புள்ளினங்காதல் - 7

Advertisement

Kamali Ayappa

Well-Known Member
படித்து முடித்தவள், "கடைசி லைன். அவள் பெயர் கொண்டு, இடர் இதை விலக்குவாய். அப்டினா. இதுல யாரையோ மென்ஷென் பன்றாங்க. அவங்க பெயரை வச்சி தான் இந்த கதவை ஓபன் பண்ண முடியும். ஏதோ தேவதை இனம்ன்னு இருக்கே. அழிச்சிட்டாங்கன்னும் இருக்கு. செகன்ட் பராகிராபில. கடவுளின் நகல் நாம் என்று அகந்தை கொண்ட இனம் ன்னு இருக்கு. அது யாரு? நம்ப மனித இனத்தை தான் குறிப்பிடுறாங்களா?" என்று அவிரா பேசிக்கொண்டே இருக்க, ஆரூரன் மண்டைக்குள் வேறு ஒன்று ஓடிக்கொண்டு இருந்தது.



"அவிரா. அதை திருப்பி படி" என்று அவன் கேட்க, அவள் மீதும் ஒரு முறை வாசித்து காட்டியதும்,



'காண்போர் கண்ணெடுக்கா வண்ணம்,

நாள் ஒன்று அதன் நீளத்திற்கும்,

ஊர்வலம் நடத்திய,

தன் இனத்தின் வரலாறு கூறத்தானோ!

அரை நூற்றாண்டு தனிமையில் வாடினாளோ?

இராட்சசர் கூட்டம் விட்டுவைத்த,

இறக்கை முளைத்த ஒற்றை இனியவள்' இந்த வரிகளை மீண்டும் சொல்லி பார்த்தான் அவன். "அவிரா. இந்த கேள்விக்கு பதில் என்னவா இருக்கும்ன்னு நெனைக்குற?" என்று ஆரூரன் கேட்க, "ஏதோ தேவதை இனம்ன்னு தான் இருக்கு திரும்ப திரும்ப. உண்மையாவே ஏதாவது தேவதை இனம் வாழ்ந்து அதை மனுஷங்க அழிச்சிட்டாங்களான்னு யோசிக்கிறேன்.



"ஆமா அவிரா. தேவதை இனம் தான். அதை அழிச்சதும் மனுஷங்க தான். ஆனா. பறவை ரூபத்துல இருந்த தேவதைங்க" என்று ஆரூரன் வாடிய குரலுடன் சொல்ல, "என்ன?" என்று வியந்தாள் அவிரா. "ஆரூரன். எல்லாத்தையும் நீ ஒரு ஆரணித்தாலொஜிஸ்டாவே பாக்குற. எப்படி அவ்ளோ உறுதியா சொல்லுற?" என்று அவிரா கேக்க, "நீயே யோசி அவிரா. அந்த ரூபீஸ் க்யூப், அப்புறம் இந்த காய்ன்ஸ் பொருத்தி இந்த க்ளூ வெளிய எடுத்தது எல்லாமே பறவைகளை சம்பந்த படுத்தி தான்" என்று ஆரூரன் அவர்கள் தோள்களை பிடித்து கூற, "இருந்தாலும்..இதுல ஒரு இடத்துல கூட இது ஒரு பறவைன்னு குறிப்பிடலையே ஆரூரன்" என்று அவள் நம்பிக்கை இல்லாமல் கூற, "உனக்கு பஸ்சேன்ஜ்ர் பிஜியன்(Passenger pigeon) பத்தி தெரியுமா அவிரா? தமிழ்ல பயணிப் புறா" என்று ஆரூரன் கேட்க, இல்லை என தலை அசைத்தாள் அவிரா.



"நான் பயணிப்புறா பத்தி சொல்லுறேன். அதை கேட்டுட்டு இந்த ஹிண்ட்க்கு பதில் அதுவா இல்லையான்னு நீயே முடிவெடு" என்று கூறவும், "சரி சொல்லு" என்றாள் அவிரா.



"பயணிப்புறா. இப்போ அது அழிஞ்சிபோச்சு. அதை விட அழிச்சிட்டோம்ன்னு சொல்றது ரொம்ப பொருத்தமா இருக்கும். அது ஒரு வகையான காட்டுப்புறா. ஒரு காலத்துல நோர்த் அமெரிக்கா ஓட மலை பகுதிகள்ல கூட்டம் கூட்டமா பறந்து திரிஞ்ச பறவை அது. கூட்டம்ன்னா? எவ்ளோ பெரிய கூட்டம்ன்னு நெனைக்கற. அது ஒரு ஊர்வலம் மாதிரி வானத்துல பறந்து போகும். நீ ஒரு எடத்துல உக்காந்து பார்த்தன்னா. காலைல ஆரமிச்சி சாயந்தரம் வரை அங்கேயே உக்கார்ந்துட்டு இருக்க வேண்டியது தான். அவ்வளவு நேரம் ஆகும் அந்த ஊர்வலம் கடக்க. இத்தனைக்கும் அந்த பறவை பறக்குற வேகம் சுமார் 100 கி .மீ . அப்டி கோடி கணக்குல கூட்டமா வாழ்ந்த பறவை. அதுவும் அந்த பறவை எவ்ளோ அழகா இருக்கும் தெரியுமா அந்த பறவை. கதை ல படிக்கற தேவதைக்கு உருவம் குடுத்தா இப்டி தான் இருக்குமோன்னு கற்பனை செய்யும் அளவுக்கு. அவ்வளவு அழகு. பொதுவா பறவைகள் தன்னோட இறக்கையை மட்டும் விரித்து பறக்கும். ஆனா இந்த பயணிப்புறா இறக்கையை மட்டுமில்லாமல் தன்னோட வாலையும் விரிச்சி பறக்குறதால தான் அவ்ளோ அழகு. நார்த் அமெரிக்கன் ட்ரெய்ப்ஸ் (Tribes) மட்டும் இருந்த வரை, அந்த பறவைகளுக்கு எந்த பிரச்சனையும் இல்ல. அவங்க இந்த பறவைகளை போற்றுதலுக்கு உரியதாய் தான் நெனச்சாங்க.



ஆனா அங்க வந்து குடியேறிய ஐரோப்பியன்ஸ், அவங்க இந்த புறாக்களை பெரிய தொந்தரவா நெனச்சங்க, வேட்டையாட ஆரமிச்சாங்க. இந்த பறவைகளை வேட்டையாடுறது அவங்களுக்கு கஷ்டமான விஷயமா இல்லை. சும்மா ஒரு வலை வீசுனா போதும். கொத்துகொத்தா சிக்கும். அதைவிட வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டா போதும். அந்த சத்தத்தை கேட்டே அந்த பறவைகளோட இதய துடிப்பு தாறுமாறா எகிறி, அதனை பறவைகள் செத்து விழும். இப்படியே கொன்னு குவிச்சாங்க அந்த பறவைகளை.



இந்த புறா ஓட இறைச்சி ரொம்ப சாப்டவும், அதே நேரத்துல விலையும் குறைவா இருந்ததால, இந்த புறாவோட இறைச்சிக்கு டிமாண்ட் அதிகமா இருந்தது. இவங்க கொன்னு குவிக்கறது மட்டுமில்லாமல், இதை மற்ற இடங்களுக்கும் எக்ஸ்போர்ட் பண்ண ஆரமிச்சாங்க. இந்த புறா வருசத்துக்கு ஒரு முட்டை தான் இடும். அவங்க கொன்னு குவிக்கற அசுர வேகத்தை, ஈடுகட்டுற அளவுக்கு வேகமா இனப்பெருக்கம் செய்யவும் முடியல.



இந்த இனத்தோட கடைசி புறா, "மார்த்தா" கிட்ட தட்ட ஐம்பது வருடங்கள் சின்சினாட்டி உயிரியல் பூங்காவில் தனியாவே இருந்து இறந்துடுச்சு. கிட்டத்தட்ட நூறு வருஷம் ஆச்சு இந்த புறா இனம் மொத்தமா அழிஞ்சி போயி.



இது தான் அவிரா. பயணிப்புறாவின் வரலாறு. இப்போ படிச்சி பாரு" என்று ஆரூரன் கூற, மீண்டும் ஒரு முறை படிக்கத்துவங்கினாள்.



'ஆர்கலி அதன் மேல்,

ஒற்றை விரல் கோர்த்து,

வீறு நடை போடும்,

ஒரு தாய் பிள்ளை இருவர்

மேலவன் அவனுள்ளே...' என்று முதல் ஐந்து வரியை படித்தவள், "அந்த புறாக்கள் இருந்தது நோர்த் அமெரிக்கான்னு தான சொன்ன? அப்போ? இந்த ஐந்து வரியில குறிப்பிட்டுருக்கறது அதை தானா?" என்று அவிரா கேட்க, "எனக்கு தெரியல அவிரா. இதெல்லாம் எனக்கு புரியவும் இல்ல. நான் கடைசி பராகிராபி வச்சி மட்டும் தான் சொன்னேன். உன்னால கனெக்ட் பண்ண முடியுதான்னு பாரு.



"எனக்கு தெரிஞ்சி வரை சொல்றேன் ஆரூரன். ஆர்கலின்னா கடலை குறிக்குற ஒரு சொல். அப்போ. நம்ப அஸ்ஸும்ப்ட்ஷன் படி இந்த கடல் மேல ஒற்றை விரல் கோர்த்து நடக்கும் அந்த இரண்டு பெரு, நோர்த் அண்ட் சவுத் அமெரிக்கா. அது ரெண்டுத்துக்கும் இருக்க அந்த குறுகிய ஒரு கன்னெக்ட்டிவ். அதாவது பனாமா கெனால். அதை தான் ஒற்றை விரலன்னு குறிப்பிட்டுருப்பாங்க போல. அடுத்து வரும் வரி, மேலவன் அவனுள்ளே. மேல இருக்கறது நோர்த் அமெரிக்கா தான். சோ. நோர்த் அமெரிக்காவ தான் சொல்லி இருக்காங்க" என்று அவிரா விளக்க, "மேல படி" என்று செய்கை காட்டினான் ஆரூரன்.



"மேலவன் அவனுள்ளே...

கடவுளின் நகலே நாம்,

என்று அகந்தை கொண்ட இனம் அதுவும்...நான் முன்னாடி சொன்னது போலவே, இந்த வரிகளில் குறிக்கறது மனித இனைத்தை தான்.



"ஐயம் கொண்டது...

சிரம் மேல் சிறகடிக்கும் அவை...

கடவுளின் துகளோ!

தேவதையின் இனமோ என்று?....
தலைக்கு மேல பறக்கும் அந்த பறவைகள் தான் தேவதை இனமோ? கடவுளின் துகளோன்னு மனித இனம் ஐயம் கொண்டதுன்னு சொல்லிருக்காங்க"



"ரதியின் உயிரோவியம் அவளோ, என்று அண்ணார்ந்து பார்க்க,

ருசி கண்டு மகிழ்ந்தார், அக்கண்டத்தின் அயலவர்....

நீ சொன்னபடி. அங்க இருந்த நேட்டிவ் மக்கள், அந்த பறவையை ரசிக்க தான் செஞ்சாங்க. ஆனா அங்க வந்து குடியேறிய ஐரோப்பியன்ஸ் தான் அந்த புறாக்களை கொல்ல ஆரமித்தது. அப்போ அவங்க அந்த கண்டத்தின் அயலவர் தான. ருசி கண்டு மகிழ்ந்தது அவங்க தான். இந்த வரிகளும் பொருந்துது."



"அடுத்து.

தேவதை இனம் அதை அழிக்க எவரேனும் துணியோர்,

என்று தான் எண்ணினானோ?,

வருடம் ஒன்று மட்டும் இட வைத்த,

தேவன் அவனும் கூட!

மானுடன் அவனை படைத்தமை மறந்து......

இதுவும் மனித இனத்தை பத்தி தான் சொல்லிருக்காங்க. மனிதர்களை படைத்தது மறந்த கடவுள், தேவதை மாதிரி இருக்க இருக்க இந்த புறாக்களை யார் கொள்ள போறாங்கன்னு நெனச்சி தான் வருஷம் ஒரு முட்டை மட்டும் இட வைத்தானோன்னு கேட்ருக்காங்க".





"வன்முறையிலும் விஞ்ஞானத்தின் வாசம்,

அதன் வழியாய் வந்த கருவி அதை,

விசும்பை நோக்கி, அவன் உயிர்ப்பிக்க,

மடிந்து விழுந்தாளோ அவள் மண்ணில்,

அதன் ஓசையும் அவள் மனம் அதை இம்சிக்க.

இறகு மட்டுமல்ல, இதயமும் இலகு தான் அவளுக்கு.

வலை அதிலும் மாட்டி,

வாணலி அதிலும் வறுப்பட்டு,

வானத்து தேவதை அவள்,

வம்சத்தை வளர்க்க விரும்பாமல்,

வெறுத்து தான் அடைந்தாளோ !

விண்ணுலகம் அதை?.......

இதான் அடுத்த வரிகள். வன்முறையிலும் விஞ்ஞானத்தில் வாசம் படர்ந்ததால், உருவான கருவி. அதை வானத்தை நோக்கி செயல்படுத்த, அதோட சவுண்ட் கூட தாங்க முடியாத சாப்டான இதயம் அவளுக்கு. அதனால தான் மண்ணுல விழுந்துட்டான்னு சொல்லிருக்காங்க. அப்போ அந்த கருவி துப்பாக்கியா இருக்கணும்ல. அடுத்து வர வரிகளிலும் வலையில மாட்டி..சமையல் செஞ்சு சாப்டதுன்னு அந்த பறவைகள் அனுபவிச்ச கொடுமைகளை தான் சொல்லிருக்காங்க"







"கூட்டமாய் வாழ்ந்து,

காண்போர் கண்ணெடுக்கா வண்ணம்,

நாள் ஒன்று அதன் நீளத்திற்கும்,

ஊர்வலம் நடத்திய,

தன் இனத்தின் வரலாறு கூறத்தானோ!

அரை நூற்றாண்டு தனிமையில் வாடினாளோ?

இராட்சசர் கூட்டம் விட்டுவைத்த,

இறக்கை முளைத்த ஒற்றை இனியவள்......

அப்புறம் இந்த கடைசி வரிகள். நீ சொன்னதுக்கு ரொம்ப கச்சிதமா பொருந்து. ஒரு நாள் நீளத்துக்கும் அவ்ளோ அழகா ஊர்வலம் செய்த பறவைங்க தான அந்த புறாக்கள். அப்புறம், கடைசி நான்கு வரிகள். நீ சொன்ன அந்த 'மார்த்தா'ன்ற பறவையை குறிப்பதா இருக்கனும். தன் இனைத்தை பத்தி சொல்ல தான் அப்டி அறை நூற்றாண்டு தனியா கஷ்டப்பட்டாளோன்னு கேட்ருக்காங்க"





என்று முழுதும் பேசி முடித்தவள், அவன் முகம் பார்க்க, "இப்போ என்ன சொல்ற?" என்று கேட்டான் ஆரூரன். "ஒவ்வொரு வரியும் கச்சிதமா பொருந்துது" என்றாள் அவள்.



"அப்போ. விடை பயணிப்புறா தான். ஆனா அதை வச்சி எப்படி இந்த கதவை திறப்பது?" என்று ஆரூரன் கேட்க, ஏதும் கூறாமல் யோசித்தாள் அவிரா.



அவள் யோசனையை கெடுக்காமல் அந்த கதவிடம் சென்று பயணிப்புறா என்று கத்தி பார்த்தான் ஆரூரன். அந்த சாவி நுழையும் துவாரத்தின் அருகில் சென்று கத்தி பார்த்தான். பயனில்லை. "ஒரு வேலை இந்த மாயாஜால படத்துலலான் வர மாதிரி மூணு முறை சொல்லணுமோ?" என்று யோசித்து மூன்று முறை சொல்லியும் பார்த்துவிட்டான். கதவு மட்டும் திறக்கவில்லை.



அந்த கதவின் இரு பக்கமும் மாட்டி இருந்த சாவிகளில் 'ப' எழுத்து பொதிந்திருந்த சாவியை தேடி எடுத்தாள் அவிரா. அந்த சாவியை துவாரத்தில் நுழைத்து, ஒரு திருப்பு திருப்பினாள். திருகமுடிந்தது. ஆனால் கதவை திறக்க முடியவில்லை. இன்னொரு முறை திருக பார்த்தாள். முடியவில்லை. அவள் வீடு கதவு, கப்போர்டு என அனைத்தும் இரண்டு முறை திருகினாள் தானே திறக்க முடியும்? ஒரு வேலை ப அந்த விடையின் முதல் எழுத்து, இரண்டாம் திருகல் ய என்ற இரண்டாம் எழுத்தை கொண்டு இருக்குமோ? என்று யோசித்தவள், ய எழுத்து பொறித்திருந்த சாவியையும் தேடி எடுத்தாள். அதை வைத்து இன்னொரு திருகு திருக முடிந்தது. ஆனால் திறக்க முடியவில்லை. அதே போல் யோசித்து. "ப யா ணி ப் பு றா" என்ற ஆறு எழுத்துக்கள் கொண்ட சாவியையும் அதே வரிசையில் நுழைத்து, மொத்தமாய் ஆறு திருகள். அதாவது ஒவ்வொரு சாவியை கொண்டு ஒரு திருகள் என்று முடித்ததும் திறக்க முடிந்தது அந்த கதவை.



கதவு திறந்ததும் முகம் முழுதும் பொலிவுடன் ஆரூரனை அவள் நோக்க, அவனா நிம்மதியாய் ஒரு பெருமூச்சு விட்டான். பாவம். இது முடிவல்ல முடிவல்ல ஆரம்பம் தான் என்று தெரியாதவர்களாயிற்றே அவர்கள்.
 

தரணி

Well-Known Member
அருமை அருமை... இப்படி ஒரு இனமிருந்துச்சுடா.... படிக்கும் போதே அவ்வுலவு அழகாக இருக்குதே அதை நேரில் பாத்தா எப்படி இருக்கும்.... ஆன நம்மோட வளர்ச்சியால் நிறைய இனம் இது போல அழிஞ்சி போய்டுச்சே.... அதை நினைக்கும் போதே வருத்தமா இருக்கு
 

Kamali Ayappa

Well-Known Member
அருமை அருமை... இப்படி ஒரு இனமிருந்துச்சுடா.... படிக்கும் போதே அவ்வுலவு அழகாக இருக்குதே அதை நேரில் பாத்தா எப்படி இருக்கும்.... ஆன நம்மோட வளர்ச்சியால் நிறைய இனம் இது போல அழிஞ்சி போய்டுச்சே.... அதை நினைக்கும் போதே வருத்தமா இருக்கு
இது மாதிரி எத்தனையோ இனம்... அதுக்காக வருந்த கூட நேரமில்லாமல் போச்சு நமக்கு தான்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top