பிரிவு : பொருட்பால், இயல் : அரசியல், அதிகாரம் : 59.ஒற்றாடல் குறள் எண்: 585 & 589.

Advertisement

Sasideera

Well-Known Member
குறள் 585:- கடாஅ உருவொடு கண்அஞ்சாது யாண்டும்
உகாஅமை வல்லதே ஒற்று.

பொருள் :- ஐயுற முடியாத உருவத்தோடு, பார்த்தவருடைய கண்பார்வைக்கு அஞ்சாமல் எவ்விடத்திலும் மனத்திலுள்ளதை வெளிப்படுத்தாமல், இருக்கவல்லவனே ஒற்றன் ஆவன்.
 

Sasideera

Well-Known Member
குறள் 589:- ஒற்றுஒற்று உணராமை ஆள்க உடன்மூவர்
சொல்தொக்க தேறப் படும்.

பொருள் :- ஓர் ஒற்றனை மற்றோர் ஒற்றன் அறியாதபடி ஆளவேண்டும்; அவ்வாறு ஆளப்பட்ட ஒற்றர் மூவரின் சொல் ஒத்திருந்தால் அவை உண்மை எனத் தெளியப்படும்.
 

Sasideera

Well-Known Member
அதிகார விளக்கம் :-

ஒற்றாடல் என்பது ஒற்று+ஆடல் என விரியும். ஒற்று என்பது உளவறிதலைக் குறிக்கும். ஆடல் என்பதற்கு ஆளுதல் என்பது பொருள். ஒற்றாடல் ஒற்றை ஆளுதல் எனப் பொருள்படும். இவ்வதிகாரத்துக் குறட்பாக்கள் ஒற்று என்ற சொல்லை வரையறுக்கும்போது அஃறிணைப் பொருளையே சுட்டுகிறது. ஆனால் உரையாசிரியர்கள் 'ஒற்று' பொருளால் உயர்திணையாயினும் சொல்லால் அஃறிணை எனச் சொல்லி இவ்வதிகாரத்தை ஒற்றரை ஆளுதல் என விளக்குவர். ஒற்றை அதாவது ஒற்றுத் தொழிலைக் கையாளுதல் என்ற பொருள் கொள்வதில் என்ன குற்றம் வந்துவிடப் போகிறது எனத் தெரியவில்லை.

அறம் கூறவந்த திருக்குறளில் மாறுவேடங்கள் பற்றியும் கள்ளத்தனங்கள் பற்றியும் ஏன் கூறப்படுகிறது என்ற வினா சிலருக்கு எழலாம். இதற்குப் பதில் இறுப்பது போன்று தெ பொ மீனாட்சிசுந்தரம் 'உலகம் உயர்நிலையாகிய அறிவு நிலையை எய்தவில்லை யாதலால் ஒற்றும் கூறுகின்றார் வள்ளுவர். இப்பெரியார் உயர்நிலையை அறிந்திருந்து வற்புறுத்தினாலும், உலகநிலையை அறியாது கண்மூடித் தவங்கிடப்பவர் அல்லர். உயர்நிலை ஒன்றே கூறி உலகநிலை கூறாதுவிட்டால், கயவரும் கல்லாரும் பகைவரும் எழுந்து உலகத்தை அழித்தேவிடுவர்' எனக் கருத்துரைப்பார்.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top