நேசம் மறவா நெஞ்சம்-5 nesam marava nenjam

Advertisement

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
நேசம் மறவா நெஞ்சம்
அத்தியாயம் 5

கோவிலில் இருந்த கண்ணனை அழகர் கண்டிப்பாக வீட்டிற்கு வந்து சாப்பிட்டுவிட்டு செல்லுமாறு வீட்டிக்கு அழைத்துவர ,சாப்பிட்டுட்டு



“இங்கயே படுங்க மாப்ள காலையில போகலாம்”.



“இல்ல மாமா,அம்மாவுக்கு மேலுக்கு முடியல,நைட்டெல்லாம் முழிச்சா ஆகாது மாமா இப்பவே மணி 12 ஆச்சு இப்ப கிளம்பினாத்தான் நேரம் சரியாயிருக்கும் போயி தம்பிகளை கூப்பிட்டு அம்மாவோட கிளம்பறேன் மாமா”.



“சரிசரி மாப்ள பாத்து போயிட்டு வாங்க”,


“சரி மாமா”


கண்ணன் அழகர் வீட்டிலிருந்து வெளியே வர அவர் வீட்டுத்தெருமுனையில் தெருவிளக்கு இல்லாமல் இருட்டாக இருந்த்து.சந்தில் திரும்பும்போது யாரோ ஓடி வரும் சத்தம் கேட்டு யாரென்று பார்பதற்குள் கயல் கண்ணன் மீது மோதியிருந்தாள்.



கண்ணன் மீது பலமாக மோதிய கயல் கண்ணைத்திறக்காமலே அவன் கழுத்தில் இருகையையும் மாலையாக கோர்த்து,



“ஐயோ,அம்மா,பேய்பேய் ஐய்யயோ அம்மா என்னை பேய் பிடிச்சிருச்சு”,என கத்த துவங்கினாள் (நீதான அவன பிடிச்சிருக்க ).




கண்ணனுக்கு முதலில் ஒன்னுமே புரியவில்லை தன்னை ஒரு பெண் கட்டிப்பிடித்திருப்பதை கண்டு

“ஷ்ஷ்ஷ் ……….கத்தாதே …………ஏய் கத்தாதே………” என்று சத்தம் போட ‘க்கூம் கயல் கண்ணன் இவ்வளவு கத்தியும் கண்ணைத் திறக்கவேயில்லை’.



“ஐய்யயோ தாத்தா என்னைய விட்டுறுங்க ப்ளிஸ் என்னைய விட்டுறுங்க நான் பாவம். உங்க பொண்டாட்டிய பாக்க வந்நீங்களா அவுக நாடகம் பாக்க போயிட்டாங்களே நீங்க அங்க போங்களே ப்ளீஸ் என்னைய விட்டுறுங்க “என்று கத்தினாள்.

கண்ணனுக்கோ எங்க இவ கத்தி ஊரையே கூப்பிடப்போறாளோ என்று பயமாக இருந்தது.நல்லவேள அக்கம்பக்கம் இருந்தவர்கள் கலைநிகழ்ச்சி பாக்க போயிட்டாங்க கண்ணனுக்கு இதுவரை படிக்கும் காலத்தில் இருந்து பெண்களிடம் அதிகம் பழக்கம் இல்லை.இவன் யாரோடும் அதிகம் பழகவும் மாட்டான் மீறி இவனிடம் பேச வருபவர்களை தன் பார்வையாளே சற்றுத்தள்ளி வைப்பான். ஆனால் ஒருபெண் இன்று அவனோடு நேருக்குநேர் மோதி அவன் கழுத்தில் மாலையாக கைகோர்த்திருந்த்து என்னவோ போல இருந்த்து.




“ ஏய் இங்கப்பாரு……,இங்கப்பாருன்னு சொல்றேன்ல”
(எங்க கயல் கண்ணத்திறந்தாதானே )



”தாத்தா நீங்க சாகும்போது எலும்பும்தோலுமாத்தானே இருந்தீங்க, எப்படி இப்ப ஜிம்பாய் மாதிரி மாறினீங்க” என்று கேள்வி கேட்டு கொண்டிருந்தாள்.



கண்ணனுக்கு ஒருவேள இவ லூசாக இருப்பாளோ என்ற எண்ணம் தோன்றியது.ஆனா பாக்க நல்லா சிகப்பா அழகாயிருக்காளே இதற்கு மேலும் பொருக்கமுடியாத கண்ணன்


“ஏய்ய்ய்......... வாய மூடு கத்தாதே”, ஏன்று கர்ஜித்தான்.(இவன் கத்தினால் பயப்பட இவள் ஒன்னும் கண்ணன் அம்மாவோ,தம்பிகளோ இல்லையே),அவளோ

“ப்ளிஸ் ப்ளிஸ்” என கத்தி கொண்டிருந்தாள். ,



இனி இது வேளைக்கு ஆகாது என எண்ணிய கண்ணன்


“ஏய் …..கத்தாத,முதல்ல கண்ணத்திற, என்னை நல்லா உத்துப்பாரு நா பேயா ,ஏய் …….”என கர்ஜித்தான்.



அப்பொழுதுதான் ஒரு கண்ணைத்திறந்து பார்த்த கயல் தன்முன்னால் முறுக்கிய மீசையும்கோபத்தில் சிவந்த கண்களும் இறுகிய உதடும் பார்க்கவே பயமாக தெரிந்தது .
(ஆத்தி இது செல்லப்பன் தாத்தா இல்லயே, ஒரு வேள நம்ம ஊரு ஐயனாரோ….?).



“ஐய்யய்யோ, ஐயனாருசாமி என்னய மன்னிச்சிரு தெரியாம வந்திட்டேன். சாமி மன்னிச்சிரு” என கெஞ்சத்துவங்கினாள்.


இவ்வளவு கத்தும்போதும் கயல் அவன் கழுத்தில் கோர்த்திருந்த கைகளை மட்டும் எடுக்கவேயில்லை.


கண்ணனுக்கு என்ன ஒன்னு நம்மள பேயின்னு சொல்றா இல்லைன்னா சாமின்னு சொல்றா இப்ப என்ன பண்ணுறது.



“ஏய்……. வாய மூடு”, தன் ஒரு கையை எடுத்து அவள் வாயை மூடினான். மூடிய வாயிற்குள் ஏதோ சத்தம் வர

” இப்ப என்ன............?”


“இல்ல ஐயனாருசாமி நீங்க எப்பவும் கையில அருவாவும்,கால்ல சலங்கையும் கட்டிட்டு தானே வருவீங்கன்னு அப்பத்தா சொன்னாங்க ….?”என்று சொன்னாலே பாப்போம்.



இவளை பார்த்த கண்ணனுக்கு அழுவதா சிரிப்பதா என்றே தெரியவில்லை.கோபமும் சுருசுருவென ஏற துவங்கியது. இனிவேற வழியில்ல என்று நினைத்து அவளை இடுப்பில் ஒரு கைகொடுத்து தூக்கி அங்கிருந்த தெருவிளக்கின் அருகில் தூக்கிச்சென்றான்,



அப்பொழுதும் கயலுக்கு சாமி ஏன் நம்மள தூக்கிக்கிட்டு போகுது நல்லவேள பேய் தூக்கிட்டு போகல சாமி தான கண்டிப்பா சொர்க்கமாத்தான் இருக்கும். ஆனா அம்மா,அப்பாக்கிட்ட சொல்லாம வந்திட்டமே. என்ற எண்ணம்தான் தோன்றியது.


தெரு விளக்கின் அருகில் அவளை இறக்கிவிட்ட கண்ணன் “ஏய்…… என்னைய நல்லா ஊத்துப்பாரு…”.



அப்பொழுதுதான் மேலிருந்து கீழாக அவனை பார்த்தவள் ஆத்தி நம்ம என்ன ஒரு ஆம்பளய போயி கட்டிப்பிடிச்சிட்டு இருந்திருக்கேன் ச்சீ ச்சீ என்று தலையில் அடித்துக்கொண்டாள். தன் மேல் கோபமாகவும் அழுகையாகவும் வந்தது.மேலும் கை,காலெலாம் உதற தொடங்கியது.


கண்ணீர் வழிந்த கண்களுடன் " என்னைய மன்னிச்சிடுங்க,தெரியாம பேசிட்டேன்”,


கலங்கிய கண்களைப்பார்த்தவனுக்கு கோபம் சற்று இறங்கியது.



“ ஏய்…., இங்க பாரு இங்க யாரு வீட்டுக்கு போகனும் மணி12 ஆச்சு நீமட்டும் தனியாவா வருவ துணைக்கு யாரையாச்சும் கூட்டிட்டு வந்திருக்கலாம்ல.....?”.

கைகளால் கண்களை துடைத்தவள் “இல்ல அது வந்து…… ,அது வந்து........இது எங்க ஊரு தான் எனக்கு ஒன்னும் பயமில்ல இந்தா அந்த வீடுதான்” என்று அடுத்த தெருவிளக்கின் அருகில் இருந்த வீட்டைக்காண்பித்தாள்.



“சரி வா நான் கூட்டிட்டுபோய் விடுறேன்”,



“இல்ல இல்ல வேண்டாம் நான் கண்ணமூடிட்டு ஒரே ஓட்டமா ஓடிருவேன்”.




“எப்படி இப்ப வந்தியே அது மாதிரியா….?”


“இல்ல நான் கண்ணதிறந்திட்டு ஓடிபோயிருறேன்”.


“நீ ஒன்னும் ஒட வேணாம் வா நான் கூட்டிட்டு போறேன்”.


“வேணாம்,வேணாம் நானே போயிருவேன்.நீங்க வேணும்னா இங்க இருந்தே பாத்துட்டு இருங்க”.


“சரி சரி போ”


இவள் வீட்டை நோக்கிநடந்து செல்ல அவளைப்பார்த்த கண்ணனுக்கு அவள் ஜல் ஜல் என்று கொலுசு ஓலியுடன் நடக்க இவள பார்த்தாதானே அழகான மோகினி பிசாசு மாதிரி இருக்கா நம்மளபோய் பேயிங்கிறா, இல்லைன்னா சாமிங்கிறா அப்பா............என்ன வாய் இவவாய் மாதிரியே இவ கண்ணும் பேசுது,......துணிக்கடையில நிப்பாட்டியிருக்குற பொம்மைமாதிரி இல்ல இருக்கா..............


கயல் வீட்டுவாசலை அடைந்தவுடன் அங்கிருந்து திரும்பி பார்த்தாள், கண்ணன் அங்கிருந்து கை அசைக்க குடுகுடுவென்று வீட்டிற்குள் ஒடினாள்.
வீட்டிற்குள் ஓடிய கயலுக்குநடந்தது எல்லாமே கனவு போலயிருந்தது........

அவளுக்கு அவனுடைய கோபமான கண்களும், முரட்டு மீசையுமே பயமுறுத்தியது. ஐயனாரு சாமி போலவே தோன்றியது.


கண்ணனுக்கு கயல் பொம்மை...........?
கயலுக்கு கண்ணன் ஐயனாரா.............?

........தொடரும்...
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top