பிரிவு : பொருட்பால், இயல் : குடியியல், அதிகாரம் : 104. உழவு, குறள் எண்: 1031 & 1035.

Advertisement

Sasideera

Well-Known Member
குறள் 1031:
சுழன்றும்ஏர்ப் பின்னது உலகம் அதனால்
உழந்தும் உழவே தலை.

பொருள் :-உழவுத் தொழிலில் இருக்கும் நெருக்கடிகளை எண்ணி, வேறு வேறு தொழிலுக்குச் சென்றாலும் உலகம் ஏரின் பின்தான் இயங்குகிறது. அதனால் எத்தனை வருத்தம் இருந்தாலும் உழவுத் தொழிலே முதன்மையானது.
 

Sasideera

Well-Known Member
குறள் 1035:
இரவார் இரப்பார்க்கொன்று ஈவர் கரவாது
கைசெய்தூண் மாலை யவர்.

பொருள் :-
தம் கையால் உழுது உண்ணும் இயல்பை உடையவர் பிறரிடம் பிச்சை கேட்கமாட்டார்; தம்மிடம் கேட்டு வந்தவர்க்கு இல்லை என்று சொல்லாமல் கொடுக்கவும் செய்வர்.
 

Sasideera

Well-Known Member
அதிகார விளக்கம் :-
பலவகை மாற்றங்களுடன் உலகம் சுற்றினாலும் உழவே தலைமையானது அதுவே உலக இயக்கத்திற்கு மூலமானது. உழவே உலகின் ஆணி எனவே அவரை தொழுது உண்பதே மற்றவர் பணி. பலகுடையும் பணியும் உழவே இல்லை என்றால் துறவியும் வீணே. ஏர் விடுதலை விட சிறந்தது எரு இடுதல், நீர் பாய்ச்சுவதை விட சிறந்தது பாதுகாப்பது. கவனியாத மனைவியின் ஊடல் போல் நிலமகளும் செய்வாள். சோம்பேறியை நிலமகள் கண்டு வெட்கப்படுவாள்.
 

Manimegalai

Well-Known Member
குறள் 1031:
சுழன்றும்ஏர்ப் பின்னது உலகம் அதனால்
உழந்தும் உழவே தலை.

பொருள் :-உழவுத் தொழிலில் இருக்கும் நெருக்கடிகளை எண்ணி, வேறு வேறு தொழிலுக்குச் சென்றாலும் உலகம் ஏரின் பின்தான் இயங்குகிறது. அதனால் எத்தனை வருத்தம் இருந்தாலும் உழவுத் தொழிலே முதன்மையானது.
வேற வழி இல்லாம
மாற வேண்டிய கட்டாயம்...
மாறியாச்சு..
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top