Rajalakshmi Narayanasamy

Writers Team
Tamil Novel Writer
#1
ஆலையில் நடந்த சம்பவங்களை கேள்விப்பட்ட ஆதவன் துடித்துப் போனான்..!! அவள் மட்டும் சரியாய் கவனிக்காமல் இருந்திருந்தால்?? அங்கே விபத்து நடந்திருந்தால்? என ஒவ்வொன்றாய் எண்ணி எண்ணி தவித்து துடித்து துவண்டு தான் போனான்..

அவன் வைராகியமெல்லாம் காற்றில் பறக்க அவளை உடனே கண்டு தலை முதல் பாதம் வரை தடவி உறுதி செய்து அவளை ஆறுதலாய் அணைத்துக் கொள்ள துடித்த இதயத்தை என்ன செய்வது என தெரியாமல் தவித்தான்..

"டேய் என்னால சத்தியமா முடில.. நான் உடனே கிளம்பி வந்துடட்டா?"

"அடி வாங்கப்போற.. இதென்ன சினிமாவா? நினச்சா நினச்ச எடத்துக்கு பறக்க? இல்ல நீ வந்து செய்ய தான் என்ன இருக்கு? இனிமே எவனாவது கொளுத்த போறப்போ சொல்ல சொல்றேன்.. அப்போ தெலுங்கு பட ஹீரோ மாதிரி அங்க இருந்து பறந்து வந்து பத்திக்கிறதுக்குள்ள காப்பாத்து.."

"டேய் பாலா.. வந்தா பொலந்துருவேன்.. என்ன நக்கலா?"

"இல்ல திக்கலு.. ஏ வென்று.. அவ தா நல்லா தான் இருக்கானு சொல்றேன்ல.. வீடியோ எடுத்து அனுப்பினேன்ல..? நல்லா தான இருக்கா? அப்புறம் ஏன் நீ இம்புட்டு தவிச்சு தண்ணி குடிக்க?"

"உனக்குன்னு ஒருத்தி வருவால்ல? அப்போ தெரியும் டா உனக்கு என் அவஸ்தை.. நீ என்ன சொன்னாலும் சரி .. நான் அவகிட்ட பேசத்தான் போறேன்.."

"மாப்ள.. என்னால உனக்கு வழிகாட்டத்தான் முடியும்.. நீ வேற வழில தா போவன்னா உன் வேட்டிய புடிச்சு உறுவவா முடியும்? உன்னிஷ்டம் போல செய்யி.."

"அடேய் இதுக்கு தா நான் வேட்டியே கட்டுறதில்ல.. ஹ ஹா.."

"வேட்டி கட்டத் தெரியாதுன்னு சொல்லு.. அதுக்கு ஒரு சாக்கு வேற.. பகுமானம் பிடிச்ச பய டா நீயி..!! சரி சரி என்னமும் செய்யி.. எனக்கு ஆயிரம் சோலி கெடக்கு.. நாம் போயி என் பொழப்ப பாக்கேன்.."

"எல்லாம் என் நேரம்டா.." என சிரித்தபடி பேசியை அணைத்தவன் கையோடு அவனது காதல் தேவதைக்கு அழைத்தான்...

ஆனால், அவளோ அந்த குழந்தையின் வைத்திய விசயமாக அலைந்து கொண்டிருந்தாள்.. யாருடைய அழைப்பையும் ஏற்கும் மனநிலையிலும் அவள் இல்லை..

அந்த சம்பவம் நடக்கும் போது தைரியமாய் அதை சிறப்பாகவே கையாண்டிருந்தாலும் எல்லோரையும் போல அவளுக்கும் பதட்டம் நிறையவே இருந்தது..

தன் உயிர் யாருக்கும் வெல்லக்கட்டி தான் இல்லயா? எதுவுமே நடக்கவில்லை என்றாலும் அப்படி நடந்திருந்தா இன்னேரம் நா. செத்து பால் ஊத்திருப்பாங்க... என மனம் நினைக்காமல் இருப்பதில்லையே..!!

தான் உயிர்பிழைத்துக் கிடக்கும் அதிசயத்தை எண்ணி.. ஏதேனும் அசம்பாவிதம் நடந்திருந்தால்.. என எண்ணி .. மனம் அலைமோத.. அலைபேசியை சத்தமில்லாமல் அணைத்து வைத்திருந்தாள்..


குழந்தையின் மருத்துவ விவரங்களை பெற்று பட்டாசு ஆலை அதிபர்களின் சங்கம் சார்பாக பெறப்பட்ட உதவித் தொகையுடன் சிறந்த மருத்துவரை தேடி அந்த குழந்தையின் உடல் பரிசோதனைகள் என கூடவே திரிந்தாள்..!!

ஆதலால் அவனது அழைப்புகள் அவளது கவனத்திற்கு வராமல் போக.., அவனோ இவள் அழைப்பை ஏற்காததில் கொஞ்சம் கொஞ்சமாய் மலை ஏறிக் கொண்டிருந்தான்..

சில முறை முயன்றவன்.. "போடி ஏ புஸ்வானம்.." என மனதுக்குள் வசைபாடியபடி.. அடுத்த வேலைகலை கவனிக்க சென்றான்..

பவித்ரா எல்லா வேலைகளையும் முடித்து அவனது அழைப்புகளை கவனித்து அவனை அழைக்க முயற்சித்தால்.. அவனுக்கு கிடைக்கவே இல்லை... நம்ம ஊர் டவர் பற்றி தெரியாதா? சரியான மழை நேரமாக இருக்கவே.. தொலைதொடர்பே துண்டிக்கப்பட்ட நிலையில் இருந்தது..!!

ஓரிரு முறை முயன்றவள்.. அதன் பின், அவன் அவளுக்கு இத்தனை நாள் அழைக்கவில்லை என்பதெல்லாம் நியாபகம் வரவே.. இல்லாத தன் கோபத்தை இழுத்துப் பிடித்துக் கொண்டு அவனிடம் பேச முயற்சிப்பதை கை விட்டாள்.


"ஹே.. ஹேண்ட்சம்.. வா உனக்கு எங்க ஊர சுத்தி காமிக்கிறேன்.. " என வந்து நின்றாள் வானமகள் போன்ற பெண்ணவள்..!!

"நோ டியர்.. ஐ காண்ட்..."

"ஹே கமான் மேன்.. இங்க உக்காந்து உன் பட்டிக்காடு கூப்டுமா இல்லயானு கவலப்பட்டுட்டே இருக்கப்போறியா..?

லெட்ஸ் கோ.. எனக்கு பர்சேஸ்க்கு உதவி செய்.. இந்தியால எப்படி எப்படி என்ன என்ன தேவைப்படும்னு நீ தானே சொல்லனும்?

என் செல்லம்ல வா ஹேண்ட்சம் ப்ளீஸ்... " என்றாள் அவளது தேன் போன்ற குரலில்..

வந்த ஒரு மாதமாக எப்படி மகுடிக்கு மயங்கிய பாம்பாக அவளுக்கு தலையாட்டுகிறானோ.. அது போலவே இப்போதும் தலையாட்டியபடி அவளுடன் கிளம்பினான் ஆதவன்..!!
 
Attachments

Advertisement

New Episodes