நேசம் மறவா நெஞ்சம் -6 nesam marava nenjam

Advertisement

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
நேசம் மறவா நெஞ்சம்
அத்தியாயம்-6
மறுநாள் காலை கயல் கடுப்புடன் காலேஜ்க்கு கிளம்ப மல்லிகாவும் அருணாவும் பள்ளிக்கு கிளம்பினர்.

“ சே சே இப்பத்தான் நல்லா தூக்கம் வருதுக்கா இன்னைக்கு பேசாமல் லீவ போட்டிருக்கலாம்” என்று தூக்கக் கலக்கத்தில் அருணாவும் மல்லிகாவும் பள்ளிக்கு கிளம்பிச்சென்றனர்.

வந்திருந்த விருந்தாளிகள் அனைவரும் ஒய்வு எடுத்துக்கொண்டிருக்க தாமரை தன்பிள்ளைகளிடம் விளையாட்டுச்சாமான்களை எடுத்துக்கொடுத்துவிட்டு தன் அப்பத்தாவிடம் வந்து,

“ என்னப்பத்தா ராத்திரி நாடகம் நல்லாயிருந்துச்சா .......?”

“ எங்க அந்த காலத்துல மாதிரியில்லடி அப்ப எல்லாம் நிறைய புராணக்கதை சொல்லி கதையை கொண்டுபோவாங்கடி உங்க தாத்தாவும் நானும் ஒரு நாடகம் விடமாட்டோம், ஆனா இப்பவெல்லாம் ஒரே சினிமாப்பாட்டால்ல பாடுறாங்க.
ஆமா என்ன பாதி திருவிழாக்கடை நம்ம வீட்ல தான் இருக்கும்போல ஒம்பிள்ளங்க எல்லாத்தையும் வாங்கிட்டாங்களா.”..........

“ஆமா தினம் ரெண்டுசாமான் இந்த எட்டுநாளும் இவ்வளவு சாமான்கள வாங்கியிருக்காங்க”

“ சரி அப்பத்தா நீ இரு நான் அம்மாவ பாத்துட்டு வாரேன்.”

“ சரிடி நான் கொஞ்சம் நேரம் படுக்கிறேன்.”

அதே நேரம் சகுந்தலா தாமரையை அழைக்க” தாமரை ஆத்தா தாமரை”

“என்னம்மா.......?“

“அடுத்த வாரம் பாண்டி கோயில்ல கிடா வெட்டுறதா சொன்னிங்களே அத அழகர் பெரியப்பாகிட்ட சொன்னியாத்தா.....?”

“ராத்திரியே உங்க மாப்ள கோயில்ல பாத்து சொல்லிட்டாங்கம்மா.... பிரசிடெண்டுமாமா வீட்டுக்கு மட்டும் சொல்லலம்மா என்னய போயி சொல்லிட்டு வரச்சொன்னாங்க அதான் சுதாவ துணைக்கு கூட்டிட்டு போறேம்மா.......?”.

“சுதாவையா……? அவ வேணாம்டி வயசுக்கு வந்த பிள்ளைய வீட்டுக்கு வீடு கூட்டிட்டு போக கூடாதுடி தம்பி பள்ளிக்கூடம் விட்டு வந்தவுடன் கூட்டிட்டு போ.......”

“இல்லம்மா இன்னைக்கு மத்தியானமே ஊருக்கு கிளம்புறேன்”.

“ஏண்டி,.....பத்துநாளு இருந்துட்டு போகலாம்ல”

“இல்லம்மா...அது சரிவராது.நான் இன்னைக்கே கிளம்புறேன்”

தாமரை கணவன் கோவிந்தனோடு பிறந்தவர்கள் மூன்று பேர் இவன் தான் மூத்தவன் . ஒரு தங்கைக்கு மட்டுமே திருமணம் நடைபெற்றிருந்தது.மற்ற இருவரும் பள்ளியில் படிக்கிறார்கள், உள்ளுரிலேயே ஒரு மளிகைகடை வைத்திருக்கிறான். கடுமையான உழைப்பாளி காலையில் 6மணிக்கு சென்றால் இரவு 10 மணிக்குத்தான் திரும்புவான். உள்ளுரில் கொஞ்சம் நிலபுலன்கள் இருந்ததால் அவன் பெற்றோர் அதில் விவசாயம் செய்து வருகின்றனர்.தாமரைக்கு இரு குழந்தைகள் .அவளுக்கும் காலையிலிருந்து இரவு வரை .வேளை சரியாக .இருக்கும்.
கோவிந்தன் முதல் நாள் மதியம்தான் திருவிழாவிற்கு வந்திருந்தான்.

“தாமர …….ஏய் தாமர…….”

“என்னங்க மாமா”

“இங்க கொஞ்சம் வாடி…”என அவளைத்தன் கைவளைவிற்க்குள் கொண்டு வந்தவன்.

“என்னடி ஊருக்கு வந்து ஒரு வாரமாச்சு எப்ப நம்மவீட்டுக்கு வரப்போறீங்க. நீங்க இல்லாம வீடுவீடாவே இல்லடி” என்றபடி அவளை இறுக்கி நெற்றியில் முத்தமிட்டான்.

“ ச்சு .........சும்மா இருங்க மாமா தங்கச்சிங்க யாராச்சும் வந்திருவாங்க நாங்க வீட்ல இருந்தாமட்டும் நீங்க எங்க கூடவேவா இருக்க போறீங்க பொழுது விடிஞ்சு பொழுது போனா வேலவேலைன்னு அலைவீங்க”.

“ஏய் இங்க பாரு ,என்னைய நல்லா பாருடி, உம்புருசன் எதுக்குடி இப்படி உழைக்கிறான், நம்ம குடும்பத்துக்கு தானடி உம்மாமா பாவமில்லையா இன்னும் கொஞ்சம் காசு சேத்து கடைய பெருசாக்கிட்டா போதும்டி இன்னும் நாலுபேரு வேலைக்கு சேத்தா போதும் அப்புறம் நீ கடைக்கு போன்னு சொல்லுருவரைக்கும் நான் வீட்லயே இருக்கேன் போதுமா........”.

“பகலெல்லாம் வேல பாத்துட்டு வீட்டுக்கு நைட் வரும்போது நீங்க மூனுபேரும் இல்லயின்னா தூக்கமே வரமாட்டதுடி “ என்றபடி அவளுடன் இழைந்து கொண்டிருந்தவன் அவளை அப்படியே இறுக்கி அணைத்து விலகினான்., மிச்சத்த நம்ம வீட்ல போயி வச்சுக்கலாம் சரியா என்று கண் சிமிட்டி விலகினான்.

தாமரைக்கு தன்கணவன் இரவுபகல் பாராமல் உழைப்பதை பார்த்தால் மனதுக்கு மிகவும் வருத்தமாக இருக்கும். தான் அருகில் இருந்தாலாவது நேரத்துக்கு பார்த்து சாப்பாடு போடுவாள். இப்பொழுது தன் கணவனும் இவ்வாறு சொன்னவுடன் தாமரைக்கு உடனேயே ஊருக்கு கிளம்பவேண்டும் போல இருந்த்து.

“சரிங்க நாளைக்கு மத்தியானம் சாப்பிடவும் கிளம்புவோம்ங்க”.

“இல்லடி நான் காலையில 4 மணிக்கு கொல்லிமலையில கடைக்கு கொஞ்சம் சரக்குபோட போகனும்டி அது நாளநான் வெள்ளன கிளம்புறேன். நீங்க மத்தியானம் சாப்பிடவும் 2 மணி பஸ்க்கு கிளம்பி வந்துடுங்க நைட் நான் வீட்டுக்கு வரும்போது நீயும் பிள்ளைங்களும் வீட்ல இருக்கணும் இந்த வீட்ல கொஞ்சம் பிரியா பேசக்கூட முடியல எப்போ உன்தங்கச்சிங்க வருவாங்களோனு பயமாயிருக்குடி ப்ளிஸ் நைட்டுக்கு வீட்டுக்கு
வந்துருடி......... “

கோவிந்தன் தாமரையை தவிர மாமனார் வீட்டில் அனைவரிடமும் மரியாதையாக பழகுவான்.அதிகம் பேச மாட்டான் தாமரையின் தங்கைகளிடம் தேவையில்லா பேச்சோ, கேலியோ ,கிண்டலோ இருக்காது. அந்த நால்வரையும் தன் சகோதரிகளை போலவே எண்ணுவான்.தாமரை மீதும் தன் குழந்தைகளின் மீதும் உயிராக இருப்பான்.தாமரைக்கும் தன் கணவன் என்றால் உயிர்.

சகுந்தலா தன் மகளிடம் “சரிடி நீ சுதாவ துணைக்கு கூட்டிட்டு போயிட்டு உடனே வந்தரு ...........சரியா.............பிரஸிடெண்டுமாமா பொண்டாட்டி முன்னமாதிரி இல்ல.....காசு பணம் வரவும் குணமும் மாறுதுடி”,

“ காசு பணம் வந்தா நமக்கென்னமா உங்க பங்காளிங்க வீட்ல ஒருத்தருக்கு சொல்லிட்டு ஒருத்தருக்கு சொல்லைன்னா உங்களுக்கு சங்கட்டம்மா......ஒரு வார்த்தை சொல்லிட்டு உடனே வந்திருறேம்மா.............”

“ சரி சரி சீக்கிரம் வந்துருங்க.......”.தாமரை சுதாவை அழைத்துக்கொண்டு செல்ல ............................
அழகர் மாணிக்கம் வீட்டிற்கு வந்தார்.

“தம்பி….. டேய் மாணிக்கம் “என்று அழைக்க

“ அண்ணே வாங்கண்ணே….. வாங்க…..” என்று அழைத்து நாற்காலியில் அமரச் செய்தார்.

“சகுந்தலா இங்க வா அண்ணன் வந்திருக்காங்க” என்று உள் நோக்கி தன் மனைவியை அழைக்க

“வாங்க மாமா,இந்தாங்க காப்பி உங்க குரல் கேக்கவும் காப்பி போட்டு எடுத்துட்டு வாறேன்”.

“இந்தாங்க மாமா….”

“தம்பி உன்கிட்ட ஒரு தாக்க சொல்லலாம்னு வந்தேன்”.

“எங்க ஆத்தாவ காணோம்….? விருந்தாளிங்க எங்க ஒருத்தரையும் காணோம்….?”.

“அத்தை உள்ள படுத்திருக்காங்க மத்தவங்க எல்லாம் விடியகாலம்தான் வநதாங்க இப்பதான் சாப்ட்டு படுக்கப் போனாங்க மாமா”.

“சரித்தா…”

“தம்பி நேத்து ராத்திரி கோயில்ல கண்ணங்கிற பையன உனக்கு அறிமுக படுத்துனேனே
அந்த பையன பத்தி நீ என்ன நினைக்குற..........?”

“ஏண்ணே….?, பாத்தா நல்ல பையனா தெரியுறாரு.நல்லா மரியாதை குடுத்து பழகுறாரு நல்லா வாட்டசாட்டமா கம்பீரமா இருந்தாரு. நம்ம பெரிய மாப்பிள கிட்ட ரொம்ப நேரம் பேசிகிட்டு இருந்தாரு........ஏண்ணே என்ன விசயம்...................?”.

“தம்பி அந்த பையன் என்னோட சிநேகிதனோட பையன்.விவசாய கல்லூரியில படிச்சிட்டு விவசாயம் பண்ணுறாரு. நிறைய தோப்புதொறவு இருக்கு. நல்லா தெரிஞ்ச குடும்பம் ரொம்ப நல்ல குடும்பம் நம்ம பொண்ணுக்கு மாப்ள பாக்குறதா சொன்னியே அதான் சொல்லிட்டு போலாம்னு வந்தேன்”.

“ராத்திரி கோயிலில நம்ம பொண்ணுகள பாத்திருப்பாங்க போல அவுகளுக்கும் நம்ம பொண்ணுகள புடிச்சிருக்குன்னு நினைக்குறேன். அதான் உன்கிட்ட பேசலாம்னு வந்தேன்”

“ஏண்ணே நீங்க இவ்வளவு சொல்றீங்க நான் என்ன வேணாம்னா சொல்லப்போறேன். ஆத்தாட்ட சொல்லிட்டு கோயிலில குறிகேக்குறோம்ணே. அப்புறம் அவுககிட்ட தாக்கல சொல்லலாம்”.
.அந்தநேரம் காந்திமதி எழுந்து வந்து

“வாப்பா அழகரு…..”

“ஆத்தா என்ன நல்ல தூக்கமா ……?”

“ஆமாப்பு ராத்திரி நாடகம் பாக்க போயிருந்தேன் அதான் கண்ண சொக்குச்சு கொஞ்ச நேரம் படுத்தேன்”, மாணிக்கம் வந்து அழகர் சொன்ன விசயத்தை சொல்ல

“அப்படீயாப்பா.......உனக்கு தெரிஞ்ச குடும்பமா...?,அப்ப சரிப்பா
கோயிலுல குறிய கேட்டுட்டு முடிவெடுப்போம்,”( குறி கேட்பது என்பது குலசாமி கோவிலில் உள்ள மரத்தில் பல்லி சத்தமிட்டால் நல்ல சகுனம் என்று ஒரு செயலை செய்வார்கள் சத்தமிடாவிட்டால் செயலை செய்யமாட்டார்கள்).

“ பாப்போம் இந்த பையன் நம்ம வீட்டுக்கு மாப்ளயா வருவாரா இல்லாயான்னு ஆமா மாப்ள பையன் என்ன வேல பாக்குறாரு…?”

“ அது ஆத்தா காலேஜ்ல விவசாயம் பண்ணுறதுக்கு படிச்சுட்டு ஊர்ல விவசாயம் பண்ணுறாரு”.

“ஆத்தி இது என்னடா கால கொடுமையை இருக்கு ...............அதுக்கெல்லாமா காலேஜ்ல போய் படிக்கணும்......நாமெல்லாம் படிச்சுட்டா விவசாயம் பண்ணுறோம்..........என்னவோ போ.........”

“அது ஆத்தா ..........அது என்னவோ விவசாயத்தை பத்தி நிறைய சொல்லித்தருவாங்களாம்.............”

“சரிப்பா..........................எனக்கு டீவில நாடகம் பாக்க நேரமாச்சு நான் போறேன்பா....”

“சரித்தா நானும் கிளம்புறேன் ..........தம்பி கிளம்புறேன்டா........சகுந்தலா வரவாம்மா..........”

“ சரிண்ணே........”
 
Last edited:

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
நேசம் மறவா நெஞ்சம்

)



அதே நேரம் சுதாவும் தாமரையும் பிரஸிடெண்டு வீட்டிற்குள் நுழைந்தனர். அவர்களை உள்ளே அழைத்த அவர் மனைவி அவர்களை வரவேற்று அந்த விலை உயர்ந்த சோபாவில் அமர வைத்தார்.

“அத்த எங்க மாமாவ காணோம்…?”

“அவரு எங்க வீட்ல இருக்காரு எப்ப பாரு வேலவேலன்னு அலையுறாரு.அப்போது அவரை யாரோ அழைக்க அவரு”, எழுந்து கொல்லைப்புறம் செல்ல அவரோடு பேசியபடி தாமரையும் உள்ளேச் சென்றாள்.

சோபாவில் அமர்ந்திருந்த சுதா அந்த வீட்டைப் பிரம்மிப்பாக சுற்றிப் பார்த்தாள். அவள் இவர்கள் வீட்டிற்கு வந்து ஐந்தாறு வருடங்களாவது இருக்கும். இந்த வீடு அவர்கள் வீட்டிலிருந்து மறுதெருவில் இருக்கும்.முன்பு இவர்கள் வீட்டைப்போல பெரிய முற்றம்வைத்த அந்தகால பெரிய ஓட்டுவீடு. அதை இப்போது சுத்தமாக இடித்துவிட்டு இந்த வீட்டைக்கட்டியிருந்தார்கள்.

இப்போது நீண்ட காம்பவுண்டு சுவர் வைத்து உள்ளே பெரிய நான்கு தூண்கள்வைத்த போர்டிகோ உள்ளே பெரிய வரவேற்பறை நீண்டஹால் ஹாலின் இருபுறமும் இருஇரு அறைகள் பின்னால் டைனிங்ஹால் சமையலறை சாமியறை தனியாக இருந்தது. பின்னால் விறகு அடுப்பு சமைக்க தனியாக இருந்தது.

வீட்டில் இருந்த அனைத்து பொருளின்மீதும் அதன் மதிப்பு தெரிந்தது. பெரிய சோபா டிவி டபுள் டோர் பிரிட்ஜ் கண்ணாடி சோகேஸ் என்று அனைத்தும் செல்வ செழிப்புடன் காணப்பட்டது.தரையில் கிரானைட் பளபளவென்று மின்னியது.

இவள் ஆசையுடன் எல்லா பொருளையும் பார்த்து கொண்டிருந்த்தை மற்றொரு அறையிலிருந்து வாசு கவனித்துக்கொண்டிருந்தான்.

சுதாவை அடிக்கடி வெளியே பார்க்க முடியாது.தூரத்தில் இருந்துதான் பார்த்திருக்கிறான். இப்போது இவ்வளவு அருகில் பார்க்கும்போது அவள் அழகில் பிரம்மித்து போயிருந்தான். அவளை மேலிருந்து கீழாக அங்குலம் அங்குலமாக ரசித்துக் கொண்டிருந்தான்,

தன்னை யாரோ உற்றுப்பார்பதை உணர்ந்து அங்கும்மிங்கும் திரும்பிப்பார்த்தாள்.

வாசு தன் சுய நினைவு வந்து அவளைப்பார்த்து சிரித்தான்.

“வா சுதா நல்லாயிருக்கியா ..........?என்ன உன்னைய பாத்து ரொம்பநாளாச்சு............?”.என்று கேள்வி கேட்க

அப்பொழுதான் அவனை உற்று பார்த்தவள் முன்பெல்லாம் ஏனோதனோவென்று இருப்பவன் இப்பொழுது ஒரு சினிமாநடிகனைப் போல பளபளவென்று இருந்தான். அவனுடன் பேச ஆரம்பிக்கும்முன் தாமரை வந்து

“வா சுதா போகலாம்” என்றாள்

“என்ன தாமரை நல்லாயிருக்கியா........?”

“ம்ம்………” என்றவள் தங்கையை கைபிடித்து அழைத்து வந்தாள்.அவள் வெளியே வரும்போதே வாசு தன் தங்கையை பார்த்து கொண்டிருப்பதை கண்டவள் கட்டைல போறவன் எப்படி பாக்குறான் பாரு தேவையில்லாம சுதாவ கூட்டிட்டு வந்துட்டமோ என்ற எண்ணம் தோன்றியது.

“சரித்தே நாங்க் கிளம்புறோம் நீங்க கோவிலுக்கு வந்துருங்க” என்றாள்
வாசுவின் அம்மா பேச்சி “தாமரை நம்ம வாசுக்கும் வயசு 29 ஆச்சு நம்ம வசதிக்கு ஏத்தமாதிரி (இப்ப இருக்குற வசதி) பொண்ணு இருந்தா சொல்லுத்தா சுதாமாதிரி அழகாயிருந்தா பரவால்ல”,

“சரித்தே நாங்க வாறோம்” என்றபடி கிளம்பினர்

“ஏக்கா இந்த அத்த குணம் மாறிட்டாங்கன்னு நம்ம அம்மா சொன்னாங்களே…..? பாத்தா அப்படி தெரியல்ல.............?”.

“ஏண்டி உன்னை அழகாயிருக்குன்னு சொன்னதாலயா.....?”.

“ச்சீ ச்சீ அதுக்கில்லக்கா......(.அது தான்..........)
எனக்கு என்னமோ தோனுச்சுக்கா அவுக வீட்ல பாத்தியா எவ்வளவு பெரிய டிவி பிரிட்ஜ்ன்னு..........?”..

“ஏன் நம்ம வீட்லயும் தானடி எல்லா பொருளும் இருக்கு..........?”

“இருக்கு ஆனா இங்க எல்லாம் பெருசாயிருக்கல்ல.....?”

“ஆமாடி காலம் மாறமாற எல்லாம் மாறிக்கிட்டு தான்டி இருக்கும் இன்னும் இரண்டு வருசம் போனா இன்னும் பெருசா வரும் அதுக்காக அத உடனே மாத்த முடியுமா எல்லாத்துக்கும் நம்ம மனசு தான் காரணம் பொருள் பெருசோ சிறுசோ யூஸ் ஒன்னுதானடி......”

“சுதா நான் இன்னைக்கு சொல்றத நல்லா கேட்டுக்க.........நாளைக்கு நீ கல்யாணம் பண்ணி போற வீட்ல எல்லா வசதியும் இருக்கோ இல்லையோ நாம அதபத்தி கவலைப்படாம நம்மகிட்ட அன்பா இருக்காங்களா அனுசரனயா இருக்காங்களா அது தான்டி முக்கியம்.......”.

“ போக்கா வரவர நீயும் அப்பத்த மாதிரியும் அம்மா மாதிரியும் அட்வைஸ் பண்ணுற.........?”

சுதாவின் கனவில் ஆடம்பர பொருளும்…………..
வாசுவின் கனவில் கயலா ……..? இல்லை சுதாவா……..?

தொடரும்.........
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top