பனை ஓலை கொழுக்கட்டை...

Joher

Well-Known Member
#1
பனை ஓலை கொழுக்கட்டை...

பிரெஷ் பச்சரிசி மாவு (ஊற வச்சி மிக்ஸில பொடிபண்ணிக்கலாம்) 2 கப்
உடைத்த பாசி பயறு (தோலோடு உள்ளது) வாசம் வரும்வரை வறுத்தது 1/2 கப்
துருவிய தேங்காய் 2 கைப்புடி
சுக்கு பொடி கொஞ்சம்...
வெல்ல பாகு (வெல்லம் தண்ணீரில் கரைந்து கொதித்தாலே போதும்) தேவைக்கேற்ப
ஏலக்காய் பொடி வேணும்னா சேர்த்துக்கலாம்.

வெல்லப்பாகு தவிர மிச்சம் எல்லாம் ஒரு பாத்திரத்தில் போட்டு மிக்ஸ் பண்ணிட்டு அதுக்கு மேல சூடான வெல்லப்பாகு ஊற்றி நல்லா மிக்ஸ் பண்ணனும்... மாவு கெட்டியா தான் இருக்கணும் அதனால வெல்லம் அதிகமாவும் தண்ணீர் ரொம்ப கம்மியாவும் ஊற்றி பாகு ரெடி பண்ணிக்கோங்க (தண்ணீர் பத்தாதுனா கொதிச்ச தண்ணீர் கூட ஊற்றிக்கலாம்... தண்ணீர் ஓகே இனிப்பு பத்தலைனா கொழுக்கட்டை நல்லா இருக்காது... So பாகு பார்த்து ரெடி பண்ணுங்க... பச்சை மாவு அதிகமா தண்ணீர் எடுக்காது)

இப்போ கொஞ்சம் கொஞ்சமா மிக்ஸ் பண்ணின மாவு எடுத்து பனை ஓலை or பூவரசு இலை or வாழை இலை ல ஒரு பக்கமா வச்சி மறுபக்கம் மடிச்சு விட்டுக்கணும்...
இதை இட்லி பாத்திரத்தில் அடித்தட்டு மேல கொஞ்சம் வேஸ்ட் இலைகளை (என்ன இலை யூஸ் பண்ணுறோமோ அதுல வெட்டி போட்ட துண்டுகள்-அப்போ தான் அடி தட்டுல இருக்கிறதுல தண்ணீர் போகாது) போட்டுட்டு அதுக்கு மேல அடுக்கி வச்சி 10-15 மிதமான தீயில் வேக வச்சி எடுக்கணும் (முதலில் கொஞ்சம் நேரம் தீ அதிகமா வச்சிக்கலாம்... அப்புறம் கொஞ்சம் குறைச்சுக்கலாம்)
நல்லா ஆற வச்சி சாப்பிடுங்க... டேஸ்ட்டா இருக்கும்... சத்தானதும் கூட...
மிச்சம் இருந்தால் இலைல இருந்து எடுத்து ஒரு ஓலை பெட்டி or சுளவு (முறம்) ல போட்டு ஒரு மெலிசான துணி போட்டு காற்று மட்டும் போற மாதிரி மூடி வச்சுட்டு அடுத்த நாள் கூட சாப்பிடுவோம்...

Panai Olai Kozhukkattai.jpg
 




Last edited:

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Advertisement

New Episodes

Advertisement