புள்ளினங்காதல் - நன்றியுரை

Advertisement

Kamali Ayappa

Well-Known Member
என்ன டா இவ... epilogue எழுதறேன்னு சொல்லிட்டு, இப்போ நன்றிஉரைன்னு வந்து நிக்குறாளேன்னு பாக்குறீங்களா!

"எனக்கு வேற வழி தெரியல ஆத்தா!" அன்னைக்கு ஒரு ஆர்வத்துல epilogue வரும்ன்னு சொல்லிட்டு போய்ட்டேன். ஆனா, நானும் நின்னு யோசிக்கிறேன், நடந்து யோசிக்கிறேன், படுத்து தூங்கும்போது கூட யோசிக்கிறேன், ஆனா ஒரு திருப்திகரமான கன்டென்ட் கிடைக்கல.

சரி. ஒரு epilogue எப்படி எழுதணும்ன்னு கூகிள் கிட்ட கேட்டா, "ஒரு கதைக்கு epilogue தேவையா, இல்லையான்னு 1008 டிஸ்கஷன் இருக்கு. அதை பார்த்து இன்னும் குழம்பி போயாச்சு.

நல்லா ஒரு புல் மீல்ஸ்க்கு அப்புறம், கேவலமா ஒரு பாயாசம் குடுத்து வாயை கெடுப்பதற்கு, பாயாசம் குடுக்காமல் இருப்பது மேல்ன்னு தோணுது. (பின்குறிப்பு: யாரும் இது வரை, கதையை கழுவி ஊத்தாத காரணத்தால், நானே நல்லா இருக்குன்னு நெனச்சிக்கிட்டேன். நல்லா இல்லன்னு நெனச்சா, சொல்லிடுங்க )


அப்பறம் இதை நான் சொல்லியே ஆகணும்!

இந்த கதையை கிண்டிலில் போடலாம்ன்னு முடிவு பண்ணி, ஸ்பெல்லிங் செக் பண்ண தொடங்கினேன். 'நீ எழுதினது மொத்தமும் ஸ்பெல்லிங் மிஸ்ட்கே தான்'ன்னு மனசாட்சி என்னை பார்த்து துப்பும் அளவிற்கு மிஸ்டேக்கோ மிஸ்டேக். இத்தனை நாள் எப்படி என்னைய திட்டாம படிச்சீங்கன்னு வியக்கிறேன். அதுக்காகவே ஒரு பெரிய நன்றி.


கண்டிப்பா எழுத்துப்பிழை, ஒற்றுப்பிழை எல்லாம் திருத்திக்க பாக்குறேன். படிக்கும்போதே ஒழுங்கா படிச்சிருக்கலாம். அது என்னமோ பள்ளிக்கூடம் படிக்கும்போதே தமிழ் வராது. பத்தாம் வகுப்புல ஸ்கூல் பர்ஸ்ட் போனதே தமிழ் ஒழுங்கா எழுதாததால தான். என்னை அப்போவே பிரெஞ்சு மொழிப்பாடம் எடுக்க விட்ருக்கலாம்லன்னு, அப்பாவிடம் சண்டை பிடித்த நாட்கள் ஏராளம். cbse என்பதால், 11th, 12th ல் ஆங்கிலம் மட்டும் தான். இரண்டாம் மொழிப்பாடமே இல்லை. கல்லூரி சொல்லவே வேண்டாம். அனைத்து மாநில மாணவர்களும் பாரபட்சம் இன்றி இருக்கும் கல்லூரி. மூன்றில்-ஒரு பங்கு மாணவர்கள் தான் தமிழ் பேசுபவர்கள். ரூம்மெட் கிட்ட கூட, இங்கிலிஷ் தான் பேசியாகனும். 'அப்புறம் எதுக்கும் தமிழ் எழுதி எங்களை கொல்லுற'ன்னு நீங்க கேக்குறது எனக்கு புரியுது. எல்லாம் ஒரு ஆர்வக்கோளாறு தான். இப்போ கொஞ்சம் கொஞ்சமா கத்துக்கிட்டு இருக்கேன். நான் முழுசா கத்துக்குற வரை, நீங்க பொறுத்துக்கோங்க.



அப்பறம், ஒரு பாதி கதை வரை, அப்டியே ஒரு ஆர்வத்துல எழுதியாச்சு. அப்பறம் பெரிய வரவேற்பு இல்ல. கொஞ்சம் கொஞ்சமா எழுதுற ஆர்வம் குறைந்தது. ஒவ்வொரு எபிசொட் எழுதவும் கஷ்டமா இருக்கும், இப்போ எழுதி தான் ஆகணுமான்னு. ஒரு விஷயம் நமக்கு வரும்ன்னு நல்லா தெரிஞ்சிட்டா தயக்கம் இல்லாம செய்யலாம். ஆனா, எனக்கு எழுத்து முற்றிலும் புதுசு. எனக்கு இது வருமா, வராதான்னு ஒரு கேள்வி இருந்துட்டே தான் இருந்துச்சு. தேவை இல்லாம, இதுல இறங்கிட்டோமோ! நமக்கு இது சரி பட்டு வராதோ! நம்ப எழுத்து சரி இல்லையோ! நம்ப எடுத்த கதைக்களம் சரி இல்லயோ!'ன்னு பல கேள்வி. பாதியிலே நிறுத்திருக்க வேண்டியது, ஆனாலும் எப்டியோ முழுசா முடிச்சதுக்கு காரணம், தொடர்ந்து படிச்சி, உற்சாகப்படுத்திய சிலர் தான். தொடர்ந்து படித்து, ஒவ்வொரு அத்தியாயத்துக்கும் கமெண்ட் போட்ட சிலருக்காகவே முடித்தது தான். என்ன எப்டியோ இந்த கதை முடிக்க வச்சவங்களுக்கு நன்றி.


அப்புறம் சிலர், இந்த கரு எப்படி தோணுச்சு'ன்னு கேட்ருந்தீங்க. அது காரணம், ஒரு ஜீவன். அந்த ஜீவனை நான் என்ன உறவுன்னு சொல்றது...அண்ணா'ன்னு சொல்லுறதா, அப்பா'ன்னு சொல்லுறதா, ஆசான்'ன்னு சொல்லுறதா, தோழன்'ன்னு சொல்லுறதா? இப்போவரைக்கும் தெரியல. இப்போதைக்கு ஒரு ஜீவன்'னே வச்சிக்கலாம்.


இதுக்கு முன்ன எழுதுனதே இல்லை'ன்னு சொல்ல முடியாது. விளையாட்டுத்தனமா எழுதினது உண்டு. அதை அந்த ஜீவன் படித்ததுண்டு. அப்பறம், ஒரு கட்டத்தில், அதை கூட எழுதாமல் போக, ஒரு நாள் நடந்த வாக்குவாதத்தில், அந்த ஜீவன் முன்வைத்த சவால் தான். "extinction of birds" இதை மையமாக வைத்து ஒரு கதை எழுத முடியுமா? இதுதான் அந்த சவால். வீம்புக்காக ஒத்துக்கொண்டு, வீம்புக்காக எழுதியது. எழுதி முடிப்பதற்குள் அந்த ஜீவனை ஒரு ஒரு பாடு படுத்திட்டேன். நிஜமாவே பாவம் தான்.

ஒவ்வொரு அத்தியாயமும் முதலில் படிப்பது அந்த ஜீவன் தான், முதல் விமர்சனம் அந்த ஜீவனுடையது தான். பாதி கதைக்கு மேல், யாரும் படிக்கவில்லை என்று அத்தனை புலம்பியது அந்த ஜீவனிடம் தான். அத்தனை பொறுமையாய் என்னை சமாதானம் செய்ததும் அந்த ஜீவன் தான்.

முதல் அத்தியாயம் மட்டும் ஸ்பெல்லிங் செக் செய்துவிட்டு, "இவ்வளவு பிழையா? கிண்டில் ஆசை எல்லாம் மூட்டைகட்டி வைத்துவிடவேண்டியது தான்" என்று புலம்ப, இப்பொழுது பொறுமையாய் உட்கார்ந்து திருத்தங்கள் செய்துகொண்டிருப்பதும் அந்த ஜீவன் தான்.

"இந்த கதைக்கு பெரிய வரவேற்பு இல்லை. இத்துடன் இந்த எழுத்து பணி எல்லாம் போதும். நமக்கு இது சரிப்பட்டு வராது" என்று புலம்பியபோதும், "இந்த ஆண்டு இறுதிவரை எழுது, அப்பொழுதும் இதே போல் தோன்றினால், நிறுத்திவிடலாம்" என்று ஏதோ சொல்லி சமாதானம் செய்து, அடுத்த கதை தொடங்க காரணமாய் இருப்பதும் அதே ஜீவன் தான்.

இன்றும் கூட, epilogue எழுத வைக்க அத்தனை முயற்சி, ஏதேதோ ஐடியா எல்லாம் சொல்லி பார்த்தும், நான் கேட்கவில்லை. நன்றியுரை எழுதி முடித்து விட போகிறேன் என்று பிடிவாதமாய் வந்துவிட்டேன். அதனால், எனக்கு ஏதேனும் பாராட்டு கிடைத்தால், பாதி அந்த ஜீவனுக்கு தான் போயி சேரனும்.


செமஸ்டர் எக்ஸாம் ஒரு வழியாய் முடிந்தது. இன்னும் மூன்று Viva மட்டும் உள்ளது. அது முடிந்ததும் அடுத்த கதை தொடங்கிடலாம். அதுக்கும் உங்க ஆதரவு தான் முக்கியம். உங்க கமெண்ட்ஸ் தான் எனக்கு பூஸ்ட். நீங்க தரும் ஆதரவு பொறுத்தது தான், அடுத்த கதைக்கு எவ்வளவு சீக்கரம் அப்டேட் வரும், எத்தனை அத்தியாங்களில் கதை முடியும் என்பதெல்லாம். சிறுபிள்ளைக்கு பாத்து செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன்.


(உங்க மைண்ட் வாய்ஸ்: இவ்ளோ நேரம் சம்பந்தமே இல்லாம பேசுறதுக்கு, epilogue'யே டைப் பண்ணிருக்கலாம். அதான?

மை பதில்: எழுத தெரிஞ்சா எழுத மாட்டோமா?)


கடைசியா ஒன்னு சொல்லிட்டு போங்க. ஒரு கதைக்கு epilogue வேணுமா? அப்டி epilogue இருக்கணும்ன்னா, அந்த epilogue எப்படி இருக்கனும். கதையை பொறுத்து தான் சொல்ல முடியும்ன்னு சொன்னா, இந்த கதைக்கு epilogue வேணுமா? எனக்கு நிஜமா தெரியல. சொல்லிட்டு போங்க.

அப்படியே negative கமெண்ட் இருந்தா சொல்லிடுங்க, positive கமென்ட் சொன்னாலும் நான் கோச்சிக்க மாட்டேன்.



என்றும் பாசத்துடன்,
நேசத்துடன்,


கமலி ஐயப்பா.





(ஜூலை 1 ஆம் தேதி, இந்த கதை ரிமூவ் செய்யலாம்ன்னு இருக்கேன். யாரும் படிக்கறீங்கன்னா முன்னாடியே சொல்லிடுங்க. வெயிட் பண்ணலாம்)
 

Kavichithra

Active Member
Story naan kandippa padikiren...padikiren .intha week kulla...then..ennai Vida four months than periyavanga.aana college...epilogue venamnu Thane enaku thonuthu... because happily ever after possible a enaku thonala..just my opinion... ethavathu mukkkiya characters oda matter climax la full a sollamudiyalanna Vena epilogue pottukalam..naan last epi padicha pothu..enaku appadi thonala..complete feel vanthathu....tanglish comment ku sorry....antha Jeevan ku oru thanks sollidunga...❣️❣️
 

Kamali Ayappa

Well-Known Member
Story naan kandippa padikiren...padikiren .intha week kulla...then..ennai Vida four months than periyavanga.aana college...epilogue venamnu Thane enaku thonuthu... because happily ever after possible a enaku thonala..just my opinion... ethavathu mukkkiya characters oda matter climax la full a sollamudiyalanna Vena epilogue pottukalam..naan last epi padicha pothu..enaku appadi thonala..complete feel vanthathu....tanglish comment ku sorry....antha Jeevan ku oru thanks sollidunga...❣️❣️


thanks sis...padichi paarunga...adhe thought dhaan enakum...adhanaala dhaan epilogue ezhudhala...complete aana feel irundhuchu la...adhu podhum...thanks a lottt sis....andha jeevan ku sollidren:love::love::love:
 

Krishnanthamira

Writers Team
Tamil Novel Writer
So sorry dear. Pathila vidanum nu ila but enamo therla thideernu reading mela salippu... So palaya stories palaya authors thu matum than padichen indha past 2-3 weeks ah.
முழுசா படிச்சுட்டு கமெண்ட் ஓட வர்றேன்.
 

Kamali Ayappa

Well-Known Member
So sorry dear. Pathila vidanum nu ila but enamo therla thideernu reading mela salippu... So palaya stories palaya authors thu matum than padichen indha past 2-3 weeks ah.
முழுசா படிச்சுட்டு கமெண்ட் ஓட வர்றேன்.

okey sis...porumaiyaa padichi sollunga...no problem
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top