பிரிவு : பொருட்பால், இயல் : அரசியல், அதிகாரம் : 63. இடுக்கண் அழியாமை, குறள் எண்: 623 & 626

Advertisement

Sasideera

Well-Known Member
குறள் 623:- இடும்பைக்கு இடும்பை படுப்பர் இடும்பைக்கு
இடும்பை படாஅ தவர்.

பொருள் :- துன்பம் வந்தபோது அதற்காக வருந்திக் கலங்காதவர் அந்தத் துன்பத்திற்கே துன்பம் உண்டாக்கி அதை வென்று விடுவர்.
 

Sasideera

Well-Known Member
குறள் 626:- அற்றேம்என்று அல்லல் படுபவோ பெற்றேம்என்று
ஓம்புதல் தேற்றா தவர்?

பொருள் :- செல்வம் வந்தபோது `இதைப் பெற்றோமே` என்று பற்றுக் கொண்டு காத்தறியாதவர், வறுமை வந்தபோது `இழந்தோமே` என்று அல்லல்படுவாரோ?
 

Sasideera

Well-Known Member
அதிகார விளக்கம் :-

இடுக்கணழியாமை என்பது முயற்சியில் பொருளிழப்பு, மெய் வருத்தம், தோல்வி போன்ற துன்பங்கள் வந்த பொழுது, அதற்கு மனங்கலங்காமையைக் குறிக்கும். இடுக்கண் என்ற சொல் துன்பம், இடையூறு என்ற இரு பொருளிலும் ஒன்றுக்கொன்று மாற்றிக் கொள்ளுமாறு இவ்வதிகாரத்தில் ஆளப்பட்டுள்ளதாக உள்ளது. அதிகார முறைமையைப் பார்க்கும்போது இதன் நோக்கம் முயற்சி மேற்கொண்டபோது நேரும் இடுக்கண்களுக்குக் கலங்காமை என்பதாக உள்ளது. ஆனால் ஒருவரது வாழ்க்கையில் உண்டாகும் எல்லாவகையான இடையூறுகளுக்கும் அழியாமை என்பதற்குப் பொருந்தி வருவதால், இன்பம்-துன்பம் ஆகிய உயிர்க்குணங்கள் பற்றிய ஆழ்ந்த கருத்தாடலாக இவ்வதிகாரம் அமைகிறது.
 

Manimegalai

Well-Known Member
குறள் 623:- இடும்பைக்கு இடும்பை படுப்பர் இடும்பைக்கு
இடும்பை படாஅ தவர்.

பொருள் :- துன்பம் வந்தபோது அதற்காக வருந்திக் கலங்காதவர் அந்தத் துன்பத்திற்கே துன்பம் உண்டாக்கி அதை வென்று விடுவர்.
:love:Super.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top