பவித்ரன்-1

Advertisement

KP JAY

Well-Known Member
அமைதியாக எழுந்து உள்ளே சென்றாள் தீபா. தீபலக்ஷ்மி. எம்.காம் முடித்துவிட்டு திருநெல்வேலி அருகில் ஒரு ஸ்மால் ஸ்கேல் கம்பெனியில் வேலை செய்கிறாள். பி.காம் முடித்த உடனே இந்த கம்பெனியில் சேர்ந்து வேலை பார்த்துக்கொண்டே எம்.காம் முடித்தாள்.

வீட்டில் இருக்க முடியாமல் மூச்சுமுட்டி இந்த வீட்டை விட்டுச் சென்றாள். இப்பொழுது உனக்கு மாப்பிள்ளை பார்த்திருக்கிறது வா என்று அழைத்து வழக்கம் போல் முதுகில் குத்துகின்றனர். அவளும் இப்பொழுது கல்யாணம் செய்தே தீர வேண்டும் என்று எந்த அவசரமும் இல்லை. ஆனால் அதை வைத்தே அவளுக்கு மீண்டும் மீண்டும் நடக்கும் அவமானமும் துரோகமும்…

துரோகம். சுயநலம். தன் பிள்ளைகள் மட்டுமே நன்றாக இருக்கவேண்டும். மூத்தவளின் பிள்ளைகள் எப்படி போனால் என்னவென்று விட்டு விட்டாலும் பரவாயில்லை. ஆனால் தன் பிள்ளைகளைவிட அவர்கள் நன்றாக இருந்துவிட கூடாது என்ற சுயநலம். இதுவும் கூட தாய்மைக்கு பெருமை சேர்க்கும் குணமோ.

அப்படி ஒரு நல்ல காரியத்தை தான் செய்துகொண்டிருந்தார் பார்வதி. அவள் அம்மாவுடன் சேர்ந்து.

தீபாவின் தந்தை சிவநாதன் அந்த ஊரில் பெரும் தனக்காரர். நிறைய நிலமும் அதில் நிறைய பணப்பயிர்கள் போட்டு நல்ல லாபம் பார்ப்பவர்.

குடும்பம் என்ற அமைப்பு அவர் தங்கி போகும் இடம் அவ்வளவே. அவருக்கு அடுத்து அடுத்து என்று பணம் பண்ண வேண்டும். அவ்வளவு தான். வீட்டுக்கு தேவையானது எல்லாம் அவர் மனைவி தான் பார்க்கவேண்டும். அவரின் இரண்டு மனைவிகளும் அதை புரிந்துகொண்டு வீட்டை பார்த்துக்கொண்டனர்.

இவரின் இந்த குணம் முதல் மனைவிக்கு கேடாகவும் இரண்டாம் மனைவிக்கு வரமாகவும் அமைந்துவிட்டது.

முதல் மனைவிக்கு இரண்டு பெண்பிள்ளைகள். பெரியவள் மேனகா. அவளுக்கு அடுத்து ஐந்து வருடம் கழித்து தீபலக்ஷ்மி. அவள் பிறந்ததும் பிரசவத்தில் வந்த சிக்கலால் தாய் இறந்துபோனார். சிவநாதனின் கவனக்குறைவும் இதற்கு காரணம்.

தாய் இல்லாமல் ஐந்து வயதில் ஒரு பெண் குழந்தை அப்பொழுது தான் பிறந்த இன்னொரு குழந்தை.

சிவநாதனால் ஒரு நாள் கூட பிள்ளைகளை சமாளிக்க முடியவில்லை. அவருடைய அம்மா உடனே ஒரு பெண் பார்த்து பார்வதியை இரண்டாம் மணம் செய்து வைத்து விட்டார். மனைவி இறந்து ஒரு மாதம் முடியும் முன்பே அவர் புது மாப்பிள்ளை ஆகி விட்டார்.

அதனிலும் கொடுமை அடுத்த பத்து மாதத்தில் அவளும் ஒரு பெண் குழந்தையை பெற்றெடுத்தாள். ஒரே வருடத்தில் இரண்டு குழந்தைகள். இதில் கேட்பார் அற்று போனது தீபா தான். தாய்க்காக ஏங்கி ஏங்கி அழுது தீர்த்தாள். ஊரில் உள்ள அனைவருக்குமே தீபா மேல் எப்பொழுதும் ஒரு பரிதாபம் உண்டு.

பார்வதி அடுத்த வருடத்திலேயே மீண்டும் இரட்டை பெண் பிள்ளைகளைப் பெற்றாள். மொத்தம் மூன்று பெண் பிள்ளைகள் இவளுக்கு. சிவநாதனுக்கு ஐந்து பெண் பிள்ளைகள்.

பார்வதி வந்து பெரிதாக அந்த மூத்த தாரத்தின் பிள்ளைகளைக் கண்டுகொள்ளவில்லை. வேலைக்கு சமைப்பார். தட்டில் போட்டு வைத்துவிடுவார். பெரியவள் மேனகா பசித்தால் சாப்பிடுவாள். இல்லை என்றால் இவரும் கண்டுகொள்ள மாட்டார்.
தீபாவுக்கு பாலை பாட்டிலிலில் ஊற்றி மேனகாவிடமே கொடுத்து குடுக்கச் செய்வார். அதுவும் குழந்தை நீண்ட நேரம் அழுத பின்பே அந்த பாலும் கிடைக்கும்.

ஆனால் தாய் பாசம். சுத்தமாக இவளுக்கு கிடைக்கவே இல்லை.

அக்கம் பக்கம் இருப்பவர்கள் தீபாவை கொஞ்சம் கவனித்து கொண்டனர். எல்லோருமே அவளின் மேல் ஒரு கண்ணும் வைத்து கொண்டனர். அதனால் பாதுகாப்பாகவே வளர்ந்தாள்.

பெரியவள் ஆக ஆக மேனகாவிற்கு கொஞ்சம் விபரம் தெரிய தொடங்கியது. அக்கம் பக்கம் இருப்பவர்களும் அவளுக்கு புத்தி கூறி தங்கையை பார்த்துக்கொள்ள அறிவுறுத்தினார்கள். அதன் பிறகு மேனகா தீபாவின் பொறுப்பை எடுத்துக்கொண்டாள். அவளுக்கு புரிந்தது சித்தி தங்களுக்காக ஒரு துரும்பையும் அசைக்கமாட்டாள் என்று.

எதுவும் தேவை என்றால் அப்பாவிடம் கேட்டு செய்துகொள்வாள். ஆனால் அவளுக்கும் தீபாவுக்கும் கிடைக்கும் எதுவும் பார்வதியின் தணிக்கைக்கு உட்பட்டே கிடைக்கும். வசதிக்கு குறைவு இல்லை தான். ஆனால் பார்வதி இந்த பிள்ளைகளுக்கு பெரிதாக எதுவும் சென்று விடாமல் பார்த்துக் கொண்டார்.

மேனகா ஒரு டிகிரி முடித்தாள். உடனேயே அவளுடைய அம்மா வழி தாய்மாமா வந்து பெண் கேட்டு தன் பையனுக்கு முடித்துக்கொண்டார். தங்கையின் பிள்ளைகள் படும் பாடு அவர் காதுக்கும் வந்தது. ஆனால் அவருக்கு அந்த பிள்ளைகளின் பொறுப்பை எடுத்துக்கொள்ள சிவநாதன் விடவில்லை. அது அவருக்கு கௌரவ குறைச்சல் என்று நினைத்தார். ஆனால் பிள்ளைகள் அனைவரும் நன்றாக படிக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார். நாட்டு நடப்பு தெரிவதால் படிப்பின் அவசியமும் அவருக்குத் தெரிந்து இருந்தது.

மேனகா கல்யாணம் பண்ணிச் சென்ற தாய்மாமா வீடும் வசதியானது தான். இவ்வளவு வசதியான வீட்டுக்கு அவள் சென்றது பார்வதியின் கண்ணை உறுத்திக்கொண்டு தான் இருந்தது.
அவளுக்கு நகை போடுவதில் பிரச்சனை செய்தாள். தாய் மாமா கூறிவிட்டார். மேனகாவின் தாய்க்குப்போட்ட நகைகளை ஒரு பொட்டு விடாமல் மேனகாவிற்கு போட வேண்டும் என்று. அவர் அதை மட்டுமாவது காக்க நினைத்தார். அடுத்து தீபாவுக்கு கல்யாணம் செய்யும்போது அது தேவை படலாம் என்று தோன்றியது அவருக்கு.

மேனகாவும் அந்த முடிவில் உறுதியாக நின்றாள். ஒரு வழியாக நல்லபடியாக திருமணம் முடித்து சென்றுவிட்டாள். ஆனால் அப்பொழுது அந்த தாய் மாமா சும்மா இருக்கவில்லை. சிவநாதனிடம் பேசி தன் தாயை கொண்டு வந்து தீபாவிற்குத் துணையாக விட்டார். அப்பொழுதது தான் தீபாவுக்கு பதினைந்து வயது. அவளை தனியாக விட வேண்டாம் என்று பாட்டி வந்துவிட்டார் பேத்திக்காக.

இப்படியாக தீபாவுக்கு அவளுக்கு நல்லது மட்டுமே நினைக்கும் நிறைய உள்ளங்கள். இவளின் சிறு வயது வாழ்க்கை அவளை நன்றாகவே செதுக்கி இருந்தது. அவள் மனதளவில் மிகவும் தைரியமான பெண்ணாகவே வளர்ந்தாள். தனக்கு என்ன தேவை என்பதையும் உணர்ந்தாள். அதனால் நன்றாகவே படித்தாள்.

பி.காம் முடித்தவுடன் மேனகாவின் கணவன் முத்துவேல் அவளுக்கு அவர்களின் பக்கம் இருந்து ஒரு நல்ல வரனை கொண்டுவந்தான். சிவநாதனுக்கும் திருப்தியே.

ஆனால் அந்த வரணும் வசதியாக இருந்தது பார்வதிக்கு கண்ணை உறுத்தியது. சபையில் அமர்ந்து ஜாதக பொருத்தம் பற்றி பேசிக்கொண்டிருந்தனர். அதில் மாப்பிள்ளையின் அப்பாவுக்கு ஜோதிடத்தில் மிகுந்த நம்பிக்கை என்று தெரிந்தது. பத்து பொருத்தத்தில் ஏழு பொருந்திவிட்டது. ஆனாலும் அவருக்கு திருப்தி இல்லை.

அப்பொழுது தான் பார்வதியின் தாய் சரோஜா வாய் திறந்தார். இங்க தான் அவ கூடவே ஒட்டி பிறந்தது போல இன்னொருத்தி இருக்காளே. அவளுக்குப் பொருந்துதா பார்க்கலாமில்ல.

கல்லை எடுத்து மாங்கா மரத்தில் விட்டெறிந்தார். அவருக்கு அதிர்ஷ்ட்டம் போல. மரத்தில் இருந்த மொத்த மாங்காயும் விழுந்தது.

பார்வதியின் முதல் பெண் பிரபாவுக்கும் தீபாவுக்கு பத்து மாதமே வித்தியாசம். இப்பொழுது அவளின் ஜாதகம் பத்து பொருத்தமும் பொருந்தி வந்தது. மாப்பிள்ளையின் அப்பாவுக்கு இந்த பெண்ணை பிடித்துவிட்டது.

முத்துவேல் கோபத்தின் உச்சிக்கு சென்றான். அவன் ஒன்றும் அந்த பெண்ணுக்கு மாப்பிள்ளைக் கொண்டு வரவில்லையே. மேனகாவும் கடுப்பானாள்.

“மாமா நாங்க தீபாவுக்காகத்தான் உங்கள கூட்டிட்டு வந்தோம். இப்போ என்ன நீங்க அக்காவ விட்டு தங்கச்சிய கேக்குறீங்க?”

“எனக்கு ஜாதகப் பொருத்தம் முக்கியம்மா. இப்போ என்ன? அந்த பொண்ணும் உனக்கு தங்கை தானே. எப்படியும் அடுத்த வருடம் அந்த பெண்ணுக்கும் முடிப்பீங்கல்ல. அத இப்போவே பண்ணினா என்ன?”

அவர் யாருக்காகவும் நிற்கவில்லை. பார்வதியும் விடவில்லை. அவருடைய ஒரு பெண்ணின் திருமணத்தை முடித்துக்கொண்டார். அவ்வளவு வசதியான வீட்டுக்கு தன் பெண் மருமகளாக சென்றதில் அவருக்கு மிகவும் மகிழ்ச்சி.

தீபா இதை ஒரு விஷயமாக எடுக்காமல் தட்டிவிட்டு சென்றாள். அவளுக்கு படித்து வேலை பார்க்க வேண்டும். வேலைக்கும் சொல்லி வைத்துவிட்டாள்.

அவளுக்கு ஏனோ சந்தையில் மாட்டை பிடிப்பதுபோல் இந்த பெண் வேண்டாம் அந்த பெண் வேண்டும் என்று அந்த பெரிய மனிதர் கூறியது பிடிக்கவில்லை. அதனால் அதில் எதுவும் பட்டுக்கொள்ளவும் இல்லை.

படித்து முடித்தாள். உடனே வேலைக்கு செல்வேன் என்று நின்றாள். தன் உடன் படிக்கும் பெண்ணின் மூலம் திருநெல்வேலியில் ஒரு வேலையை வாங்கிவிட்டாள். அங்கு ஹாஸ்டெல் வசதி இல்லாததால் சிறிதாக ஒரு வீடு எடுத்து தன பாட்டியை கூட்டிக்கொண்டு வந்துவிட்டாள்.

அவள் வேலை சேர்ந்து ஆறு மாதத்தில் முத்துவேல் மீண்டும் ஒரு வரன் கொண்டுவந்தான். ஆனால் அவர்கள் சீர் நிறைய எதிர் பார்த்தனர். அதையும் தீபாவை கொண்டு வந்து நடு சபையில் அமர்த்தி மாப்பிள்ளை பெண்ணை பிடித்திருக்கிறது என்று கூறிய பின் இந்த செய்முறை பற்றிய பேச்சு வந்தது. மாப்பிள்ளை வீட்டில் இருநூறு பவுன் போடவேண்டும் என்றுவிட்டனர்.

மேனகா வழியாக ஒரு நூற்றி இருபது பவுன் அவள் அம்மாவின் நகை எடுத்து போனது இருக்கிறது. முத்துவேலும் அதை முழுதாக கொடுத்துவிட தயாராகவே இருந்தான். அதை கொடுத்துவிட்டால் மேனகாவிற்கு அம்மா வீட்டில் செய்தது என்று எதுவும் இருக்காது. ஆனால் அவள் புகுந்த வீட்டினர் அதை ஒரு பெரிய விஷயமாக எடுக்க வேண்டாம் என்று கூறிவிட்டனர். எப்படியாவது தீபாவிற்கு நல்லபடியாக திருமணம் நடந்தால் போதும் என்று அனைவரும் ஒன்றுபட்டே இந்த ஏற்பாட்டை முனைப்புடன் செய்தனர்.

ஆனால் இன்னும் என்பது பவுன் இடிக்கிறதே. பார்வதி, அவ்வளவு போட்டால் தன் மீதி இரண்டு பிள்ளைகளுக்கு என்ன செய்வது என்று கூறி தட்டிவிட்டார். அவர்களுக்கு வசதி இல்லாமல் இல்லை. ஆனால் இந்த இடமும் பெரிய இடம். அது என்ன இந்த மூத்த மாப்பிள்ளை தீபாவுக்கு பெரிய இடமாகவே கொண்டு வருகிறான் என்று அவருக்கு கடுப்பு. இந்த முறை அவரின் கை ஓங்கியது.

“நீங்க தீபாவுக்கு நல்ல பெரிய இடத்தில கல்யாணம் செய்ய நினைக்கிறது எல்லாம் சரி தான். அப்போ அதுக்கு ஏத்த மாதிரி செய்முறையும் நீங்களே செய்ய வேண்டியது தானே. ஏன் இவர் தலையில் கொண்டுவந்து கட்டுறிங்க” என்று அவர்கள் ஏதோ கொலை பாதகம் செய்தது போல் பேசினார்.

அந்த மாப்பிளை வீடும் சத்தம் காட்டாமல் எழுந்து சென்றது. தீபாவுக்கு இந்த மாப்பிள்ளையின் மேலும் எந்த விருப்பமும் வரவில்லை. ஆனால் இந்த சித்தியின் குணம் அவளுக்கு கடுப்பேற்றியது. அது என்ன என்னை சபையில் நிறுத்தி வைத்து நிராகரிப்பது என்று கோபமும் வந்தது.

இதோ இப்பொழுது அடுத்த வரன். இதை சிவநாதன் கொண்டுவந்தார். மாப்பிளை வீட்டினருக்கு இந்த குடும்பமும் அதன் வசதியும் பிடித்து விட்டது. ஆண் வாரிசு வேறு இல்லை. நிறைய சொத்தும் வேறு கிடைக்கும் என்று கணக்கு போட்டனர்.

வந்த மாப்பிள்ளை இரட்டை பிள்ளைகளில் ஒருவன். மாப்பிள்ளையின் அப்பா, என்னோட இன்னொரு பையனுக்கும் உங்க பொண்ணையே குடுக்குறீங்களா என்று கேட்டார்.

இப்பொழுது வழக்கம்போல் சரோஜா வாய் திறந்தார். உங்களுக்கு ரெட்டை பசங்க மாதிரி எங்க வீட்டிலும் ரெட்டை பெண் பிள்ளைகள் இருக்காங்களே. அதுல ஒருத்திய பிரிச்சு கட்டிட்டு போறதுக்கு ரெட்டை பொண்ணுங்களாவே நீங்களும் கட்டிட்டு போலாம்ல. மிகவும் நல்ல மனதுடன் கூறினார்.

இந்த மாதிரிபட்ட நல்ல மனிதர்களிடம் இருந்து விலகுவது தான் யாருக்கும் நல்லது. இவர்களிடம் எந்த தர்க்கமும் செல்லாது. அவர்களை பொறுத்த வரையில் அவர்களுக்கு எது நம்மை பயக்குமோ அதுவே நியாயமும் தர்மமும். அதனால் யாருக்கு என்ன பாதிப்பு வந்தாலும் கண்டுகொள்ளாமல் தங்கள் வேலையை பார்த்துக்கொண்டு சென்றுவிடுவார்.

அந்த பாட்டி இப்படி கூறியதுமே தீபா எழுந்து உள்ளே சென்றுவிட்டாள். மீண்டும் ஒரு துரோகம்.

மாப்பிள்ளை வீட்டினர் அமர்ந்து இருக்கும்பொழுதே கிளம்பி வெளியில் வந்து பஸ் பிடித்து திருநெல்வேலி வந்துவிட்டாள்.

அவளை பார்வதி கண்டுகொள்ள வில்லை. வந்த சம்மந்தத்தை விடவும் இல்லை. கல்லூரியில் படித்துக்கொண்டிருந்த தன் மீதி இரண்டு பெண்களுக்கும் அடுத்த முகூர்த்தத்தில் திருமணத்தை முடித்தும்விட்டாள்.

பூரிப்பு. அப்படி ஒரு பூரிப்பு. மூன்று பெண் பிள்ளைகளை பெற்று, வளரத்து, படிக்கவைத்து மூவருக்கும் பெரிய இடத்த்தில் மணமும் முடித்துவிட்டார். சாதனை. மிகப்பெரிய சாதனை. இன்னொரு பெண்ணின் வாழ்க்கையை பறித்து அவருடைய பெண்களுக்கு கொடுத்து ஒரு பெரிய ஆட்டம் ஆடி தீர்த்துவிட்டார்.

அவருக்கு இருந்த அனைத்து கடமையும் முடிந்தது என்று நிம்மதி பெருமூச்சு விட்டுக்கொண்டார். உண்மையிலேயே கடமை முடிந்ததா? இல்லை விதி இவரை இன்று வரை ஆடவிட்டு வேடிக்கை பார்த்ததா? இப்பொழுது விதி தன் ஆட்டத்தை தொடங்கினால்????
 
Nirmala senthilkumar

Nirmala vandhachu
Best wishes for your new story ma
 
Lakshmimurugan

Well-Known Member
பார்வதி இனிமேல் தான் அனுபவிக்க போகிறாள் போல,அனுபவிக்கட்டும் படிக்க காத்திருக்கிறேன்.
 
Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top