Rajalakshmi Narayanasamy

Writers Team
Tamil Novel Writer
#1
பவித்ரா பொறுப்பேற்றதும் செய்த முதல் வேலை கரிமருந்துகள் இருக்கும் அறையில், மருந்துகளை கலக்கும் அறையில், தயாரித்த பட்டாசுகளை வைக்கும் அறையில் என முக்கியமான எல்லா இடங்களிலும் கேமராக்கள் பொருத்தினாள்..


ஏனெனில் ஆலை அதிபர்களாக அதியவனும், ஆதியும் அறியாத அந்த மக்களின் வாழ்வை அவள் அறிந்திருந்தாள்.. வேலைக்கு வருபவர்கள் எல்லாரும் கீழ் நடுத்தர வர்க்கம் அல்லது வறுமை கோட்டுக்கு கீழ் வாழும் ஏழை மக்கள்...

அவர்களது வாழ்வோ, சாவோ அவர்களது கைகளில் இல்லை என்றாலும்.., சில சமயங்களில் உணர்ச்சி வசப்படும் சில மனிதர்களால் பல உயிரிழப்புகள் ஏற்படுவதை அவள் அறிந்திருந்தாள்..

ஆகவே தான், அம்மக்களுக்கு பொருளாதார பாதுகாப்பை உறுதி செய்ய சிறு கடன் உதவிகளுக்கும், வங்கி கணக்கு, சேமிப்பு என முயற்சித்தாள்..

அவ்வப்போது அவர்களது நல்லது கெட்டது என எல்லாம் கேட்டறிந்தாள்.. ஆனாலும் ஒரு நாள்..

"வேலு அண்ணா, லோட் லாம் ஏத்தியாச்சா? இன்னிக்கு வேற எதுவும் வேல பாக்கி இருக்கா?"

"இல்ல தாயி எல்லா லோடும் அனுப்பியாச்சு.. வெளில வளையம் வாங்கப் போன வண்டிகளும் வந்துடுச்சி.. நீ வேணா கெளம்பும்மா.. இனி நான் பாத்துக்கறேன்.."

"சரி.. இருங்க ஒருக்கா கேமரால்லாம் பாத்துக்கறேன்.."

"என்ன தாயி! நீ தினமும் இத ஒரு வேலயாவே வச்சிருக்க.. அப்டி என்ன ஆகிடும்னு இப்டி அந்த டீவி பெட்டிய மணிக்கணக்கா பாக்கன்னு எனக்கு புரியல." என்ற படி கேலியாக நகைத்தார்.

"அண்ணாச்சி.. அது கம்ப்யூட்டர்..." என பல்லை கடித்தாள்.

"உங்க அளவுக்கு எனக்கு இங்கிலீசு வருமா தாயி? என்னமோ நாங்க எங்க வாய்க்கு வந்தத சொல்லுதோம்" என்றார் காவி படிந்த பற்களை காட்டியபடி.

அவரிடம் சிரித்துக் கொண்டே திரையை பார்த்தவள் அண்ணாச்சி என கத்தினாள்..

"என்னம்மா என்னாச்சி?" என அவரும் பதற.. நிற்காமல் ஓடிய படி உத்தரவிட்டால்..

"ஸ்டோர் ரூம் கிட்ட முருகேசன் போறாரு.. வாங்க அவர போய் பிடிக்கனும்.." அவளது ஓட்டத்திலும் வார்த்தையிலும் ஒன்றும் புரியவில்லை என்றாலும் வேகமாக அவளையும் மீறி ஓடினார் வேலு..

சுற்றி முற்றி பார்த்த படி மருந்து அறைக்கு அருகே சென்ற முருகேசனை பிடித்து இழுத்தார்..

அதற்குள் அங்கு வந்துவிட்ட பவித்ரா ஓங்கி ஒரு அறை விட்டாள் முருகேசன் கண்ணத்தில்..!!

வேலு அதிர்ந்தே போனார்.. 'என்ன இந்த புள்ள இப்டி இவன போட்டு அறைஞ்சிட்டே..'
ஆனாலும் அவரது பிடியை விடவில்லை..

முருகேசன் அவரிடமிருந்து திமிறியபடி இருந்தவர்... அவள் அறைந்ததும்.. வேலுவின் கைகளில் இருந்து விடுபட்டு கீழே மடங்கி சரிந்து அழ ஆரம்பித்தார்..

கொஞ்சமும் இலக்கமில்லாமல் நின்றவள்... "அண்ணாச்சி.. இவர நல்லா சோதன போடுங்க" என்றாள் இரும்பான குரலில்..

சோதித்தவர் அதிர்ந்தே போனார்... பொதுவாக ஆலைகளில் தீ விபத்துக்கள் நேர மிகப்பெரிய காரணம் அங்கே பணி புரிபவர்கள் புகைபிடிப்பது தான்..

சிகரெட், பீடி என எதையாவது உபயோகிப்பவர்கள் அதன் அபாயத்தை உணர்ந்தே இருந்தாலும் அலட்டிக் கொள்ளாமல் அலட்சியமாய் இருப்பதே பெரும்பாலும் விபத்துக்களுக்கு காரணம்..

ஆனால், பவித்ரா பொறுப்பேற்ற பின், "வேலைக்கு ஆளே கிடைக்கலைன்னாலும் பரவால்ல.. பீடி, சீரட் குடிக்கிறவங்கள உள்ள விடக்கூடாது.. நல்லா சோதன போட்டு அனுப்புங்க.." என கண்டிப்பாக சொல்லி விட்டாள்.

ஆட்கள் தட்டுப்பாடு என்ற பேச்சிற்கும் இடமில்லாது.. ஆட்களும் வேலைக்கு கிடைக்கவே தினமும் சோதனைகளும் கடுமையாகவே நடந்தது..

அப்படி இருக்கும் போது.. முருகேசன் தனது கைலி மடிப்பில் ஒரு முழு தீப்பட்டியை வைத்திருந்தார்.. அதை பார்த்து அதிர்ந்து போனார் வேலு..!!

"ஏம்டே தீப்பட்டி கொண்டார கூடாதுன்னு தெரியாதா? அதுமில்லாம மருந்து ரூம் பக்கத்துல உனக்கு என்னவே சோலி.." என அவனைப் போட்டு புரட்டி எடுத்து விட்டார்..

"அண்ணாச்சி.. எம்புள்ளைக்கி புத்துநோயாம் அண்ணாச்சி.. பச்ச பிள்ளைக்கு இம்புட்டு பெரிய வியாதி வந்தாக்க அது தாங்குமா? அது படற வேதன சகிக்க முடியல அண்ணாச்சி...

அது வைத்தியத்துக்கு செலவுக்கு நான் எங்க போவேன்..? அதா கொளுத்திக்கிடலாம்னு நெனச்சிட்டேன்.. என்னய மன்னிச்சிருங்க.. அய்யோ.. நா என்ன செய்வே.. ஏஞ்சாமி என்னய இப்டி கை விட்டுடுச்சே.." என ஒரேயடியாய் கதறி அழ ஆரம்பித்து விட்டார்..

அதற்குள் சுற்றி கூடிய கூட்டம் மொத்தமும் அவர் கதறலில் மனம் கணக்க.. எல்லோரும் கண்ணீர் வடித்தனர்...

வேலு அண்ணாச்சி கூட அய்யோ இவனப் போட்டு அடிச்சிட்டோமே என்பதாக பரிதாபமாக நின்றார்..

அங்கு கொஞ்சமும் இளக்கமில்லாமல் நின்றது பவித்ரா மட்டும் தான்..!!

"அண்ணாச்சி அவர அப்டியே ஆபிஸ் ரூம்க்கு கூப்டு வாங்க..". என்றவள் மேலும் இருவரை அழைத்து அவர நல்லா கெட்டியா பிடிச்சு கூப்டு வாங்க என்றாள் இறுகிவிட்ட குரலில்.

வேகமாக அலுவலக அறை சென்றவள் செல்பேசியை உயிர்ப்பித்து அதியவனுக்கும், மன நல நிபுணருக்கும் தகவல் கொடுத்தாள்..

" உங்க பொஞ்சாதி இங்க தானே வேல பாக்கறாங்க? எங்க அவங்க? சூச நீ போய் இவரு பொஞ்சாதிய கூப்டு வா.."

"அம்மா, மாரி இன்னிக்கு வேலைக்கு வரலம்மா... இவன் மட்டும் தா வந்தான்.." என்றார் வேலு

"அப்போ உங்க பிள்ளைய காப்பாத்த அம்மஞ்சாமியும் சேந்து நல்லா ப்ளான் போட்ருக்கீங்க.. ஒத்த உசுர காக்க எத்தன உசுர கொல்லப்பாத்தீங்க?" என்றவள் கேள்வியில் மேலும் கேவி கேவி அழுதார் முருகேசன்..

"இப்படியெல்லாம் கஷ்டம் எதாவது வரும் அத எதிர்கொள்ள பக்குவம் வேணும்னு தா உங்களுக்கெல்லாம் மன நல பயிற்சி குடுக்க ஆளு ஏற்பாடு செஞ்சி.. பணத்த சேமிக்க வழி செஞ்சி பாத்து பாத்து செய்யறேன்.. என்கிட்ட ஒரு வார்த்த சொல்லிருக்கலாம்ல..." என்றவள் குரலில் இப்போது லேசாக பிசிறு தட்டியதோ??!

"ஆயிரம் ரெண்டாயிரம்னா பொரட்டிருவேன்.. 10, 20ன்னா கூட உங்கிட்ட வந்து கேக்கலாந்தாயி.. ஆனாக்க லச்சக்கணக்குல நாங்கேக்க முடியுமா? கேட்டாத்தான் கிடைக்குமா?" என்றார் தேம்பலினூடே..

"இப்போ நீங்க இங்க வச்சி கொளுத்திக்கிட்டா உங்க குடும்பத்துக்கு நஷ்ட ஈடா அரசாங்கம் 10 லச்சம் கொடுக்கும் .. கம்பெனில இருந்து வேற ஒரு 5-6 லச்சம் கொடுக்கனும்.. உங்க பிள்ள குணமாகிரும்..

ஆனா, இன்னிக்கு இங்க எத்தன பேரு வேலைக்கு வந்தது.. அவங்களுக்கெல்லாம் குடும்பம் இல்லயா? உங்க பிள்ளைய பாத்துக்கனும்னு பொண்டாட்டிய வீட்ல விட்டு சாகறதுக்கு இங்க வந்திருக்கீங்களே..
புள்ளைகள பள்ளிக்கூடம் அனுப்பிட்டு மொத்த குடும்பமா இங்க வேலைக்கு வந்தவுகல்லாம் உங்க கூட மேல போய் சேந்துட்டா அந்த பிள்ளைக அனாதையா நிக்காது?"

இம்புட்டு சுயநலமா இருப்பாங்களா? எத்தன உசுர கொல்லப்பாத்தீங்க நீங்க?" என்றாள் ரவுத்திரமாக.. அவளது வார்த்தைகளை போலவே கண்களும் முகமும் கூட அனல் கக்கியது..

"செஞ்சது தப்புத்தான் என்னய மன்னிச்சிருங்கம்மா.. ஏதோ புத்திகெட்டுப் போயி இப்டி செய்யப்பாத்தேன்.." என்று கதறினார் முருகேசன்..

வேலை பார்ப்பவர்கள் அனைவருக்கும் அவரது கண்ணீர் கதறலில் எவ்வளவு துன்பம் ஏற்பட்டதோ அதை விட நூறு மடங்கு பதைபதைப்பும், தம் உயிர் தப்பிய நிம்மதியும் இருப்பது புரிந்தது...

அதியவன் வரும் போதே அவ்வளவு கோவமாக வந்தார்.. வந்ததும் முருகேசனை நான்கு அறை விட்டார்.. "இவன் செய்ய நினச்ச காரியம் மட்டும் இன்னிக்கு செஞ்சிருந்தா.. அப்புறம் மொத்தமா எல்லாத்தயும் மூடிட்டு போக வேண்டியது தா... எத்தன உசுரு போய்ருக்கும்? அதுக்கப்புறம் ஆவுச தொறக்க கூட முடியாது.. அப்போ எத்தன குடும்பம் நடுத்தெருல நிக்கும்...? எதாவது கஷ்டம்னா வந்து கேக்க மாட்டீகளோ? அதென்ன கொளுத்திக்க வேற எடமா இல்ல..?" என கத்தியவருக்கு பதிலளிக்க யாருக்கும் திராணியில்லை..

போலிசை அழைத்தவர் ஆலைக்கு தீ கைக்க முயன்றதாக முருகேசனை காவலர்களிடம் ஒப்படைத்தார்..

அவரது ரத்த அழுத்தமும் எகிறவே, ஆதிமூலத்தை அழைத்து அவருடன் அதியவனை அனுப்பி வைத்தாள் பவித்ரா.

வேலு மெதுவாக வந்தவர் தயங்கி தயங்கி அவளிடம் பேசினார்... "தாயி... ஏதோ புத்தி தடுமாறிட்டான்.. ஆவுச எரிக்கப்பாத்தான்னு கேசு போட்டா... அவன் குடும்பம் என்னத்துக்கு ஆகும்? கொஞ்சம் மொதலாளிகிட்ட பேசு தாயி..." என்றவருக்கே அவர் சொன்ன கருத்தில் முழு உடன்பாடில்லை என புரிந்தது..

"அண்ணாச்சி.. இது அவுக ஆவுசு.. அத எரிக்கப் பாத்தா சும்மா விடுவாகளா? இல்ல இப்போ அவரு நினச்ச மாதிரி செஞ்சிருந்தா.. நீங்களும் நானும் கூட உசுரோட இருந்திருக்க மாட்டோம்.. இத இப்டியே விட்டா அது தவறான முன்னுதாரணமா ஆகிடும்.. நாளைக்கு ஆளாளுக்கு வத்திப் பொட்டிய தூக்கிட்டு வருவாங்க... இதுல நாஞ்செய்ய ஒன்னுமில்ல.." என்றாள்..

"இல்லம்ம்மா.. என்னன்னாலும் பாவம்.." என இழுத்தார்..

"அண்ணாச்சி நாளைக்கு அவரு பொஞ்சாதிய நம்ம வீட்டுக்கு வர சொல்லுங்க . ஆவுசுக்கு வேணாம்.. பிள்ள வைத்தியத்துக்கு நம்மாள என்ன செய்யமுடியுமோ செய்வோம்.. அவ்வளவு தான்.." என்றவள் பேச்சு முடிந்து விட்டதாக எழுந்து செல்ல..

அவள் கம்பீரத்திலும், உறுதியிலும் எட்டிப்பார்த்த பெண்மையின் மென்மையிலும் மீண்டுமாய் சிலாகித்துப் போனார் வேலு..

மன நல ஆலோசகரிடம் பேசியவள்.. சிறையிலேயே முருகேசனுக்கு மனநல சிகிச்சை அளிக்கவும் காவலர்களிடம் பேசி, உரிய ஏற்பாடுகள் செய்து விட்டே வீட்டிற்கு சென்றாள்..

கொஞ்சம் பதட்டம் தணிந்திருந்த அதியவன்.. "எப்படி மா சரியா அவன் இப்டி தான் நோக்கத்தோட வந்திருக்கான்னு கண்டுபிடிச்ச?" என்றார் ஆச்சர்யமாக..

"அதொன்னுமில்ல மாமா, அஞ்சாறு வருசத்துக்கு முன்ன செவல்பட்டில வெடிச்சு நிறைய பேரு இறந்தாங்கல்ல.. அப்போ அங்க வேல பாத்த நம்ம ஊர்க்காரக பேசிக்கறத கேட்டேன்.." என்றாள் இப்போதும் உடலில் ஓடிய சிலிர்ப்புடன்..

"என்ன பேசினாங்க..??"

"இப்போ பத்து வெடி விபத்து நடக்குதுன்னா அதுல பாதி இப்படியான குடும்ப பிரச்சினைகள்ல நடக்குறது தானாம்.. புருசன் பொண்டாட்டி சண்ட, கடன், அங்காளி பங்காளி பிரச்சினன்னு எதாவது ஒரு கட்டத்துல மனசு வெந்து போயி சாகனும்னு நெனைக்கிறவங்க.. வீட்ல செத்துப்போனா ஒரு பிரயோசனமும் இல்ல.. இதே ஆவுசுல போய் கொளுத்திக்கிட்டா அரசாங்கத்துல இருந்து வர்ற பணம் தன் குடும்பத்துக்கு ஆகும்னு நினைப்பாங்களாம்...." என்றாள்

ஒரு நீண்ட மவுனம் நிலவியது... "ஆலை முதலாளிகளுக்கு இப்படி தான்னு தெரியாது.. தெரிஞ்சா அவங்க தரப்புல வேற கொடுக்குற பணத்த குடுக்க மாட்டாங்கன்னு சரி அவன் தான் போய் செந்துட்டான் இருக்கறவகளாவது வர்ற காசுல வயித்த நிரப்பட்டும்னு மத்தவங்களும் இதயெல்லாம் வெளில சொல்ல மாட்டாங்களாம்.." என்றாள்...

"அடப்பாவிகளா... " என உண்மையில் அதிர்ந்து தான் போனார் அதியவன்..

"அதனால தான் நான் அங்க போனதும் சுத்தி கேமரா வச்சு ஒவ்வொருத்தரயும் கண்காணிக்கிறேன்.. அவங்க பொருளாதாரம் மேம்பட சேமிப்பு திட்டம், மன உளைச்சல் இல்லாம இருக்க வகுப்புகள்னு அவ்வளவும் செஞ்சும்.. எல்லாம் வீணா போக இருந்ததே.. மாமா.." என்றவள் நொடியில் உடைந்து கண்ணீரில் கரைந்தாள்...

அவ்வளவு நேரமும் நெஞ்சில் அழுத்திய பாதம் தீர அழட்டும் என விட்டுவிட்டார்கள் அனைவரும்...

"அவரு குடும்பத்துக்கும், அந்த புள்ள வைத்தியத்துக்கும் நாம பாக்கனும் மாமா.. " என்றாள் தன்னையே தேற்றிய படி..

"நிச்சயமா மருத்துவத்துக்கு ஏற்பாடு செய்வோம் டா.." என்று ஆறுதலாய் அவள் தலை கோதியவர் வாஞ்சையாய் புன்னகைத்தார்..

சொன்னபடி மருத்துவத்திற்கு ஏற்பாடு செய்தவர்.. கூடவே தங்களது சங்கத்தை கூட்டி மற்ற ஆலை அதிபர்களிடமும் விவாதித்து மேலும் விதிமுறைகள், பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்வது பற்றி விவாதித்தவர்... தொழிலாளர்களிடம் நம்பிக்கையை விதைக்கவும், அவர்களுக்கான அத்தியாவசிய உதவிகளுக்காகவும் ஒரு அறக்கட்டளையையும் அமைக்க ஏற்பாடுகள் செய்தார்..
 
Attachments

Rajalakshmi Narayanasamy

Writers Team
Tamil Novel Writer
#5
மொத்தமா health இன்சூரன்ஸ் வாங்கி கம்பெனி கட்டலாம் ....செலவும் குறைவு ...
நன்றி ராஜலக்ஷ்மி :love::love:
இதை போல ரிஸ்க் வேலை செய்பவர்களுக்கு இன்சூரன்ஸ் தரமாட்டார்கள் சிஸ்..

நன்றி
 
Sundaramuma

Well-Known Member
#6
இதை போல ரிஸ்க் வேலை செய்பவர்களுக்கு இன்சூரன்ஸ் தரமாட்டார்கள் சிஸ்..

நன்றி
அப்படியா ....தமிழ் நாட்டுல அப்படி இல்லையா ....எனக்கு தெரியாது ....
 
Advertisement

New Episodes