பிரிவு : பொருட்பால், இயல் : நட்பியல், அதிகாரம் : 90. பெரியாரைப் பிழையாமை, குறள் எண்: 896 & 900.

Advertisement

Sasideera

Well-Known Member
குறள் 896:- எரியால் சுடப்படினும் உய்வுஉண்டாம்: உய்யார்
பெரியார்ப் பிழைத்துஒழுகு வார்.

பொருள் :- தீயால் சுடப்பட்டாலும் ஒருகால் உயிர்பிழைத்து வாழ முடியும்; ஆற்றல் மிகுந்த பெரியாரிடத்தில் தவறு செய்து நடப்பவர் தப்பிப் பிழைக்க முடியாது.
 
Sasideera

Well-Known Member
குறள் 900:- இறந்துஅமைந்த சார்புடையர் ஆயினும் உய்யார்
சிறந்துஅமைந்த சீரார் செறின்.

பொருள் :- மிகச் சிறப்பாக அமைந்த பெருமையுடையவர் வெகுண்டால், அளவு கடந்து அமைந்துள்ள சார்புகள் உடையவரானாலும் தப்பிப் பிழைக்க முடியாது.
 
Sasideera

Well-Known Member
அதிகார விளக்கம் :-

வாழ்ந்து காட்டும் வழிகாட்டிகளை இகழாமல் இருப்பதே போற்றுவதிலும் முதன்மையானது. கேட வேண்டும் என்றால் அவர்கள் சொல் கீழ்படியாமலும் அழிய வேண்டும் என்றால் என்றால் அவர்களை பழிப்பதும் போதுமானது. தீயில் கருகி பிழைக்கலாம் வழிகாட்டுபவர் பழிக்கு தப்ப முடியாது. வாழும் உயர்ந்தவர் சினத்தால் அரசனும், நல்லகுடி பிறந்தவரும், துறவியும் நற்கதி அடையமாட்டார்.
 
Manimegalai

:)சூப்பர்.
 
fathima.ar

சூப்பர்
 
Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top