நேசம் மறவா நெஞ்சம்-7 nesam marava nenjam

Advertisement

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
நேசம் மறவா நெஞ்சம்

அத்தியாயம்-----7
“அமுதா ஏய் ..............அமுதா............”

“என்ன சொல்லு எதுக்கு இப்ப அமுதாவ ஏலம் போடுற........”

“உங்கிட்ட ஒரு விசயம் சொல்லனும்டி......”.

“சரி சொல்லு...”

“அதுவந்து ...........................அதுவந்து ............”

“அடச்சீ,,,,,,,,,சொல்லு......நானே படிக்கலைன்னு கடுப்புல இருக்கேன்.........இப்பதான மேம் வந்து டெஸ்ட் வைக்க போறதா சொல்லிட்டு போனாங்க நீயெல்லாம் படிக்காட்டியும் நடத்துனத வைத்து எழுதி பாஸாகிருற........நான் அப்படியா மண்டைல கொட்டி கொட்டி படிக்கிறேன் மண்ட தான் வீங்குது. படிப்பு வரமாட்டேங்குது. சரி சொல்லு இல்லைன்னா அங்கிட்டு போய் தொலை.”

“ஏண்டி இப்படி டென்சனாகி திட்டுற..........”..

“ஆமா ஏற்கனவே எங்க அம்மா இப்ப வர்ற பரீட்சைல இருக்கிற அரியர எல்லாம் பாஸ் பண்ணலைன்னா இதோட படிப்ப நிப்பாட்டிட்டு டவுண்ல இருக்குற ஏதாவது ஒரு வீட்ல வேலைக்கு சேத்து விடுவேன் சொல்லுது.”

“ஏய்.......................சூப்பர்டி..........”

“எது நான் வீட்டு வேலைக்குப் போறதா.................”..

“அது இல்லடி..........எப்படியும் உங்க அம்மா ஒரு பெரிய பணக்கார வீட்ல வேலைக்குச் சேத்துவிடும். அந்த வீட்ல இருக்குற நம்ம அறிவுக்கு ஏத்த ஒரு பையனப் பாத்து லவ் பண்ணி கல்யாணம் பண்ணிக்க............நீ படிக்கவும் வேணாம். உங்க அம்மாகிட்டயிருந்தும் விடுதலை....எப்படி சூப்பர்ல.........”

“அட.....த்து..........கருமம் ......... கருமம் .......உனக்கு ஏண்டி புத்தி இப்படி போகுது.................”...

“அதுக்கில்லடி இப்ப டிவில போடுற பாதி நாடகத்துல அந்த வீட்ல வேல பாக்குற வேலகாரிங்க தானடி அந்த வீட்டு மருமகளா வர்ற மாதிரி காண்பிக்கிறாங்க ...........”

“எந்த நாடகத்துலடி...........”

“நீ ரொம்ப நடிக்காத அந்த 7மணி 9மணி நாடகம்மெல்லாம் பாக்குறதுல்ல.........”

“..ஏண்டி உங்க அம்மா திட்டமாட்டாங்க.........

".திட்டுவாங்க நான் தான் ஓடிப்போய் எங்க அப்பத்தாகிட்ட உக்காந்துகுவேன் அப்புறம் எங்கிட்டு திட்டுறது............
எங்க அப்பத்தால்லாம் சுனாமியே வந்தாலும் நாடகம் முடிஞ்ச உடனே வான்னு திருப்பி அனுப்பிச்சிரும்.........”

“ஆத்தி........நீயும் உங்க அப்பத்தாவோட சேர்ந்து நாடகம் பாத்து ரொம்ப கெட்டுப்போயிட்டடி..........சனியனே............. ஏண்டி சொல்ல வந்த விசயத்த சொல்லாம நேரத்த போக்கி என்னையும் படிக்க விடாம பண்ணுற............”

“ஹிஹிஹி.................என்னைய ரொம்ப புகழாதடி..............”

“அடச்...சீ.......வழியாம சொல்லு.......பாக்கச்சகிக்கல......”

“இருடி சொல்லுறேன்.......என்னோட வீக்னஸ் பாயிண்டு உனக்கும் அப்பத்தாவுக்கும் மட்டுந்தானே தெரியும். இப்ப இன்னொரு ஆளுக்கும் தெரிஞ்சப் போச்சுடி.......”

“எது நீ பயம் வந்தா கண்ண மூடிகிட்டு யாரு கழுத்தையாச்சும். புடிச்சிக்கிட்டு தொங்குவியே அதுவா............”

“ஆமாண்டி..........”

“இப்ப யாரு உங்க அம்மா வா இல்ல உன்னோட தங்கச்சிங்களா.................”

“அவுகளா இருந்தாதான் பரவாயில்லயே........”

“பின்ன யாரு...........................”.

“நேத்து நைட்டு நாம ஆடல் பாடல் முடிஞ்சு வீட்டுக்குப் போனோம்ல.........”

“ஆமா....”

”அப்ப நான் அந்த சந்துல ஒடுறம்னு ஒரு ஆளு மேல மோதிட்டன்டி...........”.

“ஏண்டி குரங்கே உனக்கு என்ன கண்ணா அவிஞ்சுப்போச்சு..........ஒரு ஆளு வர்ரது கூட தெரியாம போயி மோதியிருக்க........பாவம் யாருடி அது.........கீழே விழுந்து மண்டகிண்ட உடைஞ்சுப் போச்சா................உங்க அப்பத்தா சொல்ற மாதிரி உனக்கு கொஞ்சம் கூட கூறுஇல்லடி........சரி சொல்லு அப்புறம் என்னாச்சு..............”

“இல்ல ராத்திரி ரொம்ப இருட்டா இருந்துச்சா.......அதனால கண்ண முடிக்கிட்டு ஒடினேன்.........அதனால தான்டி அந்த ஆளு வர்றத பாக்கல..........மோதினதுல ரொம்ப பயமாயிடுச்சா................”.

“போச்சு......போச்சு,........பயத்துல அவரு கழுத்த பிடிச்சு தொங்குனியா...........”

“ஆமாடி.............”

“என்னது...........ஹாஹாஹா............”.என்று அமுதா வயிற்றைப் பிடித்துக் கொண்டு சிரிக்கத் துவங்க ..............

“ஏய்........ரொம்ப சிரிக்காதடி........நேத்து எனக்கு எவ்வளவு அசிங்கமா போச்சுன்னு தெரியுமா...........”

“ஆமா அந்த ஆளு நம்ம ஊரா இல்ல வெளியூரா.....”

“அதுவரைக்கும் பரவாயில்லடி நான் உள்ளுருல அசிங்கப்படல ஆளப்பாத்தா யாரு வீட்டுக்கோ விருந்தாளியா வந்திருப்பாங்கன்னு நினைக்குறேன்.........”

“அந்த ஆளு கொஞ்ச வயசா இல்ல வயசானவராடி........”

“கொஞ்ச வயசு தான்டி ஆனா நீ ஆள பாக்கலயே கோபத்துல கண்ணெல்லாம் செவந்து மீசைய முறுக்கி விட்டு நம்ம ஐயனாருதான்டி........எங்க சுதா அக்காகிட்ட துன்னூறு வாங்கி பூசியிருப்பாருன்னு நினைக்கிறேன்...............ஆனா அவளுக்கு வரகோபத்துல பத்து மடங்கு இவருக்கு கூட வருதுடி.........என்னைய நல்லா திட்டிப்புட்டாருடி..........”

“ஆமா நீ செஞ்ச வேலைக்கு உன்னைய திட்டாம கொஞ்சுவாங்களா...........நல்ல வேள அந்த ஆளு கொஞ்ச வயசுகாரரு. . வயசானவரா இருந்திருந்தா......இன்னேரம் செத்து பரலோகம் போயிருப்பாரு.....நீயும் ஜெயிலுக்கு போயிருப்ப.........நானும் முன்ன பின்ன ஜெயில பாத்ததில்லையா நானும் ஜாலியா உன்னைய வந்து ஜெயிலுல பாத்திருப்பேன்......நல்ல வாய்ப்பு மிஸ்ஸாயிடுச்சு.......சே............”

“அடிப்பாவி நீயெல்லாம் பிரண்டாடி..........துரோகி............”..என்றபடி அவள் கழுத்தை நெறிக்க வர

“சரிசரி விடுடி மீ பாவம்.......”

“ஆமா இந்த விசயம் உங்க அப்பத்தாவுக்கு தெரியுமாடி.........”

“ஏன் எனக்கு வெளக்கமாத்து பூச கெடைக்கவா...........நான் மூச்சே விடலடி.........ஆனா அத நினைச்சுப்பாத்தா தாண்டி ஒரே அசிங்கமாயிருக்கு..........”

"சரி விடு நீ மறுபடியும் அந்த ஆள பாக்கவா போற......நாம எவ்வளவு அசிங்கப்பட்டிருப்போம்.......நாம அத ஆட்டோ புடிச்சு அனுப்பிட்டு வேற ஆட்டோ பிடிச்சுபோயிற மாட்டோம்................அத விடுடி உங்க அக்கா கோயில்ல கிடா வெட்டுறாங்கள்ள அதுக்கு நீ போறீயா...........”

“ஆமாடி ...........போகலைன்னா .......அது ஒரு வாரத்துக்கு மூஞ்சிய தூக்கி வச்சுக்கிறும் போன்லையும் பேசாது.அதோட பிள்ளைகளையும் பேச விடாது.............அக்காகிட்ட பேசலைன்னாக்கூடப் பரவாயில்ல.........அது பிள்ளைங்க பேசாட்டா தூக்கமே வராது, அதனால நான் கண்டிப்பா போவேன், நீயும் வர்றீயா.............”

“ஆமாம்டி........எங்க அம்மா எனக்கு என்னவோ நேத்திக்கடன் இருக்காம் அதுனால என்னையும் கூட்டிட்டு போறேன்னு சொன்னாங்கடி........”

“ஐ...............சூப்பர்டி..........”..

கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,என்று அடுத்த பாட வேளைக்கான மணி அடித்தது .”போச்சு போச்சு நான் இன்னைக்கு பெரிய முட்டையாதாண்டி வாங்கப் போறேன்.”

“ஏய் இந்த கயல் இருக்க உனக்கு கவலை ஏண்டி நான் உனக்கு என்னோட பேப்பரே தர்றேன்டி”

“அப்பா தப்பிச்சேன்டி..............”
 
Last edited:

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
அந்த வாரம் வந்த வெள்ளிக்கிழமை அன்று மாணிக்கமும் காந்திமதியும் விடியற்காலையில் தங்களுடைய குல தெய்வ கோயிலுக்கு வந்து பூசை முடித்து அந்த கோயில் மரத்தின் அருகில் வந்து அமர்ந்தனர்.........
காந்திமதி

“ என்னப்பெத்த ஆத்தா என் குலத்த காக்க வந்த தெய்வமே.....என் பேத்திகளுக்கு நல்லபடியா மாலை எடுத்து குடுத்தா.........என் குடும்பத்துக்கு நல்ல உத்தரவா குடுத்தா இந்த பையன் எங்க குடும்பத்துக்கு ஏத்தவரான்னு நீதாத்தா உத்தரவு குடுக்கனும்.........................”..என்றபடி வேண்டி கொண்டிருக்க மாணிக்கம் கண்மூடி வேண்டி கொண்டிருந்தார்...........

அந்த நேரம் அந்த மரத்திலிருந்து கெவுளி சொல்ல காந்திமதியும் மாணிக்கமும் மகிழ்ச்சியுடன் மீண்டும் சன்னதிக்குள் சென்றனர்.வழியில் மாணிக்கத்திடம் யாரோ பேசிக்கொண்டிருக்க காந்திமதி அங்கு சாமி ஆடி குறி சொல்லி கொண்டிகுக்கும் பூசாரியிடம் சென்றார்...............................

இருவரும் வீட்டிற்குள் நுழைய சகுந்தலா அத்த நமக்கு ஆத்தா உத்தரவு குடுத்திருச்சா........

“‘ம்ம்ம்ம்.............குடுத்துருச்சுத்தா..........”

“ஆத்தா ........பூசாரி சாமி ஆடி என்ன சொன்னாரு.......”

“அது..................... ஒன்னும்மில்லப்பா....................சுதாவ கல்யாணம் முடியிற வரைக்கும் ஒரு 11.....நாளைக்கு கோயிலுல வெளக்குப் போடச் சொன்னாரு..............”

“சரித்தே .....அப்ப மாப்ள வீட எப்ப நம்ம.....சுதாவ பாக்க வரச்சொல்லுவோம்.............”.

“வீட்டுக்கு வேணாம் சகுந்தலா..........நம்ம தாமரையை கோயில்ல வச்சு பாத்த மாதிரி ஏதாவது ஒரு கோயில்ல வச்சு பாக்கச் சொல்வோம்.............வேணும்னா நம்ம தாமர வீடு கிடா வெட்டுறாங்கள்ள...............அங்க வச்சு பாக்கச் சொல்லுவோம். “

“சரித்தா நான் அப்புறமா அழகர் அண்ணன்கிட்ட சொல்லிற்றேன்..............”

மறுவெள்ளிக்கிழமை அனைவரும் வேன்பிடித்து கோயிலுக்குச் சென்று சாமி கும்பிட்டு பொங்கல் வைத்து கிடா வெட்டும் இடத்திற்குச் செல்ல
கயல் அமுதாவின் கையைப் பிடித்துக் இழுத்துக் கொண்டு செல்ல

“ஏய் எங்கடி கூட்டிட்டு போற.......”

“இரு சொல்லுறேன்.......”

“கயலு...........இந்த வாசு ஏண்டி இங்க வந்தான்.............அவனோட மூஞ்சியும் மொகரையும் அவனோட பார்வையும் பாக்க சகிக்கல .............ஒரு நாளைக்கு பாரேன் ..............அவனோட கண்ணுல குச்சிய எடுத்து குத்தப்போறேன்.........இல்லைன்னா மண்ணள்ளி போட்டுறுவோமா..........”

“ச்சீ......ச்சீ.....பாவம்டி..............வேணாம்,................மொளகாத்தூள அள்ளிப் போட்டுறுவோம்...........”

“ஏய் ........சூப்பர்டி........”
இருவரும் நீண்ட சந்து போல இருந்த அந்த சுவற்றின் அருகே சென்றனர்.

“.இங்க ஏண்டி கூட்டிட்டு வந்த............”

“இரு சொல்லுறேன் இங்கயிருந்து பாத்தா அங்க கிடா வெட்டுற இடம் தெரியுதா............”

“ஆமா......தெரியுது...”

“அப்ப இந்த இடம் தான்டி பொசிசன்.........”

“எதுக்குடி.....”

“இல்ல வருசா வருசம் தாமர அக்கா இங்க கிடா வெட்டுறாங்க....அதை ஒரு வருசமாவது கண்ண மூடாம பாத்து என்னோட தைரியத்தை வளத்துக்கலாம்ன்னு பாக்குறேன்.............எங்க.........”

“ஏண்டி பாக்க முடியலயா..........”
“ஒவ்வொரு வருசமும் நானும் அப்பத்தாவ துணைக்கு கூட்டிட்டு இங்க வந்து நிப்பனா.........கரெக்டா கிடா வெட்டும் போது பயம் வந்து அப்பத்தாவ கட்டிப் புடுச்சிகிட்டு தொங்குவனா அது நல்லா முதுகுல நாலு போட்டு திட்ட ஆரம்பிக்கும்பாறு............திட்டும்...........திட்டும்............இங்க சாப்பிடுற சாப்பாடு செமிக்குறவரைக்கும் திட்டும்டி........அதான் இந்த வருசம் உன்னைய கூட்டிட்டு வந்தேன்...................எப்படிடிடி.....................”..

“ஏன் நான் உன்னைய வெளுக்கமாட்டனா..............”.

“‘ச்சீ......ச்சீ...........நீ என் நண்பிடிடிடி.......................”

அங்கு கண்ணனும் அவன் குடும்பமும் காரிலிருந்து இறங்கி கோவிலுக்குள் நுழைந்தனர். சாமி கும்பிட்டு விட்டு அழகருக்கு போன்செய்ய அவர் கோவிலுக்குப் பின்னால் வரச் சொல்ல கண்ணனுக்கு இந்த பெண் பார்க்கும் நிகழ்ச்சியில் எல்லாம் விருப்பம் இல்லை. தன் அம்மாவுக்கு மட்டும் பிடித்தால் போதும் என்று எண்ணினான். மேலும் தன் தம்பிகளிடமும் அம்மாவிடமும் முகம் சுளிக்காமல் பாசமுடனும்அக்கறையுடனும் பொருப்புடனும் நடக்க வேண்டும் என்றும் தன் தாய் வெள்ளந்தியாக இருந்ததால் தான் தன் அத்தைகள் ஏமாற்ற துணிந்தார்கள் அதனால் நல்ல ஆளுமை திறனுடன் இருக்க வேண்டும் என்று எண்ணினான்.

மற்றபடி அழகோ எந்தவித எதிர்பார்ப்போ இல்லை.அழகர் பெண்ணுடன் கூடப் பிறந்தவர்கள் 5பேர் என்றதால் இந்த பெண்ணிடம் விட்டு கொடுக்கும் தன்மையும் அனுசரிப்பும் அதிகம் இருக்கும் என்று எண்ணினான். இவர்கள் அழகர் சொன்ன இடத்திற்கு செல்ல கண்ணனுக்கு போன் வந்தது,
“ அம்மா நீங்க முன்னாடி போங்க முக்கியமான போன் அத பேசிட்டு நான் வர்றேன்.”

அங்கு சமைப்பதற்காக தண்ணீர் எடுக்க சுதாவும் மல்லிகாவும் அருணாவும் செல்ல அங்கிருந்த வாசு என்னடா ஒருத்தரையும் காணோம் என்று இவர்கள் அனைவரையும் தேடி கிளம்பினான்.

கயல் அமுதாவிடம்” ஏய் ஆட்டுக்கு மஞ்ச தண்ணீரை ஊத்த போறாங்கடி.....”.

.கயல் கண்ணைச் சிமிட்டாமல் ஏய் கயலு இன்னைக்கு எப்படியாச்சும் கண்ணை மூடாம பயப்படாம தைரியமா இருக்கனும்டி என்று மனதிற்குள் சபதம் எடுத்து கொண்டிருந்தாள்.

அந்த நேரம் அமுதாவிற்கு போன் வர

” ஏண்டி எருமை மாடே எவ்வளவு நேரம் போன் பன்னுறது.நாட் ரீச்சபிள் நாட் ரீச்சபிள்ன்னு வருது.இப்ப ரெண்டு நிமிசத்துக்குள்ள கோயிலுக்குள்ள வர்ற...............இல்லைன்னா கொண்டுருவேன் கொண்டு...........நேத்திக்கடன் பண்ண கூட்டிகிட்டு வந்தா எங்க போயி தொலைஞ்ச “ என்று அவள் தாய் திட்ட அமுதாவோ...........

“கயல் ஒரு ரெண்டு நிமிசம்டி இதோ வந்திருரேன்...................என்று ஓட ஆரம்பிக்க............”

இதை எதையும் கவனிக்காத கயல் அந்த ஆட்டையே உற்று பாத்து கொண்டிருந்தாள்.

போன் பேசி முடித்த கண்ணன் இந்த குறுக்குச்சந்து வழியாக செல்லலாம் என்று நினைத்து நுழைய................................

வாசுவும் எல்லாரும் இந்த சந்து வழியா போயிருப்பாங்களோ.............அதன் வழியாக நுழைய...............

அங்கு மஞ்சள் ஊற்றப்பட்ட ஆடு தன் தலையை சிலுப்ப பூசாரி ஆட்டை வெட்ட அரிவாளைத் தூக்கினார்.

அவ்வளவுதான்..................கயலுக்கு பயம் வந்துவிட்டது............அவள் எடுத்த சபதமெல்லாம் பிடரியில் ஒட இவள் கண்ணை இருக்க மூடி இரண்டெட்டு பின்னால் வைத்து அமுதாவை பிடிக்க கை நீட்டி எட்டிப் பிடித்து கையை மாலையாக கோர்த்து கத்த துவங்கினாள்........

“அமுதா ப்ளீஸ்டி ப்ளீஸ்டி..............எனக்கு பயமாயிருக்குடி..................”.என்று உளற ஆரம்பித்தாள்................

அந்த உருவம் ஏதும் பேசாமல் இருக்கவும் உளறி முடித்தவள்...........பரவாயில்லையே...........அமுதா திட்டலயே............என்று நிமிர்ந்து பார்த்தவள்...................ஐய்யய்யோ...............இவனா......................


கயல் பிடித்தது கண்ணனா.........................
இல்ல வாசுவா...........................


தொடரும்.....................
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top