பிரிவு : பொருட்பால், இயல் : குடியியல், அதிகாரம் : 106. இரவு, குறள் எண்: 1053 & 1060.

Advertisement

Sasideera

Well-Known Member
குறள் 1053:
கரப்பிலா நெஞ்சின் கடனறிவார் முன்நின்று
இரப்புமோ ரேஎர் உடைத்து.

பொருள் :-ஒளிவு மறைவு இல்லாத மனம் உடையவராய், இது என்கடமை என்று அறிபவர் முன்னே நின்று, ஒன்றை அவரிடம் கேட்பதும் கேட்பவர்க்கு அழகுதான்.
 

Sasideera

Well-Known Member
குறள் 1060:
இரப்பான் வெகுளாமை வேண்டும் நிரப்பிடும்பை
தானேயும் சாலும் கரி.

பொருள் :- பிச்சை ஏற்பவன் அது கிடைக்காதபோது கோபங்கொள்ளக்கூடாது; வேண்டும்பொழுது பொருள் கிடைக்காது என்பதற்கு அவனுக்கு ஏற்பட்டுள்ள துன்பமே போதுமான சான்றாகும்.
 

Sasideera

Well-Known Member
அதிகார விளக்கம் :-

கொடுப்பவர் இடத்தில் கேட்டு பெற வேண்டும் தர மறுத்தால் அது அவரது பழிச்செயல் அல்லாமல் நம் குற்றம் ஆகாது. இன்பமும் அழகும் உடையது இல்லை என்பவர் இடம் கேட்டு பெறுவது. கேட்பதும் கொடுப்பதை போன்றது வெறுப்பை கனவிலும் காட்டாதவர். அவரால் பிறர் துன்பம் தொலையும். இழிவு செய்யாது கொடுப்பவரால் உள்ளம் மகிழும். கேட்பவற்கு கொடுக்க ஆள் இல்லை என்றால் மனிதன் மரப்பாவையாக மாறினான் என ஆகும். கொடுப்பவர் மதிப்பு கேட்பவரால் தீர்மானிக்கப்படுகிறது. கொடுக்கவில்லை என கோபமடைதல் குற்றம் மாறாக அதற்கு நம் வறுமையே காரணம் என உணர வேண்டும்.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top