்டியது தான்.


என அவள் சுலபமாக சொல்லவும், “எனக்கு என்னவோ அவன் அப்படியே விடுற ஆளு மாதிரி தெரியலை!”
என சௌமியா தனது யூகத்தை சொலவும், இவளது முகம் கலவரத்தை பூசி கொண்டது.

“என்னடி இப்படி சொல்ற ? என பயந்து போய் கேட்பவளிடம் இவளை பற்றி தெரிந்தும் வாய் விட்ட தனது மடமையை உள்ளுக்குள் திட்டி கொண்ட வாறே,


அப்படி சொல்ல வரல டி ஆனா அப்படி இல்லாம போன என இவள் ஒரு கேள்வியுடன் நிறுத்தவும்,


ஒரு வேளை அப்படி நடந்தால் எனும் கேள்வியே அவளை மிரள செய்தது.


அப்போதும் அவளது முகம் தெளிவில்லாமல் தான் இருந்தது.


“சரி விடு நீ இன்னும் சாப்பிடல தானா? வா போய் சாப்பிடுவோம்!” என சொல்லி இவளை அழைக்க, “இல்ல! எனக்கு பசி இல்லை!” எனவும்,


“இதை அப்றமா யோசிக்கலாம் இதுக்காக எல்லாம் உன்ன நீயே வருத்திக்காத!” என்று ஒரு வழியாக அவளை கெஞ்சி மிரட்டி சமாதானம் செய்து ஒரு நல்ல தோழியாக அவளை கை பற்றி எழுப்பி அனுப்பி வைத்தாள்.


அபர்ணாவின் மனமோ சௌமி சொன்னதில் தான் சுற்றி கொண்டு இருந்தது. அவளும் நிறைய விஷயங்கள் கேள்வி படுகிறாள் தானே.


அதுவும் இல்லாமல் ஒரு தாயாக அவளது தாய் மனம், தன்னை இங்கே தனியாக விட்டு விட்டு என்ன பாடு பட்டு கொண்டு இருக்குமோ என அவளது தாய்காக அவரது இடத்தில் இருந்து சிந்தித்து பார்க்கும் போது அவரது பயம் நியாயமானதாகவே பட்டது.


அன்றைய நாளும் அவளுக்கு பயத்திலே கடந்து போக, மாலை அறைக்கு செல்லவே பயந்து போனாள் பெண்.


அதுவும் அந்த மஞ்சுளா கேட்டால் என்ன சொல்வது என்று தவித்து போனவள், அவளை முதலில் எப்படி எதிர் கொள்வது என மனதினுள் ஆயிரம் முறையாவது ஒத்திகை பார்த்து இருப்பாள்.


ஆனாலும் அவளை நேரில் எதிர் கொளவே பயம். எப்படியும் அறைக்கு சென்று தானே ஆக வேண்டும் எனும் நினைவு வர கலங்கி போனாள்.


சரி வருவது வரட்டும் என அவள் மனதை திடப்படுத்தி கொண்டு செல்ல, அங்கே மஞ்சுளா இல்லை.


அதனை கண்டவுடன் அவளது மனதில் ஒரு அளப்பறியா நிம்மதி குடி கொண்டது.
நந்தினியும் வந்து விடவே அவளது மனம் ஏனோ அமைதியாக இருந்ததுஆனால் அதற்கு ஆயுள் குறைவு என்பது போல சற்று நேரத்தில் உள்ளே நுழைந்த மஞ்சுளாவை பார்த்து,
இவள் பதறி போனாள்.

ஆனால் அவளுக்கு இவள் அளவு பயம் இல்லை போல. முதலில் அவளை கண்டு திடுக்கிட்டாலும்,
சமாளித்துக் கொண்டு அவளை பார்ப்பதையே தவிர்த்தாள்.


அறையில் அசாத்திய அமைதி நிலவியது. இரு நாட்கள் கண்ணா மூச்சி ஆட, மேலும் எதனை பற்றியும் யோசிக்காமல் அவளால் ஓரளவு இயல்பாக இருக்க முயன்றாள்.


அவளுக்கு எங்கே தெரியும் அந்த மஞ்சுளா பயந்து போய் அவளை தூது போக சென்றவனிடம் சென்று சொல்லவும்,
அவனும் இது கதைக்கு ஆகாது என தானே களத்தில் குதிக்க முடிவு செய்தது பற்றியும்.


அன்றைக்கு பிறகு தன்னை யாரும் பின் தொடரவில்லை என்பதிலே அபர்ணாவின் மனம் அமைதி அடைந்து இருக்க, மேலும் ஒரு வாரம் எந்த வித பிரச்சனையும் இல்லாமல் ஓடி இருந்தது.


ஆனால் அதற்கும் மேலாக ஒரு புது பிரச்சனை தன்னை நோக்கி வந்து கொண்டு இருப்பது அறியாமல் என்றும் போல, வகுப்புக்கு கிளம்பி கொண்டு இருந்தாள்.


அன்றைக்கு வகுப்புக்கு சென்ற அபர்ணா இரண்டாம் ஆண்டு வகுப்பை கடக்கும் போது, அங்கு அங்கு கூடி இருந்த மாணவர்கள் இவளை கண்டு குசுகுசுவென பேசிக் கொண்டு இருப்பதை கண்டாள்.


முதலில் அவள் கருத்தில் இது பதியாமல் போக, சில வம்பு பிடித்தவர்கள் இவள் கடந்து செல்லும் போது, “டேய் பிரபு!” என அழைக்க,


இவளுக்கு முதலில் வித்தியாசமாக எதுவும் தெரிய வில்லை. ஆனால் அந்த பெயரை கேட்டவுடன் சில நொடிகள் அவளுக்கு எதுவோ புரிவது போல இருந்தது.
அவள் அதிர்ந்து நிற்க, ஒரு சில பெயர் அவளது அருகில் வருவது அவளால் உணர முடிந்தது. உடனே அங்கே நிற்காமல் தனது வகுப்புக்கு ஓடி வர,


அனைவருமே இவளை வித்தியாசமாக பார்த்ததை இவள் கண்டு கொள்ளவில்லை.
சௌமியா தான் இவள் வந்த வேகத்தை கண்டு என்னடி ஆச்சு என பதற்றத்தோடு விசாரிக்க,
இவளுக்கு பேச்சே வரவில்லை. மாறாக கண்ணில்
பொல பொலவென கண்ணீர் தான் கொட்டியது.


இவள் அழுவதை கண்டு மேலும் அவளுக்கு பதற்றம் தொத்தி கொள்ள,
“என்ன ஆச்சு டி? எதுக்கு அழுகுற? அழுகுர அளவு அப்படி என்னடி நடந்தது?” என விதவிதமாக மாற்றி கேட்டும் பதில் இல்லாமல் போக.


“அபர்ணா!” என அழுத்தமாக அழைக்க, அவளது அழைப்பில் இவள் கண்ணீர் வலியும் விழிகளோடு மலங்க மலங்க விழிக்க,


சௌமியாவுக்கு இவளை கண்டு பாவமாகி போனது. ஆனால் பாவம் பார்க்கும் நேரம் இது அல்ல என உணர்ந்தவள்,
மறுபடியும் இவளை விசாரிக்க, இவள் அழுகையுடன் ஒரு வாறு திக்கி திணறி சொல்லி முடிக்கவும், விஷயம் அடுத்த கட்டத்தை எட்டி விட்டதை இவளால் புரிந்து கொள்ள முடிந்தது. இதனை இவளிடம் சொன்னாள் மேலும் அழுவாள் என புரிந்தவள்,


அவளை சமாதானம் செய்யும் விதமாக , “இல்லடி, வேற யாரையோ பத்தி பேசிக்கிட்டு இருந்து இருப்பாங்க. நீ தான் தேவை இல்லாம்ம உன்னை நீயே போட்டு குழப்பிக்குற” என தேற்ற,


அவளை நம்பியும் நம்பாமலும் நோக்க, “ஆமாம் ஒரு வேளை அதுமாதிரி தானா நம்ம மேம் கிட்ட சொல்லி ஆக்ஷன் எடுப்போம்!” என உறுதியுடன் சொல்லவும்,


“இல்லை டி வேணாம்” என திரும்ப மறுக்கவும். இவளுக்கு சுறுசுறுவென கோவம் பொங்கியது.

இங்கே இவள் கண்ணுக்கு தெரியாதவனை கண்டு பயந்து நடுங்க, அங்கே இவளை நெருங்க, ஒருவன் திட்டம் தீட்டி கொண்டு இருந்தது, இவளுக்கு தெரியாமல் போனது.
காதல் கொள்வேன்…
 
Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Advertisement

New Episodes

Advertisement