பிரிவு : இன்பத்துப்பால், இயல் : கற்பியல், அதிகாரம் : 127. அவர்வயின் விதும்பல், குறள் எண்: 1261 & 1263.

Advertisement

Sasideera

Well-Known Member
குறள் 1261:
வாளற்றுப் புற்கென்ற கண்ணும் அவர்சென்ற
நாளொற்றித் தேய்ந்த விரல்.

பொருள் :- அவர் என்னைப் பிரிந்து போன நாள்களைச் சுவரில் குறித்துத் தொட்டு எண்ணுவதால் என் விரல்கள் தேய்ந்து விட்டன; அவர் வரும் வழியைப் பார்த்து என் கண்களும் ஒளி இழந்து, நுண்ணியவற்றைக் காணும் திறனில் குறைந்து விட்டன.
 

Sasideera

Well-Known Member
குறள் 1263:
உரன்நசைஇ உள்ளம் துணையாகச் சென்றார்
வரல்நசைஇ இன்னும் உளேன்.

பொருள் :-
என்னுடன் இன்பம் நுகர்வதை விரும்பாமல், நான் துணையாவதையும் வெறுத்துத் தன் ஊக்கத்தையே துணையாக எண்ணி, வெற்றி பெறுவதையே விரும்பி என்னைப் பிரிந்தவர், அவற்றை இகழ்ந்து என்னிடம் திரும்ப வருவதை நான் விரும்புவதால் இவ்வளவு காலமும் இருக்கிறேன்.
 

Sasideera

Well-Known Member
அதிகார விளக்கம் :-

பிரிவின்கண் தொலைவு சென்ற தலைவன் திரும்பிவரும் நேரமிது. தாங்கமுடியாத துயரத்திலிருந்த தலைவிக்கு அவனை விரைவில் காண வேண்டும் அவனுடன் உறைந்திருக்க வேண்டும் என்ற ஆசை மிகுந்து காணப்படுகின்றது. அவன் வந்தால் ஊடுவேனா? தழுவிக் கொள்வேனோ? அல்லது ஒன்றாய்க் கலந்து விடுவேனோ? என வேட்கையால் பரபரப்புடன் காணப்படுகிறாள் தலைவி.


மங்கிய வாள் போல் ஒளி இழந்தன கண்கள் மெலிந்து போயின கைகள் நாம் பிரிந்த நாட்களை எண்ணி. தோள்களும் இளைத்து இளம்பிள்ளை தோள் போல் ஆனது. உள்ளத்து உறுதியை துணையாக கொண்டவர் என்பதால் வரவுக்காக காத்திருக்கிறேன். படர்ந்த கொடி கொம்பை மீறுவது போல் காமம் எல்லை கடக்கிறது அவரது வருகையை எண்ணி. வருகையை கண்டபின் தோளில் படந்த பசலையும் மனதின் நோயும் மறைந்துவிடும். தழுவிக் கொண்டு ஊடுதல் செய்து கூடி மகிழ்வேன் கண் போன்ற என் காதலனை. வேலை முடிந்த வருவார் என மாலை விருந்துடன் காத்திருக்கிறேன். ஒருநாள் ஏழு நாட்கள் போல் கடக்கும் பிரிந்தவர் வரவுக்கு காத்திருப்பவற்கு. எல்லாம் இருந்தும் பயன் இல்லை இப்பொழுது உள்ளம் விரும்பும் ஒன்று கிடைக்கவில்லை என்றால்.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top