பிரிவு : இன்பத்துப்பால், இயல் : கற்பியல், அதிகாரம் : 130. நெஞ்சொடு புலத்தல், குறள் எண்:- 1294 & 1297.

Sasideera

Well-Known Member
குறள் 1294:
இனிஅன்ன நின்னொடு சூழ்வார்யார் நெஞ்சே
துனிசெய்து துவ்வாய்காண் மற்று.

பொருள் :- நெஞ்சே! நீ அவரைப் பார்க்கும்போது இன்பம் நுகர எண்ணுகிறாயே தவிர, அவர் தவறுகளை எண்ணி ஊடி, பிறகு உறவு கொள்ள எண்ணமாட்டாய். ஆதலால் இனி இது போன்றவற்றை உன்னோடு யார் ஆலோசனை செய்வார்? நான் செய்யமாட்டேன்.
 
Sasideera

Well-Known Member
குறள் 1297:
நாணும் மறந்தேன் அவர்மறக் கல்லாஎன்
மாணா மடநெஞ்சிற் பட்டு.

பொருள் :- தன்னை மறந்த காதலரைத் தான் மறக்க முடியாத, என் நிலையில்லாத மடநெஞ்சோடு கூடி, நான் நாணத்தையும் மறந்துவிட்டேன்.
 
Sasideera

Well-Known Member
அதிகார விளக்கம் :-

காதலன் பணி முடித்து இல்லம் திரும்பிவிட்டான். அவன் வரவு அறிந்து தலைவி தன்னை நன்கு அணிசெய்து மிகுந்த மகிழ்ச்சியுடன் காணப்படுகிறாள். வீட்டில் மற்றவர்களும் இருப்பதால் இவர்கள் இருவரும் இன்னும் தனிமையில் சந்திக்க முடியாதிருக்கிறது. அவனை நெருங்கிக் கூடும் வேளைக்காகக் காத்திருக்கிறாள் காதலி. இவர்கள் ஒருவர்க் கொருவர் குறிப்பறிவுறுத்தியாகிவிட்டது. இப்பொழுது தன் நெஞ்சோடு புலந்து பேசுவதுபோல் பாவனை செய்து உள்மனதில் ஓடும் எண்ணங்களை வெளிக் கொட்டுகிறாள். நீண்ட இடைவெளிக்குப்பின் அவரை நெருங்கி இருக்க்கப்போகும் களிப்பே அவள் தன் நெஞ்சைக் கடிவது போலப் பேசுவதில் தெரிகிறது. வருத்தம் இல்லாமல் கொணட்டல் மொழியில் புணர்ச்சி விதும்புகின்ற நெஞ்சுடனே புலக்கிறாள்.

நெஞ்சே அவர் காதல் எண்ணம் புரிந்த பின்னும் ஏன் கவலை கொள்கிறாய். உறவு பாராட்டதவர் என்றாலும் அவரையை நாடுவது எனோ என் நெஞ்சே. கெட்டுப் போனவர்களை நாடக்கூடியவர்கள் இல்லை என்றா என்னை விட்டு அவர் பின் செல்கிறாய் என் நெஞ்சே உன்னை இனி யார் ஏற்பார் துன்பம் ஏற்று இன்பம் மறுக்கிறாயே. உறவாடவில்லை என்றாலும் அஞ்சுகிறாய் உறவாடும் பொழுது பிரிவை எண்ணி அஞ்சி தீராத துன்பத்தை தருகிறாய். தனிமையிலும் வாட்டுகிறாய். நாணமும் மறந்தேன் நெஞ்சே உன் செயலால். அவர் திறமையை கூட எண்ணி சிரிக்காமல் என்னுள் அசைபோடுகிறேன். துன்பத்திற்கு யார் துணை வருவார் என் நெஞ்சே நீயே எனக்கு துணை இல்லை என்றால் அடைக்கலம் யார் தருவார்.
 
Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Advertisement

New Episodes

Advertisement