பூங்கொடி 1

sutheeksha eswar

Writers Team
Tamil Novel Writer
#1
ஹாய் மக்களே

காதல் கொண்டேனே பூங்கொடி முதல் பதிவு. இது நான் pratilipi போட்டிக்கு எழுத ஆரம்பித்த கதை நெறைய பேர் facebookல படித்து இருப்பீங்களான்னு எனக்கு தெரியல.
ஆனா கதை என்னால் இன்னும் முடிக்க முடியல.

உங்க கருத்துக்களை என்னோட பகிர்ந்துகோங்க. அதை வச்சு தான் நான் எப்படி எழுதுறேன்னு தெரிஞ்சுக்க முடியும். போர் அடிச்சா கூட சொல்லிடுங்க. நான் மாத்த முயற்சி செய்றேன்.


stay tune with me.


நன்றி

நான் உங்கள்

சுதீக்ஷா ஈஸ்வர்


காதல் கொண்டேனே பூங்கொடி


கொடி 1

மஞ்சளும் ,இளம்பச்சையுமாக மல்லிகை சரம் தொடுத்து தொங்க விட்டது போல அழUகாக கொத்துக்கொத்தாக பூத்து குலுங்கி கொண்டு இருந்தது, அந்த கொன்றை மரம். பார்க்கவே பசுமையாக, பார்ப்பவர் மனதை கவரும் விதமாக தனது கிளைகளை ஆட்டி அதனை கடப்பவர் மீது எல்லாம் பூ மழை தூவி தனது மகிழ்ச்சியை வெளிபடுத்தும் விதமாக காற்றில் ஆடிக் கொண்டு இருந்தது.

அதன் கீழ் போடப்பட்டு இருந்த ரெண்டு சிமிண்ட் இருக்கையில், ஒரு பட்டாளமே அந்த வழியே போவோர், வருவோர் எல்லாரையும் கிண்டல், கேலி செய்துக் கொண்டும் தங்களுக்குள் பேசி சிரித்தப்படி இருந்தது, அந்த வாலிபத்தின் ஆரம்பத்தில் கவலைகள் அறியா வயதில் இருந்த சிட்டுக்குருவி கூட்டம்.

கவலைகள் அற்ற அந்த கூட்டத்தில் ஆண் நான்கும், பெண் மூன்றுமாக சுற்றி திரியும் வால் முளைக்கா வானரங்கள் என்று தான் சொல்ல வேண்டும்.

அவர்கள் சேட்டைகள் எல்லாம் அவர்களுக்குள் மற்றும் மிகவும் நெருங்கியவர்களுக்கே தெரியும் என்பதால் அவர்களை பற்றி குறை சொல்வதற்கு ஒன்றும் இல்லை.

ஓ! ரொம்ப நேரமாக அவர்கள் அவர்கள் என்று தான் சொல்லி கொண்டு இருக்கிறேன் இல்லையா!

வாங்க அவர்களை உங்களுக்கு அறிமுகப்படுத்தி வைக்கிறேன்.

அதோ அங்கே 6 அடிக்கும் சற்றே கூடுதலான உயரத்தில் ஹைட் அண்ட் வெயிட்டாக, வெள்ளையாக கலையாக அழகாக இன்றைய கதாநாயகர்களுக்கு எல்லாம் சவால் விடும் விதமாக இருக்கிறான் அல்லவா! அவன் தான் சந்தோஷ். நமது கதையின் கதாநாயகன் என்று சொல்ல எனக்கும் ஆசை தான்.

ஆனால் அவன் இல்லை. இப்படி இருந்தால் தான் அவன் கதாநாயகனா இல்லை. அவன் அப்படி இல்லை.

அவனுக்கு பக்கத்தில் சராசரியான உயரத்தில் மூன்று பேர் இருக்காங்க இல்லையா அவர்களில் முதலில் விவேக், நடுவில் வினோத், அதோ கடைசியில் நிற்பவன் பெயர் தான் பிரசன்னா.

விவேக் மாநிறத்தில் சற்றே பூசிய உடல் வாகு கொண்டவன். அந்த கூட்டத்தில் சற்று விவேகமானவனும் கூட.

வினோத் அவர்களிலே கொஞ்சம் கோவக்காரன்.

இப்போது பிரசன்னா. மாநிறமாக இருந்தாலும் கலையாக இருப்பவன். பார்த்தவுடனே வசீகரிக்கும் சுந்தரன் இல்லை என்றாலும், அவனுடன் பழகிய பின் அவனை தேட வைக்கும் அளவுக்கு குறும்பன். கலகலப்பானவன்.

முகத்திலே அந்த வயதிருக்குரிய மீசை அரும்பி இருக்க, கண்களில் ஒரு சிரிப்போடு வலம் வருபவன்.

நண்பர்கள் குழு அரட்டையில் ஈடுபட்டு இருக்க, அப்போது தான் விடுமுறைக்கு ஊருக்கு சென்று ஹாஸ்டல் திரும்பிய ராதிகா, “ எல்லாரும் இங்க தான் இருக்கீங்களா!” என்று கேட்க,

“ஊய்! நீ இப்போதான் ஊருல இருந்து வரியா?” என பிரசன்னா கேட்க,

“ஆமாடா, பஸ் லேட் ஆகிடுச்சு! அப்போவே அப்பா கொண்டு வந்து விடுறேன் னு சொன்னாங்க நான் தான் கேட்கல!”, என அவனிடம் அவள் சொல்லிக் கொண்டு இருக்க, அப்போது அவள் முதுகில் “மொத்” என ஒரு அடி விழுக

“ஆ!” என அலறிக்கொண்டே, முதுகை தேய்த்து கொண்டே அவள் திரும்பி
பார்க்க, அங்கே அவளை பார்த்து தனது முப்பத்து இரண்டு பற்களையும் காட்டி சிரித்துகொண்டு இருந்தாள், ஸ்வேதா.


அதற்குள் வலி போய் அங்கே கோவமும் எரிச்சலும் இதம் பெற,
“ஏண்டி! எரும மாடே! பிசாசே! மனுஷியாடி நீ?
ஒரு பச்ச புள்ள முதுகுல இப்படியாடி உன் கர்லா கட்டை கைய வச்சு அடிப்ப வலி உயிர் போகுதடி!” என அவளை வசவு பாட எதோ அவளுக்கு பாராட்டு பத்திரம் வாசித்து போல அப்போதும் அவள் சிரித்துக் கொண்டே இருக்க,

அது அவளை மேலும் கடுப்பாக்க,
“ஏண்டி! நான் என்ன உனக்கு பாராட்டு பத்திரம்மா வாசிச்சுட்டு இருக்கேன்?” என, அவள் அதற்கும் சிரித்து கொண்டிருக்க,

“போடி குண்டம்மா!”
என அவள் திட்ட, உடனே அவளது கையை மடக்கி, முதுகு புறம் கொண்டு வந்து ஒரு கையால் பிடித்து வைத்து அவளது முதுகிலேயே மேலும் இரண்டு அடிகள் போட
ராதிகா வலி தாளாமல் “எ குட்டி கொரங்கே!, வலிக்குதுடி எருமமாடே!”
என அவள் அலற,

மேலும் இவர்கள் இருவரின் சேட்டைகளை பார்த்துக்கொண்டு இருந்த நால்வருரையும் அவள் திட்ட மறக்கவில்லை.

“டேய்! தடி மாடுகளா! அவ என்ன அடிச்சுகிட்டே இருக்கா நீங்க பாட்டு என்னகென்னணு உட்கார்ந்து வேடிக்கை பார்த்துட்டு இருக்கீங்க!” என அவள் அவர்களையும் திட்ட,

இவ்வளவு நேரம் வேடிக்கை பார்த்துக்கொண்டு இருந்த சந்தோஷ், “உன்ன காப்பாத்தலாமே னு தான் இவ்ளோ நேரம் நெனச்சுட்டு இருந்தேன்,
ஆனா, உன் வாய்க்கு இன்னும் நாலு அடி போட்டாக்கூட தப்பில்லைன்னு தோணுது. இன்னும் ரெண்டு சேர்த்து போடு ஸ்வேதா !”என அவளுக்கு இன்னும் எடுத்துக் கொடுக்க,

“அட பாவி! மனுஷனாடா நீ? அவ என்ன போட்டு மொத்திக்கிட்டு இருக்கா நீ என்னடா னா இன்னும் ரெண்டு அடி கொடுக்க சொல்ற!” என அவனை தீ பார்வை பார்க்க,

“அப்போவும் உனக்கு வாய் அடங்குதா பாரேன்!” என அவன் அந்த பெஞ்சை தாண்டி குதித்து வந்து, எதிர் புறமாக அமர்ந்து இருந்த அவளுக்கு அவனும் அவர்கள் சார்பில் ரெண்டு அடிகளை வலிக்காமல் பரிசளிக்க,

இவர்களது சண்டையை ஒரு புன்னகையோடு பார்த்துக்கொண்டு இருந்தனர் மற்ற மூவரும்.

“டேய் போதும் விடுங்க டா! அவ தாங்க மாட்டா என விவேக் சண்டையை முடிவுக்கு கொண்டு வரும் பொருட்டு அவன் தலை இட,

இவர்களுடன் மல்லுக் கட்டிக் கொண்டு இருந்த ராதிகா, சற்றே தனது தலையை உயர்த்தி,

“அப்பா! மகாராசா! நீங்களா! இவ்ளோ நேரம் இதுங்க ரெண்டும் என்ன போட்டு மொத்திக்கிட்டு இருந்துச்சே அப்போ எல்லாம் சும்மா இருந்துட்டு சாவகாசமா ஒரு மணி நேரம் கழிச்சு வந்து பஞ்சாயத்து பண்ற?” என அவள் அவனிடமும் சண்டைக்கு கிளம்ப,

அதை பார்த்து கொண்டு இருந்த சந்தோஷ், “ டேய்! இவளுக்கு சப்போர்ட் பண்ற உன்னையும்
கிண்டல் பண்றா பாரு! , இவள என அடிக்க போக,

“ டேய்! டேய்! அவ பாவம் டா விடுங்க டா!” என அவன் மறுபடியும் அவர்களிடம் சொல்ல,
அவர்களின் சண்டையை முடிவுக்கு கொண்டு வர அங்கு வந்தாள் சுகுணா.

“டேய்! என்னடா காலையிலே விளையாண்டுகிட்டு இருக்கீங்க!” என்ற படியே வர,

“என்னது! விளையாடுரோமா? இத பார்த்தா விளையாடுற மாதிரியா தெரியுது பக்கி!” என அவள் அவளிடமும் சிலிர்த்துக் கொண்டு செல்ல,

“ஏய்! எங்க இப்படியே தப்பிக்க பாக்குற!” என அவளை இழுத்து பிடித்த ஸ்வேதா, “ஒழுங்கா உட்காரு!” என அவளை பிடித்து அமர வைக்க,

என்ன நடந்தது என முன் கதை சுருக்கம் கூறினான் வினோத். அதனை கேட்டு அவளும் சிரிக்க அதில் மேலும் கடுப்பான ராதிகா, “அடியேய்! இவங்க ரெண்டு பேர் கிட்ட இருந்தும் என்ன காப்பாத்தாம என்ன பல்ல பல்ல காட்ற நீயும்!”
என அவள் குறை பட,

“சரி! சரி! எல்லாரும் விளையாண்டது போதும்” என அனைவரின் கவனத்தையும் கலைத்த சுகுணா.

“எல்லாரும் நம்ம ஸ்.பி குடுத்த அசைன்மென்ட் முடிச்சுதுட்டிங்களாபக்கிகளா?” என அவள் வினவ,

“அது தான் பத்தாம் தேதி தானே சப்மிட் பண்ணனும் அதுக்குள்ள என்ன உனக்கு அவசரம்?” என வினோத் கேட்க,

“என்னது பத்தாம் தேதி தானா! அடேய் இன்னைக்கு தான் டா பத்தாம் தேதி!” என அவள் சொல்ல,


அது வரை சாதாரணமாக இருந்த அந்த பட்டாளம், சற்றே பரபரப்பாக, அதில் ராதிகா வினோத் பிரசன்னா மட்டும் அதிர்ந்து போய்

“அய்யய்யோ!” என கூக்குரலிட அவர்களது சத்தத்தில் மற்ற அனைவரும் பயந்து, திடுக்கிட்டு அவர்களை அதிர்வோடு நோக்க,


“அய்யய்யோ! நாங்க இன்னைக்கு 9 தேதிணுல டா நெனச்சோம்!” என மூவரும் கோரஸ் பாட,

“என்னது?” என மற்ற நால்வரும் அதிர்ச்சியில் கோரஸ் பாடினர்.

இது அவர்கள் எழுதவில்லை நண்பர்கள் பாவம் என்பதால் வந்த அதிர்ச்சி அல்ல, இவர்களால் மற்ற நால்வரும் படும் துன்பம் அப்படி,

பிரசன்னா தான் ,”டேய்! நல்ல வேலை
நான் ஒரு பத்து பக்கம் எழுதி
வச்சு இருக்கேன்!”
என அவன் சொல்ல, இப்போது அதிர்வது மற்றவர்கள் முறையானது.

“டேய்! பாவி! உன்ன நம்பி தானே டா நானும் இவனும் எழுதாம இருந்தோம்! நீ இப்படி சொல்ற!” என ராதிகாவும் ,வினோத்தும் பதற,

“இல்லடா! அன்னைக்கு உங்க கிட்ட பேசிட்டு சும்மா தான் இருந்தேன். அப்புறம் ரொம்ப போர் அடிச்சுதா அதான் எழுதுனேன்!” என்று அவன் அவர்களுக்கு விளக்கம் கொடுக்க,


அதனைக் கேட்டு அவர் இருவரும் அவனை வெட்டவா? குத்தவா? என்பது போல பார்த்து வைத்தனர்.

இப்பொது அவனை அடிக்க பாய, “டேய் ரெண்டு பேரும் கொஞ்ச நேரம் சும்மா இருங்கடா !”என அவர்களை அடக்கினான் விவேக்.

“இப்போ என்ன பண்ண போறீங்க ரெண்டு பேரும்? அவன் பாதி எழுதி முடிச்சுட்டான் !
நீங்க எப்போ எழுதி சப்மிட் பண்ண போறீங்க?” என அவன் வினவ,

அவர்களோ, “ எப்போடா எஸ்.பி ஹவர் வருது?” என கேட்க,

“இன்னைக்கு காலையில ரெண்டாவது கிளாஸ் எஸ்.பி தாண்டா!” என அவன் சொல்ல,

நண்பர்கள் மறுபடியும் அலற,
“அட ச்சீ! சும்மா சும்மா கத்திகிட்டு காது வலிக்குதுடா” என சந்தோஷ் சொல்ல,

இப்போது அவனை திரும்பி பார்த்தனர்.

“சரி இப்போ கொஞ்சம் நேரம் இருக்கு இப்போ எழுதுனா கூட கொஞ்சம் எழுதி முடிச்சுடலாம்”
என ஸ்வேதா சொல்ல,

ராதிகாவும், வினோத்தும் அவர்களை பாவமாக நோக்க “அய்யய்யோ!” என அலறுவது அவர்கள் முறையானது .

ஏன் என்றால் இவர்கள் சாகசங்கள் அப்படி. “டேய்! டேய்! ப்ளீஸ் டா ப்ளீஸ் டா யாரவது எழுதி கொடுங்கடா” என அவர்கள் கேட்க, முடியவே முடியாது என அனைவரும் ஒன்றாக சொல்ல,

“பிரிண்ட்சுகலடா நீங்க? எல்லாம் துரோகிங்க!” என வினோத் திட்ட,
ராதிகாவோ சுகுணாவை பார்க்க, “ஏய்! என்ன என்ன பார்க்குற? என்னால எல்லாம் எழுதித்தர முடியாது போ!” என மறுக்க,

அவள் அப்படியே முகத்தை பாவமாக வைத்த படி, ஸ்வேதாவை பார்க்க, “என்னாலையும் முடியாது போ !”என அவளும் முறுக்கி கொள்ள,

அவளோ அவளை மட்டும் விடாமல் பார்க்க, “சரி! சரி! மூஞ்சிய அப்படி வச்சு தொலைக்காத குடு எழுதி தொலைக்குறேன் “என்க,

உடனே பல்பு போட்டது போல பரிகாசமாக இருந்தது அவள் முகம்.

“அய்ய! ரொம்ப தான்!” என அவளை பார்த்து கொணட்ட,

“ஏய்! சுகுணா என்னால புல்லா எல்லாம் எழுத முடியாது அதுக்கு டைம் இல்ல நீ கொஞ்சம் எழுதி கொடுடி!” என அவளை அழைக்க அவள் முடியாது என சொல்ல,
ராதிகா கெஞ்ச அவள் மிஞ்ச ஒரு வழியாக, “ ஏய் ப்ளீஸ் டி என்னக்காக டி!” என ஸ்வேதா சொல்ல,

உனக்காக இல்ல இவளுக்காக என சுகுணா ராதிகாவை பார்த்து சொல்ல எப்படியோ எழுதி கொடுத்தா சரி” என்று ராதிகா சொல்ல ,
எப்படியோ இவர்களது சம்பாஷனை ஒரு வழியாக முடிவுக்கு வந்தது.

இங்கே மறு பக்கம், பிரசன்னா பாதி எழுதி முடித்து இருக்க, வினோத் தான் திண்டாட,

“டேய்! டேய்!
இந்த ஒரு தடவை மட்டும் எழுதி தாங்க டா!” என அவன் விவேக்கிடம் கேட்க,

“ நாயே! போன தடவையும் இத தாண்டா சொன்ன நீ!” என்க,

“இந்த டைம் மட்டும் டா! ப்ளீஸ்!” என்றவன் கெஞ்ச அவன் முடியவே முடியாது என மறுக்க, அவன் அப்படியே சந்தோஷை பார்க்க, அவன் அப்படியே ஓட பார்க்க அவனை அதற்குள் விரட்டி அவனை சட்டை காலரை பிடித்து வைத்துக் கொண்டு

“எங்க ஓடுற!”, என அவன் கேட்க “டேய்! போடா போன தடவை நீ எனக்கு எழுதி கொடுத்தியா?” என கேட்க,

“ டேய் பழி வாங்குற நேரமாடா இது?” என அவன் அங்கலாய்க்க,

“டேய் சந்தோசு! அவனை பார்த்தாலும் பாவமாக தான் இருக்கு . இந்த ஒரு தடவை மட்டும் தான் எழுதி தருவோம்!” என விவேக் பெரிய மனது பண்ண,

“அப்பா! என் தெய்வமே! நீ தான் என் நண்பேண்டா!” என அவனை கட்டிக் கொண்டான்.

காதல் கொள்வேன்...
 
Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Advertisement

New Episodes

Advertisement