பிரிவு : இன்பத்துப்பால், இயல் : கற்பியல், அதிகாரம் : 126. நிறையழிதல், குறள் எண்: 1253 & 1255.

Sasideera

Well-Known Member
#1
குறள் 1253:
மறைப்பேன்மன் காமத்தை யானோ குறிப்பின்றித்
தும்மல்போல் தோன்றி விடும்.

பொருள் :- என் காதல் ஆசையை நான் மறைக்கவே எண்ணுவேன்; ஆனால், அது எனக்கும் தெரியாமல் தும்மலைப் போல் வெளிப்பட்டு விடுகிறது.
 
Sasideera

Well-Known Member
#2
குறள் 1255:
செற்றார்பின் செல்லாப் பெருந்தகைமை காமநோய்
உற்றார் அறிவதொன்று அன்று.

பொருள் :- தன்னைப் பிரிந்து சென்றவர் பின்னே செல்லாது, தானும் அவரை விட்டுப் பிரிந்து நிற்கும் மன அடக்கத்தைக் காதல் நோயை அறியாதவர் பெற முடியும். அறிந்தவரால் பெற முடியாது.
 
Sasideera

Well-Known Member
#3
அதிகார விளக்கம் :-
இவ்வதிகாரச் சூழமைவில் நிறை என்பது பெண் மனத்தில் அடக்கி வைத்திருக்க வேண்டியவற்றை, பிறர் அறியாமல் வைத்திருப்பதைக் குறிக்கும். தம் உள்ளூறும் காதல் எண்ணங்களை மகளிர் வெளிப்படச் சொல்லமாட்டார்கள். அது பெண்மையின் இயற்கை. ஆனால் தலைவனைக் காணவேண்டும் அவனுடன் சேர்ந்திருக்கவேண்டும் என்ற வேட்கை மிகுதியால், இங்கு, தன் காதல் விருப்பங்களை அடக்கமுடியாமல் வாய்விட்டுக் கூறத் தொடங்குகிறாள் காதலி. அவ்வாறு நிறைஅழிவதைச் சொல்வது நிறையழிதல் அதிகாரம். தலைமகன் பணி காரணமாகப் பிரிந்து சென்றிருக்கிறான். தலைமகள் ஆற்றாளாகி தனது தற்போதைய மனநிலையையும், முன் நடந்தவற்றை நினவுக்குக் கொண்டுவந்தும், தன் உள்ளத்துள் அடக்கி நிறுத்த முடியாமல் சொல்வன இவ்வதிகாரத் தொகுப்புப் பாடல்களில் அடங்கியுள்ளன.

நிறையான நாணம் என்ற கதவு உடைபடும் காமம் கணிந்தால், காமம் கண்ணில் நிறைந்து இரவும் பகலுமாய் நெஞ்சை ஆள்கிறது. காமம் தும்மல் போல் தோன்றுவதால் மறைக்க இயலவில்லை. நிறையானவன் என்றே இருந்தேன் இறையான அவன் மேல் கொண்ட காமம் மறைக்கமுடியாமல் பலர் முன்னிலையில் வெளிப்படுகிறது. அவன்(இறை) என்னை மறந்து விலகினாலும் அவன் மேல் உள்ள காமத்தால் பெருந்தகமை இல்லாமல் போயிற்று. நம்மை காக்கும் இறை மேல் காமம் நாணம் என்ற ஒன்றை இல்லாமல் செய்திடும். பலவிதமான மாயத்தை செய்யும் கள்வனான இறைவன் பணிவாக பேசியே வார்த்தையாகிய நாதம் அன்றோ நம் பெண்மை என்ற அச்சம் உடைக்கும் படை. யோகம் என்ற புணர்தல் கூடாது என சென்றேன் ஆனால் மேய்ந்து கூடினேன் நெஞ்சம் கலக்க ஏங்கியதைக் கண்டு. கொழுப்பை தீயில் இட்டது போல் உருகும் நெஞ்சி உடைய பக்தனுக்கு உண்டோ புணராமல் ஊடி நிற்போம் எனல்.
 
Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Advertisement

New Episodes

Advertisement