பிரிவு : பொருட்பால், இயல் : அமைச்சியல், அதிகாரம் : 69. தூது, குறள் எண்: 686 & 690.

Advertisement

Sasideera

Well-Known Member
குறள் 686:- கற்றுக்கண் அஞ்சான் செலச்சொல்லிக் காலத்தால்
தக்கது அறிவதாம் தூது.

பொருள் :- கற்பன கற்று, பிறருடைய பகையான பார்வைக்கு அஞ்சாமல், கேட்பவர் உள்ளத்தில் பதியுமாறு சொல்லி, காலத்திற்குப் பொருத்தமானதை அறிகின்றவனே தூதன்.
 

Sasideera

Well-Known Member
குறள் 690:- இறுதி பயப்பினும் எஞ்சாது இறைவர்க்கு
உறுதி பயப்பதாம் தூது.

பொருள் :- தனக்கு அழிவே தருவதாக இருந்தாலும், அதற்காக அஞ்சி விட்டுவிடாமல், தன் அரசனுக்கு நன்மை உண்டாகுமாறு செய்கின்றவனே தூதன்.
 

Sasideera

Well-Known Member
தூது என்பது இரண்டு நாடுகளுக்குமுள்ள உறவுகள் தொடர்பாகச் செய்தியனுப்புதலைக் குறிப்பது. இது அரசாட்சியில் ஒரு இன்றியமையாத அங்கம். தூதுவர் அமைச்சர்க்கு இணையாக மதிக்கப்படுபவர். அவர்க்கு உண்டான பண்புகளும் தகுதிகளும் செயல்திறன்களும் இந்த அதிகாரத்தில் கூறப்படுகின்றன.
பிற நாட்டு அரசரிடம் வெளிப்படையாய்ச் சென்று தன் நாட்டு அரசரின் செய்தியைச் சொல்வதும், அந்த நாட்டில் உள்ள நிலையை அறிந்துவந்து தம் நாட்டவரிடம் உரைப்பதும் தூதுவனின் கடமையாகும். சில வேளைகளில் அரசுப் பணியில் இல்லாத முனிவர்களும் புலவர்களும் தூது சென்றிருக்கிறார்கள். ஓளவையார் அதியமான் பொருட்டுத் தொண்டைமானிடம் தூது சென்றது நாம் அறிந்த ஒன்று; அக்காலத்திலேயே ஒரு பெண்பாற் புலவர் வெற்றிகரமாகத் தூதுச் செயலாற்றினார் என்பது எண்ணி மகிழத்தக்கது.
 

Manimegalai

Well-Known Member
அரசர்கள் அமைச்சர்களுக்கு நிறைய குறள்...
முதல் முறையாக படிக்கிறேன்.
நன்றி சசி:)
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top